அறிவைநாடல்

அறிவைநாடல்
அறிதலார்வம்

புதன், 1 ஜூலை, 2020

மத்திய கிழக்கு சமாதான திட்டம்; ஒரு சொல்லாடல் நாடகம்!


   மற்றுமொரு ஒரு புதிய வலைப்பூ பதிவில் சந்திப்பதையிட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். சர்வதேச அரசியலை புரிந்து கொள்ள வேண்டுமாயின் இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலின் உடைய எல்லை பிரச்சினைகளை புரிந்து கொள்வது கட்டாயமானது அந்த வகையில் இஸ்ரேலின் உடைய தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் எவ்வாறு காணப்படுகின்றன என்பது தொடர்பாக சிந்திப்பதாக குறித்த வலைப்பூபதிவு அமையப் போகின்றது.

  இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைப்பகுதியினை இஸ்ரேலுடன் சட்ட பூர்வமாக இணைப்பது  தொடர்பான திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அனுசரணையுடன் "மத்திய கிழக்கிற்கான சமாதானத் திட்டம்" என்ற பெயரில் கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டார்.

வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் மற்றும் இஸ்ரேல்  நிர்வாக குழுக்களுக்கிடையே கலந்துரையாடப்பட்டது போன்று மத்திய கிழக்கு சமாதான திட்ட இறுதி அறிக்கையில் குறித்த திட்டமானது முன்மொழிய படவில்லை குறித்த அறிக்கையில் சில பொருள் மயக்கம்  காணப்படுகின்றன.  இஸ்ரேல் பிரதமர் குறித்த ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியை நிபந்தனையுடன் மட்டுப்படுத்தப்பட்ட இறைமையுள்ள  பகுதி என்று அழைத்ததுடன் குறித்த அந்தப் பகுதியை சுயாதீனமான அற்புத தேசம் என்று அமெரிக்க அதிபர்  அழைக்கின்றார்.

பாலஸ்தீனர்களின் தலைநகரமாக கிழக்கு ஜெருசலேத்தை அறிவிக்கும் போது  அமெரிக்க அதிபர் ரொனால்ட் ட்ரம்ப் Eastern Jerusalem என்று அழைக்கிறார். பாலஸ்தீன தலைவர்கள் கிழக்கு ஜெருசலத்தை தலைநகராக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இவ்வளவு நாட்களாக போராடி வந்தனர்.  கிழ‌க்கு ஜெருசலமானது கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், மற்றும் யூதர்களின் வழிபாட்டுத் தலமாக விளங்குகின்றது. டொனால்ட் ட்ரம்பினால் அறிவிக்கப்பட்ட பகுதியானது ஜெருசலத்திற்கு அப்பாற்பட்ட ஒரு பிராந்தியமாகும். ட்ரம்ப் அறிவித்துள்ள பகுதி  Abu dis என்று இஸ்ரேல் பிரதமர் தெரிவிக்கின்றார். குறித்த பகுதி மேற்கு கரையின் கிழக்கு பகுதியாகும்.இது பாலஸ்தீனர்களினை ஏமாற்றுவதாக அமைந்துள்ளது.

இஸ்ரேல்  ஜெருசலத்தை  தனது தலைநகராக கருதிக் கொள்கின்றது.  ஜோர்தான் பள்ளத்தாக்கில் உள்ள இஸ்ரேல் இராணுவத்தினரினை பின்வாங்க செய்வதற்கு பல அழுத்தங்கள் தம்மீது மேற்கொள்ளப்படுவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அண்மையில்  தெரிவித்திருந்தார்.

மேற்கு கரையில் இஸ்ரேலின்  குடியேற்றங்களை நிலைநிறுத்துவதற்குரிய  நாடகமாகவே குறித்த சம்பவங்கள்  பார்க்கப்படுகின்றது. சர்வதேச சமூகமானது இஸ்ரேல் பிரதமர் மேற்கொள்ளும்  சட்டவிரோத குடியேற்றங்கள் தொடர்பாக பல விமர்சனங்களை முன்வைத்து வருகின்ற சூழ்நிலையில் அமெரிக்க ஆதரவுடன்,  புதிய சொல்லாடல்கள் மூலமாக  இஸ்ரேல்  பிரதமர் தன்னுடைய சட்டவிரோத நடவடிக்கைகளை தன்னுடைய அரசியல் ஆதாயத்திற்காக  நியாயப்படுத்தி வருகின்றார்.

இந்நிலையில், மத்திய கிழக்கிற்கான டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு திட்டம் ஒரு சொல்லாடல் நாடகமே ஆகும்.

இ.தனஞ்சயன்

வெள்ளி, 8 மே, 2020

கொரோனாத் தேர்தல் தந்திர சூத்திரம் வகுக்கப்படுமா?

       
        உலகலாவிய ரீதியாக அச்சுறுத்தல் விளைவிக்கும்  கொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கி உலக நாடுகள் வல்லரசு நாடான அமெரிக்கா உட்பட திணறி வருகின்றன. இந்த  வைரசை ஒழிக்க இதுவரை பூரணமாக  தடுக்கக்கூடிய  மருந்துகள் எதுவும் கண்டுப்பிடிக்கப்படவில்லை.

எனினும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமால் நாடு முழுவதும் முடக்க நிலையில்  இருப்பது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் மூலம் கொரோனா பரவலை தடுக்க முடியும் என்ற நிலை உள்ளது. எனவேதான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பாலான நாடுகள் தங்கள் நாட்டில் தேசிய அளவில் ஊரடங்கை நடைமுறை படுத்தி வீடுகளுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தி வருகின்றன. நியூசிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, பாகிஸ்தான் போன்ற நாடுகள் முடக்க நிலையில் சில தளர்வுகளை ஏற்படுத்தி உள்ளன.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஒலிம்பிக் போட்டி உட்பட உலகின் பல முக்கிய நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐரோப்பிய நாடான போலந்தில் நடைபெற இருந்த அதிபர் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு இருக்கிறது. போலந்தில் தற்போது வரை 15,365 ற்கும்  மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 760 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.


      எனினும் அதிபர் ஆண்ட்ரேஜ் துடா தலைமையிலான அரசு வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதனிடையே கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் போலந்தில் வருகிற 10ம் திகதி அதிபர் தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த தேர்தலில் அதிபர் ஆண்ட்ரேஜ் துடா மீண்டும் போட்டியிடுகிறார். அவருக்கு மக்களிடம் பெரும் ஆதரவு இருப்பதால் மீண்டும் அவர் அதிபராக ஆகுவதற்கு வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில், கொரோனாவால் ஏற்பட்டுள்ள சுகாதார நெருக்கடிக்கு மத்தியில் தேர்தலை நடத்துவது பொருத்தமாக இருக்காது என்றும், எனவே தேர்தலை தள்ளிவைக்க வேண்டுமெனவும் கோரிக்கைகள் எழுந்தன.

அதுமட்டும் இன்றி ஊரடங்கால் வேட்பாளர்கள் பிரசாரத்தை நிறுத்தியுள்ளதால் வாக்குப்பதிவு வெளிப்படையாகவும், நியாயமானதாகவும் இருக்காது என்றும் சர்வதேச அரசியல் விவகார  நோக்கர்கள் கவலை தெரிவித்தனர். ஆனால் ஆளும் தேசியவாத சட்டம் மற்றும் நீதி கட்சி, தேர்தலை நடத்தி ஆண்ட்ரேஜ் துடாவை மீண்டும் அதிபராக்குவதில் மும்முரம் காட்டியது.

அதே சமயம் சுகாதார நெருக்கடியை பயன்படுத்தி ஆளும் கட்சி அரசியல் ஆதாயம் தேட வாய்ப்பு இருப்பதாகவும், எனவே தேர்தலை ஒத்திவைக்கவேண்டுமெனவும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில் பல்வேறு தரப்பில் இருந்தும் வந்த அழுத்தத்தை தொடர்ந்து, அதிபர் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அந்த நாட்டு தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. எனினும் எப்போது தேர்தல் நடத்தப்படும் என்பதை தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை. கூடிய விரைவில் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் என்றும், தபால் மூலம் மட்டும் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கொரோனா பீதிக்கு மத்தியில் கடந்த மாதம் தென்கொரியா மற்றும் மேற்கு ஆபிரிக்க நாடான மாலி ஆகிய  நாடுகளில்  தேர்தல்கள் வெற்றிகரமாக நடாத்தி முடிக்கப்பட்டுள்ளமை கவனிக்கதக்கது. இதேவேளை, இஸ்ரேலில் 4 வது முறையாக தேர்தலுக்கு செல்லாமல் மக்கள் எதிர்பை மீறியும்  கூட்டரசாங்கம் சுழற்சி முறை பிரதமர் முறைமையின் அடிப்படையில்  (Rotative Prime minister ) அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கையில் இம் மாதம் முடக்க நிலை எதிர்வரும் 11 ம் திகதியுடன் முடிவுக்கு வரும் என்கிற தகவல்கள் ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகின்ற இந்த சூழலில் அடுத்த மாதம் 20 ம் திகதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தருணத்தில், இலங்கை போலாந்தின் வழியை பின்பற்றுமா? தென்கொரியா அனுபவத்தை பயன்படுத்துமா? புதிய தந்திர சூத்திரம் வகுக்கப்படுமா?  என்பதை சில கால பொறுமையின் பின்னரேஅறிந்து கொள்ள முடியும். அன்மைய நாட்களின் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானாவர்களின் எண்ணிக்கை தலைநகரில்  அதிகரித்தமை  தேர்தலை பிற்போடுவதற்கு ஒரு காரணியாக அமையலாம்.







ஞாயிறு, 3 மே, 2020

ஊடக சுதந்திரம், மக்களிற்கு உரியதே அன்றி ஊடக நிறுவனங்களுக்கு சொந்தமானதல்ல!


    உலக பத்திரிகை சுதந்திர நாள் (World Press Freedom Day) என்பது பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் மனித உரிமைகள் சாசனம் பகுதி 19 இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் சபையினால்  சிறப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

1993 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஒவ்வோர் ஆண்டும் மே 3 ஆம் நாளன்று பத்திரிகை சுதந்திர நாளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆப்பிரிக்கப் பத்திரிகைகளால் கூட்டாக 1991 ஆம் ஆண்டு இந்நாளிலேயே "பத்திரிகை சுதந்திர சாசனம்" (Declaration of Windhoek) முன்வைக்கப்பட்டது.

இது 1991 ஆம் ஆண்டு யுனெஸ்கோ (UNESCO) அமைப்பினால் நடத்தப்பட்ட பொதுக் கூட்டத்தின் 26 ஆம் அமர்வில் சிபாரிசு செய்யப்பட்ட ,'உலகின் சகல பிராந்தியங்களிற்குமான பேச்சு மற்றும் கருத்து வெளியீட்டுச் சுதந்திரத்திற்கானதும், ஊடகச் சுதந்திரத்தினதும் பாதுகாப்பிற்கும் மேம்படுத்தலிற்குமான ஆணை' என்ற தொனிப் பொருளில் பரிந்துரைக்கப்பட்ட கட்டளையின் நிமித்தமாக உருவானது.

    அந்த வகையில், 2020 ம் ஆண்டிற்கான தொனிப்பொருளாக "Journalism without fear and favour " அதாவது, 'பயமற்ற மற்றும் பக்கச்சார்பற்ற இதழியல்' அமைந்துள்ளது. சுயாதீனமான ஊடகத் துறையினை பாதுகாப்பதன் வாயிலாகவே நாட்டின் ஜனநாயக பண்புகள் சிறந்த முறையில் இயங்குவதை உறுதி செய்ய முடியும்.

உலக பத்திரிகை சுதந்திரம் என்பது நம்பத்தகுந்த, பெறுமதி மிக்க, தகவல்களினை மக்களிற்கு வழங்குவதற்காக அனைவரும் ஒன்றுபட்டு குரல் கொடுக்கும் தினமாக அமைந்துள்ளது. இன்று உலகலாவிய ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் பரவல் காலப் பகுதியிலும் ஊடகவியலாளர்கள் மனம்தளராது தமது சுய தேவைகளை ஒறுத்தும் மக்களிற்கு சரியான தகவல்களை கொண்டு சேர்க்க பாடுபடுகின்றனர்.

       கொரோனா துன்பியல் காலப்பகுதியில் ஊடக பணியாளர்கள் சுயாதீனமாகவும், நடுநிலைமயானதாகவும், ஆதார பூர்வமானதாகவும் இருக்க வேண்டும். ஊக அடிப்படையில் செய்திகளை வெளியிட்டு மக்களினை திசை திருப்ப கூடாது. சுதந்திரமான ஊடகங்களானது இக் காலகட்டத்தில் அவசியமாகும். சுதந்திரமான ஊடகமானது மக்களிற்கு உரிய காலத்தில் பொருத்தமான தகவல்களினை வழங்கி அறிவூட்டுவதாக அமைய வேண்டும். இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக, போலியான செய்திகள் வெளியிட்டமை தொடர்பாக  300 ற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பத்திரிகை சுதந்திரம் தொடர்பாக , கருத்து தெரிவித்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்ரோனியோ குத்தரஸ் " சுதந்திரம், துல்லியம், தெளிவு மற்றும் ஊர்ஜிதப்படுத்தப்பட்ட தகவல்களை வழங்குவதன் மூலம் தவறான தகவல்களை பரப்பும் கலாச்சாரத்தை இல்லாதொழிக்க முடியும். ஊடக அறங்களிற்கு முரணாக செயற்படும் தன்மை இல்லாமல் செய்வதற்கு அரசாங்கங்கள், ஊடகங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆதரவினை எதிர்பார்பதாக குறிப்பிட்டார். அத்துடன், கொவிட் 19 பரவல் காலத்தில் ஊடகவியலாளர்கள் சுயாதீனத் தன்மையுடன் செயற்பட வேண்டும் என்று கூறினார். தற்போது உலகலாவிய ரீதியாக 250 ஊடகவியலாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்அடைக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என ஐ.நா சபையின் பொதுச்செயலாளர் அன்ரோனியோ குத்தரஸ் கேட்டுக் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

இந்நிலையில், எல்லையற்ற   ஊடகவியலாளர்கள் அமைப்பினால் 180 நாடுகள் மத்தியில் ஊடகங்களிற்கு அளிக்கப்படுகின்ற சுதந்திரம் தொடர்பான சுட்டெண்பட்டியலில் வடகொரியா இறுதி இடத்தை பிடித்துள்ளது. சீனா 177 வது இடத்தையும், ஈராக் 162 வது இடத்தில் உள்ளன. தென் ஆசிய நாடுகளில் இலங்கை 127 வது இடத்தையும், இந்தியா 142 வது இடத்தையும் பங்களா தேஸ் 151 வது இடத்தையும் பிடித்துள்ளன. நோர்வே, பின்லாந்து, டென்மார்க் முறையே முதலாம் ,இரண்டாம், மூன்றாவது இடத்தை பிடித்துள்ளன.

சுதந்திரமான ஊடகமானது சரியானதாகவும் தவறானதாகவும் அமையலாம் மாறாக சுதந்திரமற்ற ஊடகம் தவறானதாகவே அமைய முடியும்.  எனவே, வழங்கப்படும் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தாமல் சரியான ஊர்ஜிதப்படுத்தப்பட்ட தகவல்களை வழங்குவதே ஊடகங்களின் தலையாய பொறுப்பாகும். ஊடக சுதந்திரம் என்பது மக்களிற்கு உரியதே அன்றி ஊடக நிறுவனங்களுக்கு சொந்த மானதல்ல.

இ.தனஞ்சயன்




ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

உளநலம் என்பதே மிகப்பெரிய சொத்து!

