அறிவைநாடல்

அறிவைநாடல்
அறிதலார்வம்
யாழ்ப்பாண பல்கலைக்கழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
யாழ்ப்பாண பல்கலைக்கழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 4 ஆகஸ்ட், 2018

அரசியல் ஆடுகளத்திலும் வெற்றி பெற்ற இம்ரான் கான்!

அண்மைக்காலங்களில் விளையாட்டு உலகில் பரபரப்பான சம்பவங்கள் இடம்பெற்றன. உலகக்கிண்ண கால்பந்து போட்டி,இலங்கை தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போட்டி,இந்திய இங்கிலாந்து கிரிக்கெட் போட்டி என போட்டிகள் நடைபெறும் அதேசமயம் போட்டிகள் தொடர்பாக சர்ச்சைக்குரிய விடயங்களும் இடம்பிடித்து ஊடகங்களுக்கு நல்ல விருந்தாக அமையும். அதிலும் குறிப்பாக இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர், திலங்க சுமதி பால அர்ஜுன ரணதுங்க மற்றும் அரவிந்த டீ சில்வா மீது சூதாட்டத்தில் தொடர்பு பட்டதாக குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்ததும் அதனைத் காலாவதியான குற்றச்சாட்டுகளுக்கு ஊடகங்களுக்கு பதிலளித்து இலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிக்கு எதிரான முதல் பேட்டியில் தோற்றதற்கு திலங்க சுமதி பாலா தம்புள்ள மைதானத்திற்கு விஜயம் செய்தமை சந்தேகப்படவைக்கின்றது என முன்னாள் வீரர்கள் கூறி இருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு, இலங்கையில் விளையாட்டுத்துறை அரசியலில் மூழ்கி பரிதாபமாக காணப்படும் நிலையில் விரைவில் கிரிக்கெட் சபை தேர்தலினை நடாத்தும் படி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளமையும் கவனிக்க வேண்டியது. இதேவேளை, 2020 ஜனாதிபதி தேர்தலில் இலங்கை அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த சங்ககார குறித்த ஒரு அரசியல் கட்சியின் வேட்பாளராக களமிறங்குவார் எனவும் அவர் அரசியலில் ஈடுபட வரவேண்டும் என ராஜித சேனாரத்ன அண்மையில் குறிப்பிட்டு இருந்தமை கவனிக்க வேண்டியது. இந்த நிலையில், எமது அயல் நாட்டின் பரம எதிரியான நாடான பாகிஸ்தான் அரசியலில் திடீர் திருப்பமாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித்தலைவர் மற்றும் 1992 உலகக்கிண்ணத்தை பாகிஸ்தானிற்கு பெற்று கெடுத்த அணித்தலைவர் இம்ரான் கான் பாகிஸ்தானிய பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று கூட்டணியின் ஆதரவுடன் பிரதமராகின்றார்.65 வயதான இம்ரான் கான் 1996 ஆம் ஆண்டு அரசியலிற்கு நுழைந்தாலும் அரசியலில் 22 வருடங்களாக போராடியே தனது பிரதான இலக்கை (Main Goal) அடைகின்றார். இவருடைய பிரதான கொள்கையாக பாகிஸ்தானில் சமாதானத்தை ஏற்படுத்தல் மற்றும் ஊழல் மோசடிகளை இல்லாது ஒழித்தல் போன்றன காணப்பட்டாலும் பிரதமராக பதவியேற்ற பின்னர், குறித்த கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் பாரிய சவால்கள் காணப்படும் என்பது மறுப்பதற்கில்லை. பாகிஸ்தானில் இராணுவத்திடம் அதிகாரம் காணப்படுகின்ற நிலையில் பாகிஸ்தான் இராணுவத்தின் செல்லப்பிள்ளையாகவே இருக்க வேண்டிய நிலை இருக்கும். அத்துடன் இம்ரான் கானின் வெற்றிக்கு பின்னால் இராணுவத்தின் உழைப்புள்ளது என்று சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் வாதிடுகின்றனர். இதேவேளை, பூகோள அரசியல்ரீதியில் பாகிஸ்தான் அமைவிடம் இந்திய, சீனா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் அரசியலிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பிட்ட நாடுகளுடன் எவ்வாறான அரசியல் இராஜதந்திர தொடர்புகளை கையாழப்போகின்றார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இவ்வாறான சூழலில்,"இந்தியா ஒரு அடி எடுத்தால் நான் இரண்டு அடி எடுப்பேன்" என்று கூறியுள்ளார். இதேவேளை, தான் பதவியேற்கவுள்ள ஆவணி மாதம் 15 ம் திகதி நடைபெறும் நிகழ்வில் இந்திய பிரதமர் மற்றும் தன்னுடைய காலத்தில் இந்திய அணியில் விளையாடிய கபில்தேவ் மற்றும் சுனில் கவாஸ்கருக்கும் அழைப்பு விடுக்க இருக்கின்றமை மேற் சொன்ன கருத்தை உயிரோட்டமிக்க தாக்குகின்றன. சர்வதேச அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும் அமெரிக்காவுடன் முரண்பட்ட கருத்துக்களினை கொண்டுள்ள இம்ரான் எப்படி பாகிஸ்தானினை மாற்றி அமைத்து கொள்வதுடன் சர்வதேச அளவில் வருகின்ற சவால்களை வெற்றி கொள்ள போகின்றார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதேநேரம், குறித்த வெற்றி தொடர்பாக, இம்ரான் கானின் முதல் மனைவி Ms Gold smith குறிப்பிடும் போது 22 வருட தியாகம்,தடைகளை வெற்றி கொள்ளுதல் மற்றும் நிராகரிப்புக்களை தாண்டி பாகிஸ்தானின் புதிய பிரதமரான எனது மகன்களின் தந்தைக்கு வாழ்துக்கள் என்று கூறினார்."22 years later, After humiliation, hurdles and sacrifice, My son's father is Pakistan's new prime minister". நிட்சயமாக, கிரிக்கெட் ஆடுகளத்தில் எதிர்கொண்ட சவால்களை விட பாரிய அளவில் சவாலுக்கு முகம்கொடுக்க நேரிடும். எது எப்படியோ, எமது நாட்டில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், அரசியலிற்கு வந்து பாராளுமன்றம் சென்ற வீரர்களை காணமுடியும். ஆயினும், இம்ரான் தனது போராட்ட குணம் மற்றும் இலக்கை நிர்ணயித்து அதனை நோக்கி நகர்ந்து வெற்றி பெற்ற விதத்தில் இருந்து ஓர் முன்மாதிரியாக விளங்குகின்றார். ஆக்கம்: இ.தனஞ்சயன் (யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடகத்துறை முன்னாள் மாணவன் மற்றும் இலங்கை தேசிய தொலைக்காட்சியான ரூபவாகினி கூட்டுத்தாபனத்தின் தமிழ் நிகழ்ச்சி பிரிவின் உதவி தயாரிப்பாளர்)

