அறிவைநாடல்

அறிவைநாடல்
அறிதலார்வம்
ஊடகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஊடகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 21 டிசம்பர், 2018

சட்டத்தை நடைமுறைப்படுத்தும் மறைமுகமான முகவரே ஊடகங்கள்!

"சட்டம் ஒருவனை நேசிக்க வற்புறுத்தா விட்டாலும் ஒருவனை தாக்கிகொலைசெய்வதில் இருந்ததாவது பாதுகாக்கும்" என்பது சட்டம் தொடர்பான நம்பிக்கையை ஆழப்படுத்தும் எண்னக்கருவாகும். சமூகம் மற்றும் மக்களின் உரிமைகள் செம்மையான முறையில் பேணப்படுவதற்கு சட்டம் உரிய முறையில் அமுல்படுத்த வேண்டும். ஒருவனோ அல்லது குழுவோ தனக்குரிய/தமக்குரிய  உரிமை சார்ந்த விடயங்களை நாட்டின்  சட்டத்தின் அடிப்படையில் பெற்றுக் கொள்ள முடியும்.
   சட்டம் என்பது சமுகத்தின் ஒருங்கிசைவு சமூக மேம்பாடு போன்றவற்றை பாதுகாப்பதாக அமைய வேண்டும். சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்குலையும் போது நாடு அதாள  பாலத்திற்குள் பொருளாதார மற்றும் சமூக ரீதியாக செல்லக் கூடும். சட்டம் என்பது சமூகத்தின் ஒழுங்குகளை பேணிப்பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளதாகும். அதனை உரிய முறையில் அமுல்படுத்தும் போதே அது வினைத்திறன் மற்றும் விளைதிறன் மிக்கதாக அமையும்.
      சட்டபுத்தகத்தில் உள்ளதனை நடைமுறைப்படுத்தும் போதும் அதனை பின்பற்றுவதும் கடினமானதாகவே தோன்றும். எனினும் காலப்போக்கில் அது நடைமுறைக்கு வந்துவிடும். நீதி மற்றும் ஊடகம் என்பவை சுயாதீனமானதாகும். நீதிக்காக போராடும் முதலாவதும் இறுதியானதுமான சட்ட இராஜ்சியத்தின் தலைநகரம் நீதிமன்றம் எனலாம். குறித்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில்/சட்டத்தை பாதுகாத்து நீதியை பேணுவதில் மறைமுகமாக பங்காற்றும் முகவர் ஊடகங்களே ஆகும். சட்டங்களை நடைமுறைப்படுத்தி சமுகத்தின் கண்ணாடியாக விளங்குவது ஜனநாயகத்தின் நான்காவது தூணாக அழைக்கப்படும் ஊடகங்களே ஆகும். அது மிகவும் சக்தி வாய்ந்தது ஆகும்.
      கடந்த காலங்களில் இலங்கையின் ஊடகத்துறையில் மிகவும் ஆபத்தான துறையாகவே பார்க்கப்பட்டது. ஊடகத்துறையினர் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள், கடத்தல்கள், கொலை முயற்சிகள் மற்றும் கொலை அச்சுறுத்தல் போன்றன கருத்து மற்றும் ஊடக சுதந்திரம் எதிர்மறையான சிந்தனைப்போக்கே காணப்பட்டது. எனினும், தற்போதைய நிலையில் ஊடக துறை தொடர்பாக சற்று ஆரோக்கியமான மனநிலையே காணப்படுகிறது. அதற்கு பிரதான காரணம் இனைய மற்றும் சமூக ஊடகங்களின் அபரிமிதமான அபிவிருத்தி என்றே எண்ணத் தோன்றுகின்றது. இலங்கை சட்டத்தின் கருத்து சுதந்திரம் 14 ம் சரத்தின் அடிப்படையில் தெளிவான சட்ட ஏற்பாடுகள் காணப்பட்டாலும் எந்த அளவு தூரம் சட்டம் பிரயோகப்படுத்தப்படுகின்றது என்பது கேள்விக்குரிய விடயமாகும்.
