உலகமயமாக்கல் மீதான அதீத ஆர்வத்தை உலக நாடுகளில் பெரும்பாலானவை கொண்டு இருப்பதன் காரணமாக,செய்தி பரிமாற்றம் உலகமய இயல்பை அடைந்துள்ளது.தகவல் கடத்தும் செயல் ஒழுங்கு பூகோளம் தழுவிய வகையில் விரிவாக்கம் பெற்றுள்ளது."யாதும் ஊரே யாவரும் கேளீர்"என்ற கனியன் பூங்குன்றனாரின் சிந்தனை சாத்தியமாகியுள்ளது.உலகம் ஓர் கிராமம் (Global village )என்ற நிலை ஊடகக்கலாச்சாரம் மற்றும் பூகோளமயமாக்கல் காரணமாக, உண்டாகிவிட்டது.அந்த வகையில், பூகோளமயமாக்கல்/உலகமயமாதல் தொடர்பாக முதலில் சிந்திக்கவேண்டியுள்ளது.உலகமயமாக்கல் என்பது உலக நாடுகளையும் அவற்றின் மக்களையும் ஒருங்கிணைக்கும் ஒரு செயன்முறையாகும்."The process of a worldwide economy in which resources and products move fairly across national borders".பெரும் திரளான மக்களை சென்றடையக் கூடிய தகவலை பரிமாறிக் கொள்ளும் சாதனமாக இனையம் விளங்குகிறது.இனைய அறிமுகம் வெகுசன ஊடகங்களினை நவீன ஊடக வடிவில் நுகர்வதற்கான சாதகமான நிலைமையை உருவாக்கியுள்ளது. இனையமானது அனைத்து வகையான ஊடகங்களினையும் தன்னகத்தே உள்வாங்கியுள்ளமை அதன் மேலதீக பலம் ஆகும். இத்தகைய காரணங்களினால், வெகுஜன ஊடகப்பண்பாட்டில் கூட பல மாற்றங்களை அவதானிக்க முடிகிறது.Mobile journalism, Citizens journalism,Digital journalism மற்றும் Alternative media போன்ற சொல்லாடல்கள் தற்போது இதழியல் பரப்பில் அதிகமாக உரையாடப்படுகின்றது.இவற்றின் எதிர்கால செல்நெறி (Future trend) ஆதிக்கமானது;தகவல்கள் பரிமாற்றத்தில் காணப்படும் எளிமையை மேலும் எளிமைப்படுத்தப்படும்.Video,Audio &Digital print போன்றவற்றின் செல்வாக்கு அதிகரித்து காணப்படவழிவகுக்கும்,உள்ளூர் உற்பத்தி சார் விளம்பரங்களின் நிலமை பரிதாபப்படும் நிலைமைக்கு செல்லும் வெளிநாட்டு விளம்பரங்களின் ஆட்சியே இடம்பெறும்,Smart phone போன்றன யதார்த்தத்தை அவ்வாறே பிரதிபலிப்பதாக அமையும் அதேவேளை,தொலைக்காட்சியின் நிலைமை புதிய ஊடகங்களினை தழுவியே இருக்கும். பத்திரிகையானது பெரும்பாலும்(Free issue)இலவசமாகவே வழங்கப்படும்.Mobile media and Global media trend (உலகம் தழுவிய ஊடக செல்நெறி)உருவாகி அனைத்துக்கும் தொலைபேசியை நம்பி இருக்கும் நிலைமை காணப்படும்,யதார்த்த சிந்தனைகளை அதிகரிப்பதுடன் மாற்றுபாங்கான சிந்தனைகளை(Alternative thoughts)விதைப்பதாக அமையும்,அரச ஒழுங்கு மற்றும் சட்டம் என்பது மூன்றாம் தரப்பாகவே காணப்படும்,இலவசம் என்ற போர்வையில் நாமே விற்பனை பொருளாக வேண்டிய நிலை காணப்படும்,ஆக்கத்திறனை தீர்மானிப்பதில் பெரும் பங்கு புதிய ஊடகங்களே திகழும் அதேபோல் புதிய ஊடகங்கள் அனைத்திலும் ஆட்சி செலுத்தும்.மேற்கண்ட காரணங்கள் எதிர்காலத்தை நிர்ணயம் செய்வதாக அமையும்.இதேவேளை,பிரஜைகள் ஊடகவியல் (Citizen journalism)என்பதனை The media center at the American press institute கீழ்க்கண்டவாறு வரைவிலக்கனப்படுத்துகின்றது."The act of a citizen or group of citizens playing an active role in the process of collecting,reporting, analysing & disseminating news and information.The intent of this participation is to provide independent, reliable, accurate, wide-ranging and relevant information which a democracy requires ". பிரஜைகள் ஊடகவியல்(Citizens journalism)என்ற எண்ணக்கருவானது ஒவ்வொரு சமுக ஊடகங்களினை பயன்படுத்துபவருக்கும் பொருந்தும்(Citizen journalists are ordinary people who take on the role of news reporters).இன்றைய காலத்தில் சமூக ஊடகங்களில் பிரதிநிதித்துவம் பெறாதவர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடியதாகும்.சமூக வலைத்தளங்கள் தொடர்பாக இதுவரையான காலத்தில் 2500 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது. இவற்றில் பெரும்பாலானவை பல்வேறு நபர்களின் புகைப்படங்களை பயன்படுத்தி, போலி பேஸ்புக் கணக்குகளை ஆரம்பித்தமை தொடர்பாக முறையிட்டுள்ளதாக அந்த பிரிவின் பிரதம தகவல் பாதுகாப்பு பொறியாளர் ரொஷான் சந்திர குப்த குறிப்பிட்டுள்ளார். முன் அறிமுகம் இல்லாதவர்களை பேஸ்புக் கணக்கில் நண்பனாக்கிக் கொள்வதே இது போன்ற குற்றங்கள் உண்டாக்க காரணமாகிறது. இதேபோல், சிலரின் தொலைபேசி இலக்கங்களை பயன்படுத்தி சமூக ஊடகங்கள் வாயிலாக குற்றங்கள் இடம்பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.சமூக ஊடகங்களின் தற்போதைய போக்கு மிகவும் பொறுப்பற்ற தன்மையினையும் ஊடகங்களினை எவ்வாறு பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டும் என்ற ஊடக எழுத்தறிவு(Media illiteracy)அற்ற தன்மையையே தெளிவுபடுத்துகின்றது. சமூக ஊடகங்கள் தற்காலத்தில் பிரச்சனைகுரிய உந்துதலாகக் காணப்படுகிறது.