மனித வாழ்க்கையில் மிகவும் அவசியமானதாகும் வாசிப்பு விளங்குகிறது. வாசிப்பின் பிரதானத்தை புரிந்து கொள்ளாதவர்கள் அறிவுச்செல்வத்தை சம்பாதிக்க முடியாதவர்கள். அபிவிருத்தி அடைந்த நாடுகளின் முன்னேற்றத்தின் பின்னால் புத்தக வாசிப்பு பின்னணியாக உள்ளவை மறுக்கமுடியாத உண்மை.வாழ்க்கையில் சாதித்த பெரிய அறிஞர்கள் புத்தக வாசிப்பு பிரியர்களாக உள்ளனர் என்பது அவர்களின் சிந்தனைமிக்க கருத்துக்களில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது;ஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது
"ஒரு நூலகம் கட்டுவேன்" என்று பதிலளித்தாராம் மகாத்மா காந்தி,அதேபோல்,
கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் போதும் என்றார்
தந்தை பெரியார்
தனிமைத்தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன் என்று பதிலளித்தாராம் ஜவஹர்லால் நேரு, என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்றாராம் பெட்ரண்ட் ரஸல்,
மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் புத்தகம் என பதிலளித்தார் சார்பு கொள்கையை முன்வைத்த
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்,
வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம் சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றாராம் மாமனிதர்
நெல்சன் மண்டேலா,
பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம் புரட்சியாளன் லெனின்,
ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன் பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம் சார்லிசாப்லின்,
ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான் என்றார் அமெரிக்க ஜனாதிபதி
வின்ஸ்டன் சர்ச்சில்,
பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான் என்றாராம்
மார்டின் லூதர்கிங்,
தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக்கொண்டே இருந்தாராம்
பகத்சிங்,
நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து
என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்.
ஆபிரகாம் லிங்கன்,ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள்; அவனே எனது வழிகாட்டி!ஜூலியஸ் சீசர்,உலக வரைபடத்திலுள்ள மூலைமுடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறாயா, ஒரு நூலகத்துக்குச் செல்.டெஸ்கார்டஸ்,
போதும் என்று நொந்துபோய், புதுவாழ்வைத் தேடுகிறீர்களா… ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்கு.இங்கர்சால்,
சில புத்தகங்களை சுவைப்போம். சிலவற்றை அப்படியே
விழுங்குவோம் சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம்!
பிரான்சிஸ் பேக்கன்
புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளைவிட
பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே!
லெனின்,உண்மையான வாசகன், வாசிப்பதை முடிப்பதே இல்லை!
ஆஸ்கார் வைல்ட்,உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு!
