அறிவைநாடல்

அறிவைநாடல்
அறிதலார்வம்
சர்வதேச ஊடகங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சர்வதேச ஊடகங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 20 நவம்பர், 2017

பன்னாட்டு அரசியல் கருத்துருவாக்கத்தில் தொலைகாட்சியின் பங்கு காத்திரமானது!

இன்றைய தினம் உலக தொலைகாட்சி தினமானது சர்வதேச ரீதியாக கொண்டாடப்படுகிறது.குறித்த தினத்தை முன்னிட்டு தொலைகாட்சியின் கருத்துருவாக்கம்(Opinion making) மற்றும் ஜனநாயகத்தினை வலிமைப்படுத்ல் போன்றன குறித்து சிந்திக்கப்போவதாகவே குறித்த பதிவு அமையவிருக்கின்றது.சமுக விஞ்ஞான துறையில் முக்கியமான துறையாக தற்போது தொடர்பாடல்த்துறை விளங்குகிறது.20ம் நூற்றாண்டின் 60களின் பிற்பகுதியில் பிரசித்திபெற்றதாகக் காணப்படுகிறது. இதில் ஊடகங்களின் இயல்பு, பயண்பாடு, தாக்கம் ஆகியவை மிக ஆழமாக ஆராயப்படுகின்றன.குறித்த தொடர்பாடல் ஊடகத்துறையில் மிகப் பெரிய புரட்சிகளினை உண்டுபண்னியதாக தொலைக்காட்சி காணப்படுகிறது.கல்வி, அரசியல், பொருளாதாரம், பொழுதுபோக்கு, வணிகம், செய்தி,விளையாட்டு,ஆன்மிகம் மற்றும் சமுகம் போன்றவற்றிற்கான சிறந்த ஊடகமாக தொலைக்காட்சி காணப்படுகிறது.ஏனைய வகையான ஊடகங்களில் இருந்து குறிப்பாக அச்சு ஊடகங்களான பத்திரிகை, சஞ்சிகை போன்றவற்றில் இருந்தும் செவிநுகர் ஊடகமான வானொலியில் இருந்து தொலைக்காட்சியின் சுபாவங்கள் வேறுபடுகிறது.ஐம்புலன்களினையும் இயக்கத்தில் முழுமையாக வைத்துஇருப்பதற்கு தொலைக்காட்சி முக்கிய பங்காற்றுகின்றது.இதன்காரணமாகவே,அனைவருடைய இல்லங்களிலும் தொலைக்காட்சியினை காணமுடியும்.குறித்த தொலைக்காட்சியினானது பூகோள மயமாக்கல் சூழலில் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டு ஐக்கிய நாடுகள் சபையானது 1996ம் ஆண்டு முதற்கொண்டு உலகத்தொலைக்காட்சி தினத்தை உலகளாவிய ரீதியில் சமாதானம் ,பாதுகாப்பு,பொருளாதாரம்,சமுக அபிவிருத்தி,தொடர்பாடல் மற்றும் பண்பாட்டு மாற்றம் போன்றவற்றை மேம்படுத்தும் நோக்குடன் பிரகடனப்படுத்தி ஒவ்வொரு வருடமும் பல்வேறு நாடுகளிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.உலக அரசியலினை ஓர் ஒழுங்கு முறைக்குள் இட்டு செல்லும் தொலைக்காட்சிகளாக Reuter,BBC,CNN, AFP,APA,CPS,RT,CGTN,Aljazeera,Thass, Telegraph, The guardian, India today,ABC,Fox news,Sky news,NDTV போன்றவற்றை குறிப்பிடலாம்.இவை சர்வதேச அரசியலில் உள்ள தொடர்பாடலை இற்றைப் படுத்தும் ஊடகங்கள் ஆகும்.இன்றைய காலத்தில் சர்வதேச அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும் சீனா ஊடகங்களின் பெறுமதியை விளங்கிக் கொண்டு பல மொழிகளில் தொலைக்காட்சி சேவையை உருவாக்கியுள்ளது.இதன் மூலமாக சீனா தொடர்பாக சர்வதேசம் அறியாத பல தகவல்களை உலகத்திற்கு சீனா உணர்த்தி வருகிறது. போர் முனைகளில் கூட அவற்றின் பங்கு கணிசமானது.இதேவேளை, 1996 ல் நடைபெற்ற கொசொவா போரின் போது கேட்டோம் படைகளிற்கு எதிராக ஆர்பாட்டங்கள் ஒழுங்கு செய்த போதெல்லாம் அமெரிக்கா சார்பு தொலைக்காட்சிகள் அமெரிக்கா சார்ந்த தொலைக்காட்சிகள் அங்கு நீச்சல் உடையில் கவர்ச்சியாக பெண்கள் பலர் நடிக்கும் பெவோச் என்ற அமெரிக்க தொலைக்காட்சி தொடரை ஒலிபரப்பி மக்களை வீடுகளுக்குள் முடங்கி வைத்தன.