இன்றைய தினம் உலக தொலைகாட்சி தினமானது சர்வதேச ரீதியாக கொண்டாடப்படுகிறது.குறித்த தினத்தை முன்னிட்டு தொலைகாட்சியின் கருத்துருவாக்கம்(Opinion making) மற்றும் ஜனநாயகத்தினை வலிமைப்படுத்ல் போன்றன குறித்து சிந்திக்கப்போவதாகவே குறித்த பதிவு அமையவிருக்கின்றது.சமுக விஞ்ஞான துறையில் முக்கியமான துறையாக தற்போது தொடர்பாடல்த்துறை விளங்குகிறது.20ம் நூற்றாண்டின் 60களின் பிற்பகுதியில் பிரசித்திபெற்றதாகக் காணப்படுகிறது. இதில் ஊடகங்களின் இயல்பு, பயண்பாடு, தாக்கம் ஆகியவை மிக ஆழமாக ஆராயப்படுகின்றன.குறித்த தொடர்பாடல் ஊடகத்துறையில் மிகப் பெரிய புரட்சிகளினை உண்டுபண்னியதாக தொலைக்காட்சி காணப்படுகிறது.கல்வி, அரசியல், பொருளாதாரம், பொழுதுபோக்கு, வணிகம், செய்தி,விளையாட்டு,ஆன்மிகம் மற்றும் சமுகம் போன்றவற்றிற்கான சிறந்த ஊடகமாக தொலைக்காட்சி காணப்படுகிறது.ஏனைய வகையான ஊடகங்களில் இருந்து குறிப்பாக அச்சு ஊடகங்களான பத்திரிகை, சஞ்சிகை போன்றவற்றில் இருந்தும் செவிநுகர் ஊடகமான வானொலியில் இருந்து தொலைக்காட்சியின் சுபாவங்கள் வேறுபடுகிறது.ஐம்புலன்களினையும் இயக்கத்தில் முழுமையாக வைத்துஇருப்பதற்கு தொலைக்காட்சி முக்கிய பங்காற்றுகின்றது.இதன்காரணமாகவே,அனைவருடைய இல்லங்களிலும் தொலைக்காட்சியினை காணமுடியும்.குறித்த தொலைக்காட்சியினானது பூகோள மயமாக்கல் சூழலில் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டு ஐக்கிய நாடுகள் சபையானது 1996ம் ஆண்டு முதற்கொண்டு உலகத்தொலைக்காட்சி தினத்தை உலகளாவிய ரீதியில் சமாதானம் ,பாதுகாப்பு,பொருளாதாரம்,சமுக அபிவிருத்தி,தொடர்பாடல் மற்றும் பண்பாட்டு மாற்றம் போன்றவற்றை மேம்படுத்தும் நோக்குடன் பிரகடனப்படுத்தி ஒவ்வொரு வருடமும் பல்வேறு நாடுகளிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.உலக அரசியலினை ஓர் ஒழுங்கு முறைக்குள் இட்டு செல்லும் தொலைக்காட்சிகளாக Reuter,BBC,CNN, AFP,APA,CPS,RT,CGTN,Aljazeera,Thass, Telegraph, The guardian, India today,ABC,Fox news,Sky news,NDTV போன்றவற்றை குறிப்பிடலாம்.இவை சர்வதேச அரசியலில் உள்ள தொடர்பாடலை இற்றைப் படுத்தும் ஊடகங்கள் ஆகும்.இன்றைய காலத்தில் சர்வதேச அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும் சீனா ஊடகங்களின் பெறுமதியை விளங்கிக் கொண்டு பல மொழிகளில் தொலைக்காட்சி சேவையை உருவாக்கியுள்ளது.இதன் மூலமாக சீனா தொடர்பாக சர்வதேசம் அறியாத பல தகவல்களை உலகத்திற்கு சீனா உணர்த்தி வருகிறது. போர் முனைகளில் கூட அவற்றின் பங்கு கணிசமானது.