சிக்மண்ட் பிரைட் போன்ற உலகளாவிய ரீதியில் புகழ்பெற்றவர்களின் ஆழம்மிக்க சிந்தனை பிறப்பதற்கு புத்தகங்களே தூண்டுகோலாக விளங்கியது.புத்தக வாசிப்பின் ஊடாக பல வழியில் நன்மைகளை பெற முடியும். பாடசாலைகளில் காணப்படும் பாடத்திட்டத்திற்குள் எம்மை மட்டுப்படுத்தாமல் பல்வேறு வகையான புத்தகங்களினையும் வாசிக்க வேண்டும்.நமது பாடத்திட்ட புத்தகங்கள் மாணவர்களின் சிந்தனைகளை சிறைப்படுத்தி வைத்துள்ளன.பரீட்சையை எதிர்கொள்ள மாத்திரமே போதுமானது மாறாக உலக ஓட்டத்துடன் வாழ்வை வெற்றி கொள்ள மேலதீக புத்தகங்களினை நண்பனாக்கி கொள்வதே புத்திசாலித்தனம்.புத்தகங்களினை தெரிவு செய்யும் போது எமது விருப்பு மற்றும் வாசிப்பு சுவை ஏற்ப தெரிவு செய்ய வேண்டும்.ஒவ்வொருவரும் தனக்கென தனித்தன்மையான வாசிப்பு ரசனையை கொண்டுள்ளனர். இலக்கியம், சமயம், அரசியல், சமூகம், தொழில்நுட்பம், அறிவியல் போன்ற பல்வேறு வகைகளில் புத்தகங்கள் நூலகங்களில் குவிந்துள்ளது. இவற்றில் எமது சொந்த ரசனைக்கு(own taste) ஏற்ப வாசிப்பினை அனுபவிக்கலாம்.வாசிப்பு கற்பனை மற்றும் ஆக்கத்திறனை தூண்டுகிறது அதேவேளையில் பெறுமதி மிகுந்த பொழுது போக்காகவும் அமைகிறது, மன முரண்பாடுகளின் இருந்து விடுதலை பெற வாசிப்பே சிறந்த மருந்தாகும்.மேலும் ஒரு சிந்தனையாளரான Dr.Seuss "The more you read The more things you know. The more that you learn the more places you Will go" நிறைய வாசிக்கும் போது நிறைய விடயம் தெரிய வரும் நிறைய விடயம் தெரியும் போது நிறைய இடங்கள் பயணிக்க முடியும் என்று கூறுகிறார்.வாசிப்பு என்பது அறிவு மற்றும் மதிநுட்பம் நிறைந்த மனிதனை உருவாக்கும். தற்போதைய நிலையில் வாசிப்பு என்பது அவசியமில்லை என்ற தோற்றப்பாடு எம்மிடையே பரவலாக காணப்படுகிறது. நவீன தொழில்நுட்பத்துடன் சமூகத்தை பீடித்துள்ள சமூக ஊடகங்கள் அதற்கு காரணமாக இருப்பதாகவும் மீளவும் சமூக மீட்சிக்கு இலக்கிய ரசனை உடைய அறிவியல் சமூகத்தை உருவாக்க வாசிப்பு ஒன்றே! அறிவியல் நிறைந்ததாக புத்தகங்கள் காணப்படுகிறது. அறிவானந்தம் என்பது வாசிப்பு வாயிலாக ஊட்டப்படுகின்றது.எமது மனதை மகிழ்ச்சியில் வைத்திருப்பதில் புத்தக வாசிப்புக்கு பெரும் பங்கு உள்ளது.புத்தக வாசிப்பு பேரானந்தமானது என்பது அனுபவம் நிறைந்த கருத்து."Reading of books gives us a great pleasure".மனிதனின் மிகவும் நெருங்கிய நண்பனாக புத்தகம் காணப்பட வேண்டும்.இதேபோல்;கற்பனாசிந்தனை அதிகரிக்கும், தகவற்செறிவு நிறைந்த மனிதனாக்கும்,ஏனையோரிடம் தொடர்புகளை பேணிக் கொள்ள உதவும், எமது பண்பாட்டினை உயிர்புடன் பேனுவதற்கு உதவும், மற்றவர்களின் நிலையில் இருந்து தீர்வுகளை அணுகும் ஆற்றல், தகவல்களினை விளக்கமாக பரிமாறிக் கொள்ள உதவும், எம்மை சூழலுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ள உதவும், சிறந்த சொற்தெரிவுகளை மேற்கொள்ள உதவும், உலக நடப்பு விவகாரங்களை அறிந்து கொள்ள உதவும், புத்தகத்துடன் அதிக