உலக சுகாதார சம்மேளனத்தினால் உலக மனநல தினம் ஒக்ரோபர் மாதம்10 ம் திகதி கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த உலக மனநல தினத்தை கொண்டாடுவதன் நோக்கமாக"உளநலம் தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தல்" கொள்ளப்படுகின்றது.1992 முதல் இந்த உலக மனநல தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. 
         எமது நாட்டை பொறுத்தவரை பாரிய யுத்தமொன்றை எதிர்கொண்ட காரணத்தால், போரின் தாக்கத்தில் இருந்து மனரீதியாக விடுபட வேண்டிய பாரிய பொறுப்பு உள்ளது. இன்றைய காலகட்டத்தில் உடல்சுகாதாரத்திற்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்கும் நாம் எந்த அளவிற்கு மனநலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றோம் என்பது கேள்விக்குறியே. பணத்தை முதன்மை படுத்தி இயந்திரதனமான வாழ்க்கை வாழ்வதால் மனரீதியான போதிய உறுதியற்ற தன்மை காணப்படுகின்றது. மனம் உடைந்த நிலையில், உடல்ரீதியாக பலவிதமான உபாதைகள் ஏற்படுவதற்கும் மனநல சுகாதாரமே முக்கியமான காரணமாக விளங்குகிறது.
        எமது நாட்டின் உளநல ஆரோக்கிய அலகின் பணிப்பாளர் வைத்தியர் சித்திரமெளலி டிசில்வா குறிப்பிடும் போது " 20 வீதமான இளம் சந்ததியினர் உளநலம் சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். எமது குழந்தைகள் மனப்பதட்டம் (Depression )காணப்படுகிறது. 19 வீதமான சிறுவர்கள் தனிமையில் உள நல பாதிப்புகளிற்கு உள்ளாகியுள்ளார்கள். 25 வயதை அடையும் வரை ஒரு மனிதனுடைய மூளை விருத்தியடைகின்றது. இலத்திரனியல் ஊடகங்களின் அதிகரித்த பாவனை,ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைமை மற்றும் கல்வித் திட்டம் போன்றன மாற்றியமைக்க வேண்டும். 
       மேலும், சிறுவர்கள் பசியின்மை, தூக்கமின்மை, தலைவலி,ஆர்வமின்மை போண்றவற்றால் அவதிப்பட்டால் உளநல வைத்தியர்களின் ஆலோசனைகளை பெற்றோர்கள் பெற்றுக்கொள்வது அவசியம். உலகில் உள்ள 180 ற்கு மேற்பட்ட நாடுகளில் உலக மனநல தினம் கொண்டாடப்படுகின்றது. இது பொதுவிடுமுறையாக கொள்ளப்படுவதில்லை. இந்த ஆண்டின் உலக மனநல தினத்தின் தொணிப்பொருளாக "மாறும் உலகில் மனநலம் மற்றும் இளைஞர்கள்"(Young people and mental health in a changing world ) கொள்ளப்படுகின்றது. எமது உளநலனை நன்றாக மேம்படுத்தி கொள்வதற்கு தியானம், உடற்பயிற்சி, இறைநம்பிக்கை, மனதில் புத்துணர்ச்சி கிடைக்கும் சிந்தனை,படைப்பாக்க முயற்சிகள் , பயனுள்ள பொழுது போக்கு, வாசிப்பு,நல்ல நண்பர்களுடன் உரையாடல் மற்றும் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடல் போன்றன மனதை எப்போதும் மனதை ஆரோக்கியமாக பேணுவதற்கு உதவி செய்யும். 
       மேலும், இன்றைய உலக உளநல ஆரோக்கிய நாளில் உளநலம் மற்றும் உளவியல் கல்வி தொடர்பாக மேலைநாடுகளில் தெளிவான பார்வை உள்ளபோதும் நமது நாட்டில் எதிர்மறையான சிந்தனையே அதிகமாக காணப்படுகிறன. நமது சமூகம் உளநலம் மற்றும் உளவியல் கல்வி தொடர்பாக சிந்திக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

ஆக்கம்; இ.தனஞ்சயன்.

சனி, 18 ஏப்ரல், 2020

கானல் நீராகிப்போகும் ஊரடங்கு கால வரையறை!


     நீண்ட கால இடைவெளியின் பின்னர் மற்றுமொரு வலைப்பூ பதிவில் சந்திப்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். இன்று உலகலாவிய பேசு பொருளான கொவிட் 19  எனப்படும் கொரோனாத் தொற்று அரசியல் பொருளாதாரத்தை எவ்வாறு பாதித்துள்ளது என்பது தொடர்பாக சிந்திப்பதாகேவ குறித்த பதிவு அமையவுள்ளது.

உலகில் உள்ள 200 ற்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனாத் தாக்கமானது காணப்படுகின்றது. வடகொரியாவில்  கொரோனாத் தொற்று தொடர்பாக எந்த செய்திகளும் வரவில்லையாயினும் அண்மையில் வடகொரியாவின் தேசபிதாவான கிம் இல் சுங்கின் ஜணன தினம் அமைதியான முறையிலும் வட கொரியா மக்கள் முக கவசத்தை அணிந்து குறித்த விழாவில் கலந்து கொண்டமை கொரோனாத் தொற்று பாதிப்பு அங்கு இருக்கலாம் என்ற கருதுகோளினை தோற்றுவித்துள்ளது.

வடகொரியாவின் எல்லை நாடான தென் கொரியா கொரோனா வைரஸ்  அச்சுறுத்தல் மத்தியில் தேர்தலினை நடத்தியுள்ளது. குறித்த தேர்தலில் ஆளும் கட்சியே வெற்றி பெற்றுள்ளது. இந்த அனுபவத்தை இலங்கை பொது தேர்தல் நடாத்த இக் காலகட்டத்தில் பிரயோகிக்கலாம். எனினும், மக்கள் தென் கொரியா மக்களின் மனநிலையை ஒத்தவர்களா என்பது சந்தேகமே.

சீனாவில் ஆரம்பித்த கொரோனா பிரச்சினை இன்று அமெரிக்காவை நிலை தடுமாற வைத்துள்ளது. இந்த சூழல் நவம்பர் மாதம் நடைபெற உள்ள அமெரிக்க ஐனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சிக்கு சாதகமாக அமைய போகின்றது. டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கான சாத்தியம் மிகக்  குறைவாகும்.

எமது அண்டை நாடான இந்தியா, பாகிஸ்தான் தமது ஊரடங்கு கால எல்லையை நீடித்துள்ளன. இந்த நிலையில், சில  நாட்களுக்கு முன்னதாக மும்பையிலுள்ள வேற்று மாநில தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டமொன்றினை நடாத்தி தம்மை சொந்த மாநிலத்திற்கு அனுப்புமாறு கோரினர். பி்ன்னர், பொதுச் சொத்துகளிற்கு சேதம் விளைவித்து பொலிஸாருடன் முரண்பட்ட நிலையில், 70 ற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி கோரியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திடம் 100 ற்கும் மேற்பட்ட நாடுகள் உதவி கோரியுள்ளதாகவும் அதன் முகாமைத்துவ இயக்குனர் கிறிஸ்டாலினா ஜெயோர்ஜிவா கூறியுள்ளார். ஜி 20 நாடுகளினை குறைந்த வருமானம் பெறும் நாடுகளி ற்கு உதவமுன்வருமாறு கேட்டு கொண்டார். சர்வதேச நாணய நிதியத்திடம் 1 ரில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்கும் இயலுமையினை கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். அதேசமயம், சர்வதேச நாணய நிதியத்தின் பொருளியலாலளர் கீதா கோபிநாத் தெரிவிக்கும் போது உலக அளவில் மொத்த தேசிய உற்பத்தி 3% சரிவடைந்துள்ளது. 2009 இல் ஏற்பட்ட பொருளாதார சரிவினை விட இதன் பாதிப்பு அதிகமாகும். கொரோனா வைரஸ் பரவல் பிரச்சினையானது இவ் வருட இறுதியில் முடிவடையுமானால் 2021 ல் பகுதியளவாவது பொருளாதார மீட்சியினை பெறமுடியும்.

இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்ரோனியோ குத்தரஸ் ஆயுதங்களை அமைதியாக்கி எல்லா நாடுகளும் ஒன்றாக இணைந்து கொரோனா வைரஸினை இல்லாது ஒழிக்க போராட முன்வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். சவூதி அரேபியா, ஜெமன், சிரியா மற்றும் பல நாடுகள் சாதகமான சமிக்ஞைகளை வெளிப்படுத்தியுள்ளன. அத்துடன், உலக தலைவர்கள் குழந்தைகளின் கல்வி, சுகாதாரம், உணவு மற்றும் பாதுகாப்பு தொடர்பில் மிகுந்த கரிசனையெடுக்க வேண்டுமென்று கூறினார்.

இதேவேளை, கிறிஸ்தவர்களின் உயிர்த்தெழுந்த ஞாயிறு, யூதர்களின் pass over என்று அழைக்கப்படும் விடுமுறை கொண்டாட்ட நிகழ்வு மற்றும் தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்கள் களையிழந்து வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதார துறைசார் ஊழியர்களின் தியாகங்களை போற்றும் நாளாக மாறியது. அடுத்த மாதமளவில் இஸ்லாமியர்கள் புனித மாதமான ரம்லானினை சந்திக்கவுள்ளனர்.

இஸ்ரேலில் இன்னமும் நிலையான அரசாங்கம் இல்லாத நிலையில் நான்காவது முறையாகவும் பொதுத் தேர்தலினை சந்திக்க தயாராகிறது. இந்த நிலையில், பாலஸ்தீனம் இஸ்ரேலில் உள்ள பாலஸ்தீன கைதிகளை விடுவிக்குமாறு கோரியுள்ளது. ஆபிரிக்காவில் கென்யா மற்றும் தென்னாபிரிக்காவில் முடக்க நிலை காரணமாக உணவு பெறுவதில் வன்முறை ஏற்பட்டு இருந்தது. தென் அமெரிக்க நாடான பிரேசிலில் சுகாதார அமைச்சர் கொரோனா வைரஸினை கையாள்வது தொடர்பில் திருப்தி இன்மையால் மாற்றப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் அதிபர் உலக சுகாதார ஸ்தானத்திற்கு வழங்கும் நிதியை நிறுத்தியுள்ளதுடன் சீனாவிற்கு சார்பாக உலக சுகாதார ஸ்தான இயக்குநர் செயற்படுவதாக குற்றச்சாட்டினை முன்வைத்தார். உலக சுகாதார ஸ்தாபனம் கொரோனா வைரஸினை அணுகிய முறை தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் காணப்படுகின்ற அதேவேளை ஸ்தாபன இயக்குநரினை பதவி விலக கோரியும் கருத்துக்கள் வலுப்பெறுகின்றன. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவ உலக வங்கி 12 பில்லியன் அமெரிக்க டொலரினை ஒதுக்கியுள்ளதாக உலக வங்கியின் தலைவர் டேவிட் மால் பாஸ் தெரிவித்தார்.

ஐரோப்பிய நாடுகளில் இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் கொரோனாத் தாக்கம் அதிகமாகும். இந்த சமயத்தில் ஒரு மாத காலமாக முடக்கநிலை காணப்படுவதால் பொருளாதார சரிவினை சந்தித்துள்ளதுடன் மொத்த தேசிய உற்பத்தி 0.4 வீதம் குறைவடைந்துள்ளது.  கொரோனாத் தொற்றாளர்கள் 244 இனை கடந்த நிலையில் எப்போது ஊரடங்கு முழுமையாக  தளர்தப்பட்டு வழமையான வாழ்விற்கு திரும்பலாம் என்பதே மக்களின் தற்போதைய அபிலாஷையாகவுள்ளது. எனினும், ஊரடங்கு கால வரையறை கானல் நீரீற்கு ஒப்பிடுவதாகேவ அமைந்துள்ளது. எது எப்படியோ, கொரோனா கட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து கொரோனாவினை அரசியலாக்கி பொருளாதார சுமையை மக்களே எதிர் கொள்ள வேண்டியேற்படும் என்பதே தற்போதைய உலக நிலைமை ஊடக புரிந்து கொள்ள முடிகிறது.

இ.தனஞ்சயன்









செவ்வாய், 22 அக்டோபர், 2019

பத்திரிகை சுதந்திரம், ஜனநாயகத்திற்கு முக்கியமானது, ஆனால் சட்டத்திற்குட்பட்டது!


போர்க்குற்றங்கள், அவுஸ்ரேலிய குடிமக்களை உளவு பார்த்த அரசு நிறுவனம் என இரு கட்டுரைகள் அவுஸ்ரேலிய பத்திரிக்கைகளில்  சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இதையடுத்து, அவுஸ்ரேலியாவின் முக்கிய பத்திரிக்கை நிறுவனமான அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (ஏபிசி ) மற்றும் நியூஸ்  கார்ப் அவுஸ்திரேலியா நிறுவனத்தின் பத்திரிகையாளர் வீடு ஆகிய இடங்களில் கடந்த ஜூன் மாதம் பொலிசார் சோதனை நடத்தினர்.

அரசின் இரு முக்கிய விவகாரங்களை வெளியிட்டதால் இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக பத்திரிக்கை நிறுவனங்கள் குற்றம்  சாட்டின. பத்திரிக்கைகளுக்கு அரசு ஆதரவு அளிக்கிறது, ஆனால் சட்டம் அனைவருக்கும் ஒன்றே என அவுஸ்ரேலிய அரசு தெரிவித்தது.

இந்நிலையில், அவுஸ்ரேலியாவில் பத்திரிக்கை சுதந்திரம் ஒடுக்கப்படுவதாகவும், ‘இரகசிய கலாச்சாரம்’ " The culture of secreacy " உருவாகி வருவதாகவும், மூன்று ஊடகவியலாளர்கள் மீது பொய்யான  குற்றச்சாட்டு முன்வைத்ததற்கு எதிராகவும், அமெரிக்கா,கனடா, பிரிட்டன் மற்றும் நியூசிலாந்துடன் ஒப்பிடும் போது     ஊடகவியலாளர்கள் எதிர்ப்பு அவுஸ்ரேலியாவில் பத்திரிக்கை சுதந்திர சட்டம் கடுமையாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். அதன் விளைவாக அவுஸ்ரேலியாவில் இன்று முக்கிய பத்திரிகைகள் அனைத்தும்  தங்களது முதல் பக்கத்தில் உள்ள செய்தியை கருப்பு மை பூசி மறைத்து (Black out front pages ) வெளியிட்டுள்ளன. இதற்கு பல்வேறு வானொலி மற்றும்  தொலைக்காட்சி நிறுவனங்களும் ஆதரவு அளித்துள்ளன. இதேவேளை தொலைக்காட்சி நிறுவன காலை நிகழ்ச்சியில் பார்வையாளர்களிடம் குறித்த கேள்வி  "When the government hides the truth from you, what are they covering up?" கேட்கப்பட்டது. அதாவது, அரசாங்கம் உண்மையை உங்களிடம் இருந்து மறைக்கும் போது, அந்த உண்மையை எவ்வாறு நியாயப்டுத்துகின்றார்கள?

நியூஸ் கார்ப் ஆஸ்திரேலியா நாளிதழிலின்  நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் மைக்கேல் மில்லர், அவரது நாளிதழ் , தி அவுஸ்ரேலியன் (The Australian ) மற்றும் தி டெய்லி டெலிகிராப் (The daily Telegraph ) உள்ளிட்ட பத்திரிக்கைகளில் அச்சிடப்பட்ட கறுப்பு நிற முதல் பக்கத்தின் படத்தை  (photo) ரருவிட்டரில் பதிவு செய்தார்.

மேலும், ‘என்னிடமிருந்து எதை மறைக்க முயற்சிக்கிறார்கள்?’ என அரசாங்கத்திடம் கேள்வி கேட்குமாறு அவர் பொதுமக்களை  கேட்டுக்கொண்டார்.

ஏபிசி (APC) நிர்வாக இயக்குனர் டேவிட் ஆண்டர்சன் கூறுகையில், ‘அவுஸ்திரேலியா உலகின் மிக இரகசியமான ஜனநாயகமாக மாறும் அபாயம்  உள்ளது’ என தெரிவித்தார்.

இந்த சம்பவத்தை குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறுகையில், “ஊடக அமைப்புகளுக்கு என்ன வேண்டும்? கடந்த  இரண்டு தசாப்தங்களாக இயற்றப்பட்ட கடுமையான பாதுகாப்புச் சட்டங்கள் புலனாய்வு பத்திரிகை துறைக்கு அச்சுறுத்தலை  ஏற்படுத்தியுள்ளன. இது பொதுமக்களின் தகவல் அறியும் உரிமையை (Right to Know) கொஞ்சம் கொஞ்சமாக சவாலுக்கு உட்படுத்துகின்றது  என்கின்றனர்.

பத்திரிகை சுதந்திர விசாரணையின் முடிவுகள் அடுத்த ஆண்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். பத்திரிகை சுதந்திரம் ஆஸ்திரேலியாவின் ஜனநாயகத்திற்கு முக்கியமானது, ஆனால் சட்டத்திற்கு உட்பட்டது. அதில் நான்,  பத்திரிகையாளர், வேறு யாராக இருந்தாலும் சட்டத்திற்கு கட்டுப்பட்டுதான் ஆக வேண்டும்,” என்றார்.




திங்கள், 16 செப்டம்பர், 2019

சவுதி அரேபியாவில் தாக்குதல்; ஈரான் மீது பழி சுமத்தும் அமெரிக்கா!

சவுதி அரசின் அரம்கோ பெட்ரோல் உற்பத்தி நிறுவனத்துக்கு சொந்தமாக நாடு முழுவதும் பல்வேறு சுத்திகரிப்பு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில், தலைநகர் ரியாத்தில் இருந்து சுமார் 330 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள புக்யாக் என்ற இடத்தில் அப்கைக் என்னும் சுத்தகரிப்பு ஆலையின் மீது நேற்று ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அந்த தொழிற்சாலையின் பெரும்பகுதி தீயில் எரிந்து சேதமடைந்தது.