சனி, 3 மார்ச், 2018

வாழ்வை வடிவமைப்பன ஊடகங்களே!

தற்காலத்தில் நமது வாழ்க்கையினை வடிவமைக்கும் ஒன்றாக ஊடகங்கள் விளங்குகிறது.இவ் ஊடகங்கள்(Media)சமுதாயத்தை பலப்படுத்துவதாக அமைய வேண்டும்.ஊடகங்கள் சமுகங்களில் பல்வேறு வழிகளில் செல்வாக்கு செலுத்துகிறது. எதேனும் ஒரு தகவலை கருத்தை பலரறியச் செய்வதற்கு மிகப்பெரிய அபாரமாக ஊடகங்களே காணப்படுகிறது. காலத்தின் கண்ணாடியாகக் தற்போது ஊடகங்களே திகழ்கிறது.
       ஊடகங்கள் கருத்துக்கள், யோசனைகள், திட்டங்களை பரிமாறிக் கொள்வதற்கான தகவல் பரிமாற்ற கருவியாக ஊடகங்கள் விளங்குகிறது.இதனை ஆங்கிலத்தில் "The media is an important source of information by its news segments, entertainment and allows for exchange of ideas, suggestion and comments "இந்த ஊடகங்களினை பல்வேறு வழிகளில் வகைப்படுத்தினாலும் பிரதானமாக மூன்று வகைகளில் அதாவது; Broadcast media, Print media and Web media என்று வகைப்படுத்துவார்கள்.
        தற்போதைய காலத்தில் இனையங்களின் வரவு தகவலை பல்வேறு வடிவங்களில் பெற்றுக் கொள்ள வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.தனி நபர்கள் தமக்கென தனியான ஊடகங்களினை பேனக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.மேலும், 20ம் நூற்றாண்டில் மனித குலத்துக்கு கிடைத்த வரப்பிரசாதமாக இனையத்தைக் கொள்ளலாம்.
    மனிதனுக்குள்ள தகவல் பசியை(Information hunger) போக்கும் வண்ணம் இனைய ஊடகங்களின் வரவு அமைந்துள்ளது.குறித்த ஊடகங்களில் வரும் தகவல்களை மக்கள் அப்படியே நம்புகின்றனர்.ஊடகங்கள் நடுநிலையானவை என்ற முற்கற்பித எண்ணங்கள் மக்களிடம் உண்டு. எனினும், ஊடகங்கள் அதிகார மட்டத்திற்கு உட்பட்டு தம்மை தவறாக பிரதிநிதித்துவம்(Misrepresentation)செய்யக்கூடியவை.உதாரணமாக,தற்போது சிரியாவில் இடம்பெறும் யுத்தம் கூட அமெரிக்க தன் நலன் சார்ந்த விஷயங்களை உள்ளடக்கியே செய்திகள் மற்றும் புகைப்படங்களை வெளியிடுகிறது.இதேபோன்றே,2003 ம் ஆண்டில் ஈராக் மீதான தனது அராஜகத்தை நியாயப்படுத்தியது.அமெரிக்காவின் மிகப்பெரிய பலங்களில் ஒன்றாக ஊடகங்களினை தனக்குள் வைத்துக் கொள்ளும் ஆற்றலை குறிப்பிடலாம்.
          இலங்கை போன்ற தெற்காசிய நாடுகளில் ஊடக சுதந்திரம்என்பது மட்டுப்படுத்தப்பட்டது.அரச அடக்குமுறை மற்றும் ஊடக நிறுவனத்தில் உள்ளே காணப்படும் சு தந்திரமற்ற ஊடகங்களின் நடுநிலையான தன்மையினை சவாலுக்குட்படுத்தியுள்ளது.ஊடகங்கள் தனித்து செய்தியை வழங்குதல் மாத்திரமல்லாது மகிழ்சிபடுத்தல்,விழிப்புணர்வைஏற்படுத்தவும் வேண்டும்.
       உள்ளூர், சர்வதேச, வணிக மற்றும் விளையாட்டு செய்திகள் நாளந்த மனித வாழ்வில் அடிப்படை தேவைகளுள் ஒன்றாகி விட்டது.இவ்வாறான ஊடகங்கள் தனது உள்ளடக்கங்களில் உண்மை,நடுநிலை,பக்கம்சாராமை போன்ற ஊடக விழுமியங்களினை பேனும்போதே நல்ல முன்மாதிரியான சமுதாயத்தை உருவாக்க முடியும்.