    ஊடகங்கள் என்பது வெகுஜன பார்வையாளர்களினை கொண்டுள்ளது. அக் குறித்த ஊடகங்களின் வாயிலாக மக்கள் மத்தியில் கருத்ருவாக்கம், விம்பகட்டமைப்பு, விழிப்புணர்வு ஏற்படுத்தல், செய்தி அறிக்கையிடல், தகவல்களினை வழங்குதல், பகுப்பாய்வு செய்தல், புலனாய்வு தளத்தில் செய்தியை வழங்குதல் போன்றவற்றை மேற்கொள்ள முடியும். ஊடகங்கள் என்பது தனித்து களிப்பூட்டுவனவாக மாத்திரமல்லாது மக்களிற்கு அறிவூட்டுவதாக அமைய வேண்டும். அதாவது, ஊடகங்கள் சம்பவங்களை நன்றாக ஆராய்ந்து பகுப்பாய்வு செய்து என்ன? எங்கே? ஏன்? எப்படி நடந்தது? யார் பங்கு தாரர்கள் போன்ற கேள்விக்குரிய பதில்களை  மக்களிற்கு வழங்குவதாக இருக்க வேண்டும்.
      ஊடகங்கள் மக்களினை நடப்பு விவகாரங்கள் தொடர்பாக இற்றைப்படுத்தி வைப்பதற்கு பயன்படும் இலகுவான சாதனமாகும். இன்றைய உலகில் எப்பகுதியானாலும் அமெரிக்கா, ஜப்பான், சீனா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம், அயர்லாந்து, சிரியா, ஜேர்மனி என எங்கு என்ன நிகழ்வு நடந்தாலும் இலகுவாகஇலகுவாக தகவல்களினை பெற்று கொள்ள முடிகிறது. உதாரணமாக, பிரான்ஸில் நடைபெறும் மஞ்சள் அங்கி போராட்டத்தை குறிப்பிடலாம். இன்று மக்களினை ஒளியூட்டும் இரு விசைகளாக சூரியன் மற்றும் ஊடகங்களினை குறிப்பிடமுடியும்.
       ஊடகங்கள் தற்காலத்தில் நிகழும் மனித உரிமை மீறல்கள், அரசியல் மற்றும் சிவில் உரிமைகள், ஜனநாயக பிறழ்வு நடவடிக்கைகள் போன்றவை தொடர்பில் விழிப்பூட்டும் செயற்பாட்டில் பிரதான பங்கு வகிக்கிறது. உதாரணமாக சிரியா மற்றும் ஜேமன் போன்ற நாடுகளில் இடம்பெறும் உள்நாட்டு மோதல்களினால் ஏற்படும் மனித மீறல்கள் சர்வதேச ஊடகங்களில் பிரதானப்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், அரசியல் சாசனத்திற்கு விரோதமாக இடம்பெறும் சம்பவங்களை ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன. மேலும் அது தொடர்பாக சட்ட ஏற்பாடுகளினை மக்களிற்கு தெளிவுபடுத்துகின்றன. காரணம் யாதெனில் மக்கள் இன்று சட்டம் தொடர்பான போதிய இன்மையுடனே காணப்படுகின்றனர். 
           ஊடகங்கள் குறித்த ஒரு குற்றச்செயல்களை வெளிப்படுத்தி பிரதானப்படுத்துவதோடு அதிகாரத்தில் உள்ளவர்களினை கேள்வி கேட்கின்றது. இதன்காரணமாக, அதிகார வர்க்கம் சட்டத்திற்கு உட்பட்டு சட்டத்திற்கு உட்பட்டு சட்டத்தை உட்பட்டு நகர்த்துகின்றது. இதனூடாக சட்ட சிக்கல்களில் உள்ள மக்களிற்கு நீதி கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதிலிருந்து ஊடகங்கள் என்பது சட்டத்தை  நடைமுறைப்படுத்தும் முகவராக கொள்ள முடியும் என்பது உறுதிப்படுத்துகிறது. இதனாலேயே ஊடகங்கள்காவல் நாய்கள் என்றும் அழைக்கப்படுகிறது. ஊடகங்கள் குற்ற செயல்கள், ஊழல்கள், சட்ட மற்றும் ஜனநாயக விழுமிய மீறல்கள் போன்றவற்றை பிரதானப்படுத்தி ஊடகங்களில் வெளியிடுவதுடன் அதனை உரியவர்களுக்கு அறிமுகப்படுத்தி குறித்த சட்ட மீறல்களில் ஈடுபட்டோருக்கு உரிய தண்டனையை பெற்று கொடுக்க உதவுகிறது. பிரச்சினைகள் மற்றும் அதற்குரிய தீர்வுகள் தொடர்பாக உரையாடுவதற்கும் பகுப்பாய்வு செய்வதற்கும் சிறந்த அடித்தளமாக ஊடகங்களே அமைகின்றன. ஊடகங்களில் சிபாரிசு செய்யப்படும் தீர்வுகள் மக்களின் தீர்வுகளிற்கு இனையானவை எனவே சட்டத்தின் சார்பும் ஊடகங்களிற்கு சார்பானதாகவே அமையும். இது நடுநிலை சார்ந்த ஊடகங்களிற்கே பொருந்தும். இங்கு நடுநிலை என்பதே சிந்தனை மற்றும்  கேள்விக்குரிய விடயமாகும்.