சீன நிறுவனமான Chinxuva சர்வதேச ரீதியாக 160 தொலைகாட்சி நிலையங்களை உருவாக்கியுள்ளது.2020ம் ஆண்டளவில் மேலும் 40 தொலைகாட்சி நிலையங்களை நிறுவவுள்ளது.2016ம் ஆண்டின் இறுதியில் சீனாவின் பன்னாட்டு அரசியலை பேசும் முன்னணித் தொலைகாட்சியான CCTV என்ற பெயரைச் CGTN என்று மாற்றியுள்ளது.இதன் விரிவாக்கம் China Global Television Network ஆகும். இதிலிருந்து சீனா (Globalization)உலகமயமாக்கலிற்கு எவ்வளவு தூரம் முக்கியத்துவத்தை  எவ்வளவு தூரம் விளங்கி வைத்துள்ளது என்பதை உணரமுடியும்.இதேவேளை குறித்த தொலைகாட்சியானது ரஸ்யமொழி,ஆங்கில மொழி, அரபு, பிரென்சு மற்றும் ஜப்பானிய மொழிகளில் ஒலிபரப்பு செய்கிறமை கவனத்திற்குரியது. இதேசமயம், கடந்த நாட்களில் ஆபிரிக்க நாடொன்றில் இடம்பெற்ற அரசியல் நிகழ்வு தொலைக்காட்சியின் முக்கியத்துவத்தை எடுத்து இயம்புகின்றது.அதாவது, 37வருட சிம்பாவே ஜனாதிபதி ரோபேட் முகாபே பதவியில் இருந்து இராணுவ புரட்சியின் மூலமாக கவிழ்கப்ப்பட்டமை குறித்த ஆட்சி கவிழ்பிற்கு இராணுவம் குறித்த நாட்டின் அரச தொலைகாட்சி நிறுவனத்தையே முதலில் தனது கட்டுபாட்டிற்கு கொண்டு வந்து அதன் பின்னர் நாட்டு மக்களுடன் தொலைகாட்சியில் தம்மை நியாயப்படுத்தி மொகாபேயை வீட்டுக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது.இன்றைய காலத்தில் மக்களின் ரசனைக்குரியவகையில் (Taste culture) நகைச்சுவைக்கென தனியான தொலைக்காட்சிகள்,ஆன்மிகத்திற்கென தனியான தொலைகாட்சிகள்,விளையாட்டுக்கென தனியான தொலைகாட்சிகள்,செய்திக்கென தனியான தொலைக்காட்சிகள்,பாடலிற்கென தனியான தொலைகாட்சிகள் அத்துடன் சிறுவர்களிற்கென பிரத்தியேக தொலைகாட்சிகள் காணப்படுகிறமை குறிப்பிடத்தக்கதாகும்.தமிழ்நாட்டினை பொறுத்தவரை அரசியலில் கால்பதிக்க வேண்டுமாயின் தொலைகாட்சி ஆரம்பிக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது எனலாம். கட்சிகளிற்கு ஒரு தொலைக்காட்சி என்ற நிலை.அச்சு ஊடகங்கள் என்பது எழுத்தறிவு படைத்தவர்களாலேயே விளங்கிக் கொள்ள முடியும்.மாறாக,தொலைகாட்சி சாதாரண பாமரர்களாலேயே புரிந்து கொள்ள முடியும். இது தொலைகாட்சியின் மிகப்பெரிய பலமான அம்சம் ஆகும்.இலங்கையை பொறுத்தவரை அரச தொலைகாட்சிகள்(State media)தனியார் தொலைகாட்சிகள் என்ற பிரிப்புக்குள் உள்ளடக்க முடியும். அரச தொலைகாட்சிகள் மக்களிற் கான ஊடகங்கள் என்பதை மறந்து ஆளும் அரசாங்கத்தின் ஊதுகுழலாக செயற்பாட்டு வருவதும் தனியார் தொலைகாட்சிகள் தமது நிர்வாகத்தின் அரசியலிற்கு தாளம் போடுவதுமே வழமையானது.எனினும், இலங்கையில் எந்தவொரு தொலைகாட்சியும் இன்னமும் டிஜிட்டல் மயப்படுத்தப்படவில்லை என்பதுடன் ரஸ்யாவில் ஒரு தொலைகாட்சிநிறுவனமானது 7D தொழில்நுட்பத்தை பரிசீலித்து வெற்றி கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.மேலும்,தொலைகாட்சிகளின் சுபாவங்களில் சாதகமான மற்றும் பாதகமான அம்சங்கள் காணப்பட்டாலும் சாதகமான முறையில் சிந்திப்பே சாதகமான விடயங்களினை வாழ்வில் பெற்றுக்கொள்ளவழிவகுக்கும்.தொடர்ந்து சிந்திப்போம்!இ.தனஞ்சயன் ஊடகத்துறை.