நேரத்தை செலவிட வசதியாக அமையும்,உங்கள் மூளையானது கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலையில் பயிற்றுவிக்கப்பட்டு இருக்கும்,புதிய பல மொழிகளை கற்றுக் கொள்ள வசதியாக அமையும், ஆன்மாவின் சாளரமாக வாசிப்பு அமையும், எழுத்தாற்றலினை விருத்தி செய்ய வாசிப்பு அமையும்,எதிர்மறையான எண்ணங்களினை வடிகட்ட வாசிப்பே உபாயமாக அமையும்,மனதிற்கு இனிமையாகவும் தெளிவான நிதானமான சிந்தனைக்கு வாசிப்பு வழிகோலும்.அறிவு என்பது நதியைப் போன்றது எவ்வளவு நீளமானதாக இருந்தாலும் அமைதியாக இருக்கும். சொல்வளம் அதிகரிக்கும்,திறனாய்வுத்தள சிந்தனை, ஞாபகத் திறன் அதிகரிக்கும்,கவனகுவிப்பு முன்னேற்றம் அடையும் போன்றன வாசிப்பு அனுபவம் ஊடாக கிடைக்கும் நன்மைகளாகும்.இதேவேளை,நவீன ஊடகங்களின் வருகை,தமிழ் அச்சு ஊடகங்களின் மீதான வாசிப்பு ஆர்வத்தை குறைந்துள்ளது.அண்மையில் மத்திய வங்கியின் அறிக்கையின் பிரகாரம், கடந்த 2016ம் ஆண்டு 53,882 மில்லியன் பத்திரிகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் இது 2015 ம் ஆண்டு 50,808 மில்லியன் ஆகும்.இது விற்பனை அதிகரிப்பை காட்டி நிற்கின்றன.2015 ம் ஆண்டில் ஒவ்வொரு 1000 மனிதனுக்கும் 58 பிரதிகள் என்று இருந்த நிலை 2016 ம் ஆண்டு ஒவ்வொரு 1000 மனிதனுக்கும் 62 பிரதிகள் என்ற நிலைக்கு உயர்ந்துள்ளதை குறிப்பிடத்தக்கது. இங்கு, சிங்கள நாளிதழ்களின் 2016 ம் ஆண்டின் விற்பனை 25,949 மில்லியனாகவும்,இது 2015ல் 22,649 மில்லியனாகக் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.அதேபோல், ஆங்கில நாளிதழ்களின் விற்பனை 2016ல் 9180 மில்லியனாக காணப்பட்ட அதேவேளையில் 2015 ல் 8073 மில்லியனாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.இதேபோல, தமிழ் பத்திரிகைகள் 2016ல் 5097 மில்லியனாகவும் 2015ல் 7091 மில்லியனாகவும் காணப்படுகிறமை சிந்திக்க வேண்டியதாகும்.இதேபோன்று, வாரப் பத்திரிகைகளை பொறுத்தவரை,சிங்கள பத்திரிகைகள் 2016ல் 8320 மில்லியனாகவும் 2015ல் 8081 மில்லியனாகவும் காணப்படுகிறது.அதேபோன்று, ஆங்கில வாரப் பத்திரிகைகளை பொறுத்தவரை, 2016ல் 2440 மில்லியனாகவும் 2015ல் 2240 மில்லியன் ஆகும்.தமிழ் வாரப்பத்திரிகைகளை பொறுத்தவரை,2016ல் 1930 மில்லியனாகவும் 2015ல் 2265 மில்லியனாக காணப்படுகிறமை குறிப்பிடத்தக்கது. மத்திய வங்கியின் அறிக்கையின் பிரகாரம், முடிவாக; சிங்கள மற்றும் ஆங்கில பத்திரிகைகளின் நுகர்வு அதிகரித்துள்ள அதேவேளையில் தமிழ் பத்திரிகைகளின் நுகர்வு குறைந்துள்ளமை அவதானிக்க முடிகிறது.நவீன ஊடக வாசிப்பின் மேலோட்டமான வாசிப்பு அனுபவத்தை பெற முடியுமே தவிர முழுமையான திருப்திகரமான வாசிப்புக்கு அச்சு ஊடகங்கள் வாசிப்பே சிறந்த தெரிவாகும்.ஒக்ரோபர் மாதம் வாசிப்பு மாதமாக பிரகடனம் அரசாங்கத்தால் செய்ததனை முன்னிட்டு வாசிப்பின் முக்கியத்துவம் தொடர்பாக சிந்தித்தாக குறித்த வலைப்பூ பதிவு அமைந்து இருந்தது. இ.தனஞ்சயன்.ஊடகத்துறை.