            ஊடகங்கள் என்பது நீதி மீது நம்பிக்கை அற்று இருப்பவர்களுக்கும் புதிய நம்பிக்கை அளித்து நீதி மீது நம்பிக்கை வேண்டுமளவிற்கு ஊடகங்கள் செயற்பட வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக அமையவேண்டுமே தவிர மேட்டுக்குடியின் கூப்பாடாக ஊடகங்கள் அமையக்கூடாது. தண்டனைகள் அநீதியாக இருந்தால் அதனை சுட்டிக்காட்டுவதோடு சட்டத்திற்குட்பட்ட தண்டனைகளை அமுல்படுத்துவதில் உள்ள தாமதங்களினை எடுத்தியம்பி அதனை நடைமுறைப்படுத்த உதவ வேண்டும். அண்மையில் பாராளுமன்றத்தில் நடந்த குழப்பம், எரிபொருள் விலைமாற்றங்கள், இரு பிரதமர்,இரு எதிர் கட்சி தலைவர்கள், பினை முறி மோசடி போண்ற பிரச்சினைகள் ஊடகங்களில் அண்மையில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகளாக கூறமுடியும். மேலும், புங்குடுதீவு வித்தியாவின் கூட்டு பாலியல் பலாத்காரம் தொடர்பாக ஊடகங்கள் Follow up அறிக்கையிடலினை மேற்கொண்டு இறுதி தீர்ப்பு வரும் வரைக்கும் அவதானித்து வந்தமை அது தொடர்பாக மக்களிற்கும் தெளிவுபடுத்தியிருந்தமை  குறிப்பிடத்தக்கது.
     இன்றைய சமூகத்தில் ஊடகங்கள் முக்கிய இடத்தை ஆக்கிரமித்துள்ளது. இருளை அகற்றி ஒளியேற்றும் சூரியன் போன்றே மக்களின் அறியாமையை போக்கி அறிவூட்டுவதாக ஊடகங்கள் விளங்குகிறது. அரசாங்கத்தை பதில் சொல்ல வைக்கும் அதிகாரம் ஊடகங்களிற்குண்டு . ஊடகங்களினை உதாசீனப்படுத்துவது மக்களினை உதாசீனபடுத்துவதற்கு சமமானது. இதுவே ஜனநாயக நாட்டில் ஊடகங்களிற்கு உள்ள பலமாகும். இது நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மையை உணர்த்துகிறது.
        சமூக ஊடகங்கள் ஒவ்வொருவரின் உரிமையையும் அதிகரித்துள்ளதுடன் மக்கள் தமது உரிமைக்காக போராடமுடியும். இது உள்ளூர்,வெளியூர் என்ற எல்லைக்கு அப்பாற்பட்டதாகும். இன்று பல போராட்டங்கள் சமூக ஊடகங்கள் ஊடாகவே ஒருங்கினைக்கப்படுகின்றன. உதாரணமாக, பிரான்ஸில் நடைபெறும் மஞ்சள் அங்கி போராட்டத்தை குறிப்பிடலாம். தகவல்கள் மற்றும் விவாதங்கள் ஊடகவே தெளிவு மற்றும் தீர்வுகளை பெற்றுக் கொள்ள முடியும். இதற்காகவே ஊடகங்கள் சிறந்த தொடர்பாடல் கருவிகளான உரையாடல், கருத்து கணிப்புகள், விவாதங்கள், கருத்தாடல்கள் போன்றவற்றை மேற்கொள்கின்றன . ஊழல் மற்றும் சுரண்டல்களுக்கு எதிராக போராடுவதில் ஊடகங்களிற்கு பிரதான பங்குண்டு. ஊடகங்கள் தனித்து அறிக்கையிடுவது மாத்திரமல்லாது வெளிப்படையான நிர்வாகத்திறனை பேணுவதற்கு சிறந்த கண்காணிப்பாளராக ஊடகங்கள் இருக்க வேண்டும்.
    நிறைவாக, ஊடகங்கள் தனித்து அரசாங்கத்தின் மீது சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபடாது அதாவது அரசியல் வாதிகள் மற்றும் அரசாங்கத்தை குற்றம்சாட்டமால் மக்கள் எவ்வளவு தூரம் தமது வாழ்வியல் முறைகளினை சட்டம், விழுமியங்கள், நீதி மற்றும் அறத்திற்கு உட்பட்டு மேற்கொள்கின்றார்கள் என்பதனை தெளிவுபடுத்தி மக்களினை சட்டம் மற்றும் ஒழுங்குகளை பின்பற்ற செய்ய விழிப்புணர்வூட்டுவது ஊடகங்களின் பிரதான பொறுப்பு மற்றும் கடமையாகும். அவ்வாறு பின்பற்றும் போதே நிலையான நிம்மதியான சூழலை உடைய சமூகத்தை உருவாக்க முடியும்.