செவ்வாய், 12 செப்டம்பர், 2017

அரசியல் தொடர்பாடலிற்கு களமாக அமைவது ஊடகங்களே!

முறைசாரா வழி முறையில் அரசியலினை மக்களிற்கு கற்றுக் கொடுப்பனவாக ஊடகங்கள விளங்குகின்றன. முறை சார்  வழிமுறைகளை பின்பற்றி அரசியல் விஞ்ஞானத்தை கற்றுக் கொள்பவர்கள் மிகவும் சிலரே.ஆகையால், அரசியல் கருத்துருவாக்கத்தில் ஊடகங்களின் வகிபங்கு அளப்பரியது.இவை தமது இருப்பை தக்கவைத்துக் கொள்ளவும், மாற்றி அமைத்துக் கொள்ளவும் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்க வேண்டிய அவசியப்பாடு உள்ளது.அரசியல் இன்றி ஊடகங்கள் இல்லை ஊடகங்கள் இன்றி அரசியல்   இல்லை எனலாம். அரசியல் இன்று சகல துறையிலிலும் ஊடுவியுள்ளது.விளையாட்டு, கல்வி, பொருளாதாரம்,வைத்தியம்,விவசாயம் என்று அரசியல் ஆதிக்கம் செலுத்துகிறது இதனால் ஊடகங்கள் அரசியலினை தவிர்க்க முடியாத நிலை. தற்போது ஊடகங்களின் அரசியல் முக்கியமானதாக காணப்படுகிற அதேவேளை மக்களை மூளைச்சலவை செய்து செயலற்றவர்களாக்கும் செயலைப் அரசியல் பின்புல உதவியுடன் ஊடகங்கள் நிகழ்த்திக் காட்டுகின்றன. இன்றைய ஓவ்வொரு ஊடகங்களின் பின்புலத்தில் மிகப்பெரிய அரசியல் நிகழ்சிநிரல் இருப்பது என்பது உண்மையானது.தம்மை உண்மை,நடுநிலை, துணிவு எனக் கூறிக்கொண்டாலும் அரசியல் ஆதாயத்திற்காகவே ஊடகங்கள் செயற்படுகின்றது என்பதே நியாயமான கருத்து.இந்நிலையில், ஊடகங்கள் மற்றும் அரசியலின் வெற்றி மக்களின் கைகளில் தான் சனநாயக விதிப்படி தங்கியுள்ளது. எனவே,அரசியல் வாதிகள் தமது கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் செல்வதற்காக பல திட்டமிட்ட செயற்பாடுகளினை மேற்கொள்கின்றாகள் இதுவே அரசியல் தொடர்பாடலாகும்.அரசியல் செயற்பாட்டில் கருத்துக்கள் /சிந்தனைகள் ஊடகங்கள், வேட்பாளர்கள், தொண்டர்கள், கட்சிகள் மற்றும் ஏனைய நிறுவனங்கள் வாயிலாக கடத்தப்படுவதே அரசியல் தொடர்பாடல்(Political communication)என வரைவிலக்கனப்படுத்தப்படுகின்றது.அரசியல் தொடர்பாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ரூஸ்வெல்ட் "அரசியலில் விபத்து என்று எதுவுமே இல்லை யாவும் திட்டமே என பந்தயம் கட்டலாம் "என அரசியல் திட்டமிடலின் அவசியத்தை சிந்திக்க வைக்கிறார்.தொடர்பாடல் என்பது சாதாரணமான வாழ்வியலில் மிக இன்றி அமையாதது. அரசியலில் தொடர்பாடல் இன்றி அரசியல் இல்லை எனலாம்.அரசியல் வாதிகளின் முக்கியமான முதல் இராஜதந்திரமாக பொருத்தமான மிகச்சிறந்த ஊடகங்களினை தெரிவுசெய்வதே ஆகும்.