ஆக்கம்: இ.தனஞ்சயன்(இலங்கை தேசிய தொலைக்காட்சியான ரூபவாகினிகூட்டுத்தாபனத்தின் தமிழ் நிகழ்சிப்பிரிவில் உதவித்தயாரிப்பாளர்)

வியாழன், 28 டிசம்பர், 2017

கால மாற்றத்தின் காரணங்கள் கண்டனத்திற்குரியவை!

"The early Bird catches the worm" என்பது ஆங்கிலத்தில் காணப்படும் ஒரு பழமொழியாகும்.பழமொழிகள் என்பது அனுபவங்கள் கற்றுத்தரும் பாடங்களின் அடிப்படையில் எழுபவவை.சொற்கள் குறைவாகவும் கருத்தாழம் நிறைந்ததாகவும் பழமொழிகள் காணப்படும்.அந்த வகையில், மேற்கண்ட பழமொழியின் கருத்து அதிகாலையில் இரைதேடும் பறவை  இரையை பெற்றுக்கொள்ளும் என்பதாகும்.இதற்கு ஒத்ததான கருத்தையே பெஞ்சமின் பிராங்க்ளின்"Early to bed and early to rise makes a man healthy, wealthy and wise" என்கிறார். அதாவது முட்கூட்டியே படுக்கைக்கு சென்று முட்கூட்டியே நித்திரை விட்டு எழுவது மனிதனை சுகதேகியாகவும்,செல்வந்தராகவும் மற்றும் புத்திசாலியாகவும் உருவாக்கும்.
              மேலும், அதிகாலையில் விழித்துக்கொள்வதன் காரணமாக குறிப்பிட்ட சில நன்மைகள் காணப்படுகிறது.நாளாந்த காரியத்தை இலகுவாகவும் நிதானமாகவும் மேற்கொள்வதற்கும்,சிறந்த முறையில் அதிகமான நேரம் உடற்பயிற்சி செய்யமுடியும்,பதட்டம் இன்றி மிகவும் நிதானமாக மேற்கொள்ள முடியும், பயனுள்ள விசயங்களை செய்வதற்கு, மகிழ்ச்சியான வாழ்க்கை முறையை வாழ்வதற்கு, மனஅழுத்தமின்றி தெளிவான சிந்தனையுடன் காணப்படுவதற்கு,குறித்த நாளினை வெற்றிகரமான நாளாக நிறைவு செய்ய அதிகாலையில்எழுவது முக்கியமானது.
          இவ்வாறு பல்வேறு நன்மைகள் கானப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.குறிப்பாக, பாட சாலைகள் செல்லும் மாணவர்கள் அதிகாலையில் எழும் போது புத்துணர்ச்சி பெற்றுக்கொள்கிறார்கள். பெரும்பாலான வீடுகளில் பாடசாலை செல்லும் மாணவர்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. பாடசாலை செல்லும் நேரத்தை மையப்படுத்தியே பெரும்பாலான வீடுகளின் திட்டமிடல் இடம்பெறும்.இந்த நிலையில்,அண்மையில், வடமாகாணசபையில் உள்ள பாடசாலைகள் ஆரம்பமாகும் நேரம் தொடர்பாக மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்று வடமாகாணசபை உறுப்பினர்களால் மாகாண சபை முதலமைச்சரின் கவனத்திற்கு கொன்டுவரப்பட்டுள்ளது.
          இந்த வி பயம் தொடர்பாக வடமாகாணசபை மகளிர் விவகார அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் கருத்து தெரிவிக்கையில் வடக்கில் உள்ள பாடசாலைகள் ஆரம்பமாகும் நேரம் தொடர்பாக அனைவர் மத்தியிலும் அதிருப்தி நிலை காணப்படுகிறது. காலை 7.30க்கு பாடசாலை ஆரம்பிப்பது என்பது ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கடினமான உள்ளது.யுத்தம் காரணமாக தாய்மாரை இழந்த சிறுமிகள் குடும்ப பொறுப்பை சுமக்கும் நிலையில் உள்ளார்கள்.இவர்கள் காலை நேரம் உண்பதுகூட இல்லை. இதனால் கற்பித்தலினை கிரகிக்கும் நிலையில் இல்லாத பாடசாலை சென்று வருகிறார்கள்.ஆசிரியர்களும் இவ்வாறு பல்வேறு இடர்பாடுகளினை சந்திக்கிறார்கள்.ஆகவே பாடசாலை ஆரம்பமாகும் நேரம் தொடர்பாக மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறினார்.இதேபோல், காலையில் தூர இடங்களிற்கு செல்லும் பாடசாலை ஆசிரியர்களும் பல்வேறு  இடர்பாடுகளினை எதிர்கொள்வது தொடர்பாக வடமாகாணசபை அவைத்தலைவர் கவலை வெளியிட்டமையும் குறிப்பிடத்தக்கது.
        வடமாகாணசபையில் இவ்வாறான விடயம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது வேடிக்கையானது. எனினும் வடமாகாணசபை இவ்வாறு பல சம்பவங்களினை சந்திப்பது ஒன்றும் புதிதல்ல.உண்மையில் தூர இடம் சென்று கற்பிக்கும் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சவால்களை தீர்ப்பதற்குரிய மாற்றுவழி பாடசாலை நேரம் மாற்றுவது அல்ல மாறாக ஆசிரியர்களினை அருகில் உள்ள பாடசாலைக்கு இடமாற்றம் வழங்குவதே ஆகும்.மாறாக நேரமாற்றம் என்பது செருப்பின் அளவுக்காக காலை வெட்டுவதற்கு ஒப்பான செயல் ஆகும்.
             இதேவேளை தாய் தந்தையை இழந்த பிள்ளைகளிற்கு கல்வியை சிறந்த முறையில்தொடர்ந்து செல்ல அவர்களின் பொருளாதார நிலையை வளப்படுத்த வேண்டும்.அத்துடன் இலங்கையை பொறுத்தவரை வடமாகானத்தில் மாத்திரமல்ல ஏனைய மாகாணங்களில் கூட வறுமையுடன் காலை உணவை உண்ணாமல் பல மாணவர்கள் பாடசாலை செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.குறித்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கு நேரத்தினை மாற்றுவதால் எந்த பலனும் இல்லை.
         இதேவேளை,நுவரெலியா மற்றும் ஹட்டன் போன்ற கடுமையான குளிர் பிரதேசங்களில் கூட பாடசாலை மாணவர்கள் காலையில் செல்லுகின்றமை கவனிக்கத்தக்கது.அண்மையில் வெளியான பொதுப் பரீட்சையில் கல்வி பெறுபேறுகள் ஏனைய மாகாணங்களினை விட மிகவும் தாழ்ந்த மட்டத்தில் உள்ளதற்கான பல காரணங்களில் முக்கியமானதொன்று நம்மிடையே காணப்படும் சோம்பேறித்தனம் முதன்மையானது. ஆகவே, குறித்த பாடசாலை நேர நடைமுறையில் மாற்றத்தை உண்டுபண்னி எமது சமூகத்தை மந்தமானவர்களாக ஆக்க முயற்சிக்க கூடாது என வினயமாக கேட்டு கொள்கின்றோம். இ.தனஞ்சயன்
     