ஆக்கம்
இ.தனஞ்சயன்

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

கல்விக்கு விளம்பரம் அத்தியஅவசியமா?

வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் ஊடுருவியுள்ள விளம்பரம் வாழ்க்கையினை புரிய வைக்கும் கல்வி துறையியினை விட்டு வைக்கவில்லை. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி Roosevelt என்பவர் விளம்பரம் என்பது எண்ணற்ற மக்களிற்கு பயனுள்ள பொருட்கள் தொடர்பான உண்மையான அறிவை தருவது.இது ஒரு வகையில் கல்வி ஆகும். நாகரீக வளர்ச்சி இக்கல்வி அறிவை சார்ந்தாகும் என கூறுகின்றார்.பத்திரிகைகளின் விளம்பரம்பரங்களை பொறுத்தத மட்டில் கல்வி சார்ந்த விளம்பரங்களிற்கென தனித்த இடம் உண்டு. ஏனைய ஊடகங்களான வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றுடன் ஒப்பிடும் போது பத்திரிகையில் கல்வி சார்ந்த விளம்பரங்களினை அதிகம் அவதானிக்கலாம்.விளம்பர வகைகளாக பொருள் விளம்பரம், பொதுமக்கள் சேவை விளம்பரம், நிறுவன விளம்பரம் போன்றன முக்கியமானதாக காணப்படுகிறது. கல்வி சார்ந்த விளம்பரங்களை பொறுத்தவரை யாழ்ப்பாண பிராந்தியத்தை மையப்படுத்தி வெளியாகும் மூன்று பிரதான பத்திரிகைகளினை தொடர்ந்து ஆய்வு செய்த பின்னர் கீழ்கண்ட வகைப்பாடு கட்டுரையாளரால் செய்யப்படுகிறது. ஆங்கில கற்களை நெறி விளம்பரம், கணினி கற்கைகள் விளம்பரம்,போட்டி பரீட்சை விளம்பரம், ஜேர்மன் மற்றும் பிரைன்ச் மொழி கற்கைகள் நிறுவனம், ஹொட்டல் பாடப்பயிற்சி நெறி விளம்பரம், பாடசாலை கற்கும் மாணவர்களினை மையப்படுத்திய விளம்பரங்கள் போன்றன இனம் காணப்பட்டன.குறிப்பாக குறிப்பிட்ட விளம்பரங்கள் பல்வேறு உத்திகளை கையாண்டு தம் பக்கம் நுகர்வோரினை இழுக்க முயற்சி செய்கின்றன. கவனகுவிப்பு,நம்பிக்கைஊட்டல்,நினைவில் நிறுத்தல்,கருத்து தெரிவிக்கும் தன்மை போன்றன குறிப்பிடத்தக்கது. விளம்பரம் என்பதன் நோக்கம் தூண்டி செயற்பட வைக்கும் ஆற்றல் ஆகும். இதனை விளம்பர கோட்பாட்டு சட்டகமான AIDAS அதாவது Attention-கவனம் Interest-ஆர்வம் Desire-ஆசை Action-செயற்பாடு Satisfaction-திருப்தி குறித்த தாக்கத்தை விளம்பரம் ஏற்படுத்தும்.யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் கல்வி சார்ந்த விளம்பரங்களின் நுட்பமாக வார்த்தை பயன்பாடே காணப்படுகிறது.அவற்றில் சில பிரபல ஆசிரியர், முன்னனி ,அனுபவம் மிக்க ஆசிரியர் குழாம், சர்வதேச அரசு அங்கீகாரம்,30 நாடகங்களில் ஆங்கிலம், இலவச கற்றல் கையேடுகள்,நவீன கற்பித்தல் வசதிகள், Diploma,Certificate, ஆங்கிலம் இலகுவாக பேசலாம், பதிவு களுக்கு முந்துங்கள் ,இலகுவாக அடிப்படையில் இருந்து ஆங்கிலம்,No1,எதிர்பார்கை வினாக்கள், இலகு மீளூட்டல் வகுப்புகள், முதல் தரம்,விசேஷ,தனிபட்ட, பிரத்தியேக, வெளிநாட்டில் கற்பதற்கு ஆசை இல்லையா?அனுமதிகளுக்கு,முதல் வகுப்பு இலவசம், ஒரு பிரிவில் 20 பேர் மட்டுமே, முதல் பதிவு செய்பவர்களுக்கு 60%கழிவு, இலங்கையில் புகழ் பூத்த,கட்டண சலுகை, ஆங்கில பாடநெறியில் இனைபவர்களுக்கு சிங்கள பாடநெறியில் இனையும் வாய்ப்பு,என்னிடம் இனைவோர் உயர் பெறுபேறு பெறுவர், A என்ற அருங்கனியைப் பெற்றிட,அனுமதி கட்டனம் இல்லை, ஆங்கில மொழியை தமிழில் கற்றல்,முன்னாள் ஆசிரியர், அனுமதி மட்டுப்படுத்தப்பட்டது,free English course, 70000 ரூபாய் பெறுமதியான 5 கற்களை நெறிகளை 20000 ரூபாய் மட்டும் செலுத்தி ஆங்கில சிங்கள மொழி அறிவைப் பெருக்கி கொள்ளுங்கள், பெறுமதிமிக்க கற்கை, மிக குறுகிய காலத்தில் சரளமாக எழுத பேசக்கூடிய ஆங்கில பாடநெறி,இலவச கருத்தரங்கு, வடக்கில் முதலாவது, 2016 A/L பரீட்சை எடுத்தவரா?புதிய பிரிவு ஆரம்பம், விழிப்புணர்வு அமர்வு, பிரித்தானிய பட்டத்திற்கான முதல் உங்கள் கட்டம்,நவீன மயப்படுத்திய விரிவுரை மண்டபம், செயன்முறை தேர்வுகள் விரிவினை விடயங்கள குறிப்புகள் இவ்வாறான வார்த்தைகள் மதி மயக்கம் கூடியது. இவற்றில் இருந்து தெளிவு பெறவேண்டும்.நல்ல பொருளிற்கு விளம்பரம் அவசியம் அற்றது என்பார்கள். ஆனால், உலகமயமாக்கலின் தாக்கம் விளம்பர பொருளே தரமானது என்றாகிவிட்டது. ஊடகங்களின் பிராண வாயுவாக விளம்பரங்களே உள்ளமையால் ஊடகங்களில் விளம்பரங்கள் தவிர்க்க முடியாதவை.எனினும் இலவச கல்வி இலவச கல்வி என்று கூறும் நமது நாட்டில் கல்வி சார் விளம்பரங்களின் அதிகரிப்பு கவலை யான விடயமாகும்.ஆக்கம் -இ.தனஞ்சயன்.