ஊடகங்கள் கோட்பாடு ரீதியாக பார்தால் ஊடக தெரிவு கோட்பாட்டை குறித்த இராஜதந்திர பிரோயகத்திற்கு பயன்படுத்தலாம்.அரசியல் தொடர்பாடலினை மிகவும் திட்டமிட்டு திறம்பட மேற்கொண்டு வருபவராக இந்திய பிரதமர் நரேந்திரமோடியினை குறிப்பிடலாம்.தனது நாட்டு மக்களிற்கு உரையாற்றும் போது, பெரும்பாலும் மம்பாத் என்ற வானொலி நிகழ்ச்சி ஊடாகவே மக்களிடம் தமது திட்ட எண்ணங்களை கொண்டு சேர்க்கின்றார்.அத்துடன், தற்காலத்தில் மிகவும் பிரசித்தமடைந்துள்ள சமூக ஊடகங்களினை தனது பிரச்சார கருவியாவும் பயன்படுத்தி வெற்றி கண்டவர்.குறிப்பாக, அரசியல் வாதிகள் ஊடகங்களில் தமது பலவீனங்களை மறைத்து முகமூடிகளுடன் தோன்றி தம்மை மக்களின் மீட்பர்களாக,தலைவர்களாக,சீர்திருத்த வாதிகளாக,பேச்சாளர்களாக,தேசப்பற்றாளர்களாக,இன ஆதரவாளராக, உன்னதமானவர்களாக மக்களினை நம்ப வைப்பதற்கு அரசியல் வாதிகளிற்கு ஊடகங்களே மிகவும் சிறந்த களமாக அமைகின்றன.ஆதாரமாக,அரசியல் வாதிகள்/அரசியல்வாதியாக இலக்கு வைத்து இருப்பவர்கள் தம்மை தூய்மையானவர்களாக காட்டி கொள்ள வெள்ளை வேட்டி சட்டை அணிந்து மக்கள் கூட்டம் நிறைந்த இடங்களில் குறிப்பாக பிரபலமான ஆலயத்திருவிழாக்கள்,எதிர்ப்பு ஆர்பாட்டங்கள்,நினைவு தினங்கள், புத்தக வெளியீட்டு விழாக்கள், திறப்புவிழாக்கள்,மரணவீடுகள், திருமண வீடுகள்,விளையாட்டு போட்டிகள் மற்றும் ஒரு நிகழ்வுகளும் இல்லாவிடில், தமக்கு தாமே விழா எடுத்தல் போன்றவற்றின் ஊடாக மேற்கொள்கின்ற தொடர் பாடல் அரசியல் தொடர்பாடலே ஆகும். இதேபோன்று, தமக்கு தாமே புற விளம்பரங்களை வீதியில் தொங்க விடுதல்,பொது கல்வெட்டில் தமது பெயர்களை பொறித்தல் மற்றும் தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகளில் அடிக்கடி பங்கேற்றல்,அரசியல் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்றல் போன்றன அரசியல் தொடர்பாடலே ஆகும்.தேர்தல் காலங்களில் அரசியல் தொடர்பாடலே மிக இன்றியமையாதது.தேர்தல் பிரச்சார சமயங்களில், அதிகமான மக்கள் தமக்கு ஆதரவாக உள்ளனர் போன்ற பிரக்ஞையை ஏற்படுத்தல் குறித்த கட்சிக் கொடிகளின் நிறத்தை முக்கியத்துவப்படுத்துகின்றன.ஊடகங்களில் கட்டணம் செலுத்தி தமக்கு தாமே விளம்பரம் செய்தல்,ஆங்காங்கே தாம் படத்திற்காக செய்த சிறிய உதவிகளை ஆவணப்படுத்தி மீள மீள ஊடகங்களில் ஒளிபரப்பு செய்து மக்களின் மூளையினை சலவை செய்தல்.போன்றன அரசியல் தொடர்பாடலிற்கான முக்கிய எடுத்துக்காட்டுகளாகும்.அரசியலில் ஊடகங்களில் அடிக்கடி வருவது கட்டாயமானது.இல்லாவிட்டால், மக்கள் மறந்து விடுவார்கள். இதற்காக, அரசியல்வாதிகள் பல மூலோபாயத் திட்டங்களை மேற்கொள்வார்கள்.