        

செவ்வாய், 12 டிசம்பர், 2017

கருத்தின் ஆழம் குறைவுபடாமல் இருப்பதே கவிதை!

படைப்பாளியின் எண்ணங்கள், கருத்துக்கள், சிந்தனைகள் போன்ற மன உணர்வுகள் படைப்பாக வெளிவரும் போதே படைப்பாளி சுயதிருப்த்தி அடைகின்றான்.படைப்பாளி தனது திறமைகளை ஏதோஒரு வகையில் தனது ஆக்கப் படைப்புகளை வெளிஉலகிற்கு வெளிக்கொணர முயல்கின்றான்.சில சமயங்களில் வெற்றி பெறும் படைப்பாளி பல சமயங்களில் காணாமலே போய்விடுகின்றான்.படைப்பாளி தனது சூழலில் இருந்தே தனது ஆக்கப் படைப்புகுரிய கருப்பொருளை பெற்று கொள்கின்றான். சூழல்கள் மாறும் போது படைப்பின் தன்மைகளும் மாறுபடுகிறது.அந்தவகையில், இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடியாகக் கூறப்படுகிறது. இலக்கிய வகையில் முக்கியமானதாக கவிதை விளங்குகிறது. இது சிறுகதை,நாவல், கட்டுரை போன்றவற்றின் சுபாவங்களில் இருந்து மாறுபட்ட இயல்பு கொண்டது.கவிதையானது ஒருவரின் உளக்குமுறல்கள் மொழி வடிவம் பெறும் போது தோற்றம் பெறுவதாகும்.கவிஞர் பிறைசூடன் கவிதை தொடர்பாக கூறும் போது பாரதி,பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன் போன்றவர்கள் தமிழ் கவிதை உலகில் அனைத்தையும் தொட்டுவிட்டார்கள்.நாம் வரிவடிவம் மற்றும் வார்த்தைகளில் மாத்திரமே மாற்றம் செய்து வருகின்றோம் என்று ஒரு நேர்காணலில் குறிப்பிட்டமை கவனிக்கத்தக்கது. கவிதையானது எந்த அடக்குமுறை சூழலில் இருந்தாலும், ஏதோஒரு குமுறலாக வெளிவந்துவிடுவது அதன் சிறப்புத்தன்மையாகும்.அந்தவகையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மொழிபெயர்ப்பு துறையில் கல்வி பயிலும் கவிஞர் முகமது அஸ்கரின் கன்னி கவிதைத் தொகுப்பான"விரியும் போராடும் அரும்புகள்" ஒக்ரோபர் மாதம் 11ம் தி கதி கைலாசபதி கலையரங்கில் வெளியீடு தெரிவுசெய்யப்பட்டு இருந்தமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.கவிதை வெளியீடு விழாவுக்கு அழைப்பு வந்தும் அண்றைய வெளியிட்டு விழாவில் தவிர்க்க முடியாத சில தனிப்பட்ட காரணங்களினால் கலந்து கொள்ள முடியவில்லை.ஆயினும், கவிஞரினை பல்கலைக்கழக வளாகத்தில் நேரடியாகசந்தித்து கவிதைபுத்தகத்தை பெற்று வாசித்த அனுபவித்த உணர்வுகளை திறனாய்வுத்தளத்தில் வலைப்பூபதிவாக்கலாம் என எண்ணுகிறேன்.கவிதை என்பது சமூகத்தின் உணர்வு பிரவாகம் எனலாம்.கவிஞர் அஸ்கர் தனது உணர்வுகளை விரியும் போராடும் அரும்புகள் என்று கவிப்புத்தகத்திற்கு பெயரிட்டுள்ளார் என எடுத்துக் கொள்ளலாம். காரணம், உணர்வுகள் ஓர் ஒழுங்கு முறையில் வார்த்தைகளாகி வரியாகி கவிதையாகின்றது எனலாம்."விரும்பிகள் கொடுத்த காலம் திருடித்தின்னும் காலமே இச் சீர் வரிசை"என்று சீதனம் கொடுமையை சீர் வரிசை எனும் சீதனம் எனும் கவிதையில் கூறுகிறார்.விழுந்தாலும் விதையாகிடு எனும் கவிதையில் "துச்சமும் அச்சமும் உன் இதயங்கள் எனக்கும்வேண்டும் தோழா வீரநடை போட்டதால் நீ மண்ணிலே இன்றும் மணம் வீசுகின்றாய் "என்ற கவிவரிகளில் சோசலிச சித்தாந்ததை வலியுறுத்தியுள்ளார்.

