அறிவைநாடல்

அறிவைநாடல்
அறிதலார்வம்
சமூக ஊடகங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமூக ஊடகங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 1 செப்டம்பர், 2018

ஊடகங்களின் நெறிமுறை சார்ந்த வரம்பு எல்லைகளை புரிந்து கொள்வது அவசியம்!

ஹார்வர்ட் பல்கலைகழக மாணவரான மார்க் சூபேர்க் 2004ம் ஆண்டு பல்கலைக்கழக நண்பர்களிற்கு இடையில் தொடர்புகளை பேனுவதற்காக ஆரம்பிக்கப்பட்டது இன்று தொடர்பாடல் மற்றும் ஊடகத்துறையில் தவிர்க்க முடியாத ஒன்றாக விளங்குகிறது. இது உலகையே மிகவும் இலகுவான சமூக தொடர்பாடல் மிக்க இடமாக மாற்றியமைத்துள்ளது. இன்று , உலகளாவிய ரீதியாக எங்கும் நடைபெறு‌ம் நிகழ்வை நாம் நேரடியாக பார்வையிட முடியும்.
    இந்த நிலையில் அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூகுள்,Twitter மற்றும் Facebook மீது எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது, குறித்த ஊடகங்கள் Conservative media களினை Google நிறுவனம் முடக்குவதாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த கருத்தை கூகுள் நிறுவனம் அடியோடு மறுத்துள்ளது. இதேவேளை, தாம் எந்த அரசியல் நிகழ்ச்சி நிரலில் அடிப்படையில் இயங்குவதில்லை என்று குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, ட்ரம்ப் அமெரிக்க முன்னாள் அதிபர் நிக்சனின் வோட்டகேட் ஊழலை புலனாய்வு இதழியல் நுட்பத்தை பயன்படுத்தி வெளிக்கொணர்ந்த ஊடகவியலாளரினையும் கடுமையாக சாடினார்.
     இவ்வாறாக கடந்த வாரம் ஊடகங்கள் மீது சீறிப்பாய்ந்து இருக்கிறார் அமெரிக்க ஜனாதிபதி. ட்ரம்ப் ஊடகங்கள் மீது இவ்வாறான விமர்சனங்களை முன்வைப்பது இது முதன்முறை அல்ல. அமெரிக்க அதிபர் தேர்தல் காலங்களில் கூட CNN இனை போலி ஊடகம் என்று விமர்சித்திருந்தார். மக்களின் எதிரியாக(Enemies of people) ஊடகங்களினை ட்ரம்ப் பார்க்கிறார். இது பிரதான ஊடகங்களிற்கு ட்ரம்ப் மீது எதிர்மறையான சிந்தனையை தோற்றுவித்துள்ளது. 
    ஜனநாயகத்தை நிலைநாட்டும் முக்கிய காரணியாக ஊடகங்கள் காணப்படுகிறது. ஜனநாயகத்துக்கு விளக்கம் கெடுக்கும் அமெரிக்காவில் கூட ஊடகங்கள் பக்கசார்பு என்பது சிந்தனைக்குரியது. சட்டம், நீதி, நிர்வாகம் என்பவற்றை அடுத்து ஜனநாயகத்தின் நான்காவது தூணாக ஊடகங்கள் விளங்குகிறது. அமெரிக்க என்று மட்டுமல்ல உலகம் பூராகவும் ஊடகங்களின் செல்வாக்கு வியாபித்துள்ளது. மக்கள் அன்றாட வாழ்வில் இடம்பெறும் தகவல்களினை மாத்திரமல்லாது, எவ்வளவு தூரம் ஊடகங்கள் குறித்த செய்திக்கு முக்கியத்துவம் வழங்குகிறது என்பது குறித்தும் சிந்திக்க வேண்டும். எந்த செய்திக்கு முதன்மை அளிக்கின்றன என்பதில் இருந்து ஊடகங்களின் நிகழ்ச்சி நிரலினை கண்டுகொள்ள முடியும்.