அமெரிக்காவில் இறுதியாக இடம்பெற்ற தேர்தலை பொறுத்தவரை சமூக ஊடகங்களின் பங்களிப்பு அளப்பெரியது.அமெரிக்க ஜனாதிபதி ஊடகங்களினை கடுமையாக தேர்தல் காலங்களில் சாடினார். குறிப்பாக, CNN இனை போலி செய்தியை வெளியிட்டு வரும் ஊடகம் என நேரடியாக சாடினார். கடந்த அமெரிக்க தேர்தலில் கிலாரியின் பக்கம் பிரதான ஊடகங்கள்(Mainstream media)சாய்ந்தாலும் ட்ரம்பின் வெற்றி சாதாரணமாக அமைத்ததற்கு சமுக ஊடகங்களே எனலாம்.எனினும்,  ரஷ்யாவின் பங்களிப்பு ட்ரம்பின் வெற்றிக்கு துனைபுரிந்தது என்பதும் மறுப்பதற்கில்லை.இதேவேளை,சர்வதேச அரசியலில் ஊடகங்களின் வலிமை /சர்வதேச உறவை பேனுவதில் அரசியல் தொடர்பாடலை உணர்ந்த சீனா தனது ஆதிக்கத்தை பொருளாதார மட்டத்தில் உயர்தினால் மாத்திரம் போதாது. தொடர்பாடலே மிகவும் அவசியம் என்பதை உணர்ந்து C.G.T.N (China global television network ) இனை உலகளாவிய ரீதியில் விரிவாக்கி சீனாவுக்கு சார்பான அரசியல் பொருளாதார விஷயங்களை விவாதித்து நியாயப்படுத்தி வருகிறது. சீனாவின் one road one belt திட்டத்தின் வெற்றியில் குறித்த தொலைக்காட்சியின் பங்கு அளப்பெரியது.அத்துடன் பூகோள அரசியலினையும் குறித்த ஊடகம் விளங்கிக் கொண்டு செய்தியுடன் உலக வரை படத்தின் சீனாவின் கேந்திர நிலையை சுட்டிக்காட்டுகிறது. குறித்த ஊடகமொழியாக ஆங்கிலமே காணப்படுகிறது.இதேபோல்,  Aljazeera கட்டாரை தளமாகக் கொண்டு அமெரிக்கமயமாதலுக்கு எதிராக இயங்கி வருகிறது. இதன்காரணமாகவே,அண்மையில் பொருளாதார தடைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை கட்டாருக்கு ஏற்பட்டதற்கு மறைமுக காரணம் குறித்த ஊடகமே என்பது நன்றாக நுணுகி சர்வதேச அரசியலை விளங்கிக் கொள்ளும் போது புரியும்.இதேபோல்,Russia Today மற்றும் Tass போன்றன ரஸ்யா சார்ந்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன. B.B.C,CNN,APA,AFP போன்றன அமெரிக்காவின் செயல்பாடுகளை நியாயப்படுத்தும் ஊடகங்களே!சர்வதேச ஊடகங்களின் விம்பிள்டன் கட்டமைப்பு பரந்தது/அளவீட்டிற்கு அப்பாற்பட்டது. பிரசித்தமான ஊடக பண்பாட்டை(Popular media culture )உருவாக்குவதில் இவற்றின் பங்கு கணிசமானது.இலங்கையில் அரச ஊடகங்கள் நடப்பு அரசாங்கத்தின் ஊதுகுழலாக அரசியல் தொடர்பாடலை மேற்கொள்கின்ற அதேவேளையில், தனியார் ஊடகங்கள் தமது தனிப்பட்ட இலாப அரசியலிற்காவே குறித்த தொடர்பாடலை முன்னெடுத்துச் செல்கின்றன.