முன் பக்க அட்டைப்படத்திலேயே கவிஞன் கவியின் கருப்பொருளின் ஆழத்தை உணர்த்தியுள்ளதோடு மலையகமக்களின் எதிர்பார்ப்புகளை அரும்புகளாக உவமைபடுத்தியுள்ளமை சிறப்பு.இதே சமயம் ஒரு இளம் கவிஞராக அஸ்கர் கூட ஒரு வகையில் விரியப்போராடும் அரும்பு என்று அர்தப்படுத்திக் கொள்ளலாம்.
இதேவேளை,உழைப்பே உயர்வு என்ற ஒரு கவிதையின் ஆரம்பம் இவ்வாறு அமைகிறது "மூடநம்பிக்கைகளை முடக்கிவிட்டு முடியும் என்ற முடிவோடு வா தோழனே" என்ற கவி வரியானது தன்னம்பிக்கையூட்டும் வரிகளாக அமைகிறது.மேலும், மற்றொரு கவிதையில்
"காலம் காலமாய்
மீட்சி இல்லாப் போராட்டத்தில்
தூளாய் போகின்றது....."மலையகமக்களின் அரசியல் ரீதியாக ஏமாற்றப்படுவதை சலித்து கவிதை வாயிலாகசொல்கிறார்.காணாமல் போன கணவுகள் எனும் கவிதையில்"காலமெல்லாம் காணாமல் போய் கனவுகள் கூட கஞ்சத்தனம் காட்டுகின்றன "எவ்வளவு சோகம் ஏமாற்றம் கணவுகள் கான்பதற்கே நம்பிக்கை அற்ற தன்மை. ஆழ்ந்த சிந்தனை மிக்க வரிகள்.உன்மை நட்பு எனும் கவிதையில் "பாலினம் தடையில்லை உணர்வுகள் ஒன்றானால் தோழன் துனைநிற்பான்"ஆன் பென் நட்பின் புனிதமான தன்மையை குறிப்பிடுகிறார்.பெண்ணின் கொடுமை எனும் கவிதையில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை குறிப்பிட்டு இறுதி வரிகளில்"தடுத்து எதிர் நிற்க தூக்குதண்டனையை வரச்சொல்லங்களே"என பெண்களின் விடுதலைக்கான அவசியத்தையும் அதற்கு தீர்வாக தூக்குத்தண்டனையும் தனது கவிதையில் வலியுறுத்தியுள்ளார்.தோட்ட தொழிலாளிகள் எனும் கவிதையில் "கட்டைகள் காற்சட்டை வெள்ளையனின் அடி மட்டம் போனபின்னும் போகவில்லை "என்று மலையக மக்கள் தொடர்ந்தும் அடிமைத்தனம் நிறைந்த வாழ்க்கையே வாழ்ந்து வருகிறார்கள் என்று கூறுகிறார். நிதியும் நீதியும் எனும் கவிதையில் "நிதி தான் நீதியா இது தான் நியதியா"என நீதி நிதிக்கு பின்னால் என்ற தற்கால நிலமையை கவிதையில் சொல்கிறார்.

"புயலோடு போராடும்
தூக்கணாம் குருவி கூட்டைப் பார்
உழைப்பால் உயர்ந்து போய்
உயரத்திலேயே வாழ்கிறது
மகுடிக்கு வளைந்தாடும்
பாம்பாக ஆகாதே
முடிவின் ஆரம்பத்திலும்
முதுகெலும்போடு உழைத்து வாழ்"
என்று உழைப்பின் அவசியத்தை உழைப்பே உயர்வு எனும் கவிதையில் உணர்த்துகின்றார்.உழவனின் உழுத மனம் எனும் கவிதையில் "உழவன் மனம் ஓயந்து விட்டால் உண்பதற்கு சோறிறின்றி நாற்றோடு சேற்றில் இறங்குவதே மனிதனின் விதி ஆகிவிடும் "விவசாயத்தின் எதிர்காலம் பற்றி சிந்திக்கும்கவிஞரின் தொலைநோக்கு பாராட்டுக்குரியது.வடுக்கள் எனும் இன்னொரு கவிதையில்"இறுதி சடங்கு செய்து கொள்ளி வைக்கப் பெற்றெடுத்த மகளைத் தொலைத்து துடிக்கும் பெற்றவரின் கதறல்கள்"என்று போர்காரணமாக இறந்த இளைஞர்களின் பெற்றோரின் மனவருத்தத்தை கவிஞர் அழகாக பதிவு செய்கிறார்.நாகரீகம் உட்புகுந்த மானிடம் எனும் கவிதையில் "சுகங்களை சுத்தமாக காணோம் சூனியமாய் ஆனது உலகே"என்று உலகமயமாக்கலின் தாக்கத்தை கூறும் கவிஞர் குறித்த கவிதையின் இறுதி வரியில் நமக்கெல்லாம் ஆகுமா நாகரீகம்? என்று முடிக்கிறார். இது உலகமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல்என்பது ஏழைகளுக்கு எட்டாக்கனி என்பதாகவே கருத்து கொள்ளவேண்டியுள்ளது.