இதேபோல், குர்அய்ஸ் என்ற பகுதியில் உள்ள அரம்கோ நிறுவனத்தின் பெட்ரோல் கிணறு மீதும் ஆளில்லா விமானம் மூலம் இன்று தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பெட்ரோல் கிணற்றின் ஒருபகுதி தீப்பிடித்து எரிந்து, பின்னர் அணைக்கப்பட்டதாக சவுதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், சவுதி அரேபியாவின் பெட்ரோல் சுத்திகரிப்பு தொழிற்சாலை மீது ஆளில்லா விமானத்தால் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இதேபோல், சவுதி பெட்ரோல் சுத்திகரிப்பு தொழிற்சாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்று குவைத் உள்ளிட்டவையும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் இருந்து 330 கி.மீ. தொலைவில் புக்யாக் என்ற இடத்தில் உள்ள அப்காய்க் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் குராய்ஸ் என்ற இடத்தில் உள்ள எண்ணெய் வயலையும் குறிவைத்து நேற்று முன்தினம் ஆளில்லா விமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இதனால் அங்கு தீப்பிடித்து எரிந்தது. தீ உடனடியாக அணைக்கப்பட்டதாக சவுதி அரசு தெரிவித்தாலும், சுமார் 50 லட்சம் பீப்பாய் எண்ணெய் எரிந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு ஏமனில் இருந்து செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பு ஏற்றனர்.

இந்த நிலையில், ஆளில்லா விமான தாக்குதலை தொடர்ந்து எண்ணெய் உற்பத்தியை 50 சதவீதமாக குறைத்திருப்பதாக சவுதி அரேபியா நேற்று அறிவித்தது. இது குறித்து இளவரசரும், அந்நாட்டின் எரிசக்தி துறை மந்திரியுமான அப்துல் அஜீஸ் பின் சல்மான் கூறியதாவது:-

ஏமன் கிளர்ச்சிப்படையினரின் தாக்குதலால் அராம்கோவின் அப்காய்க், குரெய்ஸ் ஆகிய எண்ணெய் ஆலைகளில் கச்சா எண்ணெய் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்திவிட்டோம். இதனால் சவுதியில் ஏறக்குறைய 50 சதவீத எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 57 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

உலகிற்கு தேவையான 10 சதவீத கச்சா எண்ணெய் சவுதி அரேபியாவில் உற்பத்தியாகும் நிலையில், அங்கு நடத்தப்பட்ட ஆளில்லா விமான தாக்குதலும், அதன் காரணமாக ஏற்பட்ட உற்பத்தி குறைப்பும் எண்ணெய் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விலை உயர்வு என்னும் அபாயத்துக்கு வழி நடத்தி விடும்.

இதற்கிடையே, சவுதி அரேபியாவின் எண்ணெய் ஆலை மீது ஈரான்தான் தாக்குதல் நடத்தியது என அமெரிக்கா பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

இது குறித்து அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியிருப்ப தாவது:-

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உலகின் எரிசக்தி வினியோகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் ஏமனில் இருந்து நடத்தப்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஈரான்தான் இந்த தாக்குதலை நடத்தியிருக்கிறது.

இது மட்டும் இன்றி இதற்கு முன் சவுதிஅரேபியா மீது நடத்தப்பட்ட 100 தாக்குதல்களுக்கு பின்னால் ஈரான் உள்ளது. அதே நேரத்தில் அந்நாட்டின் அதிபர் ஹசன் ருஹானி மற்றும் வெளியுறவு மந்திரி ஜாவத் ஷெரீப் ஆகியோர் தூதரக ரீதியில் செயல்படுவதாக பாசாங்கு செய்கிறார்கள்.

ஈரானின் தாக்குதல்களை பகிரங்கமாகவும், சந்தேகத்திற்கு இடமின்றியும் கண்டிக்க அனைத்து நாடுகளுக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். எரிசக்தி சந்தைகள் நன்கு செயல்படுவதை உறுதி செய்வதற்காக அமெரிக்கா தனது நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

ஆனால் அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது குறித்து அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அப்பாஸ் மவ்சாவி கூறுகையில், ‘‘இதுபோன்ற பலனற்ற மற்றும் குருட்டு குற்றச்சாட்டுகள் புரிந்துகொள்ள முடியாதவை மற்றும் அர்த்தமற்றவை’’ என்றார்.

மேலும் அவர் ‘‘ஈரான் மீது அதிகபட்ச அழுத்தம் தர வேண்டும் என்ற அமெரிக்காவின் கொள்கையே இது போன்ற அதிகபட்ச பொய்களுக்கு வழிவகுக்கிறது. ஏமனில் சவுதி அரேபியாவின் ஆக்கிரமிப்புக்கு ஏமன் நாட்டினர் தங்களின் எதிர்ப்பை காட்டியுள்ளனர்’’ எனவும் அவர் கூறினார்.

சவுதி அரேபியாவில் அப்காய்க் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் குராய்ஸ் என்ற இடத்தில் உள்ள எண்ணெய் வயலை குறிவைத்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் 10 ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தினர். இதில் சுமார் 50 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் எரிந்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலால் சவுதியில் தினந்தோறும் 50 சதவீதம் பெட்ரோலிய கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு சுமார் 57 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் ஏமனில் இருந்து நடத்தப்பட்டதல்ல; இது ஈரான் கைவரிசை என அமெரிக்கா திட்டவட்டமாக கூறி வருகிறது.

உலகிற்கு தேவையான 10 சதவீத கச்சா எண்ணெய் சவுதி அரேபியாவில் உற்பத்தியாகும் நிலையில், அங்கு நடத்தப்பட்ட ஆளில்லா விமான தாக்குதலும், அதன் காரணமாக ஏற்பட்ட உற்பத்தி குறைப்பும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கி உள்ளது.

ஆனால், இந்த மாதத்துக்கான தேவையை சமாளிக்கும் அளவில் இந்திய அரசிடம் போதுமான பெட்ரோல், டீசல் கையிருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சவுதி அரேபியா மீது மேலும் பல தாக்குதல்களை தொடருவோம் என ஏமன் நாட்டு ஹவுத்தி போராளிகள் எச்சரித்துள்ளனர்.

இதுதொடர்பாக, ஹவுத்தி ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் யஹ்யா சரீ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாங்கள் நினைத்த நேரத்தில் எங்களது நெடியக்கரங்கள் சவுதி அரேபியா நாட்டின் எந்த பகுதிக்கும் நீளும்’ என்பதை அந்நாட்டு அரசுக்கு உறுதிப்பட தெரிவித்துக் கொள்கிறோம்’ என குறிப்பிட்டுள்ளார்.

ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஈரான் அரசின் ஆதரவுடன் ஹவுத்தி இன மக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அவர்கள்மீது உள்நாட்டு அரசுப் படைகளும் அண்டைநாடான சவுதி அரேபியா தலைமையிலான நேசநாட்டுப் படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சவுதி அரேபியா மீது சமீபகாலமாக ஹவுத்தி போராளிகள் அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 13 செப்டம்பர், 2019

அமெரிக்கா-சீனா வரிவிலக்கு தள்ளுபடி!


உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையே ஒரு ஆண்டுக்கும் மேலாக வர்த்தக போர் நீடிக்கிறது.

இறக்குமதி செய்யப்படும் ஒவ்வொரு பொருட்களுக்கும், எவ்வளவு வரி விதிப்பது என்பது தொடர்பாக இருநாடுகளுக்கு இடையில் ஒப்பந்தம் கையெழுத்தாகாததே இதற்கு காரணம். இதனால் இருநாடுகளும், இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது மாறி மாறி கூடுதல் வரி விதித்து வருகின்றன.

இந்த நிலையில், வர்த்தகப் போர் தொடங்கியதில் இருந்து முதல்முறையாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இறால், பண்ணை விலங்குகளுக்கான மீன் உணவு, புற்றுநோய்க்கான மருந்து போன்ற 16 வகை பொருட்களுக்கு சீனா வரிவிலக்கு அளித்துள்ளது.

இந்த வரிவிலக்கானது 17-ந்தேதி அமுலுக்கு வரும் என்றும், ஒரு ஆண்டுக்கு அமுலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த 16 வகை பொருட்களில் 12 பொருட்களுக்கு ஏற்கனவே வரி செலுத்தியவர்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்றும், இதர 4 பொருட்களுக்கு செலுத்தப்பட்ட வரிப்பணம் திரும்பக் கிடைக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில அமெரிக்கப் பொருட்களுக்கு வரிவிலக்கு அளிப்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும் சீன வரிவிதிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக போரால் இரு நாடுகளும் இறக்குமதி பொருட்களுக்கு போட்டி போட்டு வரிகளை விதித்து வருகின்றன.

அந்த வகையில், சீனாவில் இருந்து இறக்குமதியாகும் 25 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு 25 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக வரி உயர்த்தப்படும் என்றும், அது ஒக்ரோபர் 1-ந்தேதி முதல் அமுலுக்கு வரும் என்றும் டிரம்ப் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் நல்லெண்ண நடவடிக்கையாக இந்த கூடுதல் வரி விதிப்பு 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

சீனாவில் 70-வது தேசிய தினம் ஒக்டோபர் 1-ந்தேதி கொண்டாட இருப்பதால், கூடுதல் வரி விதிப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று சீனாவின் துணை பிரதமர் லியு ஹி, என்னிடம் கேட்டுக்கொண்டார். அவரது கோரிக்கைக்கு ஏற்ப 25 ஆயிரம் கோடி டாலர் மதிப்புடைய சீன பொருட்களுக்கான கூடுதல் வரி விதிப்பு அக்டோபர் 1-ந்தேதிக்கு பதில் அக்டோபர் 15-ந்தேதி முதல் அமுலுக்கு  வரும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.முன்னதாக, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 16 வகை பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுவதாக சீனா நேற்று முன்தினம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் சீனப் பொருட்கள் குவிந்ததுடன் விலையும் மலிவாக கிடைப்பதால் அமெரிக்க பொருட்களின் வர்த்தகம் சரிந்தது. இது அமெரிக்க அதிபர் டிரம்பின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. ஏற்கனவே, அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்ற கொள்கையை கடைப்பிடித்து வரும் டிரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 250 பில்லியன் டொலர் மதிப்புள்ள பொருட்களுக்கு முன்பு இருந்ததை விட கூடுதலாக 25 சதவீதம் வரி விதித்தார்.

அதன்பின்னர் மேலும் சுமார் 300 பில்லியன் டொலர் மதிப்புள்ள சீனப் பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 10 சதவீதம் உயர்த்தினார். இந்த வரிவிதிப்பை வரும் செப்டம்பர் மாதம் 1 ந் தேதி முதல் அமல்படுத்த முடிவு செய்துள்ளார். இது சீனாவின் வர்த்தகத்தை கடுமையாக பாதித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனாவும், அமெரிக்க பொருட்கள் மீதான இறக்குமதி வரியை உயர்த்தியது. இதனால் வர்த்தகப் போர் முற்றியது.

இந்த வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வந்து, வர்த்தக ஒப்பந்தம் நடத்தும் முயற்சியில் இரு நாட்டு தலைவர்களும் ஈடுபட்டனர். இதற்கான பேச்சுவார்த்தை கடந்த நவம்பரில் தொடங்கியது. ஆனாலும் பேச்சுவார்த்தைகள் எந்த பலனையும் தரவில்லை.

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில், “கடந்த பல தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு சீனாவின் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. ஆயிரக்கணக்கான நிறுவனங்கள்  சீனாவை விட்டு வெளியேறும் நிலையில் உள்ளன. இதனால் இவ்விவகாரத்தில் சீனா அமெரிக்காவுடன் ஒப்பந்ததை ஏற்படுத்த விரும்புகிறது. ஆனால் ஒப்பந்தம் ஏற்படுத்த நான் தயாராக இல்லை” என தெரிவித்து இருந்தார்.

ஒத்துழைப்பு அணுகுமுறையினை பேணிவரும் சீனாவின் செயற்பாடே தற்போதைய வர்த்தகப் போர் தணிவிற்கு காரணம் எனலாம். இன்றைய நிலையில் சீனாவின் பொருளாதார ஆதிக்கம் அமெரிக்காவிற்குள்ளும் தவிர்க்க முடியாத என்ற காரணத்தாலேயே அமெரிக்க அதிபர் தனது நிலையில் இருந்து பின்வாங்கி புது அர்த்தத்தை தனது பின் வாங்கல் காரணத்திற்கு கற்பிற்கின்றார். சீனா உலக பொருளாதாரத்தில் தற்போதைய நிலையில் தவிர்க்க முடியாதசக்தியாக உள்ளது.







சனி, 31 ஆகஸ்ட், 2019

அமைதியான முறையில் முடிவுக்கு வருமா ஹாங்காங் போராட்டம்?


       ஹாங்காங்கில் நடைபெற்று வரும் மாபெரும் போராட்டத்தை தலைமை தாங்கிய ஜோஷ்வா வாங் கைது செய்யப்பட்டு இருந்தார். இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்து ஹாங்காங் விடுவிக்கப்பட்ட பின்னர் கடந்த 1997ம் ஆண்டு சீனாவின் நிர்வாகப் பகுதிகளில் ஒன்றாக மாறியது. சீனாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தாலும் ஹாங்காங் நாட்டுக்கென தனி கரன்சி, சட்டம், அரசியலமைப்பு எல்லாம் பின்பற்றப்பட்டது. இந்நிலையில் சீனாவுக்கு குற்றவாளிகளைப் பரிமாற்றம் செய்வதற்கான சட்டத்திருத்த மசோதாவை நிரந்ததரமாக ரத்து செய்யக்கோரியும், சீனாவின் ஆதிக்கத்துக்கு எதிராகவும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குற்றவாளிகளை நாடு கடத்தும் மசோதா முழுமையாக பின்வாங்கப்பட வேண்டும்.

    நடுநிலை அமைப்பு ஒன்று போராட்டக்கார்களுக்கும், போலீஸாருக்கும் இடையே நடத்த மோதலை விசாரிக்கவும், போராட்டத்தை கலவரம் என்று கூறியதை திரும்பப் பெறவும், போலிஸார் நடத்திய மிருகத்தனமான தாக்குதல் குறித்து சுதந்திரமான அமைப்பு விசாரிக்க வேண்டும். தேர்தல் நடைமுறையில் சீர்திருத்தங்களைத் தொடங்க வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுமட்டுமல்லாது, போராட்டக்காரர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்ககூடாது என வலியுறுத்தி இரண்டு மாதங்களுக்கு மேலாக மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இப்போராட்டத்தை தலைமை தாங்கிய, ஜனநாயகத்துக்கு ஆதரவாக செயல்படும் ஆர்வலர் ஜோஷ்வா வாங்  கைது செய்யப்பட்டு இருந்தார்.

     இதுகுறித்து, தமது ருவிட்டர்  பக்கத்தில் ஜோஷ்வாவின் அரசியல் அமைப்பான டெமோசிஸ்டோ, நமது பொதுச்செயலாளர் ஜோஷ்வா வாங் கடுமையான முறையில் கைது செய்யப்பட்டு இருந்தார்.  தெற்கு ஹரிசான் பகுதிக்கு நடந்துச் சென்றுக் கொண்டிருந்தபோது தனியார் மினி வேன் ஒன்றில் அவர் வலுக்கட்டாயமாக தள்ளப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நடந்ததையடுத்து நமது வழக்கறிஞர்கள், இவ்வழக்கு குறித்து ஆலோசித்து வருகின்றனர், என பதிவிடப்பட்டுள்ளது. இந்த போராட்டம் தொடங்கியது முதல் இதுவரை சுமார் 800 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் போராட்டக்காரர்களின் வழிகாட்டியாகவும், தலைமை தாங்கியவருமான ஜோஷ்வா வாங் கைது செய்யப்பட்டுள்ளது, அவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

    சீன இராணுவத்தின்  படைப்பிரிவுகள் ஹாங்காங் நகருக்கு அணி வகுத்தது. இந்த படைப்பிரிவில் விமானப்படை, கடற்படை மற்றும் இராணுவம்  ஆகிய முப்படைகளை சேர்ந்த 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலான வீரர்களை உள்ளடக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

      ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது.

     இந்த சட்ட திருத்த மசோதாவை முழுமையாக ரத்துசெய்ய வேண்டும். போராட்டக்காரர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என வலியுறுத்தி இரண்டு மாதங்களுக்கு மேலாக மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  இதையடுத்து சீன இராணுவத்தின் படைப்பிரிவுகளை சேர்ந்த சேர்ந்த 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலான வீரர்கள் ஹாங்காங் நகருக்கு அணி வகுத்து நின்றனர்.

     இதற்கிடையில் ஹாங்காங் போராட்டக்காரர்களை ஒருங்கிணைத்து தலைமை தாங்கிய சமூக ஆர்வலர் ஜோஷ்வா வாங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இரண்டு பேரை ஹாங்காங் போலீசார் நேற்று காலை அதிரடியாக கைது செய்தனர். அவர்களது கைது சம்பவம் போராட்டக்காரர்களிடையே மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

     இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஜோஷ்வா வாங் உள்பட மூவரும் ஹாங்காங் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டு விட்டதாக சீன செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஹாங்காங்கில் இன்று ( சனிக்கிழமை) மாபெரும் போராட்டம் நடத்த போராட்டக்குழு ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

   இந்நிலையில், போராட்டக்காரர்கள் மீது வன்முறையை பயன்படுத்தினால் அமெரிக்கா-சீனா வர்த்தக ஒப்பந்தங்கள் கடுமையாக பாதிக்கப்படும், என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “சீன அதிபர் ஜி ஜின்பிங் மிகவும் திறமை வாய்ந்த ஒரு தலைவர், அவர் ஹாங்காங் விவகாரத்தில் வன்முறையை கையாளாமல் போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி அமைதியான முறையில் இந்த பிரச்சனையை முடிவுக்கு
கொண்டு வருவார் என நம்புகிறேன்” என தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது .



புதன், 28 ஆகஸ்ட், 2019

சுவாச காற்றில் 20 சதவீதத்தை வழங்கும், பூமியின் நுரையீரல் அமேசன்!


   உலகளவில் மிகவும் பிரபலமான காடு என்றால் அது அமேசன் காடுகள்தான். இங்கு அரிய வகை மரங்கள், மூலிகை செடிகள், அரிய வகை விலங்குகள் ஆகியன உள்ளன.

இந்த காடு பிரேசில், கொலம்பியா, வெனிசுலா, பொலிவியா, கயானா  உள்ளிட்ட நாடுகளுடன் தொடர்பு இருந்தாலும் காட்டு தீ பிரேசிலில்தான் அதிகளவில் பரவி உள்ளது.

தீயணைப்பு வீரர்கள்
இந்த கடந்த சில நாட்களாக காட்டு தீ பற்றி எரிந்து வருகிறது. அடர்ந்த காடு என்பதால் உலகின் மிகப் பெரிய காடு என்பதாலும் இங்கு தீயை அணைப்பது என்பது பிரேசில் நாட்டிற்கு பெரும் சவாலாக உள்ளது. இந்த நிலையில் தீயை அணைக்க 80 ஆயிரம் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பிரேசில் மக்கள்
அமேசன் காட்டுத்தீயால் அங்குள்ள அரிய வகை உயிரினங்கள், மூலிகை செடி கொடிகள், மரங்கள், விலங்குகள் அழியும் நிலையில் உள்ளது. எனவே காடுகளை பாதுகாக்க வேண்டும் என பிரேசில் நாட்டு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்ள வளிமண்டலத்தில் மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய கார்பன் மோனாக்சைடு கலந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இதை வளிமண்டல் அகசிவப்பு ஒலிக் கருவி (Atmospheric Infrared Sounder (AIRS)) மூலம் நாசா கண்டுபிடித்துள்ளது.

கடந்தக் ஒகஸ்ட் 8 ஆம் திகதி முதல் ஒகஸ்ட் 22 ஆம் திகதி வரை 18ஆயிரம் அடி உயரத்தில் கார்பன் மோனாக்சைடு எந்த அளவுக்கு அடர்த்தியாக கலந்துள்ளது என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. நாளாக நாளாக கார்பன் மோனாக்சைடு கலந்துள்ள மேகங்கள் அமேசான் பகுதியின் வடமேற்கில் பரந்து விரிந்து செல்கிறது. மேலும் இங்கிருந்து தென்கிழக்கு பகுதியை நோக்கியும் அது பரவியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கார்பன் மோனாக்சைடு
நாசா வெளியிட்டுள்ள வரைப்படத்தில் பச்சை நிறத்தில் காணப்படுவது கார்பன் மோனாக்சைடின் அடர்த்தியாகும். ஒரு மாதம் ஆனாலும் அந்த கார்பன் மோனாக்சைடு நீண்ட தூரங்களுக்கு சென்றுக் கொண்டே இருக்கும். கார்பன் மோனாக்சைடு சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும்.

பெரும் ஆபத்து
காற்றை மாசுப்படுத்தி பசுமை இல்ல வாயு மற்றும் பருவநிலை மாற்றத்தையும் பாதிக்கும் என்பதால் நாசாவின் இந்த தகவல்கள் அச்சுறுத்தும் அளவில் உள்ளது. இந்த வாயுவை லேசாக சுவாசிப்பதால் தலைவலி, வாந்தி, மயக்கம் ஏற்படும். இதே அதிக அளவு சுவாசித்தால் சுயநினைவு அற்ற நிலைக்கோ அல்லது இறக்கும் நிலைக்கோ செல்லும் வாய்ப்புள்ளது. மேலும் இது மாரடைப்பையும் ஏற்படுத்தும் என்பதால் காற்றுடன் கலந்துள்ள இதை சுவாசித்தால் பொலிவியா, பிரேசில் மக்களுக்கு பேராபத்தை விளைவிக்கும்.

வரலாறு காணாத காட்டுத்தீ பரவி வருகிறது. பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தி, புவி வெப்பமாவதை தடுக்க அமேசான் காடுகள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் என உலக அளவில் ஆதரவு குரல்கள் ஒலித்து வருகின்றன. காட்டுத்தீயை கட்டுப்படுத்த போதுமான நிதியை ஒதுக்கும் அளவுக்கு பிரேசில் நாட்டின் பொருளாதாரம் வலுவாக இல்லை. இதனால், உலக நாடுகளின் உதவிக்கு கையேந்தி நிற்கிறது.

இந்நிலையில், அமேசன் காடுகளில் தீயை அணைத்து வனப்பகுதியை பாதுகாக்க ரூபாா.35 கோடியை நிதி திரட்டித் தருவதாக பிரபல ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ கூறி இருக்கிறார். ‘டைட்டானிக்’ படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான டிகாப்ரியோ ‘எர்த் அலையன்ஸ்’ என்ற அமைப்பை நடத்தி வருகின்றனர். இதன் மூலம், அமேசான் காடுகளை பாதுகாக்க முதற்கட்டமாக ரூ.35 கோடி நிதியை திரட்டி தருவதாக அவர் உறுதி அளித்துள்ளார். இதற்கான அறிவிப்பை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட டிகாப்ரியோ, தனது ரரசிகர்கள் அனைவரும் நிதி உதவி செய்யும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார். அமேசன் காடுகளுக்காக சர்வதேச அளவில் நிதி திரட்டுவதற்கான தொடக்கமாக இந்நிகழ்வு கருதப்படுகிறது. இதற்கிடையே, ஜி7 மாநாட்டில் அமேசான் காடுகள் குறித்து விவாதிக்கப்பட்ட நிலையில், ஜி-7 அமைப்பு சார்பில் ரூ.150 கோடி வரை நிதி உதவி வழங்கப்படும் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் உறுதி அளித்துள்ளார்.

அமேசனில் காட்டுத் தீயை அணைக்க ஜி7 நாடுகள் வழங்கும் நிதியை ஏற்க தயார் என பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சோனாரோ தெரிவித்துள்ளார். அமேசான் காட்டில் 60 சதவீதம் பிரேசில் நாட்டில் உள்ளது. மீதிப்பகுதிகள்  பொலிவியா, கொலம்பியா, ஈக்வெடார், பிரெஞ்சு கயானா, கயானா, பெரு, சுரினேம் மற்றும் வெனிசுலா நாடுகளில் உள்ளன. பூமியின் நுரையீரல் என்றழைக்கப்படும் அமேசான் மழைக்காடுகளில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக காட்டுத் தீ  பற்றி எரிந்து வருகிறது. உலக நாடுகளுக்கு தேவையான ஆக்ஜிசனில் பெரும் பகுதியை உற்பத்தி செய்யும் அமேசான் காடுகளில் காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது. பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் தீயை அணைக்கும் முயற்சிகள் தீவிரமாக  நடைபெற்று வருகின்றன. இது உலக நாடுகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே, ஜி7 அமைப்பில் இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி,  இத்தாலி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் 2 நாள் கூட்டம் பிரான்ஸ் நாட்டின் பியாரிட்ஸ்  நகரில் நேற்று முன்தினம் முடிந்தது. ஜி7 கூட்டத்தின் இறுதிநாளான நேற்று முன்தினம் அமேசான் காட்டுத் தீ பற்றி விவாதிக்கப்பட்டது. இது உலகத்தின் பசுமை நுரையீரல் மீதான தாக்குதல் என ஐரோப்பிய தலைவர்கள் கூறினர்.

இந்த  கூட்டத்துக்குப்பின் பேட்டியளித்த பிரான்ஸ் அதிபர் இமாணுவேல் மேக்ரான், ‘‘அமேசன் காட்டுத் தீயால்  பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவ உலக தலைவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர் என்றார்.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில், அமேசான் காடு நம் கண்முன் பயங்கரமாக பற்றி எரிவதை கடந்த ஒரு வாரமாக பார்க்கிறோம். அமேசான் காட்டு தீயால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்க இங்கிலாந்து 10 மில்லியன்  பவுண்ட் பணத்தை (ரூபா 88கோடி) விரைவில் வழங்கும்’’ என்றார். இறுதியாக, அமேசன் மழைக்காடுகளில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க சுமார் ரூ.160 கோடி  வழங்கப்படும் என ஜி7 நாடுகள் அறிவித்தது. ஆனால், ஜி 7 நாடுகளின் உதவியை  பிரேசில் அதிபர் சயீர் போல்சோனரோ நிராகரித்து  விட்டார். இது தொடர்பாக அவரது அரசின் முதன்மை செயலர் ஓனிக்ஸ் லோரன்ஜோனி கூறிய போது, ``இந்த உதவிக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம். இந்த நிதியைக் கொண்டு ஐரோப்பிய  நாடுகளில் காடுகளை வளர்த்து கொள்ளுங்கள்.  பிரான்சையும் அதன் காலனி நாடுகளையும் கவனித்து கொள்ளுங்கள்,’’ என்றார்.

இந்நிலையில், இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சோனாரோ, ஜி7 நாடுகள் வழங்க முன்வந்துள்ள நிதியை தாங்கள் நிராகரிக்கவில்லை என்று தெரிவித்தார். இந்த நிதியை ஏற்றுக் கொள்வதற்கு முன்னதாக  சில நிபந்தனைகள் இருப்பதாக அவர் கூறினார். முதலாவதாக, தனக்கு எதிராக தெரிவித்த கருத்துகளுக்காக பிரான்ஸ் அதிபர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தன்னை பொய்யர் என்றும், பின்னர் அமேசானில்  தங்களது இறையாண்மை என்பது வெளிப்படையானது என்றும், பிரான்ஸ் அதிபர் மேக்ரான் பேசியுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். இந்தக் கருத்துக்களை திரும்பப் பெற்றபிறகே, பிரான்ஸுடன் பேச முடியும் என்று அவர் திட்டவட்டமாக  தெரிவித்துள்ளார்.

பூமிக்கு தேவையான சுவாச காற்றில் 20 சதவீதத்தை உற்பத்தி செய்து தந்து வந்தது, பிரேசிலில் உள்ள அமேசன் மழைக்காடுகள்தான். எனவேதான் இந்த காடுகள், பூமியின் நுரையீரல் என்று அழைக்கப்படுகின்றன.


இந்த காடுகளில் முன் எப்போதும் இல்லாத வகையில் ஏராளமான இடங்களில் தீப்பற்றி எரிகின்றன. இது ஐரோப்பிய நாடுகளையெல்லாம் கவலையில் ஆழ்த்தி உள்ளது.மின்னல் காரணமாக காடுகள் தீப்பற்றி எரிவதாக சொல்லப்பட்டாலும், அங்கு வாழ்கிற மக்களின் கைவேலை இது எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விவசாயம், சுரங்க பணிகளுக்கு தேவைப்படுகிற நிலத்தை குறி வைத்து காடுகள் தீயிட்டு அழிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

எனவே அமேசன் காடுகள் தீப்பற்றி எரியும் பிரச்சினையில் உலக நாடுகள் பலவும் பிரேசிலுக்கு எதிராக கருத்து தெரிவித்தும், அழுத்தம் தந்தும் வருகின்றன. தீயை அணைப்பதற்கு போதுமான நடவடிக்கை எடுக்காவிட்டால், பிரேசிலின் பொருளாதாரத்தில் கை வைப்போம் என அந்த நாடுகள் மிரட்டல் விடுத்துள்ளன.

அமேசன் காடுகளில் பற்றி எரிகிற தீயை கட்டுக்குள் கொண்டு வருகிறவரையில் அந்த நாட்டுடன் செய்து கொண்டுள்ள வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தப்போவதில்லை என்று பிரான்சும், அயர்லாந்தும் அறிவித்துள்ளன.

பிரேசிலில் இருந்து மாட்டிறைச்சி இறக்குமதி செய்வதை நிறுத்துவது பற்றி ஐரோப்பிய கூட்டமைப்பு பரிசீலிக்க வேண்டும் என்று பின்லாந்து குரல் கொடுத்துள்ளது.

இப்படி சர்வதேச அளவில் நிர்ப்பந்தங்கள் பெருகி வருகிற நிலையில், அமேசான் மழைக்காடுகளில் தீயை அணைக்கும் பணியில் அந்த நாட்டின் பாதுகாப்பு படைகளை களம் இறக்கி அதிபர் ஜெயிர் போல்சொனரோ அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இயற்கை வளங்கள் உள்ள பகுதிகள், பூர்வீக குடிமக்கள் வாழ்கிற இடங்கள், குடியிருப்பு பகுதிகளையொட்டிய காடுகள் ஆகிய இடங்களுக்கு படைகள் விரைகின்றன.

இதையொட்டி நேற்று முன்தினம் அதிபர் ஜெயிர் போல்சொனரோ தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரை ஆற்றினார். அப்போது அவர், “உலகமெங்கும் காடுகளில் தீப்பற்றி எரிகிறது. சர்வதேச பொருளாதார தடைகளுக்கு ஒரு சாக்குபோக்காக செயல்பட முடியாது” என கூறினார்.

அமேசன் காடுகளில் தீயணைப்பு பணியில் பாதுகாப்பு படைகளை களம் இறக்கி உள்ளதை அவர் உறுதி செய்தார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “ஒரு ராணுவ வீரராக நான் அமேசான் காடுகளை நேசிக்க கற்றுக்கொண்டிருக்கிறேன். அவற்றை நான் பாதுகாக்க விரும்புகிறேன்” என கூறினார்.

அமேசன் காடுகளில் பற்றி எரிகிற தீயை அணைக்கும் பணியில் பாதுகாப்பு படைகளை ஈடுபடுத்துவது தொடர்பாக அவர் அதிகாரப்பூர்வ உத்தரவு ஒன்றையும் பிறப்பித்தார். ஆனால் அந்த உத்தரவு தெளிவற்று இருப்பதாகவும் விமர்சிக்கப்படுகிறது. அதே நேரத்தில் பிராந்தியத்தில் உள்ள இயற்கை வளம் நிறைந்த பகுதிகள், பூர்வீக நிலங்கள் மற்றும் எல்லையையொட்டிய பகுதிகளுக்கு படைகள் அனுப்பி வைக்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தீயணைப்பு பணிகளை ராணுவ மந்திரி பெர்னாண்டோ அஜேவிடோ டி சில்வா கண்காணிப்பார், படை வீரர்களை ஒதுக்கீடு செய்யும் பொறுப்பை அவர் கவனிப்பார் எனவும் கூறப்பட்டுள்ளது.அடுத்த மாதம் 24 ஆம் திகதி வரை ஒரு மாத காலத்துக்கு தீயணைப்பு பணியில் படையினர் ஈடுபடுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

     இந்த காடுகளில் முன் எப்போதும் இல்லாத வகையில் ஏராளமான இடங்களில் தீப்பற்றி எரிகின்றன. இது ஐரோப்பிய நாடுகளையெல்லாம் கவலையில் ஆழ்த்தி உள்ளது.

எனவே அமேசன் காடுகள் தீப்பற்றி எரியும் பிரச்சினையில் உலக நாடுகள் பலவும் பிரேசிலுக்கு எதிராக கருத்து தெரிவித்தும், அழுத்தம் தந்தும் வருகின்றன. தீயை அணைப்பதற்கு போதுமான நடவடிக்கை எடுக்காவிட்டால், பிரேசிலின் பொருளாதாரத்தில் கை வைப்போம் என அந்த நாடுகள் மிரட்டல் விடுத்துள்ளன.

அமேசன் காடுகளில் பற்றி எரிகிற தீயை கட்டுக்குள் கொண்டு வருகிறவரையில் அந்த நாட்டுடன் செய்து கொண்டுள்ள வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தப்போவதில்லை என்று பிரான்சும், அயர்லாந்தும் அறிவித்துள்ளன.

பிரேசிலில் இருந்து மாட்டிறைச்சி இறக்குமதி செய்வதை நிறுத்துவது பற்றி ஐரோப்பிய கூட்டமைப்பு பரிசீலிக்க வேண்டும் என்று பின்லாந்து குரல் கொடுத்துள்ளது.

இப்படி சர்வதேச அளவில் நிர்ப்பந்தங்கள் பெருகி வருகிற நிலையில், அமேசன் மழைக்காடுகளில் தீயை அணைக்கும் பணியில் அந்த நாட்டின் பாதுகாப்பு படைகளை களம் இறக்கி அதிபர் ஜெயிர் போல்சொனரோ அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இயற்கை வளங்கள் உள்ள பகுதிகள், பூர்வீக குடிமக்கள் வாழ்கிற இடங்கள், குடியிருப்பு பகுதிகளையொட்டிய காடுகள் ஆகிய இடங்களுக்கு படைகள் விரைகின்றன.