     இணையத்தின் வருகையில் இருந்து ஊடகங்கள் முதன்மை அளிக்கின்ற தன்மைகள் மாற்றம் அடைந்துள்ளது. இதனையே பிரஜைகள் ஊடகவியல் எனும் எண்னக்கருவானது குறிப்பிடுகிறது. இன்றைய ஊடகங்கள் முற்றிலும் மாறுபட்டது. சாதாரண மக்கள் கூட இன்று உலகலாவிய ரீதியாக பூகோள தடங்கல்களினை கடந்து தமது எண்ணங்கள் கருத்துக்களை பரிமாற்றம் செய்ய முடிகிறது. மக்களிற்கு விழிப்புணர்வு ஊட்டுவதாக ஊடகங்கள் காணப்படுகிறது.
      மேலும், சமூக ஊடகங்கள் இன்று விவாதத்திற்கு மிகவும் பரந்த வெளியை உருவாக்கியுள்ளது. அண்மையில் மகாவலி திட்டத்திற்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் வெடுக்குநாறி வழிபாட்டுக்கு ஏற்படுத்தப்பட்டு இருந்த தடைக்கு எதிரான மக்கள் கருத்துக்கள் சமூக ஊடகங்களே பிரதானப்படுத்தியிருந்தன. இதேவேளை, எகிப்தில் இணையதளத்தளங்களினை முடக்குவதற்கு புதிய சட்டத்தை அந்நாட்டு ஜனாதிபதி அப்தல் பத்தாம் அல் சிசி விதித்து இருந்தார். இது ஏற்கனவே 600 இனையத்தளங்கள்  எகிப்தில் தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.
     இன்றைய நிலையில், சமூக ஊடகங்களினை இலகுவாக கையாளக் கூடிய நிலை இருந்தாலும் ஊடகங்களின் நெறிமுறை சார்ந்த எல்லை வரம்புகளை அறிந்து அவற்றின் எதிர்மறையான தாக்கத்தில் இருந்து விடுபட்டு ஊடகங்கள் நம்மை பெறுமதியுடையதாக்கவேண்டும்.
இ.தனஞ்சயன்

வியாழன், 15 மார்ச், 2018

சமூகஊடகங்களை முடக்குவதை காட்டிலும் ஒழுங்குபடுத்துவதே புத்திசாலித்தனமானது!

          தற்போதைய உலகமயமாக்கல் காலகட்டத்தில் ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு தகவல்களினை பரிமாற்றம் செய்து கொள்ள மிகவும் சிறந்த ஊடகங்களாக சமூக ஊடகங்கள் காணப்படுகிறது.சமூக ஊடகங்கள் தொழில்நுட்பம், தொலைபேசி மற்றும் இணையத்தின் வரவுகள் காரணமாக நடைமுறையை எளிமையாக்கியுள்ளது.
     2000 ம் ஆண்டிற்கு முன்பு சமூக ஊடகங்கள் தொடர்பாக விளக்கம் கொடுக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டால், அகராதியைதான் நாடவேண்டிய நிலைமை இருந்தது. மாறாக, தற்போது நிலமை முற்றிலும் மாற்றம் அடைந்து விட்டது.அரசியல், வணிகம்,தனிப்பட்ட திறமைகளை வெளிக்காட்டல் மற்றும் சமூகம் சார் விஷயங்களை பகிர்ந்து கொள்ள மிகவும் சிறந்த ஊடகமாக சமூக ஊடகங்கள் காணப்படுகிறது.