மேலும்,சமூக ஊடகங்களினை பயன்படுத்தும் பாவனையாளர்கள் கீழ்க்கண்ட வழிகாட்டல்களை பின்பற்றும் போது ஊடகப்பாவனை வினைத்திறன் மற்றும் விளைதிறன் மிக்கதாக அமைவதுடன் பிரச்சனைகளினை தவிர்க்கவும் வசதியாக அமையும்.☆சமூகத்தை ஒற்றுமைப் படுத்தி ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் ஈடுபட முடியும். இலங்கையில் சமூக ஊடகப்பாவனை இன்னும் முரண்பாடுகளை உண்டுபண்னி இனங்களிற்கு இடையில் மேலும் பல தசாப்தங்களுக்கு நிரந்தர விரிசலை உண்டுபண்னுவதாக அமைகிறது.சமூக ஊடகங்களினை பயன்படுத்தி குறித்த இடைவெளியை பூரணப்படுத்த சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் முன்வரவேண்டும்.☆இன மத வேறுபாடின்றி மனித நேயம் மற்றும் மனிதாபிமானத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இனவாத, மதவாத,பிரதேச வாத,வகுப்புவாத,பிரிவினையை தூண்டும் விதமாக பதிவிடுவதை சமூக ஊடகங்களில் தவிர்ப்பது ஆரோக்கியமான நல்லிணக்க சமூகத்தை கட்டியெழுப்ப துனையாக அமையும்.☆நீதியான விடயங்களினை பதிவு செய்யும் போது அதனால் அநீதி ஏற்படாமல் மிகவும் ஆழமாக அவதானித்து கருத்துக்களை மற்றும் புகைப்பட தெரிவுகளை மேற்கொள்ள வேண்டும்.☆நல்ல பலனை அளிக்காத எந்தவொரு பதிவும் வீனானவையே இந்த மனப்பான்மை கொண்ட புத்திசாலியாக சமூக ஊடகங்களினை உபயோகப்படுத்த வேண்டும்.குறித்த இனம்,மதம், சாதி என்பதை சமூக ஊடகம் ஊடாக நிறுவ முற்படக்கூடாது.☆பழிவாங்குதல், அவமானப்படுத்தல்,உணர்ச்சி வசப்படுதல்,அனாவசியமாக வார்த்தையை விடுதல்,அந்தரங்கங்களை பதிவிடுதல்,கலாச்சார அசிங்கத்தை வெளிக்கொணருதல்,மற்றவர்கள் மீது சேறு பூசுதல்,ஆணவமான கருத்தாடல்கள், தெய்வ நிந்தனை பயனற்ற முன்னேற்றகரமான வார்த்தையை பயன்படுத்துதல் மற்றும் தனிமனிதத் தாக்குதல்களை தவிர்க்க வேண்டும்.☆ஒரு சிலரின் தவறுகளிற்காக ஒட்டு மொத்த சமுதாயத்தையும் விமர்சித்து முழு சமுதாயத்திடமும் இருந்து பகையாளி/விரோதி/இனத்துவேசி/பிரிவினை வாதி/இனவாதி என்ற நாமங்களை நமக்கு நாமே சூட்ட காரணமாயிருக்கக் கூடாது.இன்னொரு சமூகத்தை இழிவுபடுத்தும் செயலை மேற்கொள்ளாமல் குறித்த முரண்பாடுகளிற்கான காரணத்தை தெளிவுபடுத்தி தீர்வுகளை முண்மொ ழிவதாக அமைய வேண்டும்.☆எந்த ஒரு விடயத்தையும் உணர்வுபூர்வமாக அணுகாமல் அறிவுபூர்வமாக அணுகுவதற்கு மூளையை பயிற்றுவிக்க வேண்டும். ☆அரசியல் தலைமைகளை கழுவி ஊத்துவதனை விடுத்து குறித்த நிலைமைக்கான காரணத்தை ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை பிரேரிப்பதாக சமூக ஊடகப் பதிவுகள் அமைவது காத்திரமான சமூக ஊடக கலாச்சாரத்தை (Positive social media culture) பேணிக் கொள்ள வழிதுனையாக அமையும்.அதேவேளையில், 3.773 பில்லியன் மக்கள் தொகையினர் இனைய பயனாளிகளாக உள்ள அதேசமயம் 2.789 மக்கள் தொகையினர் சமூக ஊடக பயனாளிகளாக உள்ளதாக ஓர் ஆய்வின் முடிவு கூறுகிறது.அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம்ப் நேர்காணல் ஒன்றில் குறிப்பிடும் போது "Twitter என்ற சமூக ஊடகம் இல்லாவிட்டால் நான் ஜனாதிபதியாக வந்திருக்க முடியாது"என்று கூறுகிறார். இது சமூக ஊடகங்களின் செல்வாக்கினையே எடுத்தியம்புகின்றது.அத்துடன் Twitter சமூக ஊடக தளத்தில் தீவிரமாக இயங்கிவரும் டொனால்டு ட்ரம்பினை 41.7 பில்லியன் பேர் பின்தொடர்கின்றமையும்(Following)குறிப்பிடத்தக்கது.இதேவேளை,அச்சு ஊடக இதழியல் மற்றும் இனைய இதழியல் போன்றவற்றிற்கு இடையிலான இடைவெளி குறித்தும் சிந்திக்க வேண்டியுள்ளது.அந்தவகையில், அச்சு ஊடகங்களில் செய்தி கதை சொல்லும் பாணியிலும் இனைய ஊடகங்கள் செய்தி செய்முறை வடிவில் காணப்படுகிறது.மேலும் அச்சு ஊடகங்களில் வரும் ஆக்கங்கள்,செய்தி விநயோகம், அதிகாரம், பார்வையாளர்களின் பங்கு என்பன இனைய ஊடகங்களில் பண்பில் இருந்து மாறுபட்டது.இன்றைய காலத்தில் அனைவரும் சமூக ஊடகங்களில் தமது பொன்னான நேரங்களை செலவழித்து வரும் நிலையில் அந்த நேரம் எம்மை சரியான முறையில் வளப்படுத்தி கொள்ள சரியான முதலீடாக அமைய வேண்டுமே தவிர நாம் சமூக ஊடகங்களிற்கு பகடைக்காயாகக் கூடாது என்ற கருத்தை வலியுறுத்தி,நிறைவாக,கவிஞர் வாலி ஐயா கூறிய "காலம் தமக்கு தேவையானவர்களை தாமே உருவாக்கும்"என்ற தத்துவத்துடன்(Philosophy )இந்த பெறுமானம் மிக்க சிறிய வலைப்பூ பதிவை நிறைவு செய்கிறேன்.மீண்டும் மற்றொரு பெறுமதியான வலைப்பூப்பதிவில் சந்திப்போம் நண்பர்களே! இ.தனஞ்சயன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக்கற்கைகள் சிறப்பு மாணவன்.