அறிவைநாடல்
அறிதலார்வம்
வியாழன், 26 அக்டோபர், 2017
இலத்திரனியல் ஊடகவாசிப்பு அனுபவத்தை காட்டிலும் அச்சு ஊடக வாசிப்பு அனுபவம் உயிரோட்டமானது?
இலங்கை தேசிய தொலைக்காட்சியான ரூபவாகினிகூட்டுத்தாபனத்தின் தமிழ் நிகழ்சிப்பிரிவின் உதவித்தயாரிப்பாளர் இ.தனஞ்சயன் ஆகிய நான் யாழ்பாணப்பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையை முறையாக விரும்பிக்கற்று சிறப்பு கலைமாணிபட்டத்தை பெற்றுள்ளேன்.அத்துடன்,ஆங்கில மற்றும் சிங்கள மொழிகளிலும் புலமை பெற்றுள்ளேன்.சர்வதேச ஆங்கில ஊடகங்களில் வெளிவரும் செய்திகளை தமிழ் மொழிக்கு மொழிபெயர்த்து தட்டச்சு செய்யும் ஆற்றலும் உண்டு.எப்போதும் சந்தோசமாக எதையும் கற்றுக்கொண்டே இருப்பேன்.
வாசிப்பு ரசனையை மேலும் வலுவாக்கும்!
மனித வாழ்க்கையில் மிகவும் அவசியமானதாகும் வாசிப்பு விளங்குகிறது. வாசிப்பின் பிரதானத்தை புரிந்து கொள்ளாதவர்கள் அறிவுச்செல்வத்தை சம்பாதிக்க முடியாதவர்கள். அபிவிருத்தி அடைந்த நாடுகளின் முன்னேற்றத்தின் பின்னால் புத்தக வாசிப்பு பின்னணியாக உள்ளவை மறுக்கமுடியாத உண்மை.வாழ்க்கையில் சாதித்த பெரிய அறிஞர்கள் புத்தக வாசிப்பு பிரியர்களாக உள்ளனர் என்பது அவர்களின் சிந்தனைமிக்க கருத்துக்களில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது;ஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது
"ஒரு நூலகம் கட்டுவேன்" என்று பதிலளித்தாராம் மகாத்மா காந்தி,அதேபோல்,
கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் போதும் என்றார்
தந்தை பெரியார்
தனிமைத்தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன் என்று பதிலளித்தாராம் ஜவஹர்லால் நேரு, என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்றாராம் பெட்ரண்ட் ரஸல்,
மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் புத்தகம் என பதிலளித்தார் சார்பு கொள்கையை முன்வைத்த
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்,
வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம் சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றாராம் மாமனிதர்
நெல்சன் மண்டேலா,
பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம் புரட்சியாளன் லெனின்,
ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன் பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம் சார்லிசாப்லின்,
ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான் என்றார் அமெரிக்க ஜனாதிபதி
வின்ஸ்டன் சர்ச்சில்,
பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான் என்றாராம்
மார்டின் லூதர்கிங்,
தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக்கொண்டே இருந்தாராம்
பகத்சிங்,
நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து
என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்.
ஆபிரகாம் லிங்கன்,ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள்; அவனே எனது வழிகாட்டி!ஜூலியஸ் சீசர்,உலக வரைபடத்திலுள்ள மூலைமுடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறாயா, ஒரு நூலகத்துக்குச் செல்.டெஸ்கார்டஸ்,
போதும் என்று நொந்துபோய், புதுவாழ்வைத் தேடுகிறீர்களா… ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்கு.இங்கர்சால்,
சில புத்தகங்களை சுவைப்போம். சிலவற்றை அப்படியே
விழுங்குவோம் சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம்!
பிரான்சிஸ் பேக்கன்
புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளைவிட
பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே!
லெனின்,உண்மையான வாசகன், வாசிப்பதை முடிப்பதே இல்லை!
ஆஸ்கார் வைல்ட்,உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு!