"கல்வி உன் உயர்வெனவும்
ஒழுக்கம் உன் சிறப்பெனவும்
இவையோடு மலர்தலே
உன் புகழ் எனவும் உரைத்திட வேண்டும்"
என்று விளையும் பயிர் எனும் கவிதையில் கல்வியின் அவசியம் பற்றி குறிப்பிடுகின்றார்.அத்துடன், செல்லாக்காசு எனும் கவிதையின் இறுதியில் "புரிதல் வேண்டும் உலகே-காசு புதிதாய் இனிக்கும் நஞ்சே"என்று காசின் தன்னம பற்றி சிந்திக்க வைக்கின்றார்.

நான்,தமிழோடுவிளையாடுமனமே,உழைப்பே உயர்வு,கருகிய மலர் சிரிக்கிறது, சிறகொடிந்தபறவை,
விளையும் பயிர்,தூரத்து நிலா,விளையும் பயிர்,
யார் குற்றம்,தேம்பியழும் சுவர்கள்,
விரிய போராடும் அரும்புகள்,ஒரு மயிலிறகால்,
பாலஸ்தீனக் குரல்,குருவிக்கூடு,
காணி நிலம் வேண்டும்,
கடல்வாழ் காகித ஓடம்,முகிலின் துளிகள், சீர்வரிசை எனும் சீதனம்,
என் உயிர் தங்கை,கடல்வாழ் காகித ஓடம்,கடைசி முத்தம்,உயிருள்ள மரணம்,வறுமை விலகாதோ,
புறப்படு புதுமைப் பெண்ணே,
வடுக்கள்,காணாமல் போன கனவுகள்,உண்மைநட்பு,தோட்டத்தொழிலாளிகள்,பெண்ணினக் கொடுமை
வட்டியில்லா கடன்,
மீளாத மியன்மார்ப் படகுகள்,உழவனின் உழுத மனம்,மொட்டின் மொழி ,வறுமை விலகாதோ,அவசரக் கல்யாணம்
சதுரங்க வேட்டை,இறுதி நாழிகை என்று சமூககவிதைகள்,பொருளாதார,அரசியல் மற்றும் காதல் கவிதைகள் என அனைத்தும் தற்காலத்தின் நிலைமையை உரையாடும் பாங்கில் கவிதை அமைந்துள்ளது.கவிஞன் எனும் கவிதையில் அஸ்கர் கவிதைக்கு பின்வருமாறு வரைவிலக்கனம் கொடுக்கின்றார்"கவிஞ்ஞனின் கற்பனையை இலக்கனம் கற்பிக்க முடியாது இது தான் அதுவென்றாலும் அது கவிதான்"என்று கூறுகிறார். கவிதையின் வரிகள் அற்புதமானது.கன்னி படைப்பினை இவ்வளவு சிறப்பாக செய்திருப்பது உண்மையில் பாராட்டுக்குரியது. கவிஞர் முகமது அஸ்கரின் முக நூல்களில் பார்த்து ரசித்த கவிதைகள்
இன்று நூல் வடிவில் உருவாகி இருப்பது மிகவும் பொக்கிஷமான விஷயமாகும். முகப்புத்தகத்துக்குள் தனது கவிதையை சிக்கவிடாமல் அச்சு வடிவில் வெளி உலகிற்கு கொண்டு வந்தமை சிறப்பானது.அச்சு வடிவில் கவிதை வாசிப்பு அனுபவம் அலாதியானது.விரியப் போராடும் கவிதைகள் என்ற கவிஞர் முகமது அஸ்கரின் கவிப்புத்தகம் கவிஉலகிற்கு அமையும் என்பதில் எந்த சந்தேகமும்இல்லை. இறுதியாக மொட்டின் மொழி எனும் கவிதையில் கவிஞர் குறிப்பிட்ட "உலகம் இன்று இருட்டறையில் இனி நீயாவது விழித்துக்கொள்"என்ற வரிகளை சிந்தித்துக்கொண்டு எனது இச் சிறு வலைப்பூப்பதிவினை நிறைவு செய்து மற்றும் ஓர் வலைப்பூப்பதிவில் விரைவில் சந்திக்கின்றேன். இ.தனஞ்சயன்.ஊடகத்துறை

புதன், 30 ஆகஸ்ட், 2017

ஜனநாயகத்தினை உறுதிப்படுத்த ஊடகங்கள் உதவாதா?