இதையொட்டி அதிபர் ஜெயிர் போல்சொனரோ தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரை ஆற்றினார். அப்போது அவர், “உலகமெங்கும் காடுகளில் தீப்பற்றி எரிகிறது. சர்வதேச பொருளாதார தடைகளுக்கு ஒரு சாக்குபோக்காக செயல்பட முடியாது” என கூறினார்.

அமேசன் காடுகளில் தீயணைப்பு பணியில் பாதுகாப்பு படைகளை களம் இறக்கி உள்ளதை அவர் உறுதி செய்தார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “ஒரு இராணுவ  வீரராக நான் அமேசான் காடுகளை நேசிக்க கற்றுக்கொண்டிருக்கிறேன். அவற்றை நான் பாதுகாக்க விரும்புகிறேன்” என கூறினார்.

அமேசன் காடுகளில் பற்றி எரிகிற தீயை அணைக்கும் பணியில் பாதுகாப்பு படைகளை ஈடுபடுத்துவது தொடர்பாக அவர் அதிகாரப்பூர்வ உத்தரவு ஒன்றையும் பிறப்பித்தார். ஆனால் அந்த உத்தரவு தெளிவற்று இருப்பதாகவும் விமர்சிக்கப்படுகிறது. அதே நேரத்தில் பிராந்தியத்தில் உள்ள இயற்கை வளம் நிறைந்த பகுதிகள், பூர்வீக நிலங்கள் மற்றும் எல்லையையொட்டிய பகுதிகளுக்கு படைகள் அனுப்பி வைக்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தீயணைப்பு பணிகளை ராணுவ மந்திரி பெர்னாண்டோ அஜேவிடோ டி சில்வா கண்காணிப்பார், படை வீரர்களை ஒதுக்கீடு செய்யும் பொறுப்பை அவர் கவனிப்பார் எனவும் கூறப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் 24-ந்தேதி வரை ஒரு மாத காலத்துக்கு தீயணைப்பு பணியில் படையினர் ஈடுபடுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜி-7 மாநாடு நடைபெறும் முன்பு  நடைபெறப் போகின்ற  பையாரிட்ஸ் நகரில் 9000-க்கும் அதிகமான சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது சுற்றுச்சூழலை அழிக்கவேண்டாம் என்ற பதாகைகளுடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

“குல்லர்மோ கானோ இசாசா" (Guiller cano lsaza) உலக பத்திரிகை சுதந்திரதின விருது ராய்ட்டர் செய்தியாளர்கள் வசம்!


       பத்திரிகை சுதந்திரத்தின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் கருத்து சுதந்திரத்தை கட்டிக்காப்பது பற்றி அரசுக்கு உணர்த்தும் விதமாக மே 3ம் தேதி உலக பத்திரிகை சுதந்திர தினம் கடைபிடிக்கப்படுகிறது.சர்வதேச மனித உரிமை பிரகடனத்தின் சட்ட விதி 19ன் கீழ், பத்திரிகை சுதந்திரத்தை வலியுறுத்தி உலக பத்திரிகை சுதந்திர தினத்தை ஐக்கிய நாடுகள் சபை ஏற்படுத்தியது.

மிகுந்த ஆபத்தான  காலத்தில், உலகில் எங்காவது பத்திரிகை சுதந்திரம் பாதிக்கப்பட்டால், அதற்கு எதிராக போராடும் தனி நபர், பத்திரிகை, தொண்டு நிறுவனங்களுக்கு “யுனெஸ்கோ’ சார்பில் ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கப்படுகிறது. 1997ல் நிறுவப்பட்ட இவ்விருதுக்கு உரியவரை தேர்வு செய்ய 14 நடுவர்கள் உள்ளனர்.

விருதுக்கு போட்டியிடுவோரின் பட்டியலை, ஒவ்வொரு நாட்டில் இருந்தும், பத்திரிகை சுதந்திரத்திற்காக பாடுபடும் தொண்டு நிறுவனங்கள், அந்தந்த நாட்டு அரசுகள், பட்டியலை அனுப்பும். அதில் இருந்து, விருதுக்கு உரியவர் தேர்வு செய்யப்படுவார். இவ்விருது, “குல்லர்மோ கானோ இசாசா" (Guiller cano lsaz) என்ற கொலம்பிய நாட்டு பத்திரிகையாளரின் பெயரால் வழங்கப்படுகிறது. “எல் எஸ்பெக்டேட்டர்" என்ற பத்திரிகையில் பணிபுரிந்த இவர், போதை பொருள் மாபியா கும்பலுக்கு எதிராக தொடர்ந்து எழுதியதால், பத்திரிகை அலுவலகத்தின் முன்பாகவே, 1986ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது சேவையை பாராட்டியே, விருதுக்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும், உலகம் முழுவதும் இருந்து பத்திரிகையாளர்களை அழைத்து, பத்திரிகை சுதந்திரத்தை எதிர்நோக்கி உள்ள பிரச்னைகள், அவற்றை தீர்க்கும் வழிமுறைகள் போன்றவற்றை “யுனெஸ்கோ" ஆராய்கிறது. “நல்ல ஆட்சி, பயங்கரவாதத்திற்கு எதிரான செய்தி சேகரிப்பு, போருக்கு பிந்தைய வாழ்க்கை போன்றவற்றை தலைப்பாகக் கொண்டு, “யுனெஸ்கோ" விவாதம் நடத்துகிறது. பத்திரிகை சுதந்திரம் என்பதன் அளவுகோல், நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது.

அந்த வகையில், இம்முறை இவ்விருது ராய்ட்டர்ஸ் மியான்மர் அரசின் ரகசியங்களை வெளியிட்டதாகக் கூறி, அந்த நாட்டைச் சேர்ந்த ராய்ட்டர் செய்தி நிறுவனத்துக்காகப் பணியாற்றும் வா லோன் மற்றும்  கியா சோ ஊ  ஆகிய இருவருக்கும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மியான்மார் அரசின் இரகசியங்களை வெளியிட்டதாகக் கூறி, அந்த நாட்டைச் சேர்ந்த 2 செய்தியாளர்களுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

சிறுபான்மை ரோஹிங்கயா முஸ்லிம் இனத்தவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து செய்திகளை அளித்து வந்த அவர்களுக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது சர்வதேச அளவில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: மியான்மரில் ராய்ட்டர் செய்தி நிறுவனத்துக்காகப் பணியாற்றும் வா லோன் மற்றும் கியா சோ ஊ  ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு இருந்தனர்.

மியான்மரின் இரகசியப் பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிராகச் செயல்பட்டதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதற்கு, சர்வதேச அளவில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மியான்மரில் சிறுபான்மை ரோஹிங்கயா முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து செய்திகள் வெளியிடப்படுவதைத் தடுப்பதற்காக இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த நிலையில், அந்த இருவருக்கும் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்து இருந்தநிலையில், இந்நாளில் ஊடக சுதந்திரத்துக்காகப் பங்களிப்பு செய்யும் ஒருவருக்கு ஆண்டுதோறும் யுனெஸ்கோ நிறுவனத்தினர் "யுனெஸ்கோ/கிலெர்மோ கானோ இசாசா" (Guiller cano lsaza) உலக பத்திரிகை சுதந்திர விருது வழங்கிக் கௌரவிக்கின்றனர். இவ்விருது கொலம்பியப் பத்திரிகையாளர் கிலெர்மோ கானோ இசாசா என்பவரின் நினவாக வழங்கப்பட்டு வருகிறது. இவர் 1986 ஆம் ஆண்டு டிசம்பர் 17 இல் அவரது அலுவலகம் முன்பாக வைத்துப் படுகொலை செய்யப்பட்டிருந்தார். அவரின் கொலையின் பின்னரே பத்திரிகை சுதந்திரம் தொடர்பான பேச்சு வலுப்பெற்றது.

உலக அமைதிக்காகவும், பேச்சுச் சுதந்திரத்திற்காகவும் மற்றும் பத்திரிக்கை தர்மத்தினூடாகவும் பல இன்னல்களைத் தாண்டிப் போராடிய பத்திரிகை எழுத்தாளர் ஒருவருக்கு 25,000 டொலர் பெறுமதியான பரிசு வழங்கப்படுகின்றது. சுமார் 14 நபர்களைக் கொண்ட குழுவால் குறிப்பிட்ட இத்தெரிவு நடைபெறுகிறது. ஆண்டுதோறும் யுனெஸ்கோ நிறுவனத்தினர் யுனெஸ்கோ/கிலெர்மோ கானோ இசாசா (Guiller cano lsaza) உலக பத்திரிகை சுதந்திர விருது  ராய்ட்டர் செய்தி நிறுவனத்துக்காகப் பணியாற்றும் வா லோன் மற்றும் கியா சோ ஊ  ஆகிய இருவருக்கும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

ஜனநாயகத்தின் அடிநாதமாக அமைவது சுயாதீனமான ஊடகத் துறையே ஆகும். ஊடகங்களின் குரல் மக்களின் குரலிற்கு சமமானது. விருது பெற்ற ஊடகவியலாளர்கள் இன்னமும் சிறையில் இருக்கும் அதேவேளை இரு ஊடகவியலாளர்களும் விரைவில் விடுவிக்கபடவேன்டும் என்பதே ஜனநாயக விரும்பிகளின் சிந்தனையாகும்.


ஓர் ஆண்டுக்கும் மேலான வர்த்தகப்போர் மேலும் நீடிக்குமா?

 
      அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தகப் போரில் பதற்றம் நீடிக்கும் நிலையில், அமெரிக்க இறக்குமதி பொருட்கள் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு  சீனா கூடுதல் வரி விதித்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவும்பதிலடியாக சீனப் பொருட்கள் மீது 5 சதவீத கூடுதல் வரி விதித்துள்ளது.

கடந்த ஒரு வருடமாக அமெரிக்கா - சீனா இடையே வர்த்தகப் போர் நீடித்து வருகிறது. அமெரிக்கா அளிக்கும் வர்த்தக சலுகைகளை சீனா உள்ளிட்ட உலக நாடுகள் அனுபவித்து வருவதாகவும் அமெரிக்கப் பொருட்கள் மீது அந்நாடுகள் கூடுதல் வரி விதிப்பதாகவும் டிரம்ப் குற்றம்சாட்டி வந்தார். இதையடுத்து சீனா, கனடா, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் ஸ்டீல், அலுமினியம் உள்ளிட்ட இறக்குமதிப் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து சீனாவும் அமெரிக்க பொருட்கள் மீது கூடுதல் வரி விதித்து வரு‌கிறது.

இதனிடையே, கடந்த வருடம்  செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சீனப் பொருட்களுக்கு அமெரிக்கா இறக்குமதி வரியை அதிகரித்ததற்கு பழிவாங்கும் வகையில், சுமார் 5.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க சோயா, நிலக்கடலை உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதி வரியை சீனா அதிகரித்தது. இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது அதிபர் டிரம்ப் பேசியதாவது எதிர்வரும்  ஒக்ரோபர்  1ம் தேதி முதல், 21 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சீன உற்பத்திப் பொருட்கள் மீது தற்போது விதிக்கப்பட்டிருக்கும் 25 சதவீத வரி, 30 சதவீதமாக உயர்த்தப்படும். மேலும், செப்ரம்பர்  1ம் தேதி முதல் 10 சதவீதமாக விதிக்கப்பட்டிருக்கும் சீனாவின் 17.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மீதான வரி 15 சதவீதமாக அதிகரிக்கப்படும். நேர்மையான, நியாயமான வர்த்தகம் நடைபெற நியாயமற்ற இந்த வர்த்தக உறவை சரிசெய்ய  வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சீனா வேண்டுமென்றே, அரசியல் உள்நோக்கத்துடன் அமெரிக்காவின் 5.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மீது கூடுதல் வரி விதித்துள்ளது இவ்வாறு அவர் கூறினார்.

உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே ஓர் ஆண்டுக்கும் மேலாக வர்த்தகப்போர் நீடிக்கிறது. வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாத காரணத்தால், இருநாடுகளும் பரஸ்பரம் வரி விதித்து பதிலடி கொடுத்து வருகின்றன.

 அண்மையில், 35 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சீனப் பொருட்கள் மீது அமெரிக்கா கூடுதலாக 5 சதவீத வரி விதித்தது. அதற்கு பதிலடியாக 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்களுக்கு சீனாவும் 5 சதவீதம் கூடுதல் வரி விதித்தது.

இந்த வர்த்தகப்போர் காரணமாக சீனா பெரும் பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது. அந்நாட்டின் பண மதிப்பு கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.

இந்த நிலையில், தலைநகர் பீஜிங்கில் ‘ஸ்மார்ட் சீனா’ (Smart China) சர்வதேச கண்காட்சியை தொடங்கி வைத்து பேசிய அந்நாட்டின் துணை பிரதமர் லியூ ஹீ, வர்த்தகப்போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த சீனா தயாராக இருப்பதாக கூறினார்.

இது குறித்து அவர் பேசுகையில், “புதிய தொழில்நுட்ப துறையில் வர்த்தக பாதுகாப்புவாதத்தையும், முற்றுகையையும் சீனா கடுமையாக எதிர்க்கிறது. உற்பத்திச் சங்கிலிகளின் ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்த சீனா முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போதுள்ள Trade war (வர்த்தகப்போர்) பிரச்சனையை ஒத்துழைப்பு மூலம் தீர்க்க நாங்கள் தயாராக இருக்கிறோம். வர்த்தகப் போரின் விரிவாக்கத்தை ஏற்கமுடியாது. அதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்” என்றார்.

இதேவேளை, அமெரிக்கா,அமெரிக்கர்களுக்கானது என்ற கொள்கையில் அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் உறுதியாக உள்ளார். அமெரிக்க பொருட்கள் மீது இந்தியா கடும் வரி விதித்து, வரிவிதிப்பு மன்னனாக திகழ்வதாக அவர் குற்றம்சாட்டி வருகிறார்.

 இந்த நிலையில் அங்கு பென்சில்வேனியாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “இந்தியாவும், சீனாவும் ஆசியாவின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளாக திகழ்கின்றன. அவர்களை இனி வளரும் நாடுகள் என கூற முடியாது. எனவே அவர்கள் உலக வர்த்தக அமைப்பிடம் இருந்து நன்மைகளை பெற முடியாது” என கூறினார்.

மேலும், “அவர்கள் வளர்ந்து வரும் நாடுகள் என்ற வகையில் உலக வர்த்தக அமைப்பிடம் இருந்து நன்மைகளை பெறுகின்றனர். இது அமெரிக்காவுக்கு பாதகமாக அமைகிறது. அவர்கள் ஆண்டாண்டு காலமாக நம்மிடம் இருந்து நன்மைகளை அனுபவித்து வருகின்றனர்” எனவும் கூறினார்.

இந்த வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வந்து, வர்த்தக ஒப்பந்தம் நடத்தும் முயற்சியில் இரு நாட்டு தலைவர்களும் ஈடுபட்டனர். இதற்கான பேச்சுவார்த்தை கடந்த நவம்பரில் தொடங்கியது. ஆனாலும் பேச்சுவார்த்தைகள் எந்த பலனையும் தரவில்லை.

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில், “கடந்த பல தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு சீனாவின் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. ஆயிரக்கணக்கான நிறுவனங்கள்  சீனாவை விட்டு வெளியேறும் நிலையில் உள்ளன. இதனால் இவ்விவகாரத்தில் சீனா அமெரிக்காவுடன் ஒப்பந்ததை ஏற்படுத்த விரும்புகிறது. ஆனால் ஒப்பந்தம் ஏற்படுத்த நான் தயாராக இல்லை” என தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு உலக பொருளாதார வல்லரசுநாடுகள் தமக்கிடையே மோதிக் கொள்வது உலகின் ஏனைய நாடுகளின் பொருளாதாரத்திலும் ஏதேனும் ஒரு எதிர்மறைத் தாக்கத்தை உண்டுபண்ணும் என்பதே நிதர்சனம்.






திங்கள், 26 ஆகஸ்ட், 2019

76 வருடங்களின் பின்னர் நிறைவேறிய புதிய தலைநகர் திட்டம்!