       உண்மை ஆரம்பிப்பதற்கு முன்னரே பொய் உலகத்தை சுற்றி வந்து விடும் என்பதே வெளிப்படை. இதற்கு தக்க வாய்பாக சமூக ஊடகங்கள் காணப்படுகிறது.அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட இனமுறுகலிற்கான தூண்டுகோலாக சமூக ஊடகங்கள் காணப்படும் என்ற காரணத்தை கருத்தில் கொண்டே இலங்கை அரசாங்கம் சமூக ஊடகங்களான Facebook, Viper மற்றும்  What's app போன்ற சமூக ஊடகங்கள் தகவல் தொடர்பு ஆனைக்குழுவினால் தற்காலிகமாக தணடசெய்யப்பட்டது.இதேவேளை,சமூக ஊடகங்களில் இனரீதியான முரண்பாடுகளை தோற்றுவிற்கும் கருத்துக்களை பதிவு செய்த 18,19 வசதியை சேர்ந்த  இருவர் கைது செய்யப்பட்டதுடன் சமூக ஊடகங்களில் இனரீதியிலான பதட்ட சூழ்நிலைய உருவாக்குபவர்கள் கண்கானிக்கப்படுகின்றனர் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் கருத்து வெளியிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
         சமூக ஊடகங்களின் மிகப்பெரிய பலம் யாதெனில் ஒருகருத்தை அல்லது செய்தியை சொற்ப நொடிகளில் பல மில்லியன் கணக்கான மக்களிடம் கொண்டு சேர்ப்பதாகும்.இதேபோன்றே,உண்மை பரவும் வேகத்தை காட்டிலும் பொய் பரவும் வேகம் அதிகமாகும்.இனைய ஊடகங்களின் உண்மை நிலையாதெனில் யார் வேண்டுயானாலும் எதை வேண்டுமானாலும் எழுதலாம் இந்நிலையே பாரிய ஆபத்தான நிலையாக அமைவதுடன் இன அடிப்படை வாதிகள் தமது சுயலாப அரசியலை சாதகமாக்கிக் கொள்ளவும் வாய்ப்பாக அமைகிறது. சமூக வலைத்தளங்களில் ஒன்றான Facebook தடைசெய்யபடவேண்டும் என்ற நிலையில் கருத்துக்கள் காணப்பட்டாலும் இலங்கையை பொறுத்தவரை கட்டுப்படுத்துவதே சிறந்தது.இலங்கையில் தற்காலிக தடை சமூக ஊடகங்களிற்கு காணப்பட்ட காலகட்டத்தில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் facebook என்பது சிறந்த தொழில்நுட்பம் எனினும் மோசமான வன்முறைகள் இடம்பெறுவதற்குரிய களமாக இது அமையக்கூடாது.இதேவேளை,எத்திரியா,வடகொரியா, சீனா மற்றும் ஈரான் போன்ற நாடுகளில் Facebook ற்கு தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை, சமூக ஊடகங்களில் ஒன்றான Facebook நிறுவனமானது இலங்கை அரசாங்கத்துடன் எவ்வாறு எதிர்காலத்தில் இன மத குரோத பதிவுகளை நீக்கலாம் என்பது தொடர்பில் ஆலோசித்து வருகிறது.