"ஊடகங்கள் இல்லாத ஜனநாயகம் சிறகில்லாத பறவை போன்றது "மக்கள் மற்றும் அரசாங்கத்திற்குமிடையிலான தொடர்பாளராக/இனைப்பாளராக ஊடகங்களே காணப்படுகிறது. ஊடகங்களால் கூறப்படும் கருத்துக்கள் மிகவும் வலிமைமிக்கவை.அத்துடன்,ஊடகங்கள் தற்போது சமூக கட்டமைப்பு(social structure)மற்றும் கருத்து உருவாக்கம்(opinion forming)போன்றவற்றில் முக்கியமான பங்கு வகிக்கிறது.இவற்றின் முக்கியமான பணிகளாக, தகவல்கள் வழங்குதல், சமூகப் பதட்டத்தை இல்லாமல் செய்தல்,சமூக சீர்திருத்தம், சமூகமயப்படுத்தல்,பண்பாடு விழுமியங்களினை கட்டிக்காத்தல்,மக்களின் உணர்வுகளை புரிந்து படைப்புகளினை படைத்தல்,மக்களின் அதிகாரத்தை சுட்டிக்காட்டுதல்,புதிய ஆக்கபடைப்புக்களை ஊக்குவித்தல்,முரண்பாடுகளை களைதல், பிரச்சனைகளிற்கு தீர்வு முன்வைத்தல் போன்றன முன்மாதிரி ஊடகங்களிற்கு முக்கியமானதாகும்.மக்களின் உரிமைவென்றடுக்க ஊடகங்கள் முக்கியம்.மக்கள் வரிசெலுத்துவதனால் பாராளுமன்றத்திற்கு செல்லும் மக்கள் பிரதிநிதிகளினை தெரிவு செய்யும் உரிமை ஜனநாயகத்தின் ஊடாக உறுதிபடுத்த ஊடகங்களால் பங்களிக்க முடியும்.இதுவே பொறுப்புமிக்க ஊடகவியலாகும்(Responsible journalism).ஜனநாயகத்தினை பெறுமதியுடையதாக்குவதாக ஊடகங்கள் காணப்படுகிறது.உலக அரசியல்,பொருளாதார மற்றும் சமூகவியல் மாற்றம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஊடகங்களே.சாதாரண பாமரனுக்கும் அறிவூட்டக்கூடியதாக வானொலி மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் விளங்குகின்றன .இதனாலேயே, சட்டம், நீதி, நிர்வாகத்தை தொடர்ந்து ஜனநாயகத்தின் நான்காவது கிளை யாக ஊடகங்கள் சமுதாயத்தின் காவல்நாயாக குறிபிடப்படுகின்றது.எனினும்,தற்போது,சர்வதேச ஊடகங்களில் வழிகாட்டும் நாய்களாக ஊடகங்கள் குறிப்பிடப்படுகின்றது.ஐனநாயகம்(Democracy)என்பதை பல்வேறு அறிஞர்கள் பல்வேறு விதமான வரைவிலக்கனங்கள் வகுத்துள்ளார்கள்.ஹென்றி டேவிட்  "அரசியல் அதிகாரம் முன் அனைவரும் சமம்" என்கிறார், ஆபிரகாம் லிங்கன் "மக்களால் ,மக்களுடைய,மக்களுக்காக அரசாங்கம்" என வரையறுக்கின்றார்.காள்மாக்ஸ் 'Democracy is the road to Socialism' "சமவுடமைக்கான பாதையாக ஜனநாயகத்தை எடுத்து கொள்கின்றார்" மாறாக புரட்சியாளர் சேகுவாரா "ஜனநாயகம்  என்பது முதலாளித்துவ வர்க்கம் மற்றும் சர்வாதிகார ஆட்சியார்கு சாதகமாக இருப்பதாகவும் அதனை நாம் அனுமதிக்க கூடாது" என்கிறார் .தோமஸ்ஜெபர்சன்"" ஜனநாயகத்தின் நாணயமே தகவல்" என்கிறார்.அடிப்படை வரைவிலக்கனமாக மக்களை தலைவர்களாக கொண்டது/முதன்மை படுத்துவதாக ஜனநாயகம் காணப்படுகிறது.ஊடகத்தின் ஜனநாயகக் கோட்பாட்டு கூட ஜனநாயகத்தின் மாண்புகளையே வலியுறுத்துகிறது.சர்வதேச ஊடகங்களினை பொறுத்தவரை ஜனநாயகம் என்று கூறிக் கொண்டிருந்தாலும் முழுமையான ஜனநாயகப் பண்புகளினை பின்பற்ற செய்கிறதா என்பது கேள்விக்குறி?ஆதாரமாக, எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு மேற்கொண்ட ஊடக சுதந்திரத்திற்கான பட்டியல் படுத்தலில் அமெரிக்காவிற்கு 41வது இடமே கிடைத்தது. ஆனால்,உலகத்திற்கு ஜனநாயகம் தொடர்பாக போதிக்கின்றது.இது குறித்து ஆழமாக சிந்திக்க வேண்டிய விடயம் ஆகும்.