       இந்தோனேசியாவில் இயற்கை பேரழிவுகள் குறைவாக உள்ள கிழக்கு கலிமன்டான் மாகாணத்தில் உள்ள போர்னியோ தீவு புதிய தலைநகராக தேர்ந்தெடுக்கப்பபட்டுள்ளது என அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “ தலைநகராக இருந்த  ஜகார்த்தாவில் மட்டும் தற்போது மூன்று கோடி மக்கள் வசித்து வருகிறார்கள். அங்கு நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. அதிக அளவில் அங்கு நிலத்தடி நீர் எடுக்கப்படுவதாலும், கடலில் அதிகம் குப்பை கொட்டப்படுவதாலும், வெப்பநிலை மாற்றத்தாலும் இப்படி கடல் நீர் மட்டம் உயர்ந்து கொண்டே செல்வதாக கூறப்படுகிறது.  ஆட்சி, வணிகம், நிதி, வர்த்தகம்  போன்றவற்றை நிர்வகிப்பது மிகவும் மிகவும் கடினமாக உள்ளது. மேலும் ஜகார்த்தா கடலில் மூழ்கி வரும் நகரங்களில் முக்கியமான ஒன்றாகும். இந்த நடவடிக்கைக்கான மசோதாவை அரசாங்கம் நாடாளுமன்றத்திற்கு கொண்டு செல்லும். இந்த திட்டத்திற்கு சுமார் 466 டிரில்லியன் ரூபியா (33 பில்லியன் அமெரிக்க டாலர்) செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது” என்றார்.

ஜகார்த்தா நிலநடுக்கம் போன்ற இயற்கை அனர்த்தங்கள் அதிகமாக ஏற்படும் இடமாக உள்ளது. 2050 ம் ஆண்டிற்குள் ஜகார்த்தா நகரின் மூன்றில் ஒரு பகுதி கடலில் மூழ்கும் என சுற்றுச்சூழல் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த திட்டம் 1943ம் வருடத்தில் இருந்தே போடப்பட்டு வந்துஇருக்கிறது. ஜகர்தாவை மாற்ற வேண்டும் என்று இத்தனை வருடங்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போதுதான் இதற்கு அந்நாட்டு பிரதமர் ஜோகோ விடோடா அனுமதி அளித்து இருக்கிறார். 76 வருடங்களின் பின்னர் இந்தோனேசியாவின் புதிய தலைநகர் திட்டம் நிறைவேறியுள்ளது.




தேர்ந்தெடுக்கப்பபட்டுள்ளது என அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ தெரிவித்துள்ளார்.

வியாழன், 2 மே, 2019

"வாள்முனையினை விடவும் பேனா முனையே வலிமையானது"



                       உலக பத்திரிகை சுதந்திர நாள் (World Press Freedom Day) என்பது பத்திரிகை சுதந்திரத்தைப் விஸ்தரிக்கும்  நோக்கில் "மனித உரிமைகள் சாசனம்" பகுதி 19 இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் சபையினால் சிறப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

  ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் 1993 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஒவ்வொரு வருடமும் மே 3 ஆம் திகதி பத்திரிகை சுதந்திரதினமாக கொண்டாடப்பட்டுவருகின்றது. "குல்லர்மோ கானோ இசாசா " என்ற கொலம்பிய நாட்டு பத்திரிகையாளரின் பெயரால் வழங்கப்படுகிறது. "எல் எஸ்பெக்டேட்டர்' என்ற பத்திரிகையில் பணிபுரிந்த இவர், போதை பொருள் மாபியா கும்பலுக்கு எதிராக தொடர்ந்து எழுதியதால், பத்திரிகை அலுவலகத்தின் முன்பாகவே, 1986ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது சேவையை மற்றும் துணிச்சலினை பாராட்டியே, விருதுக்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும், உலகம் முழுவதும் இருந்து பத்திரிகையாளர்களை அழைத்து, பத்திரிகை சுதந்திரம் எதிர்நோக்கி உள்ள பிரச்னைகள், அவற்றை தீர்க்கும் வழிமுறைகள் போன்றவற்றை "யுனெஸ்கோ" ஆராய்கின்றது.
 
      ஆபிரிக்கப் பத்திரிகைகளால் கூட்டாக 1991 ஆம் ஆண்டு இந்நாளிலேயே 'பத்திரிகை சுதந்திர சாசனம்' முன்வைக்கப்பட்டது. இது 1991 ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பினால் நடாத்தப்பட்ட பொதுக் கூட்டத்தின் 26 ஆம் அமர்வில் சிபாரிசு செய்யப்பட்ட , 'உலகின் சகல பிராந்தியங்களிற்குமான பேச்சு மற்றும் கருத்து வெளியீட்டுச் சுதந்திரத்திற்கானதும், ஊடக சுதந்திரத்தினதும் பாதுகாப்பிற்கும் மேம்படுத்தலிற்குமான ஆனை' என்ற தொனிப் பொருளில் பரிந்துரைக்கப்பட்ட கட்டளையின் நிமித்தமாக உருவானது.

          ஜனநாயகத்தின் நான்கு பிரதான தூண்கள் என்று சொல்லப்படுபவற்றில் நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம், நீதித்துறை, ஊடகங்கள் என நான்காவது இடத்தில் ஊடகங்கள் இருக்கின்ற போதிலும், அதற்கு மேலுள்ள  தூண்களும் சரியாகச் செயற்படுகின்றனவா என்பதைக் கண்காணித்து, மக்களுக்கு அறிவிக்கும் முக்கியமான பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு.

     ஊடகங்கள் என்று வரும்பொழுது வழக்கமான பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், வானொலிகள் போன்ற ஊடங்களைத் தாண்டி இணைய செய்தித் தளங்களிலும், சமூக ஊடகங்களிலும் பகிரப்படும் தகவல்களும் ஊடகங்கள் என்ற வகைக்குள்ளேயே அடங்குகின்றன.

   பத்திரிகைச் சுதந்திரம் உள்ள உலக நாடுகளின் தரப்படுத்தல் வரிசையில் இலங்கைக்கு 126 ஆம் இடம் கிடைக்கப்பெற்றுள்ளது. ஊடக சுதந்திரம் உச்ச அளவில் உள்ள நாடாக நோர்வே தெரிவாகியுள்ளது. இஸ்ரே 88 ஆவது இடத்திலும், கனடா 18 ஆவது இடத்திலும், ஜேர்மனி 13 வது இடத்திலும் உள்ளது. அமெரிக்கா 48 ஆவது இடத்தில் உள்ளது. சீனாவுக்கு 177 ஆவது இடம் வழங்கப்பட்டுள்ளது. கடைசி இடமான 180 ஆவது இடத்துக்கு துர்க்மெனிஸ்தான்  தெரிவாகியுள்ளது.

         ஊடகங்களுக்கு ஓரளவு சுதந்திரத்தை வழங்கக் கூடியதாக கருதப்படும் இன்றைய இலங்கை அரசாங்கம் பதவிக்கு வருவதற்கு முன்பாக இலங்கையில் நிலைமை 165வது இடத்தில் காணப்பட்டது. எனவே, இந்த முன்னேற்றமென்பது முக்கியமானது என்ற போதிலும் 2015ஆம் ஆண்டிலிருந்து 2016ஆம் ஆண்டில் 24 இடங்கள் முன்னேறி 141ஆவது இடத்திலிந்த இலங்கை, 2016 இலிருந்து 2017 இற்கு எந்தவித முன்னேற்றத்தையும் வெளிப்படுத்தவில்லை. எனினும் 2018; இல் 131 ஆவது இடத்தினை பெற்ற அதேவேளை 2019 இல் 5 இடங்கள் முன்னேற்றம் கண்டு 126 ஆவது இடத்தை பெற்றுள்ளது.

       உலகின் பல நாடுகளிலே சமூக உறுதிப்பாட்டையும் விட ஊடக  சுதந்திரம் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. ஊடகங்களின் பணி மிகவும் பொறுப்பு வாய்ந்ததாகும். எனினும், கடந்த ஒருவருடத்தில், உலகளாவிய ரீதியில் ஆப்கானிஸ்தானில் 15, சிரியாவில் 11, மெக்ஸிகோவில் 9, ஜேமனில் 8, இந்தியாவில் 8, அமெரிக்காவில் 6 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சீனாவில் 60 , எகிப்தில் 38 , துருக்கியில் 33, சவூதி மற்றும் ஈரானில் 28 ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகில் உள்ள 180 நாடுகளில் நிலவும் ஊடக சுதந்திரநிலைமைக்கு அமைய மேற்கொண்ட ஆய்வுகளுக்கு அமைய,  நாடுகளின் ஊடக சுதந்திர சுட்டெண் பட்டியல்  வெள்ளை, மஞ்சள், செம்மஞ்சள் , சிவப்பு, கருப்பு என்ற 5 பிரிவுகளில் உள்ளடக்கப்படுகின்றன.

சிறந்த ஊடக சுதந்திரம் உள்ள நாடுகள் வெள்ளை நிற வலையத்திற்கு உள்ளவாக்கப்படுகின்து. இதில் 8% மான நாடுகள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஊடக சுதந்திரம் ஓரளவுக்கு சிறப்பாகவுள்ள நாடுகள் மஞ்சள் நிற வலயத்திற்குள் உள்ளவாக்கப்படுகின்து. இம்முறை இந்த பட்டியலில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட 16% மான   நாடுகள் இந்த வலையத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

செம்மஞ்சள் நிறத்திற்குட்பட்ட வலையத்தில் இடம் பெற்ற நாடுகளில் ஊடக சுதந்திரம் தொடர்பான பிரச்சனை நிலவுகின்றதாகும். இதில் ஜப்பான், பிறேசில், இஸ்ரேல், பூட்டான், நேபாளம் உள்ளிட்ட 37% மான நாடுகள் இடம் பெற்றுள்ளன.

சிவப்பு வலையத்திற்குட்பட்ட நாடுகள் என்பது ஊடக சுதந்திரம் மிக சிறப்பாக இல்லை என்பதாகும். ரஷ்யா, இந்தியா, மாலைத்தீவு உள்ளிட்ட 29% மான நாடுகள்  இடம் பெற்றுள்ளன.

ஊடக சுதந்திரம் மிகவும் மோசமாக காணப்படும் நாடுகள் கறுப்பு வலையத்திற்குட்பட்டதாகும். ஊடக சுதந்திரம் மிகவும் மோசமாக காணப்படும் நாடுகளில் வடகொரியா மற்றும் துர்க்மெனிஸ்தான் போன்ற 11% மான நாடுகள்  இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

     சுதந்திரமாக கருத்துகளை வெளிப்படுத்துவதற்கும் சுதந்திரமாகப் பத்திரிகைகளை வெளியிடுவதற்கும் செய்திகளைச் சதந்திரமாக மக்களை சென்றடைவதற்கும் உலகிற்கு வாய்க்கப் பெற்ற ஒரு உரிமையைப் பாதுகாப்பதற்காகத் தங்களது உயிர்களைத் தியாகம்; செய்தவர்களையும் நினைவு கூறும் தருணமாக இன்றைய தினம் அமைகிறது.

         இந்நாளில் ஊடக சுதந்திரத்துக்காகப் பங்களிப்பு செய்யும் ஒருவருக்கு ஆண்டுதோறும் யுனெஸ்கோ நிறுவனத்தினர் யுனெஸ்கோ "குல்லர்மோ கானோ இசாசா உலக பத்திரிகை சுதந்திர விருது" வழங்கிக் கௌரவிக்கின்றனர். இவ்விருது கொலம்பியப் பத்திரிகையாளர் "குல்லர்மோ கானோ இசாசா" என்பவரின் நினைவாக வழங்கப்பட்டு வருகிறது. இவர் 1986 ஆம் ஆண்டு டிசம்பர் 17 இல் அவரது அலுவலகம் முன்பாக வைத்துப் படுகொலை செய்யப்பட்டிருந்தார். அவரின் கொலையின் பின்னரே பத்திரிகை சுதந்திரம் தொடர்பான பேச்சு வலுப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

       உலக அமைதிக்காகவும், பேச்சுச் சுதந்திரத்திற்காகவும் மற்றும் பத்திரிக்கை தர்மத்தினூடாக பல இன்னல்களைத் தாண்டிப் போராடிய பத்திரிகையாளர் ஒருவருக்கு இந்நாளில் 25,000 டொலர் பெறுமதியான பரிசு வழங்கப்படுகின்றது. சுமார் 14 நபர்களைக் கொண்ட குழுவால் குறிப்பிட்ட இத்தெரிவு நடைபெறுகிறது.

"வாள்முனையினை விடவும் பேனா முனையே வலிமையானது"(Pen is more mightier than sword) என்பது ஊடகவியலாளர்களின் பேனாவின் வலிமையை எடுத்து காட்டுமொரு பொன்மொழியாகும். செய்தி அறிக்கையிடலில் ஊடக தர்மத்தை  (Media ethics) பேனுவது மிகவும் அவசியமானது. இதேவேளை, தேவையற்ற அழுத்தங்களுக்கு அடிபணிந்தோ, சுய  லாப நோக்கிலோ செயற்படாமல் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் பொது மக்களின் நலன்களை உறுதி செய்யும் வகையில் செயற்பட வேண்டும்.


ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

ஜனநாயகவெளியை அகலப்படுத்தும் ஊடகங்கள்!





ஜனநாயகத்தின் அடிநாதமாக அமைவது சுயாதீனமான ஊடகத் துறையே ஆகும். ஊடகங்களின் குரல் மக்களின் குரலிற்கு சமமானது. ஊடகங்களில் மேற்
கொள்ளும் தணிக்கை என்பது மக்களின் குரலிற்கான தணிக்கையாகவே அமைகிறது. கடந்த சில நாட்களில் ஊடகங்கள் தவிர்க்க முடியாத ஒன்றாகியது. எமது நாட்டில் இடம்பெற்ற துரதிர்ஷ்டவசமான சம்பவம் அனைத்து சர்வதேச ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாகியது.

இந்நிலையில், உலக அளவில் டுவிட்டரில் அதிக பின்தொடர்பவர்களை (Followers) வைத்திருக்கும் தலைவர்களில் முக்கியமானவர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப். ஆனால் சமீபகாலமாக ருவிட்டரில் தன்னை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதாகவும், ருவிட்டர் நிறுவனம் தனக்கு எதிராக செயல்படுவதே இதற்கு காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டி வந்தார்.

மேலும், ருவிட்டர் நிறுவனம் பழமைவாதிகளுக்கு எதிரான போக்கை கையாண்டு வருவதாகவும், தனது ருவிட்டர் பக்கத்தில் இருந்து ஏராளமானவர்களை நீக்கியதோடு, தனது ஆதரவாளர்கள் டுவிட்டரில் இணைவதற்கான வழிமுறைகளை கடினமாக்கிவிட்டதாகவும் டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆனால் டிரம்பின் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ருவிட்டர் நிறுவனம் மறுத்து வந்தது.

இந்த நிலையில், ருவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சேவை, வெள்ளை மாளிகைக்கு வரவழைத்து டிரம்ப் சந்தித்து பேசினார். அப்போது டிரம்ப், ருவிட்டரில் தன்னை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதற்கான காரணங்கள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ருவிட்டரின் பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் வெள்ளை மாளிகை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் அடுத்த ஆண்டு நடைபெற போகின்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ருவிட்டரின் பங்களிப்பு இருக்க போவது தெளிவாகின்ற அதேவேளை, டிரம்பின் ஜனாதிபதி தேர்தல் வெற்றிக்கு ருவிட்டரின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. டிரம்ப் தனது தொடர்பாடலிற்காக ருவிட்டரிலே அதிகம் தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன், ஜனநாயக கட்சி சார்பில் பைடன் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

       இதேவேளை, இந்தியாவில்  டிக் டொக் செயலிக்கு தடை விதிப்பது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றமே முடிவு செய்யும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
டிக் டொக் செயலிக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, செயலியை பதிவிறக்கம் செய்வதற்கு மத்திய அரசு தடை விதிக்குமாறு உத்தரவிட்டது. இதுதொடர்பான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், டிக் டொக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்துவிட்டது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, எதிர்மனு தாரரிடம் விளக்கம் கேட்கப்படவில்லை எனவும், எனவே, டிக் டொக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் எனவும் கோரி, உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதிகள், எதிர்மனுதாரரின் விளக்கத்தையும் பெற்று, அதன் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் என கூறினர். சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க தவறினால், டிக் டொக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி, உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதேவேளை, எமது நாட்டில் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ள சமூக வலைத்தளங்களின் செயற்பாடுகளை வழமைக்கு கொண்டு வர மறுபரிசீலனை செய்து வருவதாக  ஜனாதிபதி தெரிவித்துள்ளதுடன் பொய்யான செய்திகள் பரவுவதை கட்டுப்படுத்த முடியவில்லையென்றால் சமூக வலைத்தளங்களை முழுமையாக தடை செய்து விடுவேன் எனவும் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊடகங்களின் பிரதானிகள் மற்றும் ஊடக ஆசிரியர்களை சந்தித்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

கடந்த 21 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற தற்கொலை குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து நாட்டின் பாதுகாப்பிற்காக பேஸ்புக்,ருவிட்டர், வட்ஸ்அப் ,வைபர் மற்றும் யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களின் பாவனை தடைசெய்யப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, சமூக வலைதளங்களினை தற்காலிகமாக தடைசெய்ததன் காரணமாக, பொருளாதார ரீதியில் நாடு இழப்பினை சந்தித்தமை கவனிக்கதக்கது.