தமிழகத்தில் அரசியல் தொடர்பாடல் தொலைக்காட்சி ஊடகவே தற்போது பிரபலமடைந்து வருகிறது. இங்கு, சினிமாவின் தாக்கம் அளப்பெரியது.சினிமாவில் இருந்து அரசியலிற்கு வந்து மிகப் பெரிய வெற்றி பெற்றவராக மக்கள் திலகம் என்று கூறப்படும் MGR இறை குறிப்பிடலாம்.பாத்திரம்,பாடல்கள், திரைக்கதை,வசனங்கள் என அனைத்துமே அரசியல் தொடர்பாடலிற்கான ஆதாரங்கள். தற்போதைய கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் தொடர்பான உரையாடல்களும் அரசியல் தொடர்பாடலிற்கான சான்றே ஆகும்.விஜய் கூட எதிர்கால அரசியல் பிரவேசத்திற்கான தொடர்பாடலாகவே சினிமாவினை பயன்படுத்தி வருகிறார். அழகியதமிழ்மகன்,தலைவா,கத்தி தற்போதைய பாடல் ஆளப்போறான் தமிழன் முதல் என்நெஞ்சில் குடி இருக்கும் வரைக்கும் அரசியல் தொடர்பாடலே!குறிப்பாக அரசியல் தொடர்பாக வில் பின்பற்றும் இராஜதந்திரம் தொடர்பாக கவனிக்க வேண்டியது அவசியமாகும்.பார்வையாளர்களின் இடம், காலம்,மொழி போன்றவை புரிந்து கொள்ளப்படவேண்டும். இதன்காரணமாகவே,நமது நாட்டின் அரசியல்வாதிகள் தெற்கில் ஒருவிதமாகவும் வடக்கில் ஒருவிதமான கருத்தையும் விதைத்து வருகிறார்கள்.இதேவேளை,முன்னாள் ஜனாதிபதி அரசியல் தொடர்பாடலை யுத்தத்தை தானே வெற்றி கொண்டதாகவும்,சிறு குழந்தைகள் மீது பாசம் மிக்கவராகவும்,எளிமையான விவசாயி போன்றும்,தமிழ் கற்றுக் கொள்ளும் ஆசையுள்ளது போன்றும் இதன்காரணமாகவே 'நீங்கள் என்னை நம்பலாம் நான் உங்களை நம்புகிறேன் "போன்ற முறையைக் கையாண்டு வந்தார்.மேலும், இவ்வாறான உடைகளை அணிதல்,எப்படி போட்டோ விற்கு போஸ் கொடுத்தல்,உணர்வுகளை எப்படி முகாமை செய்தல்,நேர்காணலிற்கு எப்படி முகம் கொடுத்தல்,பிரபலமானவர்களை வளைத்துப் போடுதல் போன்றன அரசியல் தொடர்பாடலை மேலும் வலுப்படுத்தும்.என்ன தகவலை ஏன் எப்படி எப்போது எங்கே சொல்கின்றோம் என்பதை பொறுத்தே அரசியல் தொடர் பாடல் வெற்றி அமையும்.எவ்வாறாயினும்,அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் கூறியதைப் போன்று "சிலரை பல காலம் ஏமாற்றலாம், பலரை சில காலம் ஏமாற்றலாம், ஆனால், எல்லாரையும் எல்லாவேளையிலும் எங்கேயும் ஏமாற்ற முடியாது "என்ற சிந்தனை அரசியல் தொடர்பாடலிற்கும் சாலப் பொருத்தமானது.அரசியல், சமூக, பொருளாதார மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களிற்கேற்ப தம்மை தகவமைப்பவர்களே அரசியல் தொடர்பாடலில்  வெற்றிபெறுவார்கள்.இ.தனஞ்சயன் யாழ்ப்பாணப்பல்கலைகழகம்,ஊடகக்கற்கைகள்.

வியாழன், 17 ஆகஸ்ட், 2017

கேலியாக ஆழமான கருத்துருவாக்கம் மேற்கொள்ளும் கேலிச்சித்திரம்!