சிக்மண்ட் பிரைட் போன்ற உலகளாவிய ரீதியில் புகழ்பெற்றவர்களின் ஆழம்மிக்க சிந்தனை பிறப்பதற்கு புத்தகங்களே தூண்டுகோலாக விளங்கியது.புத்தக வாசிப்பின் ஊடாக பல வழியில் நன்மைகளை பெற முடியும். பாடசாலைகளில் காணப்படும் பாடத்திட்டத்திற்குள் எம்மை மட்டுப்படுத்தாமல் பல்வேறு வகையான புத்தகங்களினையும் வாசிக்க வேண்டும்.நமது பாடத்திட்ட புத்தகங்கள் மாணவர்களின் சிந்தனைகளை சிறைப்படுத்தி வைத்துள்ளன.பரீட்சையை எதிர்கொள்ள மாத்திரமே போதுமானது மாறாக உலக ஓட்டத்துடன் வாழ்வை வெற்றி கொள்ள மேலதீக புத்தகங்களினை நண்பனாக்கி கொள்வதே புத்திசாலித்தனம்.புத்தகங்களினை தெரிவு செய்யும் போது எமது விருப்பு மற்றும் வாசிப்பு சுவை ஏற்ப தெரிவு செய்ய வேண்டும்.ஒவ்வொருவரும் தனக்கென தனித்தன்மையான வாசிப்பு ரசனையை கொண்டுள்ளனர். இலக்கியம், சமயம், அரசியல், சமூகம், தொழில்நுட்பம், அறிவியல் போன்ற பல்வேறு வகைகளில் புத்தகங்கள் நூலகங்களில் குவிந்துள்ளது. இவற்றில் எமது சொந்த ரசனைக்கு(own taste) ஏற்ப வாசிப்பினை அனுபவிக்கலாம்.வாசிப்பு கற்பனை மற்றும் ஆக்கத்திறனை தூண்டுகிறது அதேவேளையில் பெறுமதி மிகுந்த பொழுது போக்காகவும் அமைகிறது, மன முரண்பாடுகளின் இருந்து விடுதலை பெற வாசிப்பே சிறந்த மருந்தாகும்.மேலும் ஒரு சிந்தனையாளரான Dr.Seuss "The more you read The more things you know. The more that you learn the more places you Will go" நிறைய வாசிக்கும் போது நிறைய விடயம் தெரிய வரும் நிறைய விடயம் தெரியும் போது நிறைய இடங்கள் பயணிக்க முடியும் என்று கூறுகிறார்.வாசிப்பு என்பது அறிவு மற்றும் மதிநுட்பம் நிறைந்த மனிதனை உருவாக்கும். தற்போதைய நிலையில் வாசிப்பு என்பது அவசியமில்லை என்ற தோற்றப்பாடு எம்மிடையே பரவலாக காணப்படுகிறது. நவீன தொழில்நுட்பத்துடன் சமூகத்தை பீடித்துள்ள சமூக ஊடகங்கள் அதற்கு காரணமாக இருப்பதாகவும் மீளவும் சமூக மீட்சிக்கு இலக்கிய ரசனை உடைய அறிவியல் சமூகத்தை உருவாக்க சிறந்த வழிமுறை வாசிப்பு ஒன்றே!
இலங்கை தேசிய தொலைக்காட்சியான ரூபவாகினிகூட்டுத்தாபனத்தின் தமிழ் நிகழ்சிப்பிரிவின் உதவித்தயாரிப்பாளர் இ.தனஞ்சயன் ஆகிய நான் யாழ்பாணப்பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையை முறையாக விரும்பிக்கற்று சிறப்பு கலைமாணிபட்டத்தை பெற்றுள்ளேன்.அத்துடன்,ஆங்கில மற்றும் சிங்கள மொழிகளிலும் புலமை பெற்றுள்ளேன்.சர்வதேச ஆங்கில ஊடகங்களில் வெளிவரும் செய்திகளை தமிழ் மொழிக்கு மொழிபெயர்த்து தட்டச்சு செய்யும் ஆற்றலும் உண்டு.எப்போதும் சந்தோசமாக எதையும் கற்றுக்கொண்டே இருப்பேன்.