      அண்மையில் இலங்கையில் நடந்த உள்ளூர் அதிகாரங்தேகளிற்கான தேர்தல் மற்றும் உலகளாவிய ரீதியில் இடம்பெற்ற தேர்தல்கள் கூட சமூக ஊடகங்களின் செல்வாக்கை சான்று பகர்வனவாக அமைந்துள்ளது.மேலும், கண்டி தெல்தேனியாவில் இடம்பெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து சமூக ஊடகங்கள் இலங்கையில் தடைசெய்யப்பட்ட போதும் VPN மற்றும் Proxy servers வாயிலாக ஒரு சிலர் சமூக ஊடக பா வனையில் ஈடுபட்டனர்.அதேசமயம் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ன சமூக ஊடகங்கள் கருத்துக்களை பரிமாறி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
      மேலும்,போலியான செய்திகள் சமூக ஊடகங்கள் ஊடாக பரப்பப்பட்டு வருகின்றன என்ற உண்மையை நீண்டகாலமாக எதிர்த்து வந்த Facebook CEO மார்க் அண்மையில் உண்மையை ஒத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.அதன் விளைவாகவே, Facebook நிறுவனமானது அரசாங்கங்களுடன் இனைந்து தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்க கூடிய செய்திகள் தடைசெய்யபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.ஜனநாயகம், பன்மைத்துவம் மற்றும் சமூக ஒருமைப்பாடு போன்றவற்றிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளக்கூடாது. இலங்கை அரசாங்கம் சமூக ஊடகங்களினை தற்காலிகமாக இனமுறுகலை தணிக்க தடைசெய்தமை சரியானதா? என்று Twitter ல் நடாத்தப்பட்ட கருத்துகணிப்பு ஒன்றில் "yes" என்கிற பதிலே அதிகமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
      சமூக ஊடகங்களில் ஒரு செய்தியை பகிர்ந்து கொள்ளவும் மற்றும் விருப்பு இடமுன்னரும் குறித்த செய்தியின் உண்மை தன்மை குறித்து(fact checking)ஆழமாக ஆராய்ந்து கொள்ள வேண்டும்.காரணம், ஒவ்வொரு செய்திகளின் பின்னாலும் அரசியல் நிகழ்ச்சி நிரவல் ஒன்று உள்ளது.தனிநபர்,சமூக மற்றும் நாடுகளிற்கெதிராக வெறுப்பை உண்டாக்கும் வகையில் செய்திகளை வடிவமைக்கும் அதிகாரம் சமூக ஊடகங்கள் வாயிலாக இலகுவாக கிடைக்கின்றது.ஏதாவது ஒரு செய்தி பொய்யானது என்று உணரும் சமயத்தில் அந்த செய்திகளினை பரிமாறாமல் விடுவது புத்திசாலித்தனமானது.சமூகமயமாக்கலில் சமூக ஊடகங்கள் பங்கு காத்திரமானது என்று பலர் வாதிட்டாலும் உண்மையான சமூகமயமாக்கலிற்கு கிடைத்த சாபக்கேடாகவே சமூக ஊடகங்கள் காணப்படுகிறது.சமூக ஊடகங்களின் பாவனை தொடர்பாக சரியான விழிப்புணர்வை பயனாளிகளுக்கு ஏற்படுத்தாதவரை சமூக ஒருமைப்பாடு முரண்பாடானதே?

இ.தனஞ்சயன்(இலங்கை தேசிய தொலைக்காட்சியான ரூபவாகினிகூட்டுத்தாபனத்தின் தமிழ் நிகழ்சிப்பிரிவின் உதவித்தயாரிப்பாளர்)

சனி, 4 நவம்பர், 2017

வெகுஜன ஊடகப்பண்பாட்டில் புதிய திருப்புமுனையாக அமையும் பிரஜைகள் ஊடகவியல்!