அறிவைநாடல்
அறிதலார்வம்
சனி, 4 நவம்பர், 2017
வெகுஜன ஊடகப்பண்பாட்டில் புதிய திருப்புமுனையாக அமையும் பிரஜைகள் ஊடகவியல்!
இலங்கை தேசிய தொலைக்காட்சியான ரூபவாகினிகூட்டுத்தாபனத்தின் தமிழ் நிகழ்சிப்பிரிவின் உதவித்தயாரிப்பாளர் இ.தனஞ்சயன் ஆகிய நான் யாழ்பாணப்பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையை முறையாக விரும்பிக்கற்று சிறப்பு கலைமாணிபட்டத்தை பெற்றுள்ளேன்.அத்துடன்,ஆங்கில மற்றும் சிங்கள மொழிகளிலும் புலமை பெற்றுள்ளேன்.சர்வதேச ஆங்கில ஊடகங்களில் வெளிவரும் செய்திகளை தமிழ் மொழிக்கு மொழிபெயர்த்து தட்டச்சு செய்யும் ஆற்றலும் உண்டு.எப்போதும் சந்தோசமாக எதையும் கற்றுக்கொண்டே இருப்பேன்.
செவ்வாய், 19 செப்டம்பர், 2017
ஊடகரசனையை அனுபவிக்க ஊடகஉளவியலினனை புரிந்து கொள்வது அவசியம்?
மக்களின் அகங்களை ஊடுருவி கருத்தை/தகவல்களினை கொண்டு செல்வதாக ஊடகங்கள் திகழ்கின்றன. ஊடகங்கள் என்பது தகவல்களை அறிந்து, தெளிந்து, துணிந்து சொல்வனவாக அமைவதுடன் இவை மக்களின் பண்பாடுகள் மற்றும் பழக்க வழக்கங்களை பிரதிபலித்து,பிரதிநிதித்துவப்படுத்தி,செல்வாக்கு செலுத்துவதாக காணப்படவேண்டும்.மக்களின் உளவியலினை புரிந்து கொண்டு மக்களிற்கு பிடித்தமான மற்றும் ஆர்வமான நிகழ்சிகளையே ஊடகங்கள் படைக்கின்றன.உளவியல் தொடர்பாக உளவியல் வல்லுநர்களின் பார்வையில் அறிஞர் வாட்சன் "நனவுநிலை பற்றியதாக குறிப்பிடுகின்றார் ".காண்ட் என்பவர் "மனம் பற்றியதாகவும் ஆன்மா பற்றியதல்ல" என்று கூறுகிறார். குரோ என்பவர் "மனித நடத்தை மற்றும் மனித உறவு முறைகள் பற்றிய படிப்பு"என்கிறார். சிக்மன் பிரைட் என்பவர் "மனிதனின் நனவிலி பற்றிய நிலையே உளவியல்" என்று சிந்திக்கின்றார்.மக்டூகல் என்பவர் "மனித நடத்தையின் காரணங்கள் மற்றும் நிபந்தனைகள் ஆகியவை தொடர்பாக கற்பதாகும்" என்று கூறுகிறார்.நோய் டன் முன் என்பவர் "அனுபவம் மற்றும் நடத்தை பற்றிய விஞ்ஞானம்"எனக் கூறினார்.சுருக்கமாக, ஆங்கில அகராதியான Oxford "The study of human mind and behaviour "அதாவது, மனித நடத்தை மற்றும் உளம் பற்றிய கற்கை என்று வரைவிலக்கனப்படுத்துகின்றது.இத்தகைய வலிமைமிக்க உளவியல் அனைத்து விடயங்களிலும் கலந்துள்ளது.அரசியல், சமூகம், பொருளாதாரம்,சமயம் என்று அனைத்துமே உளம் சார்ந்த விடயமாகவே பார்கப்படுகின்றது.தற்போதைய உலகமயமாக்கல் சூழலில், மனமகிழ்ச்சிக்காக ஊடகங்களினை நுகருதல் என்ற காலம் போய், மனமகிழ்ச்சிக்காக ஊடகங்களினை தவிர்க்க வேண்டும் என்று ஊடகங்களின் பெருக்கம் மற்றும் அவற்றின் தாக்கம் என்பன மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாதகிவிட்டது.எண்மான ஊடகங்களின்(Digital media)வரவு மனித உளவியலில் தவிர்க்க முடியாததாகிவிட்டது.இதேவேளை,மனித வாழ்க்கையில் அனைவருக்கும் சமமான 24 மணித்தியாலங்களே ஒரு நாளில் வழங்கப்படுகிறது. குறித்த காலப்பகுதியினை மிகச் சரியாக முகாமை செய்பவர்களே விதியை வெற்றி கொள்கிறார்கள்.தற்போதைய தொழில்நுட்பம் நிறைந்த உலகில் பிரச்சனைகள் ஏராளமான முறையில் காணப்படுகிறது. பிரச்சனைகள் ஏராளமான முறையில் கானப்படுவதனால்,இதனை தீர்த்துக்கொள்வதிலே விதி தங்கியுள்ளது.குறித்த பிரச்சனைகளை தீர்த்துகொள்ள இயலாத சமயத்தில் மனஅழுத்தம்/மனஉளைச்சல்(Stress) ஏற்படுகின்றது.மனப்பதட்டம் & கவலைகளை உருவாக்குவது மனஅழுத்தமாகும்.மனஅழுத்தத்தை அடையாளம் கண்டு புரிந்து கொண்டு குறைத்துக்கொள்வதே மனஅழுத்தமாகும்.உடம்பு, மனம்,நடத்தை மற்றும் மனநிலை சார்ந்து உளஅழுத்தமாகும்.மனஅழுத்ததிற்கான காரணமாக,சுகவீனம், பொருளாதார நெருக்கடி,பிரிவு மற்றும் போதைப்பொருள் பாவனை போன்றவற்றை பிரதானப்படுத்தலாம்.ஊடகங்கள் குறித்த மனஅழுத்தத்தை ஏற்படுத்துபவை அல்ல. ஊடகங்களால் ஏற்படுத்தும் மனஅழுத்தமாக எதிர்மறையான மனவெழுச்சிகளை தூண்டிவிடுதல்.அதாவது, வஞ்சகம், பொய்,பொறாமை, கோபம்,காழ்புணர்ச்சி போன்றவற்றை எதிர்மறை மனஎழுச்சிகளாக குறிப்பிடலாம். ஊடகங்களினை பொறுத்தவரை,அது அச்சு, இலத்திரனியல் மற்றும் எண்இலக்க ஊடகங்கள் /புதிய ஊடகங்கள் என அனைத்துமே மக்களினை பதட்டத்திற்குள் வைத்திருக்கவே விரும்புகின்றன.