கல்வி, சமூகம், மொழி, மதம்,இனம் என்ற எல்லைக்கோடு தாண்டி ஆழ்ந்த அர்தபூர்வமான கருத்துக்களை பெரும் திரளான மக்களிடம் கொண்டு சேர்ப்பதாக கேலிச்சித்திரங்கள் கானப்படுகின்றன.ஒரு புத்தகம், கட்டுரை,ஆசிரியர் தலையங்கம், பத்தி எழுத்து, தேர்தல் விஞ்ஞாபனங்கள் ஏற்படுத்தாத தாக்கத்தை கேலி சித்திரங்கள் செய்யும் ஆற்றல் மிக்கன. மக்களில் பெரும்பாலானவர்களின் ரசனை கேலி, கிண்டல், மட்டம்தட்டல், நக்கல்,நையாண்டி போன்றன காணப்படுகிறது. 100000 வார்த்தைகளில் புத்தகம் ஊடாக கூறுவதை கேலிச்சித்திரம் ஊடாக இலகுவாக கூறமுடியும்.கேலி சித்திர தொடக்க வரலாற்றினை பொறுத்தத மட்டில் அமெரிக்கா வே காணப்படுகிறது. 16ம் நூற்றாண்டு அச்சு ஊடக வரலாற்றின் திருப்புமுனையான காலப்பகுதியாகும்.அக்காலத்திலே கேலிச்சித்திரங்கள் மக்களின் கருத்துக்களை பிரதிநிதித்துவப்படுத்தின.அமெரிக்க ஊடகத்துறை வரலாற்றில் முதலாவது கேலி சித்திரத்தை வரைந்துள்ளார்.இங்கிலாந்து தேசத்திற்கு எதிராக பல புரட்சியை ஏற்படுத்தும் கேலிச் சித்திரங்களை வரைந்தார்.பவுல் ரெவரே என்பவர் லிங்கன் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் 1000 கணக்கில் கேலி சித்திரத்தை வரைந்தார்.அக் காலத்தில் கேலிச்சித்திரங்கள் பிரபலமானது. அத்துடன் மஞ்சள் இதழியல் என்ற சொல்லாடலும் அறிமுகமானது.கேலிச் சித்திரங்களின் தாக்கம்,விரைவுத்தன்மை போன்றன கனதியானது.சாதாரண கல்வி கன்கார்டியா பாமரனாலும் அரசியல் திருகுதாளங்களை இலகுவாக புரிந்து கொள்ள முடிகின்றது.இது கேலிச்சித்திரத்தின் சாதமான பலம்.கேலிச்சித்திரங்கள் அரசியல், பொருளாதாரம், சமூகம், விளையாட்டு என அனைத்து துறையிலும் உண்டு. கேலிச்சித்திரங்களினை யாழ்ப்பாண தமிழ் பத்திரிகைகள் தெற்கு ஊடகங்களிடம் இருந்து கடன்வாங்கியே பிரசுரம் செய்கிற தன்மையை கடந்த கால பத்திரிகைகளில் அவதானிக்க முடிந்தது. ஆயினும், சிங்கள மற்றும் ஆங்கில மொழி பத்திரிகைகளில் கேலிச்சித்திரங்கள் பிரதான இடம் பிடித்தன.கொழும்பில் இருந்து வெளியாகும் தமிழ் பத்திரிகைகளில் கேலிச்சித்திரங்களை அவதானிக்க முடிந்தது. கேலிச்சித்திரங்கள் ஊடக அறம் என்ற போர்வையில் தணிக்கைக்குழு உட்படுத்தும் செய்திகளை இலகுவாக நாசூக்காக குறியீட்டு முறையியல்கேலிச்சித்திரங்கள் கூறிவிட்டு செல்கின்றன. இது கேலிச்சித்திரத்தின் பலம்.ஆக்கம்:உங்கள் நண்பன் இ.தனஞ்சயன் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்,ஊடகத்துறை.

புதன், 16 ஆகஸ்ட், 2017

நடுநிலை மாற்று ஊடகங்களில் சாத்தியமா?

