அறிவைநாடல்
அறிதலார்வம்
வெள்ளி, 19 ஏப்ரல், 2019
ஊடக சுதந்திர சுட்டெண் பட்டியலில் இலங்கை முன்னேற்றம்!
ஊடக சுதந்திர சுட்டெண் என்பது ஒரு நாட்டில் ஊடகங்கள் எந்த அளவுக்கு சுதந்திரமாக இயங்குகின்றது என்பது பற்றிய ஒரு அளவீடு ஆகும்.
இது உலகெங்கும் இயங்கும் 14 அமைப்புகள், 130 ஊடகவியாளர்கள், ஊடக ஆய்வாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஆகியோரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அமைந்தாகும்.
இந்த மதிப்பீட்டை எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு வெளியிடுகிறது. இந்த அறிக்கையில் மிகச் சிறிய நாடுகள் தவிர்த்து 180 நாடுகளிலுள்ள ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் சுயாதீனத் தன்மை பற்றி ஆழ்ந்த ஆய்வினை மேற்கொண்டு பட்டியல் தயாரிக்கப்படுகின்றது.
மிகச் சிறந்த ஊடக சுதந்திரம் நிலவும் நாடுகளாக இம்முறை (2019) நோர்வே, பின்லாந்து, சுவீடன், நெதர்லாந்து மற்றும் டென்மார்க் போன்ற நாடுகள் இடம்பெறுகின்றன. மிகவும் மேசமான நாடுகளாக ஈரான், வட கொரியா, சீனா, எதிர்ரேரியா, துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகள் இடம்பெறுகின்றன.
2017 ஆம் இலங்கை இந்த சுட்டெண் பட்டியலில் 141 வது இடத்தில் இடம் பெற்றிருந்தது. எனினும் 2018 இல் இலங்கை 131 இடத்தில் இடத்திற்கு முன்னேற்றம் பெற்றதோடு இம் முறை 5 இடங்கள் முன்னேற்றமடைந்து 126 ம் இடத்திற்கு முன்னோக்கி இடம்பெற்றமை விசேட அம்சமாகும்.
இந்த பட்டியலில் முதலாவது இடத்தில் நோர்வேயும் இரண்டாம் இடத்தில் பின்லாந்தும் இடம் பெற்றுள்ளது.
அந்தந்த நாடுகளில் நிலவும் ஊடக சுதந்திரநிலைமைக்கு அமைய நாடுகள் வெள்ளை, மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பு, கறுப்பு என்ற 5 பிரிவுகளில் உள்ளடக்கப்படுகின்றன.
சிறந்த ஊடக சுதந்திரம் உள்ள நாடுகள் வெள்ளை நிற வலையத்திற்கு உள்ளவாக்கப்படுகின்து. இதில் 8% மான நாடுகள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஊடக சுதந்திரம் ஓரளவுக்கு சிறப்பாகவுள்ள நாடுகள் மஞ்சள் நிற வலையத்திற்குள் உள்ளவாக்கப்படுகின்து. இம்முறை இந்த பட்டியலில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட 16% மான நாடுகள் இந்த வலையத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
செம்மஞ்சள் நிறத்திற்குட்பட்ட வலையத்தில் இடம் பெற்ற நாடுகளில் ஊடக சுதந்திரம் தொடர்பான பிரச்சனை நிலவுகின்றதாகும். இதில் ஜப்பான், பிறேசில், இஸ்ரேல், பூட்டான், நேபாளம் உள்ளிட்ட 37% மான நாடுகள் இடம் பெற்றுள்ளன.
சிவப்பு வலையத்திற்குட்பட்ட நாடுகள் என்பது ஊடக சுதந்திரம் மிக சிறப்பாக இல்லை என்பதாகும். ரஷ்யா, இந்தியா, மாலைத்தீவு உள்ளிட்ட 29% மான நாடுகள் இடம் பெற்றுள்ளன.
ஊடக சுதந்திரம் மிகவும் மோசமாக காணப்படும் நாடுகள் கறுப்பு வலையத்திற்குட்பட்டதாகும். ஊடக சுதந்திரம் மிகவும் மோசமாக காணப்படும் நாடுகளில் வடகொரியா மற்றும் துர்க்மெனிஸ்தான் போன்ற 11% மான நாடுகள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எல்லையற்ற ஊடகவியலாளர்கள் என்ற சர்வதேச அமைப்பினால் இந்த சுட்டெண் தயாரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அமெரிக்கா 48 ஆவது இடத்திலும் அரசியல் குழப்பம் காணப்படும் வெனிசுலா 148 ஆவது இடத்தில் உள்ளது. அமெரிக்க இந்த பட்டியலை நிராகரித்துள்ளமையும் கவனிக்க வேண்டிய விடயமாகும். தேர்தல் மற்றும் இந்து தத்துவ வாதத்தை கக்கி வரும் இந்தியா 40 ஆவது இடத்திலுள்ளது.
கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் தற்காலத்தில் ஊடகங்களுக்கு ஓரளவு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது எனலாம். வழங்கப்பட்டுள்ள ஊடக சுதந்திரத்தைப் பயன்படுத்தி மீண்டும் இந்த நாட்டில் குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்க கூடாது.ஊடக ஒடுக்குமுறை குறைப்பட்டுள்ளதோடு வெள்ளை வான் கலாசாரம், ஊடகவியலாளர் படுகொலை மற்றும் காணாமல் போதலுக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது .
எமது நாட்டு ஊடகத்துறையினை பொறுத்தவரை, ஊடகசுதந்திரம் என்பது அந்த சுதந்திரத்தை மீறும் வகையில் தான் தற்போது பெரும்பாலும் பாவிக்கப்படுகின்றது. இது ஊடக சுதந்திரத்திற்கு ஒரு ஆரோக்கியமான நிலைமை அல்ல.
இனவாத சாயத்தை பூசும் ஊடகங்களே காணப்படுகிறது. தமது விற்பனை செய்தி பண்டமாக இனத்துவேச செய்திகளே ஊடகங்களினால் ஊக்குவிக்கப்படுகின்றன. இந்த நிலைமை இந்நாட்டை மீண்டும் இருண்ட யுகத்திற்குள் தள்ளி விட ஊடகங்கள் விரும்புகின்றனவா என்று கூட மக்கள் கேட்கும் அளவுக்கு நிலைமை காணப்படுகின்றது.
ஊடகங்கள் எப்போதும் பொறுப்புணர்வுடன் செயற்படத் தவறக் கூடாது. இவ்விடயத்தைக் கருத்தில் கொள்ளாது செயற்படும் பட்சத்தில் மீண்டும் ஜனநாயகம், ஊடக சுதந்திரம் குறித்து கண்ணீர் சிந்தும் நிலைமைக்கு உள்ளாக நேரிடும். அவ்வாறான ஒரு நிலைமை ஏற்பட்டிராமல் செயற்பட வேண்டியது சகல ஊடகங்களதும் முன்பாக இருக்கும் தலையாய பொறுப்பும் கடமையுமாகும்.
ஆக்கம்
இ.தனஞ்சயன்
இலங்கை தேசிய தொலைக்காட்சியான ரூபவாகினிகூட்டுத்தாபனத்தின் தமிழ் நிகழ்சிப்பிரிவின் உதவித்தயாரிப்பாளர் இ.தனஞ்சயன் ஆகிய நான் யாழ்பாணப்பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையை முறையாக விரும்பிக்கற்று சிறப்பு கலைமாணிபட்டத்தை பெற்றுள்ளேன்.அத்துடன்,ஆங்கில மற்றும் சிங்கள மொழிகளிலும் புலமை பெற்றுள்ளேன்.சர்வதேச ஆங்கில ஊடகங்களில் வெளிவரும் செய்திகளை தமிழ் மொழிக்கு மொழிபெயர்த்து தட்டச்சு செய்யும் ஆற்றலும் உண்டு.எப்போதும் சந்தோசமாக எதையும் கற்றுக்கொண்டே இருப்பேன்.
சனி, 6 அக்டோபர், 2018
உளநலம் என்பதே உங்கள் மிகப்பெரிய சொத்து!
இலங்கை தேசிய தொலைக்காட்சியான ரூபவாகினிகூட்டுத்தாபனத்தின் தமிழ் நிகழ்சிப்பிரிவின் உதவித்தயாரிப்பாளர் இ.தனஞ்சயன் ஆகிய நான் யாழ்பாணப்பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையை முறையாக விரும்பிக்கற்று சிறப்பு கலைமாணிபட்டத்தை பெற்றுள்ளேன்.அத்துடன்,ஆங்கில மற்றும் சிங்கள மொழிகளிலும் புலமை பெற்றுள்ளேன்.சர்வதேச ஆங்கில ஊடகங்களில் வெளிவரும் செய்திகளை தமிழ் மொழிக்கு மொழிபெயர்த்து தட்டச்சு செய்யும் ஆற்றலும் உண்டு.எப்போதும் சந்தோசமாக எதையும் கற்றுக்கொண்டே இருப்பேன்.
சனி, 4 ஆகஸ்ட், 2018
அரசியல் ஆடுகளத்திலும் வெற்றி பெற்ற இம்ரான் கான்!
இலங்கை தேசிய தொலைக்காட்சியான ரூபவாகினிகூட்டுத்தாபனத்தின் தமிழ் நிகழ்சிப்பிரிவின் உதவித்தயாரிப்பாளர் இ.தனஞ்சயன் ஆகிய நான் யாழ்பாணப்பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையை முறையாக விரும்பிக்கற்று சிறப்பு கலைமாணிபட்டத்தை பெற்றுள்ளேன்.அத்துடன்,ஆங்கில மற்றும் சிங்கள மொழிகளிலும் புலமை பெற்றுள்ளேன்.சர்வதேச ஆங்கில ஊடகங்களில் வெளிவரும் செய்திகளை தமிழ் மொழிக்கு மொழிபெயர்த்து தட்டச்சு செய்யும் ஆற்றலும் உண்டு.எப்போதும் சந்தோசமாக எதையும் கற்றுக்கொண்டே இருப்பேன்.
சனி, 28 ஜூலை, 2018
குறைந்த கணத்தில் பெரும் திரளான மக்களை சென்றடையும் தொலைக்காட்சி சமூக மயமாக்கலிற்கான வரப்பிரசாதமே!