பொதுவாக, செய்தி என்பது "No news is good news"என்ற சொற்தொடரை நியாயப்படுத்தும் வகையிலே அமைகின்றன.ஆதாரமாக,திருட்டு,வாள்வெட்டு,கொலை,விபத்து,துப்பாக்கிச்சூடு, ஊழல், பாலியல் துஷ்பிரயோகம்,போராட்டம் போன்றனவே ஊடகங்களினை பெரிதும் நிரப்புகின்றன. பத்திரிகைகளினை பொறுத்தவரை, நவீன ஊடகங்களின் வரவு விற்பனையில் மந்த நிலைமையை தோற்றுவித்துருப்பதுடன் செய்திக்குரிய விழுமியங்களான விரைவு,பிரபலத்தன்மை,பொருத்தப்பாடு, அன்மைத்தன்மை போன்றவற்றிற்கு சவாலாக அமைந்துள்ளது.அச்சு ஊடகங்கள் இன்று பெரும்பாலும் நவீன ஊடகங்களிலே செய்திகளிற்காக தங்கி இருப்பதுடன், எதிர்காலத்தில் தனது இருப்பை தக்கவைத்துக் கொள்ள தம்மை தகவமைத்துக் கொள்ள வேண்டிய தேவையும் எழுந்துள்ளது.தற்போதைய சூழலில், அனைவராலும் தவிர்க்க முடியாத ஒன்றாக ஊடகங்கள் காணப்படுகின்றன.மக்களின் தகவல்அறிதலார்வத்தை(Information hunger )பூர்த்தி செய்வதாக ஊடகங்கள் காணப்படுகின்றன.நவீன ஊடகங்களின் வகையில் ஒன்றான சமூக ஊடகங்களின் வருகை மற்றும் எழுச்சி தனிமனித பற்றிய ஆர்வத்தை தூண்டும் அதேவேளையில் ஊடக ஒழுக்கம் மற்றும் தனிமனித ஒழுக்கம் தொடர்பாக சவாலுக்குட்படுத்தியுள்ளது.அதிகரித்த ஊடகங்களின் எண்ணிக்கைகளில் எந்த ஊடக்கத்தை தெரிவு செய்ய வேண்டும் என்பதிலேயே குழப்பம்தான் காணப்படுகிறது.தீர்வாக நமது உணர்வுகளை சீராக நெறிப்படுத்துகின்ற அறிவினை மேலும் பெருக்கும் ஊடகங்களாக அமையவேண்டும். ஒவ்வொருவரிடம் தமக்கென தனிபட்ட ஊடகரசனை(media appreciation)காணப்படுகிறது.மாறாக, ஊடகங்களினை நுகரும்போது திருப்பதியற்ற தன்மையே தோன்றுகிறது.அது பின்னர் மனஉளைச்சலினை கொடுக்கிறது.இலங்கையில் மனவுளைச்சல் காரணமாக, இலங்கையில் சராசரியாக மூன்று மணித்தியாலங்களுக்கு ஒருவர் என்ற வகையில் நாளொன்றுக்கு 8 பேர் தற்கொலை செய்துகொள்வதாகவும் அதில் ஆச்சரியமான விடயம் ஆண்களே முன்நிலை வகிப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கமைய நடப்பாண்டில் கடந்த ஆறு மாத காலப்பகுதியில் 1597 தற்கொலைச்சம்பவங்கள் பதிவாகியுள்ள அதேவேளையில் 1275 பேர் ஆண்களாகவும் 322 பேர் பெண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015 ம் ஆண்டு 2389 பேர் ஆண்கள் உள்ளடக்கிய 3058 தற்கொலைகள் பதிவாகியுள்ளது. தொடர்ந்து அடுத்த வருடம் 2339 ஆண்களும் 668 பெண்களும் தற்கொலை செய்துள்ளனர். 1995 ற்கு பின்னர் 8500 பேர் என்று பதிவாகி இருந்த தற்கொலைகள் 2005 இல் அரைவாசிக்கும் மேலாக குறைந்து 2015 ம் ஆண்டில் 3025 என்ற எண்ணிக்கைக்கு கீழிறங்கியுள்ளது என சுகாதார அமைச்சரின் புள்ளிவிவரங்கள் நிறுவுகின்றன. இவற்றின் தாக்கத்தில் இருந்து எம்மை எவ்வாறு தற்காத்துக்கொள்ளலாம் என்று சிந்திப்பதே நுண்ணறிவுக்கு பொருத்தமானது. அண்மையில் சமுக ஊடகங்களில் வைரலான நீலத்திமிங்கல விளையாட்டு போன்றன மனஅழுத்தத்தை கூட்டி முட்டாளாக்கி தற்கொலைக்கு தூண்டியதாக அமைந்து சிலர் உயிர் இழந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இதேவேளை,குறித்த விளையாட்டினை உருவாக்கிய பிலிப் பியுடோக்கின் நோக்கம் "வாழத்தகுதியற்றவர்களை இவ்வுலகில் இருந்து களையெடுப்பதே" எனக் கூறுகிறார். இக்கூற்று ஆழ்ந்து சிந்திக்கவேண்டிய கருத்தாகும்.மேலும், சமூக ஊடகங்களில் இடம்பெறும் தரம் தாழ்ந்த கருத்துமோதல்களில் இருந்து விலகிக்கொள்வது எமது அறிவை பாதுகாத்து கொள்ள வசதியாக அமையும்.ஆரோக்கியமான, சமநிலையான,சுறுசுறுப்பான மற்றும் ஊடகங்களிற்கு அடிமையாக இல்லாத தன்மை போன்றன மனதினை தெளிவான சிந்தனைக்கு அழைத்து செல்வதாக அமையும்.ஊடகங்களின் அடிமைதனத்தில் இருந்து விடுபட அவற்றை திறனாய்வு தளத்தில் மறுவாசிப்பு செய்ய வேண்டும்.ஊடக கருத்துருவாக்கத்தினை கேள்விகளுக்குட்படுத்தி,பகுப்பாய்வு செய்து, மதிப்பீடு செய்தல்.அத்துடன், குறித்த தகவல்கள் உண்மையானவையா?/கருத்தா?,எழுத்தாளரின் நோக்கத்தை மற்றும் குனாம்சங்களை இனம்கானுதல்,எழுத்தாளரின் உரையாடல் பாணியை அடையாளம்காணல் போன்றன திறனாய்வுத்தள வாசிப்பின் மிக அடிப்படையானவை.