தற்போதைய காலகட்டத்தில் பெரியவர்கள், சிறியவர்கள் என அனைத்து தரப்பையும் சமூக வலைத்தளங்களான பேஸ்புக்,வைபர்  வட்ஸ்அப் மற்றும் யூ டியூப் போன்றவை அதிக வரவேற்பை பெற்று இருக்கின்றன.

இத்தகைய ஊடகங்களில்  நாள்தோறும் மணிக்கணக்கில் நேரம் செலவிடும் இளைய தலைமுறையினர் ஏராளம். அப்படி சமூக ஊடகங்களில் அடிமையாகிப்போனவர்களுக்கு, அவற்றின் முடக்கம் தகவல்களினை பெற்றுக்கொள்ள சிரமத்தை உண்டு பண்ணியபோதும் மாற்று வழியாக VPN apps ஊடாக பலர் சமூக ஊடகங்களினை பார்வையிட்டனர் என்பது கவனிக்கத்தக்கது. இதேவேளை, சமூக ஊடகங்களில் தவறான மற்றும் தேசிய ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் பதிவிடுவோருக்கு, 3 அல்லது 5 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற தகவலும் அண்மைய நாட்களில் ஊடகங்களில் வெளியானது.

இந்த நிலையில், ஜெலன்ஸ்கி உக்ரைனின் தேர்தலில் வெற்றி பெற்றார். ஜெலன்ஸ்கி, தனது 17 வயதில் உள்ளூர் தொலைக்காட்சி நடத்திய நகைச்சுவை போட்டியில் பங்கேற்றார்.
அதனை தொடர்ந்து, தொலைகாட்சி தொடர்களில் நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் நடக்க தொடங்கினார். அவரது தொலைக்காட்சி  தொடர்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதால் பிரபல நகைச்சுவை நடிகராக உருவெடுத்தார். கடந்த 2003-ம் ஆண்டு, தனது பள்ளி தோழியான ஒலனா கியாஷ்கோவை காதல் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன.

இந்த நிலையில், ஜெலன்ஸ்கி கதா நாயகனாக நடித்த ‘மக்களுக்கான வேலைக்காரன்’ (Servant of people) என்கிற தொலைக்காட்சி  தொடர் கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாக தொடங்கியது.

கதையின் படி பள்ளிக் கூட ஆசிரியரான ஜெலன்ஸ்கி, நாட்டில் நடக்கும் ஊழலை விமர்சித்து பேசும் வீடியோ சமூகவலைத் தளங்களில் வேகமாக பரவி, அதன் மூலம் அவர் நாட்டின் அதிபர் ஆவார்.

இந்த கதைக்களம்தான் ஜெலன்ஸ்கியை அரசியலுக்கு வர தூண்டியது. ‘மக்களுக்கான வேலைக்காரன்’ தொடர் மக்களிடம் பெரும் ஆதரவை பெற்றதன் மூலம், உக்ரைன் மக்கள் தற்போதைய அரசின் மீது அதிருப்தியில் இருப்பதை அவர் தெரிந்துகொண்டார்.

இதையடுத்து, தனது தொலைகாட்சி  தொடரின் தலைப்பையே தனது கட்சியின் பெயராக கொண்டு ‘மக்களுக்கான வேலைக்காரன்’ என்ற கட்சியை கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கினார். மற்றத்தை விரும்பும் மக்களின் மனநிலையை உணர்ந்து, அதிபர் தேர்தலில் களம் இறங்கினார்.

அதன்படியே மாற்றத்துக்காக மட்டுமே அரசியலில் துளியும் அனுபவம் இல்லாத ஜெலன்ஸ்கியை மக்கள் அதிபராக தேர்வு செய்து இருக்கிறார்கள். அவர் அடுத்த மாதம் அந்நாட்டின் அதிபராக பொறுப்பு ஏற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாக்குப்பதிவு முடிவுகளுக்கு பின்னர் மக்கள் மத்தியில் பேசிய ஜெலன்ஸ்கி, “நான் உங்களை ஒருபோதும் விட்டுவிடமாட்டேன்” என்றார். மேலும் அவர் “நான் இன்னும் அதிகாரப்பூர்வமாக அதிபராகவில்லை. ஆனால், உக்ரைனின் குடிமகனாக அனைத்து நாடுகளிடமும் ஒன்றை தெரிவிக்க விரும்புகிறேன். எங்களை பாருங்கள், இங்கு எல்லாமுமே சாத்தியமானது” எனவும் கூறினார்.

  இவ்வாறான கடந்த கால சம்பவங்கள் ஊடகங்களின் தாக்கம் மற்றும் அதிகாரம் போன்றவற்றை காட்டுகிறது. குறிப்பாக, சமூக ஊடகங்கள் அபரிமிதமான செல்வாக்கை உலகலாவிய ரீதியாக பெற்றுள்ளது. இதேவேளை, பேஸ்புக் நிறுவனர் சமூக ஊடகங்களில் தவறாக வழிநடத்தும் தகவல்கள் மற்றும் போலி செய்திகள் காணப்படுகிறது என்பதனை ஒத்துக்கொண்ட அதேவேளை, இந்திய தேர்தலில் பிரசாரம் தொடர்பாக தவறான செய்திகள் பேஸ்புக்கில் இருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்கள் ஒவ்வொருவரின் உரிமையையும் அதிகரித்துள்ளதுடன் மக்கள் தமது உரிமைக்காக போராடமுடியும். இது உள்ளூர்,வெளியூர் என்ற எல்லைக்கு அப்பாற்பட்டதாகும். இன்று பல போராட்டங்கள் சமூக ஊடகங்கள் ஊடாகவே ஒருங்கினைக்கப்படுகின்றன. உதாரணமாக, பிரான்ஸில் நடைபெறும் மஞ்சள் அங்கி போராட்டத்தை குறிப்பிடலாம். தகவல்கள் மற்றும் விவாதங்கள் ஊடகவே தெளிவு மற்றும் தீர்வுகளை பெற்றுக் கொள்ள முடியும். இதற்காகவே ஊடகங்கள் சிறந்த தொடர்பாடல் கருவிகளான உரையாடல், கருத்து கணிப்புகள், விவாதங்கள், கருத்தாடல்கள் போன்றவற்றை மேற்கொள்கின்றன . ஊழல் மற்றும் சுரண்டல்களுக்கு எதிராக போராடுவதில் ஊடகங்களிற்கு பிரதான பங்குண்டு. ஊடகங்கள் தனித்து அறிக்கையிடுவது மாத்திரமல்லாது வெளிப்படையான நிர்வாகத்திறனை பேணுவதற்கு சிறந்த கண்காணிப்பாளராக ஊடகங்கள் இருக்க வேண்டும்.

மேலும், ஊடகங்களினை அணுகும் போது, ஊடக எழுத்தறிவு முக்கியமானமுக்கியமானது. அதாவது,  தகவலை வெவ்வேறு பட்ட வடிவில் மதிப்பிட்டு,ஒழுங்கு படுத்தி அணுகும் ஆற்றலே ஊடக எழுத்தறிவு என்று வரைவிலக்கனப்படுத்தப்படுகின்றது. சமூகத்தில் ஊடகத்தின் பங்கினை புரிந்து கொள்ளும் ஆற்றல் ஊடக எழுத்தறிவு என்று மேலும் ஒரு வரைவிலக்கனம் காணப்படுகிறது. எனவே, எமது நாட்டில் எழுத்தறிவு மட்டம் உயர்ந்து காணப்படும் அதேசமயம் ஊடக எழுத்தறிவு பாரிய சரிவுத் தன்மையிலேயே காணப்படுகிறது.


செவ்வாய், 23 ஏப்ரல், 2019

சர்வதேச ஒத்துழைப்பு தற்காலத்தில் சமூக ஊடகங்களிற்கே மாறியுள்ளது!

     
       
ஊடகம் என்பது ஜனநாயகத்தின் நான்காம் தூண். மக்களுக்கும், அரசாங்கத்துக்கும் பாலமாக நின்று அனைத்து செய்திகளையும் உலகிற்குச் சொல்லும் மிகப்பெரிய சாதனம்  ஊடகம் எனலாம். இலங்கை  என்கின்ற இந்த நாட்டில் மூவின மக்கள் வாழ்கின்றனர். அந்த  நாட்டில் ஊடகம் எத்தகைய செயல்பாடுகள் செய்ய வேண்டுமோ, அதற்கு சற்றும் தொடர்பில்லாத செயல்பாடுகளை சில சமயங்களில், சில ஊடகங்கள் செய்துகொண்டிருக்கிறன. இதில் அச்சு,இலத்திரனியல் மற்றும் சமூக  ஊடங்களின் செயல்பாடுகளைப் பற்றி சில விடயங்களை தொட்டு செல்வதாகவே இக் வலைப்பூ பதிவு அமையபோகின்றது.

       தற்போதைய உலகமயமாக்கல் காலகட்டத்தில் ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு தகவல்களினை பரிமாற்றம் செய்து கொள்ள மிகவும் சிறந்த ஊடகங்களாக சமூக ஊடகங்கள் காணப்படுகிறது. சமூக ஊடகங்கள் தொழில்நுட்பம், தொலைபேசி மற்றும் இணையத்தின் வரவுகள் காரணமாக நடைமுறையை எளிமையாக்கியுள்ளது.

     2000 ம் ஆண்டிற்கு முன்பு சமூக ஊடகங்கள் தொடர்பாக விளக்கம் கொடுக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டால், அகராதியைதான் நாடவேண்டிய நிலைமை இருந்தது. மாறாக, தற்போது நிலமை முற்றிலும் மாற்றம் அடைந்து விட்டது. அரசியல், வணிகம்,தனிப்பட்ட திறமைகளை வெளிக்காட்டல் மற்றும் சமூகம் சார் விஷயங்களை பகிர்ந்து கொள்ள மிகவும் சிறந்த ஊடகமாக சமூக ஊடகங்கள் காணப்படுகிறது.

       உண்மை ஆரம்பிப்பதற்கு முன்னரே பொய் உலகத்தை சுற்றி வந்து விடும் என்பதே வெளிப்படை. இதற்கு தக்க வாய்பாக சமூக ஊடகங்கள் காணப்படுகிறது. உயிர்த்தெழுந்த ஞாயிறு அன்று நடந்த   தொடர்சியான குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பான தவறான செய்திகளும், வதந்திகளும் பரவாமல் தடுக்கும் வகையில் சமூக வலைத்தளங்களை அரசு முடக்கியது.

                        இனமுறுகலிற்கான தூண்டுகோலாக சமூக ஊடகங்கள் காணப்படும் என்ற காரணத்தை கருத்தில் கொண்டே இலங்கை அரசாங்கம் சமூக ஊடகங்களான Facebook, Viper,You,Instragram, YouTupe மற்றும்  What's app போன்ற சமூக ஊடகங்கள் தகவல் தொடர்பு ஒழுங்கு படுத்தல்  ஆனைக்குழுவினால் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டது.

      இதேவேளை, சமூக ஊடகங்கள் அற்ற நிலையில் அக்குறையை பிரதான ஊடகங்கள் நிவர்த்தி செய்ததுடன் நம்பகத்தன்மை மற்றும் உண்மைத்தன்மையை பொறுப்புணர்வுடனும் ஊடக தர்மத்துடனும் மக்களிற்கு தெளிவுபடுத்தியிருந்தமை இலத்திரனியல் ஊடகங்களினையே சாரும்.

       சமூக ஊடகங்களின் மிகப்பெரிய பலம் யாதெனில் ஒருகருத்தை அல்லது செய்தியை சொற்ப நொடிகளில் பல மில்லியன் கணக்கான மக்களிடம் கொண்டு சேர்ப்பதாகும். இதேபோன்றே, உண்மை பரவும் வேகத்தை காட்டிலும் பொய் பரவும் வேகம் அதிகமாகும். இனைய ஊடகங்களின் உண்மை நிலையாதெனில் யார் வேண்டுயானாலும் எதை வேண்டுமானாலும் எழுதலாம் இந்நிலையே பாரிய ஆபத்தான நிலையாக அமைவதுடன் இன அடிப்படை வாதிகள் தமது சுயலாப அரசியலை சாதகமாக்கிக் கொள்ளவும் வாய்ப்பாக அமைகிறது.

          சமூக வலைத்தளங்களில் ஒன்றான Facebook தடைசெய்யபடவேண்டும் என்ற நிலையில் கருத்துக்கள் காணப்பட்டாலும் இலங்கையை பொறுத்தவரை கட்டுப்படுத்துவதே சிறந்தது. இலங்கையில் தற்காலிக தடை சமூக ஊடகங்களிற்கு காணப்பட்ட காலகட்டத்தில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் facebook என்பது சிறந்த தொழில்நுட்பம் எனினும் மோசமான வன்முறைகள் இடம்பெறுவதற்குரிய களமாக இது அமையக்கூடாது.

   இதேவேளை,எத்திரியா,வடகொரியா, சீனா மற்றும் ஈரான் போன்ற நாடுகளில் Facebook ற்கு தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, சமூக ஊடகங்களில் ஒன்றான Facebook நிறுவனமானது இலங்கை அரசாங்கத்துடன் எவ்வாறு எதிர்காலத்தில் இன மத குரோத பதிவுகளை நீக்கலாம் என்பது தொடர்பில் ஆலோசித்து வருகிறது.

    உலகளாவிய ரீதியில் இடம்பெற்ற தேர்தல்கள் கூட சமூக ஊடகங்களின் செல்வாக்கை சான்று பகர்வனவாக அமைந்துள்ளது உதாரணமாக பிரான்ஸில் இடம்பெற்ற மஞ்சள் அங்கி போராட்டம் மற்றும் இந்தியாவில் அண்மையில்,  'டிக்டாக்' செயலி App மூலம் பகிரப்படும் வீடியோக்களால் பல்வேறு சமூகப் பிரச்சினைகள் ஏற்படுவதாக தெரிவித்து அந்த செயலிக்கு தடைவிதிக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

         அந்த மனுவில், குழந்தைகள், மாணவர்கள் மட்டுமல்லாமல் அனைத்து வயதினரும் இதனை பயன்படுத்துவதாகவும், இதனால் உயிரிழப்புகள் அதிகரிப்பதாகவும் குறிப்பிட்டார். டிக்டாக் செயலியை பயன்படுத்திய 400க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், பல்வேறு வழிகளில் தீமையை ஏற்படுத்தும் டிக்டாக் செயலிக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

           இந்த  மனுமீதான விசாரணை, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதனை பரிசீலித்த நீதிபதிகள், தமிழ்நாட்டில் குழந்தைகள், இளைஞர்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளதால், குழந்தைகளின் தனிநபர் சுதந்திரத்தை பாதுகாக்கும் சட்டத்தை தம் நாட்டிலும் ஏன் அமுல்படுத்தக்கூடாது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

           நீதிமன்றத்தின் தலையீடு இல்லாமல், இதுபோன்ற செயலிகளை தடைசெய்ய அரசே உடனடியாக நடவடிக்கை எடுக்க முயற்சி செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். டிக் டொக் செயலியை முழுவதுமாக தடை செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும், டிக்டாக் எனப்படும் குறும்புத்தனமான வீடியோ எடுப்பதற்கும் அதை தொலைக்காட்சியில் வெளியிடவும் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

    மேலும், இடம்பெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து தொடர்சியான குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பான தவறான செய்திகளும், வதந்திகளும் பரவாமல் தடுக்கும் வகையில் சமூக ஊடகங்கள் இலங்கையில் தடைசெய்யப்பட்ட போதும் VPN மற்றும் Proxy servers வாயிலாக ஒரு சிலர் சமூக ஊடக பா வனையில் ஈடுபட்டனர். அதேசமயம் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ன சமூக ஊடகங்கள் கருத்துக்களை பரிமாறி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

      மேலும்,போலியான செய்திகள் சமூக ஊடகங்கள் ஊடாக பரப்பப்பட்டு வருகின்றன என்ற உண்மையை நீண்டகாலமாக எதிர்த்து வந்த Facebook CEO மார்க் அண்மையில் உண்மையை ஒத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். அதன் விளைவாகவே, Facebook நிறுவனமானது அரசாங்கங்களுடன் இனைந்து தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்க கூடிய செய்திகள் தடைசெய்யபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ஜனநாயகம், பன்மைத்துவம் மற்றும் சமூக ஒருமைப்பாடு போன்றவற்றிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளக்கூடாது. இலங்கை அரசாங்கம் சமூக ஊடகங்களினை தற்காலிகமாக இனமுறுகலை தணிக்க தடைசெய்தமை சரியானதா? என்று கடந்த காலங்களில் Twitter ல் நடாத்தப்பட்ட கருத்துகணிப்பு ஒன்றில் "yes" என்கிற பதிலே அதிகமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

      சமூக ஊடகங்களில் ஒரு செய்தியை பகிர்ந்து கொள்ளவும் மற்றும் விருப்பு இடமுன்னரும் குறித்த செய்தியின் உண்மை தன்மை குறித்து(fact checking)ஆழமாக ஆராய்ந்து கொள்ள வேண்டும். காரணம், ஒவ்வொரு செய்திகளின் பின்னாலும் அரசியல் நிகழ்ச்சி நிரவல் ஒன்று உள்ளது. தனிநபர்,சமூக மற்றும் நாடுகளிற்கெதிராக வெறுப்பை உண்டாக்கும் வகையில் செய்திகளை வடிவமைக்கும் அதிகாரம் சமூக ஊடகங்கள் வாயிலாக இலகுவாக கிடைக்கின்றது. ஏதாவது ஒரு செய்தி பொய்யானது என்று உணரும் சமயத்தில் அந்த செய்திகளினை பரிமாறாமல் விடுவது புத்திசாலித்தனமானது.