உலகமயமாக்கல் மீதான அதீத ஆர்வத்தை உலக நாடுகளில் பெரும்பாலானவை கொண்டு இருப்பதன் காரணமாக,செய்தி பரிமாற்றம் உலகமய இயல்பை அடைந்துள்ளது.தகவல் கடத்தும் செயல் ஒழுங்கு பூகோளம் தழுவிய வகையில் விரிவாக்கம் பெற்றுள்ளது."யாதும் ஊரே யாவரும் கேளீர்"என்ற கனியன் பூங்குன்றனாரின் சிந்தனை சாத்தியமாகியுள்ளது.உலகம் ஓர் கிராமம்  (Global village )என்ற நிலை ஊடகக்கலாச்சாரம் மற்றும் பூகோளமயமாக்கல் காரணமாக, உண்டாகிவிட்டது.அந்த வகையில், பூகோளமயமாக்கல்/உலகமயமாதல் தொடர்பாக முதலில் சிந்திக்கவேண்டியுள்ளது.உலகமயமாக்கல் என்பது உலக நாடுகளையும் அவற்றின் மக்களையும் ஒருங்கிணைக்கும் ஒரு செயன்முறையாகும்."The process of a worldwide economy in which resources and products move fairly across national borders".பெரும் திரளான மக்களை சென்றடையக் கூடிய தகவலை பரிமாறிக் கொள்ளும் சாதனமாக இனையம் விளங்குகிறது.இனைய அறிமுகம் வெகுசன ஊடகங்களினை நவீன ஊடக வடிவில் நுகர்வதற்கான சாதகமான நிலைமையை உருவாக்கியுள்ளது. இனையமானது அனைத்து வகையான ஊடகங்களினையும் தன்னகத்தே உள்வாங்கியுள்ளமை அதன் மேலதீக பலம் ஆகும். இத்தகைய காரணங்களினால், வெகுஜன ஊடகப்பண்பாட்டில் கூட பல மாற்றங்களை அவதானிக்க முடிகிறது.Mobile journalism, Citizens journalism,Digital journalism மற்றும் Alternative media போன்ற சொல்லாடல்கள் தற்போது இதழியல் பரப்பில் அதிகமாக உரையாடப்படுகின்றது.இவற்றின் எதிர்கால செல்நெறி (Future trend) ஆதிக்கமானது;தகவல்கள் பரிமாற்றத்தில் காணப்படும் எளிமையை மேலும் எளிமைப்படுத்தப்படும்.Video,Audio &Digital print போன்றவற்றின் செல்வாக்கு அதிகரித்து காணப்படவழிவகுக்கும்,உள்ளூர் உற்பத்தி சார் விளம்பரங்களின் நிலமை பரிதாபப்படும் நிலைமைக்கு செல்லும் வெளிநாட்டு விளம்பரங்களின் ஆட்சியே இடம்பெறும்,Smart phone போன்றன யதார்த்தத்தை அவ்வாறே பிரதிபலிப்பதாக அமையும் அதேவேளை,தொலைக்காட்சியின் நிலைமை புதிய ஊடகங்களினை தழுவியே இருக்கும். பத்திரிகையானது பெரும்பாலும்(Free issue)இலவசமாகவே வழங்கப்படும்.Mobile media and Global media trend (உலகம் தழுவிய ஊடக செல்நெறி)உருவாகி அனைத்துக்கும் தொலைபேசியை நம்பி இருக்கும் நிலைமை காணப்படும்,யதார்த்த சிந்தனைகளை அதிகரிப்பதுடன் மாற்றுபாங்கான சிந்தனைகளை(Alternative thoughts)விதைப்பதாக அமையும்,அரச ஒழுங்கு மற்றும் சட்டம் என்பது மூன்றாம் தரப்பாகவே காணப்படும்,இலவசம் என்ற போர்வையில் நாமே விற்பனை பொருளாக வேண்டிய நிலை காணப்படும்,ஆக்கத்திறனை தீர்மானிப்பதில் பெரும் பங்கு புதிய ஊடகங்களே திகழும் அதேபோல் புதிய ஊடகங்கள் அனைத்திலும் ஆட்சி செலுத்தும்.மேற்கண்ட காரணங்கள் எதிர்காலத்தை நிர்ணயம் செய்வதாக அமையும்.