எமது நாட்டின் கடந்த கால 30 வருட யுத்தத்தின் பின்னர்,மக்களின் உளவியல் சமநிலை பாதிக்கப்பட்டுள்ளது.இதனை சீர் செய்ய வேண்டிய முக்கிய பொறுப்பு பொறுப்புவாய்ந்த ஊடகங்களிற்கே உள்ளது. எனினும், எமது நாட்டின் ஊடகங்கள் போர்க்கால இதழியல் மரபினையே தற்போதும் பின்பற்றி வருகிறார்கள்.மக்களிற்கு நம்பிக்கை அளித்து நேர்மையான சிந்தனையை விதைக்கக்கூடிய ஊடகங்கள் இன்மையானது கவலை யான விஷயமாகும். ஊடகங்களில் ஒன்றான விளம்பரங்களின் உளவியல் மிக முக்கியமானது.நுகர்வோரின் உள்வாங்கும் திறன்,வாழ்க்கை முறை,ஆளுமை போன்றவற்றுடன் தனிப்பட்ட நபரின் உளவியல் புரிதல்களின் அடிப்படையில் அதாவது, வயது, பால்,தொழில் வருமானம், கல்வித்தரம் என்பற்றிக்கு இனங்க விளம்பரதாக்கம் வேறுபடும்.ஊடகஉளஅழுத்திலிருந்து எம்மை காத்துக்கொள்ள சரியான ஊடகத்தெரிவு,ஊடகங்களிற்கென குறிப்பிட்ட நேரம் ஒதுக்கீடு, ஊடகங்களினை எமக்கு பயனுள்ளதாக்குதல்,முறையான ஓய்வு, மகிழ்ச்சி மற்றும் கற்றுக்கொள்ள ஊடகங்களினை நுகருதல் போன்றன ஒருவரை தகவல் நிறைந்த மனிதனாக்கும்(Informative man).தற்போதைய சூழலில் Infortainment என்ற சொல்லாடல் ஊடவியலில் பயன்படுத்தப்படுகின்றது.அதன் விரிவாக்கம் Information -தகவல்,Entertainment -பொழுதுபோக்கு ஆக கொள்ளப்படுகிறது.தினமும் மாறுதலுக்கும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும்உட்பட்டு இருக்கும் இவ் உலகில் நாளாந்த சாதாரணமான நிகழ்வுகளில் இருந்து பன்னாட்டு அரசியல் வரை பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்ள ஊடகங்கள் உதவி கடினமானது என்றால் மிகையில்லை.ஆயினும், அந்த ஊடகங்கள் நம்மை கட்டிபோட்டு அடிமைப்படுத்தாமல் எம்மை தற்காப்பு செய்ய ஊடகங்களினை தெளிவாக விளங்கிக் கொண்டு எமது சுயஉளவியலில் பாதிப்பை உண்டுபண்னாத வகையில் பாதுகாக்க வேண்டியது கட்டாயம்! இ.தனஞ்சயன்.ஊடகத்துறை.
இலங்கை தேசிய தொலைக்காட்சியான ரூபவாகினிகூட்டுத்தாபனத்தின் தமிழ் நிகழ்சிப்பிரிவின் உதவித்தயாரிப்பாளர் இ.தனஞ்சயன் ஆகிய நான் யாழ்பாணப்பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையை முறையாக விரும்பிக்கற்று சிறப்பு கலைமாணிபட்டத்தை பெற்றுள்ளேன்.அத்துடன்,ஆங்கில மற்றும் சிங்கள மொழிகளிலும் புலமை பெற்றுள்ளேன்.சர்வதேச ஆங்கில ஊடகங்களில் வெளிவரும் செய்திகளை தமிழ் மொழிக்கு மொழிபெயர்த்து தட்டச்சு செய்யும் ஆற்றலும் உண்டு.எப்போதும் சந்தோசமாக எதையும் கற்றுக்கொண்டே இருப்பேன்.
புதன், 30 ஆகஸ்ட், 2017
ஜனநாயகத்தினை உறுதிப்படுத்த ஊடகங்கள் உதவாதா?
"ஊடகங்கள் இல்லாத ஜனநாயகம் சிறகில்லாத பறவை போன்றது "மக்கள் மற்றும் அரசாங்கத்திற்குமிடையிலான தொடர்பாளராக/இனைப்பாளராக ஊடகங்களே காணப்படுகிறது. ஊடகங்களால் கூறப்படும் கருத்துக்கள் மிகவும் வலிமைமிக்கவை.அத்துடன்,ஊடகங்கள் தற்போது சமூக கட்டமைப்பு(social structure)மற்றும் கருத்து உருவாக்கம்(opinion forming)போன்றவற்றில் முக்கியமான பங்கு வகிக்கிறது.இவற்றின் முக்கியமான பணிகளாக, தகவல்கள் வழங்குதல், சமூகப் பதட்டத்தை இல்லாமல் செய்தல்,சமூக சீர்திருத்தம், சமூகமயப்படுத்தல்,பண்பாடு விழுமியங்களினை கட்டிக்காத்தல்,மக்களின் உணர்வுகளை புரிந்து படைப்புகளினை படைத்தல்,மக்களின் அதிகாரத்தை சுட்டிக்காட்டுதல்,புதிய ஆக்கபடைப்புக்களை ஊக்குவித்தல்,முரண்பாடுகளை களைதல், பிரச்சனைகளிற்கு தீர்வு முன்வைத்தல் போன்றன முன்மாதிரி ஊடகங்களிற்கு முக்கியமானதாகும்.மக்களின் உரிமைவென்றடுக்க ஊடகங்கள் முக்கியம்.மக்கள் வரிசெலுத்துவதனால் பாராளுமன்றத்திற்கு செல்லும் மக்கள் பிரதிநிதிகளினை தெரிவு செய்யும் உரிமை ஜனநாயகத்தின் ஊடாக உறுதிபடுத்த ஊடகங்களால் பங்களிக்க முடியும்.இதுவே பொறுப்புமிக்க ஊடகவியலாகும்(Responsible journalism).ஜனநாயகத்தினை பெறுமதியுடையதாக்குவதாக ஊடகங்கள் காணப்படுகிறது.உலக அரசியல்,பொருளாதார மற்றும் சமூகவியல் மாற்றம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஊடகங்களே.