இன்றைய உலகமயமாக்கல் சூழலில் வெகுஜன ஊடகங்களில் இரண்டாவது மிகப்பெரிய ஊடகமாக தொலைக்காட்சி காணப்படுகிறது. அதன் வளர்ச்சி நாளுக்கு நாள் உலகம் பூராகவும் அதிகரித்து செல்வதனை காணமுடிகிறது. அதனுடைய காட்சி வடிவில் கதைகூறும் பானியானது மக்களிடையே பெரும் செல்வாக்கு மிகுந்ததாக இருக்கிறது. சமூகத்தில் இடம்பெறும் வழமைக்கு மாறான சம்பவங்களை மக்களிற்கு கொண்டு செல்லும் ஓர் சாதனமாகும்.
ஊடகவியலாளர்கள் மக்களின் தகவல் தாகத்தை தீர்த்து வைக்கும் வகையில் செய்தியாக்கம் செய்வார்கள். செய்தி மாத்திரம் அல்ல மக்களிற்கு சிறந்த பொழுது போக்கு அம்சங்களை வழங்கும் ஊடக மாகவும் தொலைக்காட்சி காணப்படுகிறது. பொதுமக்களிற்கு அரசியல், சமுக,கலாச்சார மற்றும் பொருளாதார நிலைமாற்ற அவசியம் தொடர்பாக அறிவூட்டும் ஓர் அதிகாரம் மிக்க சாதனம் தொலைக்காட்சி ஆகும். அரசியல், சமூக, கலாசார,அறிவியல், விளையாட்டு,பொழுது போக்கு, கலை மற்றும் சந்தைப்படுத்துதல் போன்றவற்றில் தற்போதைய உலகில் மத்திய கூறாக விளங்குவது தொலைக்காட்சி யாகும்.தொலைக்காட்சியின் ஆங்கில சொல்லான Television லத்தீன் மற்றும் கிரேக்க சொல்லின் கலவையாகும். Tele என்பது கிரேக்க செல்லாகும் 'Far' என்று ஆங்கிலத்தில் அர்த்தமாகும். Visio என்பது லத்தீன் சொல் ஆங்கிலத்தில் sight என்று அர்தப்படுத்தி பின்னர் அதுவே Television எனும் தொலைக்காட்சி யானது. காட்சி தற்கால சமூகத்திற்கு கிடைத்த வரப்பிரசாதமாகும்.
இன்றைய போட்டி மிக்க சூழலில் காட்சி வடிவில் தகவல்களினை வழங்கி பார்வையாளர்களினை விமர்சன கண்னோட்டத்தில் சிந்திக்க செய்வதில் பெரும் பங்கு தொலைக்காட்சிக்குஉள்ளது. செய்திகளை தொலைக்காட்சி யில் அறிக்கையிடும் பானியானது இன்று விமர்சனத்துக்குரியதாகக் காணப்படுகிறது. இலங்கையில் காணப்படுகின்ற தொலைக்காட்சிகளை பொறுத்தவரை தமது தனிப்பட்ட சுயலாப அரசியலினை முன்னெடுக்கும் பிரச்சார ஊடகங்களாகவே விளங்குகிறது. வானொலியின் ஆதிக்கத்தில் இருந்து முன்னணியினை தொலைக்காட்சி வகித்தாலும் வானொலிக்கான தனித்துவமான நேயர்கள் காணப்படுகின்றமை புதிதாக ஆரம்பிக்கப்பட்டு இருக்கும் வானொலிகளின் எண்ணிக்கைகளை கொண்டு அறிய முடிகிறது. அமெரிக்காவில் மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம் தொலைக்காட்சியினை மக்கள் உயிரோட்டமிக்க ஓர் இடமாக கருதுகின்றனர் என்று ஆய்வு முடிவு பெறப்பட்டுள்ளது. மேலும் குறித்த ஆய்வில், வருடத்தில் ஓர் சராசரி மனிதன் 3000 மணித்தியாலங்கள் தொலைக்காட்சி அல்லது தொலைபேசியுடன் செலவு செய்கின்றான்.