இதேவேளை,பிரஜைகள் ஊடகவியல் (Citizen journalism)என்பதனை The media center at the American press institute கீழ்க்கண்டவாறு வரைவிலக்கனப்படுத்துகின்றது."The act of a citizen or group of citizens playing an active role in the process of collecting,reporting, analysing & disseminating news and information.The intent of this participation is to provide independent, reliable, accurate, wide-ranging and relevant information which a democracy requires ". பிரஜைகள் ஊடகவியல்(Citizens journalism)என்ற எண்ணக்கருவானது ஒவ்வொரு சமுக ஊடகங்களினை பயன்படுத்துபவருக்கும் பொருந்தும்(Citizen journalists are ordinary people who take on the role of news reporters).இன்றைய காலத்தில் சமூக ஊடகங்களில் பிரதிநிதித்துவம் பெறாதவர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடியதாகும்.சமூக வலைத்தளங்கள் தொடர்பாக இதுவரையான காலத்தில் 2500 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது. இவற்றில் பெரும்பாலானவை பல்வேறு நபர்களின் புகைப்படங்களை பயன்படுத்தி, போலி பேஸ்புக் கணக்குகளை ஆரம்பித்தமை தொடர்பாக முறையிட்டுள்ளதாக அந்த பிரிவின் பிரதம தகவல் பாதுகாப்பு பொறியாளர் ரொஷான் சந்திர குப்த குறிப்பிட்டுள்ளார். முன் அறிமுகம் இல்லாதவர்களை பேஸ்புக் கணக்கில் நண்பனாக்கிக் கொள்வதே இது போன்ற குற்றங்கள் உண்டாக்க காரணமாகிறது. இதேபோல், சிலரின் தொலைபேசி இலக்கங்களை பயன்படுத்தி சமூக ஊடகங்கள் வாயிலாக குற்றங்கள் இடம்பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.சமூக ஊடகங்களின் தற்போதைய போக்கு மிகவும் பொறுப்பற்ற தன்மையினையும் ஊடகங்களினை எவ்வாறு பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டும் என்ற ஊடக எழுத்தறிவு(Media illiteracy)அற்ற தன்மையையே தெளிவுபடுத்துகின்றது. சமூக ஊடகங்கள் தற்காலத்தில் பிரச்சனைகுரிய உந்துதலாகக் காணப்படுகிறது.மேலும்,சமூக ஊடகங்களினை பயன்படுத்தும் பாவனையாளர்கள் கீழ்க்கண்ட வழிகாட்டல்களை பின்பற்றும் போது ஊடகப்பாவனை வினைத்திறன் மற்றும் விளைதிறன் மிக்கதாக அமைவதுடன் பிரச்சனைகளினை தவிர்க்கவும் வசதியாக அமையும்.☆சமூகத்தை ஒற்றுமைப் படுத்தி ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் ஈடுபட முடியும். இலங்கையில் சமூக ஊடகப்பாவனை இன்னும் முரண்பாடுகளை உண்டுபண்னி இனங்களிற்கு இடையில் மேலும் பல தசாப்தங்களுக்கு நிரந்தர விரிசலை உண்டுபண்னுவதாக அமைகிறது.சமூக ஊடகங்களினை பயன்படுத்தி குறித்த இடைவெளியை பூரணப்படுத்த சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் முன்வரவேண்டும்.☆இன மத வேறுபாடின்றி மனித நேயம் மற்றும் மனிதாபிமானத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இனவாத, மதவாத,பிரதேச வாத,வகுப்புவாத,பிரிவினையை தூண்டும் விதமாக பதிவிடுவதை சமூக ஊடகங்களில் தவிர்ப்பது ஆரோக்கியமான நல்லிணக்க சமூகத்தை கட்டியெழுப்ப துனையாக அமையும்.☆நீதியான விடயங்களினை பதிவு செய்யும் போது அதனால் அநீதி ஏற்படாமல் மிகவும் ஆழமாக அவதானித்து கருத்துக்களை மற்றும் புகைப்பட தெரிவுகளை மேற்கொள்ள வேண்டும்.☆நல்ல பலனை அளிக்காத எந்தவொரு பதிவும் வீனானவையே இந்த மனப்பான்மை கொண்ட புத்திசாலியாக சமூக ஊடகங்களினை உபயோகப்படுத்த வேண்டும்.குறித்த இனம்,மதம், சாதி என்பதை சமூக ஊடகம் ஊடாக நிறுவ முற்படக்கூடாது.