சாதாரண பாமரனுக்கும் அறிவூட்டக்கூடியதாக வானொலி மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் விளங்குகின்றன .இதனாலேயே, சட்டம், நீதி, நிர்வாகத்தை தொடர்ந்து ஜனநாயகத்தின் நான்காவது கிளை யாக ஊடகங்கள் சமுதாயத்தின் காவல்நாயாக குறிபிடப்படுகின்றது.எனினும்,தற்போது,சர்வதேச ஊடகங்களில் வழிகாட்டும் நாய்களாக ஊடகங்கள் குறிப்பிடப்படுகின்றது.ஐனநாயகம்(Democracy)என்பதை பல்வேறு அறிஞர்கள் பல்வேறு விதமான வரைவிலக்கனங்கள் வகுத்துள்ளார்கள்.ஹென்றி டேவிட் "அரசியல் அதிகாரம் முன் அனைவரும் சமம்" என்கிறார், ஆபிரகாம் லிங்கன் "மக்களால் ,மக்களுடைய,மக்களுக்காக அரசாங்கம்" என வரையறுக்கின்றார்.காள்மாக்ஸ் 'Democracy is the road to Socialism' "சமவுடமைக்கான பாதையாக ஜனநாயகத்தை எடுத்து கொள்கின்றார்" மாறாக புரட்சியாளர் சேகுவாரா "ஜனநாயகம் என்பது முதலாளித்துவ வர்க்கம் மற்றும் சர்வாதிகார ஆட்சியார்கு சாதகமாக இருப்பதாகவும் அதனை நாம் அனுமதிக்க கூடாது" என்கிறார் .தோமஸ்ஜெபர்சன்"" ஜனநாயகத்தின் நாணயமே தகவல்" என்கிறார்.அடிப்படை வரைவிலக்கனமாக மக்களை தலைவர்களாக கொண்டது/முதன்மை படுத்துவதாக ஜனநாயகம் காணப்படுகிறது.ஊடகத்தின் ஜனநாயகக் கோட்பாட்டு கூட ஜனநாயகத்தின் மாண்புகளையே வலியுறுத்துகிறது.சர்வதேச ஊடகங்களினை பொறுத்தவரை ஜனநாயகம் என்று கூறிக் கொண்டிருந்தாலும் முழுமையான ஜனநாயகப் பண்புகளினை பின்பற்ற செய்கிறதா என்பது கேள்விக்குறி?ஆதாரமாக, எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு மேற்கொண்ட ஊடக சுதந்திரத்திற்கான பட்டியல் படுத்தலில் அமெரிக்காவிற்கு 41வது இடமே கிடைத்தது. ஆனால்,உலகத்திற்கு ஜனநாயகம் தொடர்பாக போதிக்கின்றது.இது குறித்து ஆழமாக சிந்திக்க வேண்டிய விடயம் ஆகும்.குறித்த தரப்படுத்தலில் இலங்கைக்கு 141வது இடமே கிடைத்தது. இலங்கையில் தற்போது நல்லாட்சி அரசாங்கம் என்று கூறப்படும் நிலையில் ஊடகளிற்கான சுதந்திரம் என்பது கடந்தகால நிலையை விட முன்னேற்றமே தவிர முழுமையான சுதந்திரத்தை அனுபவிக்க முடியாத நிலையே ஊடகங்கள் மற்றும் ஊடகவியளாருக்கு காணப்படுகிறது. ஊடகத்தினுள் காணப்படும் சுதந்திரமற்ற நிலை மற்றும் ஊடகங்களிற்கு புறச்சூழலால் வழங்கப்படும் சுதந்திரமற்ற நிலை போன்றவற்றை குறிப்பிடலாம். இரண்டாவது சுதந்திரம் தொடர்பாக நாம் அதிகம் அலட்டிக்கொண்டாலும் ஊடகங்களினுள் பணிபுரியும் ஊடகவியளாரின் சுதந்திரம் தொடர்பாக யாரும் சிந்திப்பது இல்லை.ஊடகத்தின் அறம்(Media ethics)தொடர்பாக சவாலுக்கு உட்படுத்தும் இடமாக ஊடகங்களின் அகச்சூழல் காணப்படுகிறது.அதிகரிக்கும் ஊடகங்கள் போட்டிச் சூழலில் ஏனைய ஊடகங்களினை எப்படி வெற்றி கொள்ளலாம் என்றே எல்லா ஊடகங்களும் சிந்திக்கின்றன.இதனால் ஊடகஅறம் கண்டிக்கபடுவதில்லை.தற்போதைய நவீன ஊடகங்கள்(Digital media)குறிப்பாக பிரஜைகள் ஊடகவியலை(Citizens journalism)பின்பற்றும் சமூக ஊடகங்களின் வருகை ஊடக ஒழுங்கு,ஊடகதரநிர்னயம் மற்றும் ஊடகதர்மத்தை சம்பந்தம் இல்லாத ஒன்றாக்கி விட்டது.மனிதனின் அடிப்படை உரிமை மற்றும் சுதந்திரம் என்று அறத்தை பின்பற்ற தவறி விட்டார்கள்.ஊடகசுதந்திரம் என்பது மக்களின் இறைமையை பலப்படுத்தல், அரசியல் அறிவு மற்றும் புரிந்துனர்வு,மக்களின் பொது சன அபிப்பிராயம், சட்ட குறைபாடுகள்,முரன்படாதன்மையை உருவாக்கல்,மனித உரிமைக்கு குரல் கொடுத்தல்,சுதந்திர நீதித்துறையை உறுதிபடுத்தல் போன்ற ஜனநாயகத்தின் பண்புகளை மக்கள் அனுபவிப்பதற்கு வழிவகைகளை செய்ய வேண்டும் மாறாக ஊடகசுதந்திரம் தவறான வழியில் பயன்படுத்தி ஜனநாயகத்தின் நன்மைகளை சேதப்படுத்தக்கூடாது.ஜனநாயகத்தின் வலிமை அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாக மக்கள் தம் அபிப்ராயங்களை தெரியப்படுத்துவதற்கு ஏற்ப ஊடகசுதந்திரத்தை முன்னிலைப் படுத்தல்.இதனாலேயே, Bill Moyers என்ற மெய்யியலாளர் ஜனநாயகம் மற்றும் ஊடகங்களின் பெறுமானம் பிரித்துப்பார்கமுடியாதது என விளங்கிக் கொள்கிறார்.சமாதானம் என்பது ஜனநாயகம் இல்லாமல் வராது என மாமனிதர் நெல்சன் மண்டேலா ஜனநாயகத்தின் பெரும் பெறுமதியை கூறுகிறார்.