மேலும், தொலைக்காட்சி யானது அதனுடைய செல்வாக்கு மற்றும் தாக்கம் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் காணப்படுகிறது. குறிப்பாக, சிறுவர்களின் மனப்போக்கில் தவறான மாதிரிகாட்சி உருக்களை ஏற்படுத்துகிறது. தற்போதைய காலகட்டத்திலதற 75 வீதமான சிறுவர்கள் தமது பொழுதுபோக்கிக்காக தொலைக்காட்சியினையே தெரிவு செய்கின்றனர். பெற்றோரும் சிறுவர்கள் தமக்கு தொல்லைஇல்லாமல் இருப்பதற்காக தொலைக்காட்சியினை தமது குழந்தைகள் பார்பதற்கு அனுமதிக்கின்றனர். குழந்தைகள் தொலைக்காட்சி யில் எவ்விதமான நிகழ்சிகளை எவ்வளவு தூரம் பார்கின்றார்கள் என்பது தொடர்பாக பெற்றோர்கள் அவதானிக்க வேண்டும். தொலைக்காட்சியினை எதிர்மறையான தாக்கத்தில் இருந்து விடுபட தொலைக்காட்சி எவ்வித தாக்கத்தை உண்டுபண்னுகின்றது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். நாளைய எதிர்கால சந்ததியான குழந்தைகளை பாதுகாத்து நேர் சிந்தனைமிக்க சமூகத்தை உருவாக்க வேண்டும். அரசியல் ரீதியாக கருத்துருவாக்கங்களை இலகுவாக மேற்கொண்டு தமது இலக்கு பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல தொலைக்காட்சி மிக சிறந்த சாதனமாகும். அண்மையில் விஜயகலா மற்றும் நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகை தொடர்பாக இலங்கை தொலைக்காட்சி களில் அதிகம் இடம்பிடித்து இருந்தது. அத்துடன் இன்றைய நிலையில், தொலைக்காட்சி பற்றிய அதிகமான விமர்சனங்கள் காணப்பட்டாலும் நவீன காலத்தில் மனித வாழ்க்கையின் முக்கிய பகுதியாக அரசியல், சமுக, பொருளாதார, காலநிலை, விளையாட்டு மற்றும் விளம்பரம் என்று ஒவ்வொரு பகுதியிலும் தொலைக்காட்சியின் செல்வாக்கு அளப்பரியது. தற்போதைய உலகமயமாக்கல் சூழலில் நவீன ஊடகங்களின் வரவு மற்றும் ஊடக ஒருங்கிணைப்பு காரணமாக தொலைக்காட்சியின் நிகழ்ச்சி உள்ளடக்கம் உலகலாவிய ரீதியாக வியாபித்துள்ளது. இதன்காரணமாக, அதிகமான தொலைக்காட்சி அலைவரிசைகள் காணபட்டாலும் பெற்றோர்கள் நேர்சிந்தனை மற்றும் பயனுள்ள விடயதானங்களை கொண்ட நிகழ்ச்சிகளை வழங்கும் தொலைக்காட்சி அலைவரிசைகள் னை தமது குழந்தைகளினை பார்பதற்கு வழிகாட்டுவதோடு இயலுமானவரை குடும்பமாகவும் நிகழ்ச்சிகளை பார்க்க வேண்டும். அதிகமான வணிக நிறுவனங்கள் தமது தயாரிப்புகளை விளம்பரப்படுத்த தெரிவு செய்யும் ஊடகமாக தொலைக்காட்சியே காணப்படுகிறது.
மேலும், தொலைக்காட்சி வழங்கும் நன்மையான விடயங்களாக இளைஞர்களினை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி மற்றும் திறமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி,உலக நாடுகளில் இடம்பெறும் நிகழ்வுகள்,சமய அற நெறிமுறைகள் தொடர்பான கருத்துக்கள், கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் போன்றன தொலைக்காட்சியின் நன்மைகள் ஆகும். தொலைக்காட்சி செய்திகள் மற்றும் தொலைக்காட்சி ஆவணப்படங்கள் தொலைக்காட்சி பார்வையாளர்களுக்கு அறிவினை வழங்கும் சிறப்பான படைப்புகள் ஆகும். பொழுது போக்கு மற்றும் பண்பாட்டுத் தளத்தில் 21ம் நூற்றாண்டில் சிறந்த தாக்கத்தை உண்டுபன்னுகின்ற தொலைக்காட்சி தற்கால சமூகத்திற்கு கிடைத்த வரப்பிரசாதமாகும்.
ஆக்கம் : இ.தனஞ்சயன் (யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடகத்துறை முன்னாள் மாணவன் மற்றும் இலங்கை தேசிய தொலைக்காட்சியான ரூபவாகினி கூட்டுத்தாபனத்தின் தமிழ் நிகழ்ச்சி பிரிவின் உதவி தயாரிப்பாளர்)
இலங்கை தேசிய தொலைக்காட்சியான ரூபவாகினிகூட்டுத்தாபனத்தின் தமிழ் நிகழ்சிப்பிரிவின் உதவித்தயாரிப்பாளர் இ.தனஞ்சயன் ஆகிய நான் யாழ்பாணப்பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையை முறையாக விரும்பிக்கற்று சிறப்பு கலைமாணிபட்டத்தை பெற்றுள்ளேன்.அத்துடன்,ஆங்கில மற்றும் சிங்கள மொழிகளிலும் புலமை பெற்றுள்ளேன்.சர்வதேச ஆங்கில ஊடகங்களில் வெளிவரும் செய்திகளை தமிழ் மொழிக்கு மொழிபெயர்த்து தட்டச்சு செய்யும் ஆற்றலும் உண்டு.எப்போதும் சந்தோசமாக எதையும் கற்றுக்கொண்டே இருப்பேன்.
ஞாயிறு, 27 மே, 2018
ஊடகங்களினை விளங்கிக் கொள்ளுதல் காலத்தின் கட்டாயமாகும்!
சமூகத்தில் பரந்த மற்றும் பலதரப்பட்ட பங்கினை வகிக்கும் ஊடகங்கள் பற்றிய அறிவுத்தெளிவு இல்லாதன் காரணமாக நாம் பல்வேறு வகையான தகவற்தெளிவு சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது . தற்போதைய நிலையில் இன,மத குரோத சிந்தனையை தூண்டும் வகையில் ஊடகங்கள் தமது விற்பனையை பெருக்கி கொள்ள மஞ்சள்இதழியல் பண்புகளை உள்வாங்கிக்கொண்டே கொண்டே தமது ஊடக வியாபாரத்தை செய்கிறது.