    சமூகமயமாக்கலில் சமூக ஊடகங்கள் பங்கு காத்திரமானது என்று பலர் வாதிட்டாலும் உண்மையான சமூகமயமாக்கலிற்கு கிடைத்த சாபக்கேடாகவே சமூக ஊடகங்கள் காணப்படுகிறது என ஒரு சாரார் வாதிட்டாலும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இந்திய பிரதமர் மோடி போன்றோர் சமூக ஊடகங்களினையே அதிகம் பயன்படுத்துகின்றார்கள். நரேந்திர மோடி மிக அரிதாகவே செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொள்வதும் கவனிக்கதக்கது.

       சமூகஊடகங்களின் பாவனை தொடர்பாக சரியான முறையில் அறிந்து கொள்ள வேண்டும். உலகலாவிய பொருளாதார அமைப்புக்குள் மூலதனம் மற்றும் தொடர்பாடலிற்காக ஏங்கி நிற்கும் மூன்றாம் உலகநாடுகளின் பிரச்சினைகளிற்கான தீர்வாக ஊடகங்களின் தேவை அத்தியாவசியம். தேவையானதை தேவையான நேரத்தில் சொல்ல சமூக ஊடகம் கட்டாயம் தேவை. சமூகப் பொறுப்பு ஊடகங்களுக்கு மிக அதிகம். அதன் செயற்பாடுகள் சமூகத்தில் பெரும்மாற்றங்களை உண்டாக்கும். அதனை உணர்ந்து உணர்ந்து கொள்வதுடன் பிரஜைகள் ஊடகவியலின் நன்மையான அம்சங்களை பின்பற்றி  செயல்பட்டாலே சமூகம் நற்பாதையில் பயணிக்கும் அதேவேளைசமூக ஊடகங்களின் பாவனை எந்தவொரு பின்தங்கிய பகுதியும் தனித்து விடப்படும் நிலையில் இருந்து தவிர்க்கப்படுவதற்கு காரணமாகிறது. மேலும், சர்வதேச வர்த்தகம் வகித்து வந்த செல்வாக்கு உலகமயமாக்கல் காரணமாக தொடர்பாடல் மற்றும் ஊடகங்களுக்கு மாறியுள்ளது.

ஆக்கம்
இ.தனஞ்சயன்

வெள்ளி, 19 ஏப்ரல், 2019

ஊடக சுதந்திர சுட்டெண் பட்டியலில் இலங்கை முன்னேற்றம்!

சர்வதேச ஊடக சுதந்திரம் தொடர்பான சுட்டெண்ணுக்கு அமைய 2017 ஆம் ஆண்டிலும் பார்க்க 2018 ஆம் ஆண்டில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளது.

ஊடக சுதந்திர சுட்டெண் என்பது ஒரு நாட்டில் ஊடகங்கள் எந்த அளவுக்கு சுதந்திரமாக இயங்குகின்றது என்பது பற்றிய ஒரு அளவீடு ஆகும்.

இது உலகெங்கும் இயங்கும் 14 அமைப்புகள், 130  ஊடகவியாளர்கள், ஊடக ஆய்வாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஆகியோரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அமைந்தாகும்.

இந்த மதிப்பீட்டை எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு  வெளியிடுகிறது. இந்த அறிக்கையில் மிகச் சிறிய நாடுகள் தவிர்த்து 180 நாடுகளிலுள்ள ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் சுயாதீனத் தன்மை பற்றி ஆழ்ந்த ஆய்வினை மேற்கொண்டு பட்டியல் தயாரிக்கப்படுகின்றது.

மிகச் சிறந்த ஊடக சுதந்திரம் நிலவும்  நாடுகளாக இம்முறை (2019) நோர்வே, பின்லாந்து, சுவீடன், நெதர்லாந்து மற்றும் டென்மார்க் போன்ற நாடுகள் இடம்பெறுகின்றன. மிகவும் மேசமான நாடுகளாக ஈரான், வட கொரியா, சீனா, எதிர்ரேரியா, துர்க்மெனிஸ்தான்  ஆகிய நாடுகள் இடம்பெறுகின்றன.

2017 ஆம் இலங்கை இந்த சுட்டெண் பட்டியலில் 141 வது இடத்தில் இடம் பெற்றிருந்தது. எனினும் 2018 இல் இலங்கை  131 இடத்தில் இடத்திற்கு முன்னேற்றம்  பெற்றதோடு இம் முறை 5 இடங்கள் முன்னேற்றமடைந்து 126 ம் இடத்திற்கு முன்னோக்கி இடம்பெற்றமை  விசேட அம்சமாகும்.

இந்த பட்டியலில் முதலாவது இடத்தில் நோர்வேயும் இரண்டாம் இடத்தில் பின்லாந்தும் இடம் பெற்றுள்ளது.

அந்தந்த நாடுகளில் நிலவும் ஊடக சுதந்திரநிலைமைக்கு அமைய நாடுகள் வெள்ளை, மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பு, கறுப்பு என்ற 5 பிரிவுகளில் உள்ளடக்கப்படுகின்றன.

சிறந்த ஊடக சுதந்திரம் உள்ள நாடுகள் வெள்ளை நிற வலையத்திற்கு உள்ளவாக்கப்படுகின்து. இதில் 8% மான நாடுகள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஊடக சுதந்திரம் ஓரளவுக்கு சிறப்பாகவுள்ள நாடுகள் மஞ்சள் நிற வலையத்திற்குள் உள்ளவாக்கப்படுகின்து. இம்முறை இந்த பட்டியலில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட 16% மான   நாடுகள் இந்த வலையத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

செம்மஞ்சள் நிறத்திற்குட்பட்ட வலையத்தில் இடம் பெற்ற நாடுகளில் ஊடக சுதந்திரம் தொடர்பான பிரச்சனை நிலவுகின்றதாகும். இதில் ஜப்பான், பிறேசில், இஸ்ரேல், பூட்டான், நேபாளம் உள்ளிட்ட 37% மான நாடுகள் இடம் பெற்றுள்ளன.

சிவப்பு வலையத்திற்குட்பட்ட நாடுகள் என்பது ஊடக சுதந்திரம் மிக சிறப்பாக இல்லை என்பதாகும். ரஷ்யா, இந்தியா, மாலைத்தீவு உள்ளிட்ட 29% மான நாடுகள்  இடம் பெற்றுள்ளன.

ஊடக சுதந்திரம் மிகவும் மோசமாக காணப்படும் நாடுகள் கறுப்பு வலையத்திற்குட்பட்டதாகும். ஊடக சுதந்திரம் மிகவும் மோசமாக காணப்படும் நாடுகளில் வடகொரியா மற்றும் துர்க்மெனிஸ்தான் போன்ற 11% மான நாடுகள்  இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எல்லையற்ற ஊடகவியலாளர்கள் என்ற சர்வதேச அமைப்பினால் இந்த சுட்டெண் தயாரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அமெரிக்கா 48 ஆவது இடத்திலும் அரசியல் குழப்பம் காணப்படும் வெனிசுலா 148 ஆவது இடத்தில் உள்ளது. அமெரிக்க இந்த பட்டியலை நிராகரித்துள்ளமையும் கவனிக்க வேண்டிய விடயமாகும். தேர்தல் மற்றும் இந்து தத்துவ வாதத்தை கக்கி வரும் இந்தியா 40 ஆவது இடத்திலுள்ளது.

கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் தற்காலத்தில்  ஊடகங்களுக்கு ஓரளவு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது எனலாம். வழங்கப்பட்டுள்ள ஊடக சுதந்திரத்தைப் பயன்படுத்தி மீண்டும் இந்த நாட்டில் குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்க கூடாது.ஊடக ஒடுக்குமுறை குறைப்பட்டுள்ளதோடு வெள்ளை வான் கலாசாரம், ஊடகவியலாளர் படுகொலை மற்றும் காணாமல் போதலுக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது .

எமது நாட்டு ஊடகத்துறையினை பொறுத்தவரை, ஊடகசுதந்திரம் என்பது அந்த சுதந்திரத்தை மீறும் வகையில் தான் தற்போது பெரும்பாலும் பாவிக்கப்படுகின்றது. இது ஊடக சுதந்திரத்திற்கு ஒரு ஆரோக்கியமான நிலைமை அல்ல.

 இனவாத சாயத்தை பூசும் ஊடகங்களே காணப்படுகிறது. தமது விற்பனை செய்தி பண்டமாக இனத்துவேச செய்திகளே ஊடகங்களினால் ஊக்குவிக்கப்படுகின்றன. இந்த நிலைமை  இந்நாட்டை மீண்டும் இருண்ட யுகத்திற்குள் தள்ளி விட ஊடகங்கள் விரும்புகின்றனவா என்று கூட மக்கள் கேட்கும் அளவுக்கு நிலைமை காணப்படுகின்றது.

ஊடகங்கள் எப்போதும் பொறுப்புணர்வுடன் செயற்படத் தவறக் கூடாது. இவ்விடயத்தைக் கருத்தில் கொள்ளாது செயற்படும் பட்சத்தில் மீண்டும் ஜனநாயகம், ஊடக சுதந்திரம் குறித்து கண்ணீர் சிந்தும் நிலைமைக்கு உள்ளாக நேரிடும். அவ்வாறான ஒரு நிலைமை ஏற்பட்டிராமல் செயற்பட வேண்டியது சகல ஊடகங்களதும் முன்பாக இருக்கும் தலையாய பொறுப்பும் கடமையுமாகும்.

ஆக்கம்
இ.தனஞ்சயன் 

ஊடக சுதந்திர சுட்டெண் பட்டியலில் இலங்கை முன்னேற்றம்!

சர்வதேச ஊடக சுதந்திரம் தொடர்பான சுட்டெண்ணுக்கு அமைய 2017 ஆம் ஆண்டிலும் பார்க்க 2018 ஆம் ஆண்டில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளது. ஊடக சுதந்திர சுட்டெண் என்பது ஒரு நாட்டில் ஊடகங்கள் எந்த அளவுக்கு சுதந்திரமாக இயங்குகின்றது என்பது பற்றிய ஒரு அளவீடு ஆகும். இது உலகெங்கும் இயங்கும் 14 அமைப்புகள், 130 ஊடகவியாளர்கள், ஊடக ஆய்வாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஆகியோரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அமைந்தாகும். இந்த மதிப்பீட்டை எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு வெளியிடுகிறது. இந்த அறிக்கையில் மிகச் சிறிய நாடுகள் தவிர்த்து 180 நாடுகளிலுள்ள ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் சுயாதீனத் தன்மை பற்றி ஆழ்ந்த ஆய்வினை மேற்கொண்டு பட்டியல் தயாரிக்கப்படுகின்றது. மிகச் சிறந்த ஊடக சுதந்திரம் நிலவும் நாடுகளாக இம்முறை (2019) நோர்வே, பின்லாந்து, சுவீடன், நெதர்லாந்து மற்றும் டென்மார்க் போன்ற நாடுகள் இடம்பெறுகின்றன. மிகவும் மேசமான நாடுகளாக ஈரான், வட கொரியா, சீனா, எதிர்ரேரியா, துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகள் இடம்பெறுகின்றன. 2017 ஆம் இலங்கை இந்த சுட்டெண் பட்டியலில் 141 வது இடத்தில் இடம் பெற்றிருந்தது. எனினும் 2018 இல் இலங்கை 131 இடத்தில் இடத்திற்கு முன்னேற்ற பெற்றதோடு இம் முறை 5 இடங்கள் முன்னேற்றமடைந்து 126 ம் இடத்திற்கு முன்னோக்கி இடம்பெற்றமை விசேட அம்சமாகும். இந்த பட்டியலில் முதலாவது இடத்தில் நோர்வேயும் இரண்டாம் இடத்தில் பின்லாந்தும் இடம் பெற்றுள்ளது. அந்தந்த நாடுகளில் நிலவும் ஊடக சுதந்திரநிலைமைக்கு அமைய நாடுகள் வெள்ளை, மஞ்சள், செம்மஞ்சல், சிவப்பு, கருப்பு என்ற 5 பிரிவுகளில் உள்ளடக்கப்படுகின்றன. சிறந்த ஊடக சுதந்திரம் உள்ள நாடுகள் வெள்ளை நிற வலயத்திற்கு உள்ளவாக்கப்படுகின்து. இதில் 8% மான நாடுகள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஊடக சுதந்திரம் ஓரளவுக்கு சிறப்பாகவுள்ள நாடுகள் மஞ்சள் நிற வலயத்திற்குள் உள்ளவாக்கப்படுகின்து. இம்முறை இந்த பட்டியலில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட 16% மான நாடுகள் இந்த வலையத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. செம்மஞ்சள் நிறத்திற்குட்பட்ட வலையத்தில் இடம் பெற்ற நாடுகளில் ஊடக சுதந்திரம் தொடர்பான பிரச்சனை நிலவுகின்றதாகும். இதில் ஜப்பான், பிறேசில், இஸ்ரேல், பூட்டான், நேபாளம் உள்ளிட்ட 37% மான நாடுகள் இடம் பெற்றுள்ளன. சிவப்பு வலையத்திற்குட்பட்ட நாடுகள் என்பது ஊடக சுதந்திரம் மிக சிறப்பாக இல்லை என்பதாகும். ரஷ்யா, இந்தியா, மாலைத்தீவு உள்ளிட்ட 29% மான நாடுகள் இடம் பெற்றுள்ளன. ஊடக சுதந்திரம் மிகவும் மோசமாக காணப்படும் நாடுகள் கறுப்பு வலையத்திற்குட்பட்டதாகும். ஊடக சுதந்திரம் மிகவும் மோசமாக காணப்படும் நாடுகளில் வடகொரியா மற்றும் துர்க்மெனிஸ்தான் போன்ற 11% மான நாடுகள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. எல்லையற்ற ஊடகவியலாளர்கள் என்ற சர்வதேச அமைப்பினால் இந்த சுட்டெண் தயாரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அமெரிக்கா 48 ஆவது இடத்திலும் அரசியல் குழப்பம் காணப்படும் வெனிசுலா 148 ஆவது இடத்தில் உள்ளது. அமெரிக்க இந்த பட்டியலை நிராகரித்துள்ளமையும் கவனிக்க வேண்டிய விடயமாகும். தேர்தல் மற்றும் இந்து தத்துவ வாதத்தை கக்கி வரும் இந்தியா 40 ஆவது இடத்திலுள்ளது. கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் தற்காலத்தில் ஊடகங்களுக்கு ஓரளவு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது எனலாம். வழங்கப்பட்டுள்ள ஊடக சுதந்திரத்தைப் பயன்படுத்தி மீண்டும் இந்த நாட்டில் குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்க கூடாது.ஊடக ஒடுக்குமுறை குறைப்பட்டுள்ளதோடு வெள்ளை வான் கலாசாரம், ஊடகவியலாளர் படுகொலை மற்றும் காணாமல் போதலுக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது . எமது நாட்டு ஊடகத்துறையினை பொறுத்தவரை, ஊடகசுதந்திரம் என்பது அந்த சுதந்திரத்தை மீறும் வகையில் தான் தற்போது பெரும்பாலும் பாவிக்கப்படுகின்றது. இது ஊடக சுதந்திரத்திற்கு ஒரு ஆரோக்கியமான நிலைமை அல்ல. இனவாத சாயத்தை பூசும் ஊடகங்களே காணப்படுகிறது. தமது விற்பனை செய்தி பண்டமாக இனத்துவேச செய்திகளே ஊடகங்களினால் ஊக்குவிக்கப்படுகின்றன. இந்த நிலைமை இந்நாட்டை மீண்டும் இருண்ட யுகத்திற்குள் தள்ளி விட ஊடகங்கள் விரும்புகின்றனவா என்று கூட மக்கள் கேட்கும் அளவுக்கு நிலைமை காணப்படுகின்றது. ஊடகங்கள் எப்போதும் பொறுப்புணர்வுடன் செயற்படத் தவறக் கூடாது. இவ்விடயத்தைக் கருத்தில் கொள்ளாது செயற்படும் பட்சத்தில் மீண்டும் ஜனநாயகம், ஊடக சுதந்திரம் குறித்து கண்ணீர் சிந்தும் நிலைமைக்கு உள்ளாக நேரிடும். அவ்வாறான ஒரு நிலைமை ஏற்பட்டிராமல் செயற்பட வேண்டியது சகல ஊடகங்களதும் முன்பாக இருக்கும் தலையாய பொறுப்பும் கடமையுமாகும். ஆக்கம் இ.தனஞ்சயன்