ஆங் சங் சூகி"ஜனநாயகம் சுதந்திரம் என்பன எமது உயர்ந்த கனவுகள் என்று கூறுகிறார்.கிறிஸ்டோபர் கூறும் போது ஊடகங்களின் சுயாதீனம் ஜனநாயகத்தை உறுதிபடுத்துவதிலே உள்ளது. பேட்டன் ரசல் "முட்டாள்களும் வாக்களிக்கும் தகுதியை ஜனநாயகம் தருவதாக கூறுகிறார் ".பேட்டன் ரசலின் கூற்று ஆழமாக திறனாய்வு செய்யவேண்டியது.இங்கு,அயோக்கியர்கள் ஆட்சி செய்கிறார்கள் என்றால் தெரிவு செய்தவர்கள் முட்டாள்கள் என்ற பகுத்தறிவின் தந்தை பெரியாரின் சிந்தனையும் ஒப்பிடப்படவேண்டியது.ஜனநாயகதை பாதுகாக்க ஊடகங்கள் மக்களினை அரசியலில் பங்கெடுக்கக் செய்து கொள்கை வகுப்பாளர்களுக்கு அறிவூட்டி அரச செயல்பாடுகளில் புறவயத்தன்மையை பேனுவதன் ஊடாக பங்கேற்பு அரசியல் பண்பாட்டை உறுதிப்படுத்தி ஜனநாயக விழுமியங்களினை காப்பாற்றுவதே ஊடகங்களின் தார்மீக கடமை என்பதோடு தொழில் வாண்மை மிக்க ஊடகத்துறையை வளர்த்தெடுக்கவும் முடியும்.ஜனநாயகத்தில் அதிகாரம் என்பது நிலையற்றது.எனினும், ஜனநாயகம் என்பது வெறும் உதட்டளவில் மாத்திரமே அரசியல் மற்றும் ஊடகவியல் இரண்டிலும் காணப்படுகிறமை குறித்து இன்னும் சிந்திக்க வேண்டி இருக்கிறது.Walter chonkite என்ற சிந்தனையாளர் ஊடகசுதந்திரம்(Freedom of the press)என்பதையே ஜனநாயகம் என்று எடுத்து கொள்கின்றார் மற்றும் ஒரு அமெரிக்கமெய்யியலாளரான Andrew vachss "சமூக முன்னேற்றத்திற்கான உந்து விலையே ஊடக ஜனநாயகம்" என்கிறார்.எனினும்,நடுநிலை ஊடகங்கள் இல்லாத வரை ஜனநாயகம் சந்தேகமே! இ.தனஞ்சயன் ஊடகத்துறை.
இலங்கை தேசிய தொலைக்காட்சியான ரூபவாகினிகூட்டுத்தாபனத்தின் தமிழ் நிகழ்சிப்பிரிவின் உதவித்தயாரிப்பாளர் இ.தனஞ்சயன் ஆகிய நான் யாழ்பாணப்பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையை முறையாக விரும்பிக்கற்று சிறப்பு கலைமாணிபட்டத்தை பெற்றுள்ளேன்.அத்துடன்,ஆங்கில மற்றும் சிங்கள மொழிகளிலும் புலமை பெற்றுள்ளேன்.சர்வதேச ஆங்கில ஊடகங்களில் வெளிவரும் செய்திகளை தமிழ் மொழிக்கு மொழிபெயர்த்து தட்டச்சு செய்யும் ஆற்றலும் உண்டு.எப்போதும் சந்தோசமாக எதையும் கற்றுக்கொண்டே இருப்பேன்.
வியாழன், 24 ஆகஸ்ட், 2017
கோட்பாடு சார்ந்த சினிமா ரசனை புதுமையானது!
இலத்திரனியல் ஊடகங்களின் தற்கால எழுச்சி மக்களின் அகங்களை ஊடுருவி மதிமயக்கச் செய்து ஊடக நுகர்வோரினை செயலற்றவர்களாக்குவதே ஆகும். இதற்கான ஆதாரங்கள் ஆக அண்மையில் விஐய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான Big boss மற்றும் விவேகம் திரைப்பட வெளியீட்டுக்காக நம்மவர்கள் செய்த விளம்பரம் மற்றும் மெர்சல் இசை வெளியீடு விழா போன்றவற்றை குறிப்பிடலாம். இத்தகைய ஊடகங்கள் பார்வையாளர்களின் நிலைமையினை நன்கு அறிந்து தமது நிகழ்ச்சியை திட்டமிட்டு தமது வணிக இலக்கை அடைகிறது.தொலைக்காட்சி மற்றும் சினிமா இன்று பாரிய ஊடுருவலை மக்களின் மனதில் ஏற்படுத்தி விட்டது. அந்த வகையில், திரைப்பட ரசனை என்ற எண்னகருவானது யாதெனில் திரைப்படம் ஒன்றை கோட்பாடு ரீதியில் அணுகுதல் என்ற ரசனை முன்மாதிரியானது.திரைப்படத்தை பார்த்தல்,திரைப்படத்தை விளங்கிகொள்ளுதல்,கலை,பண்பாடு, பயனுள்ள பொழுதுபோக்கு மற்றும் பிரச்சாரமாக திரைப்படம் காணப்படுகின்றது.சினிமாவை ரசிக்கும் போது,சினிமா மொழியான frame,shot,scene,transition, sequence and camera movement & angles,sound போன்றவற்றை கூர்ந்து அவதானிக்க வேண்டும்.அத்துடன் கோட்பாட்டு ரீதியான திரைப்பட விமர்சனம் மற்றும் திறனாய்வு புதிய திரைப்பட அனுபவம் மற்றும் ரசனையை ஏற்படுத்தும்.பெரும்பாலான நம்மில் பலர் பொழுதுபோக்கு மற்றும் மன ஆறுதல் நோக்கி திரைப்படம் மற்றும் ஏனைய ஊடகங்களினை அனுகுவதால் ஊடகங்களின் கட்டுப்பாட்டில் இயங்கவேண்டிய துரதிர்ஷ்டமான சூழ்நிலை.சினிமாவின் ஆதிக்கம் இன்று அனைத்து ஊடகங்களினையும் ஆக்கிரமித்துவிட்டது. இது தற்போதைய நிலையில் தவிர்க்க முடியாத. வாழ்க்கையில் ஒன்றோடொன்று கலந்துவிட்டது.பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையம் என எங்கும் சினிமாவின் செல்வாக்கு தான்.இதில் அரசியலில் வேறு.