ஊடகங்களில் வரும் தகவல்கள் உண்மையானது என்ற முற்கற்பிதம் பார்வையாளர்கள் மத்தியில் காணப்படுவதால் பல்வேறு வகையான சிக்கல்களை சமூக மட்டத்தில் தோற்றுவிற்கின்றன. ஊடகங்கள் என்பது தகவல்கள் மற்றும் கருத்துகளை பரிமாற்றம் செய்ய பயன்படுத்தப்படும் ஓர் உபாயம் ஊடகங்கள் எனலாம். ஆங்கிலத்தில் "The Media is an important source of information through its news segments, entertainment and allows for exchange of ideas, suggestions and comments ".நவீன உலகில் சராசரியாக ஒன்பது மணித்தியாலங்களினை ஒருவன் தனது தொலைபேசியில் செலவு செய்கின்றான் என அமெரிக்காவில் மேற்கொண்ட ஓர் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நமது நாளாந்த வாழ்வில் அதிகமான நேரத்தை தொலைபேசியில் செலவு செய்யும் நாம் அவற்றின் வெளியாகும் தகவல்களின் உண்மைத்தன்மையை விளங்கிக் கொள்ள அதிக நேரம் எடுத்துக் கொள்வதில்லை. குறிப்பாக இணைய ஊடகங்களில் பெரும்பாலும் இத்தகைய பிரச்சினையை அவதானிக்க முடிகின்றது. ஊடகங்களின் செல்வாக்கு(Media influence ) தற்காலத்தில் மிகவும் இன்றியமையாதாகி விட்டது.
பெரும்பாலானவர்கள் தற்போதைய காலகட்டத்தில் சமூக ஊடகங்களில் தங்கியிருப்பதன் காரணமாக, அனைத்து செய்திகளையும் உண்மை என்று நம்புகிறார்கள். இந்த உண்மைத்தன்மையை சவாலுக்கு உட்படுத்தும் விடயம் ஒன்றாகவே ஊடக எழுத்தறிவு காணப்படுகிறது. தற்போதைய நிலையில்,தகவல் பரிமாற்றத்தில் வேகம் மற்றும் விரைவு காரணமாக நம்பகத்தன்மை குறித்து அதிகம் சிந்தனை செய்ய வேண்டிய அவசியம் தோண்றியுள்ளது.
எம் கண் முன்னே உலகின் உண்மை விடயங்களை படம்பிடித்து காட்டுவது ஊடகங்களாகும். தற்போதைய காலகட்டத்தில் எந்த ஒரு ஊடகங்களும் இல்லாத நிலையினை கற்பனை பண்ணி பாருங்கள். எங்களால் வட கொரியா,தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா,ஜப்பான் போன்ற நாடுகளில் இருந்து வருகின்ற தகவல்களின் பெற்றுக் கொள்ள முடியுமா? இன்று நாம் அனைத்து தகவல்களையும் வரலாறு, புவியியல், மதம்,தொழில்நுட்பம் போன்றவற்றை Google.com மில் தேடி தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ளலாம். இன்றைய உலகமயமாக்கல் சூழலில் ஊடகங்களின் செல்வாக்கு பரந்து காணப்படுவதால்,எமது நாளாந்த வாழ்விலும் அதேசமயம் மக்களின் சிந்தனையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இத்தகைய ஊடகங்கள் மக்களின் வாழ்வியலில் சாதக பாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும் வல்லமை மிக்கது. இத்தகைய ஊடகங்களை சாதகமான விடயங்களிற்கு பயன்படுத்தும் போது, ஆரோக்கியமான விளைவுகளை எதிர்பார்க்க முடியும். ஊடகங்கள் செல்வாக்கு மற்றும் அதிகாரம் வாய்ந்தது. ஊடகங்களில் கேட்கும் பார்கும் செய்திகளை மக்கள் நம்புகின்றனர். இதனையே ஊடக விமர்சகர், Marshall Macluhan "Media is the message "என்கிறார். அதாவது ஊடகம் என்பது செய்தியே ஆகும்.
21ம்நூற்றாண்டில்ஊடகத்துறையின் தாக்கம் காரணமாக ஊடக எழுத்தறிவு கல்வியுடன் நெருக்கமானதொன்றாக பார்கப்படுகின்றதது. As pen media literacy leadership institute "The ability to access, analyze, evaluate and create media in a variety of forms "என வரைவிலக்கனப்படுத்தப்படுகின்றது. அதாவது தமிழில் கூறினால் ஓர் தகவலை வெவ்வேறு பட்ட வடிவில் மதிப்பிட்டு,ஒழுங்கு படுத்தி அணுகும் ஆற்றலே ஊடக எழுத்தறிவு என்று வரைவிலக்கனப்படுத்தப்படுகின்றது. சமூகத்தில் ஊடகத்தின் பங்கினை புரிந்து கொள்ளும் ஆற்றல் ஊடக எழுத்தறிவு என்று மேலும் ஒரு வரைவிலக்கனம் காணப்படுகிறது.
21 ம் நூற்றாண்டில் ஊடகத்துறை தனித்துறையாக வளர்சியினை உலகளாவியரீதியில் எட்டிய போதும் எமது இலங்கை தமிழ்பேசும் மக்கள் மத்தியில் ஊடகத்துறை இன்றும்கூட தமக்குரிய துறையாக பெரும்பாலானவர்களால் கருத்தில்கொள்ளாதமை குறித்து அதிகம் சிந்திக்க வேண்டியுள்ளது.