புதன், 16 ஆகஸ்ட், 2017

ஊடகபாவனையின் அதிகரிப்பு ம் விதைக்கப்படவேன்டிய ஊடகஅறிவும்!

ஒரு நாட்டின் அபிவிருத்தியினை அளவிடும் சுட்டென்னில் முக்கியமான ஒன்றாக எழுத்தறிவு காணப்படுகின்றது.எனினும், தற்போதைய நிலையில் நாளொன்றுக்கு ஊடகங்கள் பெருகிக்கொண்டு வருகின்றன. ஆனால், அவ் ஊடகங்கள் சமூக பொறுப்புடன் செயல்படாமல் தவறான பாதைக்கு திசை திருப்புகின்றது.கடந்த பல ஆண்டு காலமாக எழுத்தறிவு என்பது எழுதுவதற்கும் வாசிப்பதற்கும் ஆன இயலுமையை குறிப்பிடலாம். ஊடகங்கள் வாயிலாக பல தகவல்களினை தற்போதைய சூழ்நிலையில் பெற்றுக்கொள்ள முடிகிறது. ஆனாலும், அவை உண்மையானவையா?நடுநிலையானவையா?அறத்திற்கு உட்பட்டதா?புறவயமானதா? போன்ற அடிப்படை கேள்விகள் வினாவப்படவேண்டியது கட்டாயம். 21ம் நூற்றாண்டில் ஊடக எழுத்தறிவு என்ற பதம் பாவனைக்குரியதாக காணப்படுகின்றது. ஊடகத்தை எப்படி அணுகுதல்,பகுப்பாய்வு செய்தல்,மதிப்பிடுதல் மற்றும் திறனாய்வு செய்தல் போன்றவற்றை குறிப்பிடலாம். ஊடக எழுத்தறிவு என்பது ஊடகங்களில் வரும் நுட்ப அரசியல் சார்ந்த செய்திகளை விளங்கிக் கொள்ளும் ஆற்றல் ஆகும். இது கற்றஅறிவு,அனுபவம், சமூக சூழல், பண்பாடு, மொழிமாற்றம் மற்றும் மதசார்புகளிற்கு ஏற்ப மாறுபடும்.தற்போதைய நேரத்தில், ஊடகளிற்கென ஒழுக்ககோவை காணப்பட்ட போதிலும் அவை எவ்வளவு தூரம் பிரயோகிக்கப்படுகின்றன என்பது ஆழமாக சிந்திக்கத் கூடிய விஷயமாகும்.நவீன ஊடகங்கள் இவற்றை கண்டுகொள்ளாதமை கண்டிக்கத்தக்கதாகும்.ஊடகத்தை விளங்கிகொள்வதால் ஏற்படும் சாத்தியமான அம்சங்களாக இவற்றை சிந்திக்கலாம். திறனாய்வு திறன் விருத்தி, வணிக தந்திரத்தை புரிதல், கோட்பாட்டு ரீதியில் ஊடகங்களினை அனுகுதல்,ஊடக நீதிக்காக வாதிடல், ஊடக ஒழுங்கீனங்களை கண்டித்தல், ஊடக திசைதிருப்பும் விடயங்களினை அறிதல்,பண்பாடு மற்றும் சமூகத்தை ஊடகங்கள் எவ்வாறு வடிவமைத்துக் கொள்கின்றன போன்றவற்றை சிந்திக்கலாம். எமது நாட்டின் ஊடகங்களினை புரிந்து கொள்ளும் ஆற்றல் வட பகுதியை காட்டிலும் தென்பகுதியில் அதிக புரிதல் ஊடக கல்வி பல்கலைக்கழக மற்றும் பாடசாலை கல்வி வாயிலாக புகட்டபட்டு வருகிறது. இங்கு அதற்கான நிலை மந்தமான நிலையில் உள்ளது. பின்வரும் கேள்விகள் ஊடகங்களினை அணுகும் போது எப்பை நாமே கேட்க வேண்டும். 1)குறித்த செய்திகள் யாரால் உருவாக்கப்பட்டது? 2 )யாரை இலக்கு வைத்துள்ளது? 3)இவ்வாறான தந்திரத்தை பின்பற்று கின்றது?4 )எவ்வாறு கருத்துருவாக்கம் செய்யக் கூடியது?5)மொழி பயன்பாடு எப்படியுள்ளது? 6)வாழ்வியல் பண்பாடு எப்படி பிரதிபலிக்கிறது?  போன்ற கேள்விகள் துல்லியமான தகவலினை அறிய முடியும். ஊடகங்களினை புரிந்து கொண்டு சிறந்த முன்மாதிரியாக ஊடக பண்பாட்டினை உருவாக்கிக் கொள்ள முடியும்.சிந்தை மகிழ ஊடகத்துறை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் இ.தனஞ்சயன் .