ஞாயிறு, 8 அக்டோபர், 2017
விசாரணையை முறைமைப்படுத்தும் புலனாய்வு இதழியலின் சாத்தியக்கூறுகள்?
ஊடகத்துறையானது நாளுக்கு நாள் புதிய மாற்றங்களுடன் வேகமாக மாற்றங்களை உள்வாங்கி தம்மை தகவமைத்துக் கொள்கின்றது. இவ்வாறான மாற்றங்களை உண்டுபண்னியதன் மிகப் பிரதான காரணம் புதிய ஊடகங்களின்(Online media)வருகையே பிரதானமாகும்.அந்த வகையில் ஊடகங்களிற்கான இதழியல் என்பது செய்திகளை இலகுவாக அறிந்து, தெளிந்து, புரிந்து கொள்ள உதவுகிறது.இதழியல் (Journalism) என்பது இன்று விளையாட்டு இதழியல்,வணிக இதழியல்,கலை இதழியல்,புகைப்பட இதழியல்,விபசாய இதழியல், கல்வி இதழியல், நவீன இதழியல்(fashion journalism),பொருளாதார இதழியல்(Economic journalism),மஞ்சள் இதழியல்,பிரஜைகள் இதழியல்,தீர்வுகாணும்இதழியல்,புலனாய்வு இதழியல் போன்றன ஆகும். தற்போதைய நிலையில் இறுதியாக கூறப்பட்ட இதழியலின் தேவைப்பாடு உணரப்படுகின்றது.அந்த வகையில்,புலனாய்வு இதழியலின் அவசியத்தை உணர்ந்து அது தொடர்பாக சிந்திக்கப்போவதாகவே இப் பதிவு அமையப்போகின்றது.புலனாய்வு இதழியல் என்பதை வரைவிலக்கனப்படுத்துவது சற்று கடினமானது. எனினும், சாதாரண இதழியல் மரபில் இருந்து எவ்வாறு புலனாய்வு இதழியல் வேறுபடுகிறது என்று சிந்திப்பது வரைவிலக்கணப்படுத்த சுலபமாக அமையும். குறிப்பாக, செய்திகள் அனைத்தும் புலனாய்வுத் தளத்தின் அடிப்படையிலே வழங்கப்படுகிறது. எந்த ஒரு செய்திகளும் பிரதான ஊடகங்களினை பொறுத்தவரை உறுதிப்படுத்தி ஆதாரத்துடனே வெளியிடும் பண்புகளை கொண்டு இருக்கிறது.இந்த நிலையில் புலனாய்வு இதழியல் அவசியமா?என்பது கேள்விக்குரிய விடயமாகும்.சாதாரண இதழியல் இருந்து புலனாய்வு இதழியல் எவ்வாறு பிரித்துப் பார்க்க வேண்டியது என்பதே புலனாய்வு இதழியலிற்கான வாய்ப்பினை வழங்குகிறது.சாதரனமான செய்தியில் ஏதோ ஒரு மக்களிற்கு அவசியமான விடயம் மறைக்கப்படுகின்றது என்று உணரும் சந்தர்ப்பங்களில் புலனாய்வு இதழியலிற்கான தேவைப்பாடு தோற்றம் பெறுகிறது. குறித்த மறைக்கப்பட்ட விடயங்களினை ஆதாரமாக,திறனாய்வுத் தளத்தில், முக்கிய மான விடயங்களினை, ஆழ்ந்த ஆய்வு தளத்தில், இது வரைக்கும் அறியப்படாத தகவல்களினை புலனாய்வு தளத்தில் வெளிக்கொண்டு வரும் இதழியல் புலனாய்வு இதழியல்(Investigate journalism )ஆகும்.ஆங்கில அகராதிகளில் ஒன்றான Cambridge dictionary "புலனாய்வு இதழியலை "A type of journalism that tries to discover information of public interest that someone is trying to hide"அதாவது, மக்களிற்கு தேவையான விடயத்தை யாரும் மறைக்க முற்படும் போது அவற்றை அம்பலப்படுத்தி எழுதும் இதழியல்(Investigate journalism)ஆகும்.