குறித்த தரப்படுத்தலில் இலங்கைக்கு 141வது இடமே கிடைத்தது. இலங்கையில் தற்போது நல்லாட்சி அரசாங்கம் என்று கூறப்படும் நிலையில் ஊடகளிற்கான சுதந்திரம் என்பது கடந்தகால நிலையை விட முன்னேற்றமே தவிர முழுமையான சுதந்திரத்தை அனுபவிக்க முடியாத நிலையே ஊடகங்கள் மற்றும் ஊடகவியளாருக்கு காணப்படுகிறது. ஊடகத்தினுள் காணப்படும் சுதந்திரமற்ற நிலை மற்றும் ஊடகங்களிற்கு புறச்சூழலால் வழங்கப்படும் சுதந்திரமற்ற நிலை போன்றவற்றை குறிப்பிடலாம். இரண்டாவது சுதந்திரம் தொடர்பாக நாம் அதிகம் அலட்டிக்கொண்டாலும் ஊடகங்களினுள் பணிபுரியும் ஊடகவியளாரின் சுதந்திரம் தொடர்பாக யாரும் சிந்திப்பது இல்லை.ஊடகத்தின் அறம்(Media ethics)தொடர்பாக சவாலுக்கு உட்படுத்தும் இடமாக ஊடகங்களின் அகச்சூழல் காணப்படுகிறது.அதிகரிக்கும் ஊடகங்கள் போட்டிச் சூழலில் ஏனைய ஊடகங்களினை எப்படி வெற்றி கொள்ளலாம் என்றே எல்லா ஊடகங்களும் சிந்திக்கின்றன.இதனால் ஊடகஅறம் கண்டிக்கபடுவதில்லை.தற்போதைய நவீன ஊடகங்கள்(Digital media)குறிப்பாக பிரஜைகள் ஊடகவியலை(Citizens journalism)பின்பற்றும் சமூக ஊடகங்களின் வருகை ஊடக ஒழுங்கு,ஊடகதரநிர்னயம் மற்றும் ஊடகதர்மத்தை சம்பந்தம் இல்லாத ஒன்றாக்கி விட்டது.மனிதனின் அடிப்படை உரிமை மற்றும் சுதந்திரம் என்று அறத்தை பின்பற்ற தவறி விட்டார்கள்.ஊடகசுதந்திரம் என்பது மக்களின் இறைமையை பலப்படுத்தல், அரசியல் அறிவு மற்றும் புரிந்துனர்வு,மக்களின் பொது சன அபிப்பிராயம், சட்ட குறைபாடுகள்,முரன்படாதன்மையை உருவாக்கல்,மனித உரிமைக்கு குரல் கொடுத்தல்,சுதந்திர நீதித்துறையை உறுதிபடுத்தல் போன்ற ஜனநாயகத்தின் பண்புகளை மக்கள் அனுபவிப்பதற்கு வழிவகைகளை செய்ய வேண்டும் மாறாக ஊடகசுதந்திரம் தவறான வழியில் பயன்படுத்தி ஜனநாயகத்தின் நன்மைகளை சேதப்படுத்தக்கூடாது.ஜனநாயகத்தின் வலிமை அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாக மக்கள் தம் அபிப்ராயங்களை தெரியப்படுத்துவதற்கு ஏற்ப ஊடகசுதந்திரத்தை முன்னிலைப் படுத்தல்.இதனாலேயே, Bill Moyers என்ற மெய்யியலாளர் ஜனநாயகம் மற்றும் ஊடகங்களின் பெறுமானம் பிரித்துப்பார்கமுடியாதது என விளங்கிக் கொள்கிறார்.சமாதானம் என்பது ஜனநாயகம் இல்லாமல் வராது என மாமனிதர் நெல்சன் மண்டேலா ஜனநாயகத்தின் பெரும் பெறுமதியை கூறுகிறார்.ஆங் சங் சூகி"ஜனநாயகம் சுதந்திரம் என்பன எமது உயர்ந்த கனவுகள் என்று கூறுகிறார்.கிறிஸ்டோபர் கூறும் போது ஊடகங்களின் சுயாதீனம் ஜனநாயகத்தை உறுதிபடுத்துவதிலே உள்ளது. பேட்டன் ரசல் "முட்டாள்களும் வாக்களிக்கும் தகுதியை ஜனநாயகம் தருவதாக கூறுகிறார் ".பேட்டன் ரசலின் கூற்று ஆழமாக திறனாய்வு செய்யவேண்டியது.இங்கு,அயோக்கியர்கள் ஆட்சி செய்கிறார்கள் என்றால் தெரிவு செய்தவர்கள் முட்டாள்கள் என்ற பகுத்தறிவின் தந்தை பெரியாரின் சிந்தனையும் ஒப்பிடப்படவேண்டியது.ஜனநாயகதை பாதுகாக்க ஊடகங்கள் மக்களினை அரசியலில் பங்கெடுக்கக் செய்து கொள்கை வகுப்பாளர்களுக்கு அறிவூட்டி அரச செயல்பாடுகளில் புறவயத்தன்மையை பேனுவதன் ஊடாக பங்கேற்பு அரசியல் பண்பாட்டை உறுதிப்படுத்தி ஜனநாயக விழுமியங்களினை காப்பாற்றுவதே ஊடகங்களின் தார்மீக கடமை என்பதோடு தொழில் வாண்மை மிக்க ஊடகத்துறையை வளர்த்தெடுக்கவும் முடியும்.ஜனநாயகத்தில் அதிகாரம் என்பது நிலையற்றது.எனினும், ஜனநாயகம் என்பது வெறும் உதட்டளவில் மாத்திரமே அரசியல் மற்றும் ஊடகவியல் இரண்டிலும் காணப்படுகிறமை குறித்து இன்னும் சிந்திக்க வேண்டி இருக்கிறது.Walter chonkite என்ற சிந்தனையாளர் ஊடகசுதந்திரம்(Freedom of the press)என்பதையே ஜனநாயகம் என்று எடுத்து கொள்கின்றார் மற்றும் ஒரு அமெரிக்கமெய்யியலாளரான Andrew vachss "சமூக முன்னேற்றத்திற்கான உந்து விலையே ஊடக ஜனநாயகம்" என்கிறார்.எனினும்,நடுநிலை ஊடகங்கள் இல்லாத வரை ஜனநாயகம் சந்தேகமே! இ.தனஞ்சயன் ஊடகத்துறை.