சினிமாவினை பார்க்க வேண்டாம். ரசிக்க வேண்டாம். என்று கூறுவது பொது அறிவுக்கு விரோதமானது. ஒரு சினிமாவினை எவ்வாறு பார்க்க வேண்டும் என்பதே சாதகமான முற்போக்கான சிந்தனை. கோட்பாட்டு ரீதியான ரசனை,தொழில் நுட்பம் சார்ந்த ரசனை, படைபாளிகள் சார்ந்த ரசனை, குறியீடு சார்ந்த ரசனை என வேறுபடும். ரசனை என்பது வயது,இனம், பால்,பண்பாடு, அறிவு, மனப்பான்மை, அனுபவம் மற்றும் தனிநபர் வேற்றுமை என்ற தன்மையில் வேறுபடும்.சினிமாவின் மூலமாக பல்வேறு நல்ல நேர்த்தியான விஷயங்கள் கூறபட்டாலும்,அதனை உய்தறியும் தன்மை கோட்பாட்டு ரீதியான அணுகுமுறை ஊடகவே சாத்தியமாகும்.அந்த வகையில் சினிமாவிற்கான கற்கை நெறியில் பல கோட்பாடுகள் காணபட்டாலும் முக்கிய மான கோட்பாடாக படைப்பாளி கோட்பாடு(Auteur theory)காணப்படுகிறது.படைப்பாளி கோட்பாடு என்பது இயக்குனரின் சுயாதீன சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்ட கோட்பாடு ஆகும். இயக்குனர் பார்வையாளனின் கலாரசனையே முன்வைத்து படைப்பை உருவாக்குகின்றார்.Andrew Brazin என்பவர் படைப்பாளி என்பவர் தனது சிந்தனை படைப்பினை தனது அகச்சூழலிற்கு ஏற்ப உருவாக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது.படைப்பாளிகளின் தன்மையை பொறுத்து சினிமாவின் நாயகத்தன்மை வேறுபட்ட தன்மையினை கொண்டு இருப்பதை காணலாம். பாரதிராஜா, பாலச்சந்தர், முத்துராமன், ஏ.பி.நாகராஜன், மணிரத்னம், மணிவண்ணன், ரவிக்குமார்,பாலா,அமீர், முருகதாஸ், ஷங்கர் போன்றோரின் திரைபடங்கள் ஒன்றோடொன்று ஒப்பிட முடியாது.மாறாக ஒப்பிடும் போது அது ஒப்புவமை போலியாவே அமையும்.சமூகத்தில் உடனடியாக தாக்கத்தை உண்டு பண்னும் ஊடகமாக சினிமாவே காணப்படுகிறது. சினிமாவில் பேசும் வசனம், உடலுக்கும் ஆடைகள், புதிய செல்நெறிகள் என்பன மிக இலகுவாக சமூகத்துடன் ஒட்டி கொள்கின்றது இதனை ஊடக கோட்பாடான அறுவடை கோட்பாட்டுடன் ஒப்பிட்டு சிந்திக்க முடியும். இதேவேளை,சினிமா நாயகர்கள் சினிமாப் பார்வையாளர்களால் ஆதாரிக்கப்படுவது எமது யாழ்ப்பாண தமிழ்ச்சமூகத்தில் ஏற்க இயலாத ஒன்று.யாழ்ப்பாண திரைப்பட ரசனை என்பது தியாகராஜ பாகவதரின் காலம் தொட்டு தற் காலம் வரை உள்ளது.வரலாற்று அடிப்படையில் அணுகும் போது,சில பிற்போக்கான ரசனை ஆரம்பம் முதலே இருந்து வந்தது.சினிமா....சினிமா. ..என்று தமது வளமான எதிர்காலத்தை மண்னாக்கியவர்களும் உள்ளார்கள். ஆரம்ப கால கொட்டகை சினிமாக்கள் திரையரங்குகளிற்கு முன்னேறிய போது ரசனை மற்றும் வணிக லாபமும் அதிகரித்தது.உலகமயமாக்கல் சூழலில் உலகம் மாயமாகிக் கொண்டே இருக்கும். ஆரம்ப சூழல் தற்போது காணப்படமாட்டாது.இதுவே யதார்த்தம்! தற்காலத்தில் திரையரங்குகள் வெகுஜன கதாநாயகர்களின் திரை படங்களையே திரையிடுகின்றன.இதனால் இளைஞர் வட்டமும் அவற்றுக்குகே முண்டியடிக்கின்றனர்.இலங்கையை பொறுத்தவரை, சிங்கள சினிமா நல்ல தரமான இடத்தை அடைந்துள்ளது. ஆயினும், தமிழ் சினிமாவிற்கான அடையாளமாக தென்னிந்திய சினிமாவே காணப்படுகிற அதேவேளையில் தற்போதைய எமது கலைஞர்களின் தியாகம் நிறைந்த முயற்சிகள் புறக்கணிக்கபடுகின்றது.இதற்கு முக்கிய காரணமாக காணப்படுவது வணிக லாபம் அற்ற தன்மையே ஆகும். Industry இல்லாத நிலையில் நிறைந்த போராட்டத்தை சந்தித்தே வெற்றி பெற முடியும்.சகோதர மொழியில் 1000 ற்கு மேல் திரைப்படங்கள் வெளியான நிலையில் ஈழத் தமிழர் தென்னிந்தியாவில் சார்ந்து இருப்பது பொருளாதார, சமூக மற்றும் அரசியல் ரீதியாகவும் பலமற்ற தன்மையையே ஏற்படுத்தும்.இ.தனஞ்சயன்.
இலங்கை தேசிய தொலைக்காட்சியான ரூபவாகினிகூட்டுத்தாபனத்தின் தமிழ் நிகழ்சிப்பிரிவின் உதவித்தயாரிப்பாளர் இ.தனஞ்சயன் ஆகிய நான் யாழ்பாணப்பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையை முறையாக விரும்பிக்கற்று சிறப்பு கலைமாணிபட்டத்தை பெற்றுள்ளேன்.அத்துடன்,ஆங்கில மற்றும் சிங்கள மொழிகளிலும் புலமை பெற்றுள்ளேன்.சர்வதேச ஆங்கில ஊடகங்களில் வெளிவரும் செய்திகளை தமிழ் மொழிக்கு மொழிபெயர்த்து தட்டச்சு செய்யும் ஆற்றலும் உண்டு.எப்போதும் சந்தோசமாக எதையும் கற்றுக்கொண்டே இருப்பேன்.