இவ் இதழியல் சாதாரண செய்திகளை கடத்துவதென்றில்லாமல் புதிய உண்மையை கண்டறிவதாக அமைகிறது. புலனாய்வு இதழியலின் அறிக்கையிடும் இலட்சனம் வழமையான இதழியல் மரபில் இருந்து பின்வரும் வகையில் வேறுபட்டு நிற்கிறது.என்ன நடந்தது என்பதுடன் ஏன் நடந்தது என்பதையும், யார் தவறு செய்தார் எப்படி செய்தார் என்பதையும், ஊகமற்ற உண்மையான ஆதாரங்களுடன் வெளியிடுதல், எப்படி தவறுகள் மறைக்கப்பட்டு வருகிறது என்பதை அம்பலப்படுத்தி மக்களை விழிப்பூட்டுவதாக அமைய வேண்டும்.புலனாய்வு இதழியல் உரைபெயர்பு இதழியல் (Interpretive journalism/Interpretative Journalism)"which goes beyond the basic facts of an event or topic to provide context, analysis and possible consequences "ஆக அமையக் கூடாது.புலனாய்வு இதழியல் என்பது சொந்த முயற்சி, நீண்ட காலக்கெடு,ஆழ்ந்த ஆய்வு, நிறைவான செய்தி மூலங்கள், புதிய தளத்திலான பார்வை,அழுத்தங்கள் என்பவற்றை கடந்தே வெற்றி பெறும். புலனாய்வு இதழியலின் சாதகமான அம்சங்களாக(positive aspects)சனநாயகத்தை வலிமைப்படுத்தும்,ஊழல்களினை வெளிக்கொணர உதவும்,சமூக பொறுப்பு வாய்ந்ததாக அமையும், மக்களிற்கு அதிகாரத்தை பெற்று தரும், உண்மையை அம்பலப்படுத்தும்,அநீதிக்கு எதிரானதாகும்,போலி அற்ற அசலாக அமையும் தன்மை போன்றவற்றை குறிப்பிடலாம்.புலனாய்வு இதழியல் மரபு இதழியல் பண்புகளில் இருந்து வேறுபட்ட தொன்றாகும். புலனாய்வு இதழியல் மக்களுக்கு பிடித்த ஒரு விடயத்தை ஆழமாக அதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்தல்,புதிய பாணியில் தகவல்களை ஒண்றினைத்து வழங்குதல்,என்ன நடந்தது என்பதற்கான விளக்கத்தை மாத்திரம் வழங்காமல் ஏன் நடந்தது என்பதற்குரிய காரணத்தை பல சாட்சியங்கள் மற்றும் தடயங்கள் ஊடாக விளக்குவதாக அமைய வேண்டும்.இலகுவாக கூறினால்,இரகசியத்தை வெளிக்கொணரும் இதழியல் எனலாம்.புலனாய்வு இதழியல் என்பதற்காக வரைவிலக்கனத்தை UNESCO நிறுவனம் "Investigate Journalism involves exposing to the public matters which are concealed either deliberately by someone in a position of power or accidentally behind a chaotic mass of facts and circumstances which obscure understanding. It requires using both secret and open sources and documents "அதாவது, மக்களிற்கு அவசியமான விஷயம் அதிகாரத்தில் உள்ளவர்களால் துஷ்பிரயோகம் செய்யப்படும் சமயத்தில் அதனை வெளிக்கொண்டு வரும் இதழியல் என இலகுவாக மொழிபெயர்ப்பு செய்யலாம்.