ஆக்கம்
இ.தனஞ்சயன்.
இலங்கை தேசிய தொலைக்காட்சியான ரூபவாகினிகூட்டுத்தாபனத்தின் தமிழ் நிகழ்சிப்பிரிவின் உதவித்தயாரிப்பாளர் இ.தனஞ்சயன் ஆகிய நான் யாழ்பாணப்பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையை முறையாக விரும்பிக்கற்று சிறப்பு கலைமாணிபட்டத்தை பெற்றுள்ளேன்.அத்துடன்,ஆங்கில மற்றும் சிங்கள மொழிகளிலும் புலமை பெற்றுள்ளேன்.சர்வதேச ஆங்கில ஊடகங்களில் வெளிவரும் செய்திகளை தமிழ் மொழிக்கு மொழிபெயர்த்து தட்டச்சு செய்யும் ஆற்றலும் உண்டு.எப்போதும் சந்தோசமாக எதையும் கற்றுக்கொண்டே இருப்பேன்.
செவ்வாய், 12 டிசம்பர், 2017
கருத்தின் ஆழம் குறைவுபடாமல் இருப்பதே கவிதை!
படைப்பாளியின் எண்ணங்கள், கருத்துக்கள், சிந்தனைகள் போன்ற மன உணர்வுகள் படைப்பாக வெளிவரும் போதே படைப்பாளி சுயதிருப்த்தி அடைகின்றான்.படைப்பாளி தனது திறமைகளை ஏதோஒரு வகையில் தனது ஆக்கப் படைப்புகளை வெளிஉலகிற்கு வெளிக்கொணர முயல்கின்றான்.சில சமயங்களில் வெற்றி பெறும் படைப்பாளி பல சமயங்களில் காணாமலே போய்விடுகின்றான்.படைப்பாளி தனது சூழலில் இருந்தே தனது ஆக்கப் படைப்புகுரிய கருப்பொருளை பெற்று கொள்கின்றான். சூழல்கள் மாறும் போது படைப்பின் தன்மைகளும் மாறுபடுகிறது.அந்தவகையில், இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடியாகக் கூறப்படுகிறது. இலக்கிய வகையில் முக்கியமானதாக கவிதை விளங்குகிறது. இது சிறுகதை,நாவல், கட்டுரை போன்றவற்றின் சுபாவங்களில் இருந்து மாறுபட்ட இயல்பு கொண்டது.கவிதையானது ஒருவரின் உளக்குமுறல்கள் மொழி வடிவம் பெறும் போது தோற்றம் பெறுவதாகும்.கவிஞர் பிறைசூடன் கவிதை தொடர்பாக கூறும் போது பாரதி,பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன் போன்றவர்கள் தமிழ் கவிதை உலகில் அனைத்தையும் தொட்டுவிட்டார்கள்.நாம் வரிவடிவம் மற்றும் வார்த்தைகளில் மாத்திரமே மாற்றம் செய்து வருகின்றோம் என்று ஒரு நேர்காணலில் குறிப்பிட்டமை கவனிக்கத்தக்கது. கவிதையானது எந்த அடக்குமுறை சூழலில் இருந்தாலும், ஏதோஒரு குமுறலாக வெளிவந்துவிடுவது அதன் சிறப்புத்தன்மையாகும்.அந்தவகையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மொழிபெயர்ப்பு துறையில் கல்வி பயிலும் கவிஞர் முகமது அஸ்கரின் கன்னி கவிதைத் தொகுப்பான"விரியும் போராடும் அரும்புகள்" ஒக்ரோபர் மாதம் 11ம் தி கதி கைலாசபதி கலையரங்கில் வெளியீடு தெரிவுசெய்யப்பட்டு இருந்தமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.கவிதை வெளியீடு விழாவுக்கு அழைப்பு வந்தும் அண்றைய வெளியிட்டு விழாவில் தவிர்க்க முடியாத சில தனிப்பட்ட காரணங்களினால் கலந்து கொள்ள முடியவில்லை.ஆயினும், கவிஞரினை பல்கலைக்கழக வளாகத்தில் நேரடியாகசந்தித்து கவிதைபுத்தகத்தை பெற்று வாசித்த அனுபவித்த உணர்வுகளை திறனாய்வுத்தளத்தில் வலைப்பூபதிவாக்கலாம் என எண்ணுகிறேன்.கவிதை என்பது சமூகத்தின் உணர்வு பிரவாகம் எனலாம்.கவிஞர் அஸ்கர் தனது உணர்வுகளை விரியும் போராடும் அரும்புகள் என்று கவிப்புத்தகத்திற்கு பெயரிட்டுள்ளார் என எடுத்துக் கொள்ளலாம். காரணம், உணர்வுகள் ஓர் ஒழுங்கு முறையில் வார்த்தைகளாகி வரியாகி கவிதையாகின்றது எனலாம்."விரும்பிகள் கொடுத்த காலம் திருடித்தின்னும் காலமே இச் சீர் வரிசை"என்று சீதனம் கொடுமையை சீர் வரிசை எனும் சீதனம் எனும் கவிதையில் கூறுகிறார்.விழுந்தாலும் விதையாகிடு எனும் கவிதையில் "துச்சமும் அச்சமும் உன் இதயங்கள் எனக்கும்வேண்டும் தோழா வீரநடை போட்டதால் நீ மண்ணிலே இன்றும் மணம் வீசுகின்றாய் "என்ற கவிவரிகளில் சோசலிச சித்தாந்ததை வலியுறுத்தியுள்ளார்.