இன்றைய காலத்தில் ஊடகங்கள் மக்களுடன் மிக நெருக்கமாகி விட்டது. இரண்டும் ஒன்றை ஒன்று தங்கியே காணப்படுகின்றது.மக்கள் இதழியலின் வருகையுடன் இது மேலும் வலுவானதாக மாற்றம் பெற்றுள்ளது. ஊடகங்களினை மக்கள் தமது பயன் மற்றும் தேவை கருதி தேர்வு செய்வார்கள். ஒவ்வொருவரின் தேவை தத்தமது இலக்கு,எதிர்பார்ப்பு போன்ற தனிப்பட்ட தன்மையின் அடிப்படையில் வேறுபட்ட தன்மைகள் காணப்படுகின்றது. இதனால், ஊடகங்கள் மக்களின் தேவையினை பூர்த்தி செய்யும் அதேவேளையில், தமது அரசியல் மற்றும் வணிக தேவைகளையும் நிறைவு செய்கிறது.ஊடகங்களின் நடுநிலை என்பது மிகவும் சிக்கல் நிறைந்த ஒன்றாகும். மூத்த பத்திரிகையாளர்கள் சோ அவர்கள் நடுநிலை தொடர்பாக குறிப்பிடும் போது "கிரிகெட் விளையாட்டில் நடுவரே நடுநிலை அற்றவர்" என்று கூறினார். இக் கூற்றை ஆழமாக சிந்திக்கவேண்டும். கட்டுரையாளரின் அவதானிப்பில் ஊடகங்கள் நடுநிலை என தம்மைதாமே கூறிக்கொள்ளுமே தவிர நடுநிலை பேனமாட்டாது.சர்வதேச ஊடகங்களினை பொறுத்தமட்டில் அவை தமது அரசியல் நிகழ்ச்சி நிரலின் கீழே செயற்படுகின்றது.B.B.C,C.N.N,C.B.S,A.F.P போன்றன நடுநிலை அற்ற ஊடகங்கள் ஆகும். அவை எப்போதும் தமது பக்க தவறுகளை நியாயப்படுத்துவதாகவே இயங்குகிறது. எனினும் அவற்றில் வரும் செய்திகள் எமது மொழியில் மொழிமாற்றம் செய்யப்படுகின்றதே அன்றி சர்வதேச அரசியலினை புரிந்து கொள்ளும் வகையில் அவை மொழிபெயர்ப்பு செய்யப்படவில்லை.இந்த எமது பலவீனம் மேற்குலகிற்கு எம்மை மேலும் பலவீனப்படுத்த சந்தர்ப்பத்தை அள்ளி வழங்குகிறது. எம்மிடையே காணப்படும் வெள்ளையன் பொய் சொல்ல மாட்டான் போன்ற முற்கற்பித எண்ணங்கள் தவிர்க்க படவேண்டியவை.மேற்குலகின் ஊடக இராஜதந்திரம் புரிந்து கொள்ளப்படவேண்டும்.மாற்று ஊடகங்களின் எழுச்சி என்பதே நடுநிலை அற்ற ஊடகங்கள் என்பதற்காக ஆதாரம்.மாற்று ஊடகங்கள் என்பது பிரதான ஊடக கொள்கைக்கு மாறாக தோன்றும் ஊடகங்கள் ஆகும். மாற்று ஊடகங்கள் அதன் பண்புகளில் சிறிது காலமே தாக்கு பிடிக்கும் பின்னர் வணிக அரசியல் வட்டதிற்குள் அகப்பட்டு விடும்.மாற்று ஊடகங்களின் இயல்புகளாக விளம்பரம் இல்லாத தன்மை, சிறிய வட்டம், செலவு குறைந்த தன்மை, ஒழுங்கு முறையற்ற தன்மை, கட்டுபாடற்ற தன்மை,நிறுவன கட்டமைப்பு அற்ற தன்மையினை குறிப்பிடலாம்.மாற்று ஊடகங்களின் ஆயுள் காலம் மிகவும் குறைவானது.மாற்று ஊடகங்கள் என்பது தொடர்ந்து வரும் செல்நெறி/போக்கு(Trend) இறை மாற்றுவதாக காணப்படும். நடுநிலை இங்கு எதிர்பார்க்கப்படுவது கடினம்.உலகமயமாக்கல் மாற்று ஊடகங்களிற்கான சந்தர்ப்பங்கள். உலகமயமாக்கல் என்பதே வனிகமயப்பட்டதே .வனிகமயமாக்கல் என்பது??ஊடகங்களில் நடுநிலை என்பது எம்மை நாமே நேர்மையானவர்கள்,உண்மையானவர்கள்,நீதியானவர்கள் என்று உலகை நம்ப வைப்பது போன்றதாகும்.நடுநிலை அல்லாத மக்கள் உள்ளவரை ஊடகங்களும் அவ்வாறே காணப்படும்.ஆக்கம்:இ.தணஞ்சயன் ஊடகத்துறை மாணவன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.