மேலும், புலனாய்வு இதழியல் என்பது ஊழல்களை அம்பலப்படுத்தும் இதழியல் என்ற தவறான மனப்பாங்கு எங்களிடையே உண்டு. இவ் இதழியல் அதிகார துஷ்பிரயோகம், பொது மக்கள் நிதி தவறான முறையில் செலவிடப்படல்,சுற்றுச்சூழல் அழிப்பு திட்டங்கள், மருத்துவத்துறை,அபிவிருத்தி,அநீதி,சுகாதாரம்,நன்கொடை போன்றவற்றில் புலனாய்வு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு.புலனாய்வு இதழியல் என்பது கருதுகோள்களை உருவாக்கி அதனை ஆதாரத்துடன் நிரூபிக்க முனையும் முடியாத சமயங்களில் புலனாய்வு இதழியல் தோல்வியில் முடியும்.Investigate என்பதை ஆங்கில அகராதிகள் 'Systematic inquiry'அதாவது, ஒழுங்கு படுத்தப்பட்ட விசாரணையே புலனாய்வு(Investigation ) என்று வரைவிலக்கனம் வகுக்கின்றன. மேலும், புலனாய்வு இதழியல் புதிய பாதைகள் மற்றும் புதிய இராஜதந்திர சிந்தனைக்கு வழிவகுக்கின்றன. புலனாய்வு இதழியலிற்கான அறம் சார்ந்த விடயங்களை சிந்திக்கும் போது, அறம் சார் குழப்பங்கள்(Ethical dilemma)தோன்றினாலும் சட்டவரம்புகளிற்குட்பட்டே புலனாய்வு இதழியலை முன்னெடுப்பது எதிர்காலத்தில் சட்டச்சிக்கலை தவிர்க்க முடியும்.புலனாய்வு இதழியலில் இதழியலாளன் எதிர்கொள்ளும் சவால்களாக;புலனாய்வு இதழியல் தொடர்பான தெளிவான அறிவின்மை,அதிகரித்த பணம் முதலீடு, உயிர் அச்சுறுத்தல்,நிர்வாக சிக்கல் போன்றன முதன்மையான காரணங்கள் ஆகும். புலனாய்வு இதழியலாளன் ஒருவருக்கு அறிதலார்வம்,ஈடுபாடு,தர்கரீதியான ஒழுங்கு படுத்தும் சிந்தனை, நெகிழ்வத்தன்மை,சிறந்த முறையில் அறிக்கையிடும் ஆற்றல், பொது அறிவு மற்றும் ஆய்வு மனப்பாங்கு, பொறுமை,பங்கு பற்றல் ஆய்வு,தைரியம், சட்டப் புலமை,தியாகம்,அர்ப்பணிப்பு,குற்ற உளவியல் தொடர்பான அறிவு,ஆதாரங்களை தேடல்,சோரம் போகாமை,விலைபோகாமை, சாவாலை வெற்றி கொள்ளும் ஆற்றல் போன்றவை புலனாய்வு இதழியலாளனிற்குரிய அடிப்படைப் பண்புகள் ஆகும்.எமது நாட்டை பொறுத்தவரை சாதாரணமாக ஊடகவியளனாக வேலை செய்வதே மிகச்சவாலானதொன்று.இந்த நிலையில் நவீன ஊடகங்களின் ஆதிக்கம்,ஊடகநிறுவனங்களின் பணம் மீதான பேராசை, கடந்தகாலத்தில் ஊடகவியளார்கள் கண்ட துயரம் நிறைந்த அனுபவங்கள் புலனாய்வு இதழியல் என்பதற்கான சந்தர்ப்பத்தை காலம்கடத்தவே செய்யும். எனினும் தகவல் அறியும் சட்டமூலத்தின் வருகை ஓரளவுக்கு புலனாய்வு இதழியலிற்கான சந்தர்ப்பத்தை அதிகம் வழங்கினாலும் புலனாய்வு இதழியலிற்கான இருப்பு மற்றும் நிலைப்பு என்பது கேள்விக்குறியே ஆகும்.இ.தனஞ்சயன் ஊடகத்துறை