முன் பக்க அட்டைப்படத்திலேயே கவிஞன் கவியின் கருப்பொருளின் ஆழத்தை உணர்த்தியுள்ளதோடு மலையகமக்களின் எதிர்பார்ப்புகளை அரும்புகளாக உவமைபடுத்தியுள்ளமை சிறப்பு.இதே சமயம் ஒரு இளம் கவிஞராக அஸ்கர் கூட ஒரு வகையில் விரியப்போராடும் அரும்பு என்று அர்தப்படுத்திக் கொள்ளலாம்.
இதேவேளை,உழைப்பே உயர்வு என்ற ஒரு கவிதையின் ஆரம்பம் இவ்வாறு அமைகிறது "மூடநம்பிக்கைகளை முடக்கிவிட்டு முடியும் என்ற முடிவோடு வா தோழனே" என்ற கவி வரியானது தன்னம்பிக்கையூட்டும் வரிகளாக அமைகிறது.மேலும், மற்றொரு கவிதையில்
"காலம் காலமாய்
மீட்சி இல்லாப் போராட்டத்தில்
தூளாய் போகின்றது....."மலையகமக்களின் அரசியல் ரீதியாக ஏமாற்றப்படுவதை சலித்து கவிதை வாயிலாகசொல்கிறார்.காணாமல் போன கணவுகள் எனும் கவிதையில்"காலமெல்லாம் காணாமல் போய் கனவுகள் கூட கஞ்சத்தனம் காட்டுகின்றன "எவ்வளவு சோகம் ஏமாற்றம் கணவுகள் கான்பதற்கே நம்பிக்கை அற்ற தன்மை. ஆழ்ந்த சிந்தனை மிக்க வரிகள்.உன்மை நட்பு எனும் கவிதையில் "பாலினம் தடையில்லை உணர்வுகள் ஒன்றானால் தோழன் துனைநிற்பான்"ஆன் பென் நட்பின் புனிதமான தன்மையை குறிப்பிடுகிறார்.பெண்ணின் கொடுமை எனும் கவிதையில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை குறிப்பிட்டு இறுதி வரிகளில்"தடுத்து எதிர் நிற்க தூக்குதண்டனையை வரச்சொல்லங்களே"என பெண்களின் விடுதலைக்கான அவசியத்தையும் அதற்கு தீர்வாக தூக்குத்தண்டனையும் தனது கவிதையில் வலியுறுத்தியுள்ளார்.தோட்ட தொழிலாளிகள் எனும் கவிதையில் "கட்டைகள் காற்சட்டை வெள்ளையனின் அடி மட்டம் போனபின்னும் போகவில்லை "என்று மலையக மக்கள் தொடர்ந்தும் அடிமைத்தனம் நிறைந்த வாழ்க்கையே வாழ்ந்து வருகிறார்கள் என்று கூறுகிறார். நிதியும் நீதியும் எனும் கவிதையில் "நிதி தான் நீதியா இது தான் நியதியா"என நீதி நிதிக்கு பின்னால் என்ற தற்கால நிலமையை கவிதையில் சொல்கிறார்.
"புயலோடு போராடும்
தூக்கணாம் குருவி கூட்டைப் பார்
உழைப்பால் உயர்ந்து போய்
உயரத்திலேயே வாழ்கிறது
மகுடிக்கு வளைந்தாடும்
பாம்பாக ஆகாதே
முடிவின் ஆரம்பத்திலும்
முதுகெலும்போடு உழைத்து வாழ்"
என்று உழைப்பின் அவசியத்தை உழைப்பே உயர்வு எனும் கவிதையில் உணர்த்துகின்றார்.உழவனின் உழுத மனம் எனும் கவிதையில் "உழவன் மனம் ஓயந்து விட்டால் உண்பதற்கு சோறிறின்றி நாற்றோடு சேற்றில் இறங்குவதே மனிதனின் விதி ஆகிவிடும் "விவசாயத்தின் எதிர்காலம் பற்றி சிந்திக்கும்கவிஞரின் தொலைநோக்கு பாராட்டுக்குரியது.வடுக்கள் எனும் இன்னொரு கவிதையில்"இறுதி சடங்கு செய்து கொள்ளி வைக்கப் பெற்றெடுத்த மகளைத் தொலைத்து துடிக்கும் பெற்றவரின் கதறல்கள்"என்று போர்காரணமாக இறந்த இளைஞர்களின் பெற்றோரின் மனவருத்தத்தை கவிஞர் அழகாக பதிவு செய்கிறார்.நாகரீகம் உட்புகுந்த மானிடம் எனும் கவிதையில் "சுகங்களை சுத்தமாக காணோம் சூனியமாய் ஆனது உலகே"என்று உலகமயமாக்கலின் தாக்கத்தை கூறும் கவிஞர் குறித்த கவிதையின் இறுதி வரியில் நமக்கெல்லாம் ஆகுமா நாகரீகம்? என்று முடிக்கிறார். இது உலகமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல்என்பது ஏழைகளுக்கு எட்டாக்கனி என்பதாகவே கருத்து கொள்ளவேண்டியுள்ளது.