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

நல்லிணக்க உருவாக்கத்தில் ஊடகங்களின் பங்கு

மக்களின் எண்ணங்கள் மற்றும் கருத்துக்களை பிரதிபலிக்கின்ற,பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மற்றும் செல்வாக்கு செலுத்துகின்ற சாதனமாக ஊடகங்கள் விளங்குகின்றன.மக்கள் ஊடகங்களில் வருகின்ற செய்திகளை அப்படியே உண்மையானது என்று நம்புகிறார்கள். குறித்த பலவீனத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்தும் ஊடகங்கள் தமது நிர்வாகத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப தம்மைதாமே தயார்படுத்துகின்றன. உலகம் உலகமயமாக்கல் என்ற சுருங்கி கொண்டதன் காரணமாக ஊடகங்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகிவிட்டன. இதனால், செய்திகளிற்கு பெரும் பஞ்சம் ஏற்பட்டு விட்டது. செய்திகளை விற்பனை ஓட்டமாக நினைக்கும் தற்போதைய விற்பனை ஊடகங்கள் செய்திகளிற்கு அங்கலாய்க்கின்றன. தற்போதைய நிலையில் பிரதான ஊடகங்களின் ஆதிக்கத்தில் இருந்து விடுபடும் நிலைமையை சமுக ஊடகங்கள் ஏற்படுத்தியிருந்தாலும்,சமூக ஊடகங்களினை எப்படி முற்போக்கான சிந்தனையை விதைப்பதாக பயன்படுத்தி வெற்றியடையலாம் என்று சிந்திக்க வேண்டும். மாறாக, பிற்போக்கான அவமானப்படுத்தல், காழ்ப்புணர்ச்சி வெளிப்பாடு, பாராட்டமனமின்மை,எதிர்மறையான சிந்தனை, புத்திசாலிகள் புறக்கணிக்கபடுதல்,தவறான வழிநடத்தல் மற்றும் போலியான உறவு களின் கூட்டு போன்ற முன்னேற்றத்திற்கு சாதகமற்ற விடயதானங்களே பரப்புரை செய்யப்படுகிறது.இவற்றின் எழுச்சி கீழத்தேய நாடுகளே பாதிப்பை எதிர்கொள்கின்றன.இலவசம் என்ற போர்வையில் விலைபொருளாகிக்கொன்டுள்ளன.குறிப்பாக, அரசியல், பண்பாடு மற்றும் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில் இவற்றின் பங்கு கணிசமானது.இதற்கு அண்மைய ஐல்லிகட்டு வெற்றியை குறிப்பிடலாம்.    எமது நாட்டின் சமூக ஊடக பாவனை கவனயீனமாகவேவுள்ளது.அத்துடன் இனவெறி மற்றும் இனவாதத்திற்கு களம் ஏற்படுத்தி கொடுப்பதாக காணப்படுகிறது. தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் என தன்னைத் தானே கூறிக்கொள்ளும் அரசாங்கம் நல்லிணக்கம்,சகவாழ்வு என்ற சொல்லினை பயன்படுத்தி சர்வதேசத்திடமிருந்து  தப்பித்தாலும், சமூக ஊடகங்களில் இருந்து தப்பிக்க முடியாது.                      எழுத்து - இ.தனஞ்சயன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகத்துறை மாணவன்.