☆பழிவாங்குதல், அவமானப்படுத்தல்,உணர்ச்சி வசப்படுதல்,அனாவசியமாக வார்த்தையை விடுதல்,அந்தரங்கங்களை பதிவிடுதல்,கலாச்சார அசிங்கத்தை வெளிக்கொணருதல்,மற்றவர்கள் மீது சேறு பூசுதல்,ஆணவமான கருத்தாடல்கள், தெய்வ நிந்தனை பயனற்ற முன்னேற்றகரமான வார்த்தையை பயன்படுத்துதல் மற்றும் தனிமனிதத் தாக்குதல்களை தவிர்க்க வேண்டும்.☆ஒரு சிலரின் தவறுகளிற்காக ஒட்டு மொத்த சமுதாயத்தையும் விமர்சித்து முழு சமுதாயத்திடமும் இருந்து பகையாளி/விரோதி/இனத்துவேசி/பிரிவினை வாதி/இனவாதி என்ற நாமங்களை நமக்கு நாமே சூட்ட காரணமாயிருக்கக் கூடாது.இன்னொரு சமூகத்தை இழிவுபடுத்தும் செயலை மேற்கொள்ளாமல் குறித்த முரண்பாடுகளிற்கான காரணத்தை தெளிவுபடுத்தி தீர்வுகளை முண்மொ ழிவதாக அமைய வேண்டும்.☆எந்த ஒரு விடயத்தையும் உணர்வுபூர்வமாக அணுகாமல் அறிவுபூர்வமாக அணுகுவதற்கு மூளையை பயிற்றுவிக்க வேண்டும். ☆அரசியல் தலைமைகளை கழுவி ஊத்துவதனை விடுத்து குறித்த நிலைமைக்கான காரணத்தை ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை பிரேரிப்பதாக சமூக ஊடகப் பதிவுகள் அமைவது காத்திரமான சமூக ஊடக கலாச்சாரத்தை (Positive social media culture) பேணிக் கொள்ள வழிதுனையாக அமையும்.அதேவேளையில், 3.773 பில்லியன் மக்கள் தொகையினர் இனைய பயனாளிகளாக உள்ள அதேசமயம் 2.789 மக்கள் தொகையினர் சமூக ஊடக பயனாளிகளாக உள்ளதாக ஓர் ஆய்வின் முடிவு கூறுகிறது.அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம்ப் நேர்காணல் ஒன்றில் குறிப்பிடும் போது "Twitter என்ற சமூக ஊடகம் இல்லாவிட்டால் நான் ஜனாதிபதியாக வந்திருக்க முடியாது"என்று கூறுகிறார். இது சமூக ஊடகங்களின் செல்வாக்கினையே எடுத்தியம்புகின்றது.அத்துடன் Twitter சமூக ஊடக தளத்தில் தீவிரமாக இயங்கிவரும் டொனால்டு ட்ரம்பினை 41.7 பில்லியன் பேர் பின்தொடர்கின்றமையும்(Following)குறிப்பிடத்தக்கது.இதேவேளை,அச்சு ஊடக இதழியல் மற்றும் இனைய இதழியல் போன்றவற்றிற்கு இடையிலான இடைவெளி குறித்தும் சிந்திக்க வேண்டியுள்ளது.அந்தவகையில், அச்சு ஊடகங்களில் செய்தி கதை சொல்லும் பாணியிலும் இனைய ஊடகங்கள் செய்தி செய்முறை வடிவில் காணப்படுகிறது.மேலும் அச்சு ஊடகங்களில் வரும் ஆக்கங்கள்,செய்தி விநயோகம், அதிகாரம், பார்வையாளர்களின் பங்கு என்பன இனைய ஊடகங்களில் பண்பில் இருந்து மாறுபட்டது.இன்றைய காலத்தில் அனைவரும் சமூக ஊடகங்களில் தமது பொன்னான நேரங்களை செலவழித்து வரும் நிலையில் அந்த நேரம் எம்மை சரியான முறையில் வளப்படுத்தி கொள்ள சரியான முதலீடாக அமைய வேண்டுமே தவிர நாம் சமூக ஊடகங்களிற்கு பகடைக்காயாகக் கூடாது என்ற கருத்தை வலியுறுத்தி,நிறைவாக,கவிஞர் வாலி ஐயா கூறிய "காலம் தமக்கு தேவையானவர்களை தாமே உருவாக்கும்"என்ற தத்துவத்துடன்(Philosophy )இந்த பெறுமானம் மிக்க சிறிய வலைப்பூ பதிவை நிறைவு செய்கிறேன்.மீண்டும் மற்றொரு பெறுமதியான வலைப்பூப்பதிவில் சந்திப்போம் நண்பர்களே! இ.தனஞ்சயன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக்கற்கைகள் சிறப்பு மாணவன்.