"கல்வி உன் உயர்வெனவும்
ஒழுக்கம் உன் சிறப்பெனவும்
இவையோடு மலர்தலே
உன் புகழ் எனவும் உரைத்திட வேண்டும்"
என்று விளையும் பயிர் எனும் கவிதையில் கல்வியின் அவசியம் பற்றி குறிப்பிடுகின்றார்.அத்துடன், செல்லாக்காசு எனும் கவிதையின் இறுதியில் "புரிதல் வேண்டும் உலகே-காசு புதிதாய் இனிக்கும் நஞ்சே"என்று காசின் தன்னம பற்றி சிந்திக்க வைக்கின்றார்.
நான்,தமிழோடுவிளையாடுமனமே,உழைப்பே உயர்வு,கருகிய மலர் சிரிக்கிறது, சிறகொடிந்தபறவை,
விளையும் பயிர்,தூரத்து நிலா,விளையும் பயிர்,
யார் குற்றம்,தேம்பியழும் சுவர்கள்,
விரிய போராடும் அரும்புகள்,ஒரு மயிலிறகால்,
பாலஸ்தீனக் குரல்,குருவிக்கூடு,
காணி நிலம் வேண்டும்,
கடல்வாழ் காகித ஓடம்,முகிலின் துளிகள், சீர்வரிசை எனும் சீதனம்,
என் உயிர் தங்கை,கடல்வாழ் காகித ஓடம்,கடைசி முத்தம்,உயிருள்ள மரணம்,வறுமை விலகாதோ,
புறப்படு புதுமைப் பெண்ணே,
வடுக்கள்,காணாமல் போன கனவுகள்,உண்மைநட்பு,தோட்டத்தொழிலாளிகள்,பெண்ணினக் கொடுமை
வட்டியில்லா கடன்,
மீளாத மியன்மார்ப் படகுகள்,உழவனின் உழுத மனம்,மொட்டின் மொழி ,வறுமை விலகாதோ,அவசரக் கல்யாணம்
சதுரங்க வேட்டை,இறுதி நாழிகை என்று சமூககவிதைகள்,பொருளாதார,அரசியல் மற்றும் காதல் கவிதைகள் என அனைத்தும் தற்காலத்தின் நிலைமையை உரையாடும் பாங்கில் கவிதை அமைந்துள்ளது.கவிஞன் எனும் கவிதையில் அஸ்கர் கவிதைக்கு பின்வருமாறு வரைவிலக்கனம் கொடுக்கின்றார்"கவிஞ்ஞனின் கற்பனையை இலக்கனம் கற்பிக்க முடியாது இது தான் அதுவென்றாலும் அது கவிதான்"என்று கூறுகிறார். கவிதையின் வரிகள் அற்புதமானது.கன்னி படைப்பினை இவ்வளவு சிறப்பாக செய்திருப்பது உண்மையில் பாராட்டுக்குரியது. கவிஞர் முகமது அஸ்கரின் முக நூல்களில் பார்த்து ரசித்த கவிதைகள்
இன்று நூல் வடிவில் உருவாகி இருப்பது மிகவும் பொக்கிஷமான விஷயமாகும். முகப்புத்தகத்துக்குள் தனது கவிதையை சிக்கவிடாமல் அச்சு வடிவில் வெளி உலகிற்கு கொண்டு வந்தமை சிறப்பானது.அச்சு வடிவில் கவிதை வாசிப்பு அனுபவம் அலாதியானது.விரியப் போராடும் கவிதைகள் என்ற கவிஞர் முகமது அஸ்கரின் கவிப்புத்தகம் கவிஉலகிற்கு அமையும் என்பதில் எந்த சந்தேகமும்இல்லை. இறுதியாக மொட்டின் மொழி எனும் கவிதையில் கவிஞர் குறிப்பிட்ட "உலகம் இன்று இருட்டறையில் இனி நீயாவது விழித்துக்கொள்"என்ற வரிகளை சிந்தித்துக்கொண்டு எனது இச் சிறு வலைப்பூப்பதிவினை நிறைவு செய்து மற்றும் ஓர் வலைப்பூப்பதிவில் விரைவில் சந்திக்கின்றேன். இ.தனஞ்சயன்.ஊடகத்துறை
இலங்கை தேசிய தொலைக்காட்சியான ரூபவாகினிகூட்டுத்தாபனத்தின் தமிழ் நிகழ்சிப்பிரிவின் உதவித்தயாரிப்பாளர் இ.தனஞ்சயன் ஆகிய நான் யாழ்பாணப்பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையை முறையாக விரும்பிக்கற்று சிறப்பு கலைமாணிபட்டத்தை பெற்றுள்ளேன்.அத்துடன்,ஆங்கில மற்றும் சிங்கள மொழிகளிலும் புலமை பெற்றுள்ளேன்.சர்வதேச ஆங்கில ஊடகங்களில் வெளிவரும் செய்திகளை தமிழ் மொழிக்கு மொழிபெயர்த்து தட்டச்சு செய்யும் ஆற்றலும் உண்டு.எப்போதும் சந்தோசமாக எதையும் கற்றுக்கொண்டே இருப்பேன்.