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

நல்லிணக்க உருவாக்கத்தில் ஊடகங்களின் பங்கு

மக்களின் எண்ணங்கள் மற்றும் கருத்துக்களை பிரதிபலிக்கின்ற,பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மற்றும் செல்வாக்கு செலுத்துகின்ற சாதனமாக ஊடகங்கள் விளங்குகின்றன.மக்கள் ஊடகங்களில் வருகின்ற செய்திகளை அப்படியே உண்மையானது என்று நம்புகிறார்கள். குறித்த பலவீனத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்தும் ஊடகங்கள் தமது நிர்வாகத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப தம்மைதாமே தயார்படுத்துகின்றன. உலகம் உலகமயமாக்கல் என்ற சுருங்கி கொண்டதன் காரணமாக ஊடகங்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகிவிட்டன. இதனால், செய்திகளிற்கு பெரும் பஞ்சம் ஏற்பட்டு விட்டது. செய்திகளை விற்பனை ஓட்டமாக நினைக்கும் தற்போதைய விற்பனை ஊடகங்கள் செய்திகளிற்கு அங்கலாய்க்கின்றன. தற்போதைய நிலையில் பிரதான ஊடகங்களின் ஆதிக்கத்தில் இருந்து விடுபடும் நிலைமையை சமுக ஊடகங்கள் ஏற்படுத்தியிருந்தாலும்,சமூக ஊடகங்களினை எப்படி முற்போக்கான சிந்தனையை விதைப்பதாக பயன்படுத்தி வெற்றியடையலாம் என்று சிந்திக்க வேண்டும். மாறாக, பிற்போக்கான அவமானப்படுத்தல், காழ்ப்புணர்ச்சி வெளிப்பாடு, பாராட்டமனமின்மை,எதிர்மறையான சிந்தனை, புத்திசாலிகள் புறக்கணிக்கபடுதல்,தவறான வழிநடத்தல் மற்றும் போலியான உறவு களின் கூட்டு போன்ற முன்னேற்றத்திற்கு சாதகமற்ற விடயதானங்களே பரப்புரை செய்யப்படுகிறது.இவற்றின் எழுச்சி கீழத்தேய நாடுகளே பாதிப்பை எதிர்கொள்கின்றன.இலவசம் என்ற போர்வையில் விலைபொருளாகிக்கொன்டுள்ளன.குறிப்பாக, அரசியல், பண்பாடு மற்றும் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில் இவற்றின் பங்கு கணிசமானது.இதற்கு அண்மைய ஐல்லிகட்டு வெற்றியை குறிப்பிடலாம்.    எமது நாட்டின் சமூக ஊடக பாவனை கவனயீனமாகவேவுள்ளது.அத்துடன் இனவெறி மற்றும் இனவாதத்திற்கு களம் ஏற்படுத்தி கொடுப்பதாக காணப்படுகிறது. தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் என தன்னைத் தானே கூறிக்கொள்ளும் அரசாங்கம் நல்லிணக்கம்,சகவாழ்வு என்ற சொல்லினை பயன்படுத்தி சர்வதேசத்திடமிருந்து  தப்பித்தாலும், சமூக ஊடகங்களில் இருந்து தப்பிக்க முடியாது.                      எழுத்து - இ.தனஞ்சயன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகத்துறை மாணவன்.