இதேவேளை, 1996 ல் நடைபெற்ற கொசொவா போரின் போது கேட்டோம் படைகளிற்கு எதிராக ஆர்பாட்டங்கள் ஒழுங்கு செய்த போதெல்லாம் அமெரிக்கா சார்பு தொலைக்காட்சிகள் அமெரிக்கா சார்ந்த தொலைக்காட்சிகள் அங்கு நீச்சல் உடையில் கவர்ச்சியாக பெண்கள் பலர் நடிக்கும் பெவோச் என்ற அமெரிக்க தொலைக்காட்சி தொடரை ஒலிபரப்பி மக்களை வீடுகளுக்குள் முடங்கி வைத்தன.சீன நிறுவனமான Chinxuva சர்வதேச ரீதியாக 160 தொலைகாட்சி நிலையங்களை உருவாக்கியுள்ளது.2020ம் ஆண்டளவில் மேலும் 40 தொலைகாட்சி நிலையங்களை நிறுவவுள்ளது.2016ம் ஆண்டின் இறுதியில் சீனாவின் பன்னாட்டு அரசியலை பேசும் முன்னணித் தொலைகாட்சியான CCTV என்ற பெயரைச் CGTN என்று மாற்றியுள்ளது.இதன் விரிவாக்கம் China Global Television Network ஆகும். இதிலிருந்து சீனா (Globalization)உலகமயமாக்கலிற்கு எவ்வளவு தூரம் முக்கியத்துவத்தை எவ்வளவு தூரம் விளங்கி வைத்துள்ளது என்பதை உணரமுடியும்.இதேவேளை குறித்த தொலைகாட்சியானது ரஸ்யமொழி,ஆங்கில மொழி, அரபு, பிரென்சு மற்றும் ஜப்பானிய மொழிகளில் ஒலிபரப்பு செய்கிறமை கவனத்திற்குரியது. இதேசமயம், கடந்த நாட்களில் ஆபிரிக்க நாடொன்றில் இடம்பெற்ற அரசியல் நிகழ்வு தொலைக்காட்சியின் முக்கியத்துவத்தை எடுத்து இயம்புகின்றது.அதாவது, 37வருட சிம்பாவே ஜனாதிபதி ரோபேட் முகாபே பதவியில் இருந்து இராணுவ புரட்சியின் மூலமாக கவிழ்கப்ப்பட்டமை குறித்த ஆட்சி கவிழ்பிற்கு இராணுவம் குறித்த நாட்டின் அரச தொலைகாட்சி நிறுவனத்தையே முதலில் தனது கட்டுபாட்டிற்கு கொண்டு வந்து அதன் பின்னர் நாட்டு மக்களுடன் தொலைகாட்சியில் தம்மை நியாயப்படுத்தி மொகாபேயை வீட்டுக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது.இன்றைய காலத்தில் மக்களின் ரசனைக்குரியவகையில் (Taste culture) நகைச்சுவைக்கென தனியான தொலைக்காட்சிகள்,ஆன்மிகத்திற்கென தனியான தொலைகாட்சிகள்,விளையாட்டுக்கென தனியான தொலைகாட்சிகள்,செய்திக்கென தனியான தொலைக்காட்சிகள்,பாடலிற்கென தனியான தொலைகாட்சிகள் அத்துடன் சிறுவர்களிற்கென பிரத்தியேக தொலைகாட்சிகள் காணப்படுகிறமை குறிப்பிடத்தக்கதாகும்.தமிழ்நாட்டினை பொறுத்தவரை அரசியலில் கால்பதிக்க வேண்டுமாயின் தொலைகாட்சி ஆரம்பிக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது எனலாம். கட்சிகளிற்கு ஒரு தொலைக்காட்சி என்ற நிலை.அச்சு ஊடகங்கள் என்பது எழுத்தறிவு படைத்தவர்களாலேயே விளங்கிக் கொள்ள முடியும்.மாறாக,தொலைகாட்சி சாதாரண பாமரர்களாலேயே புரிந்து கொள்ள முடியும். இது தொலைகாட்சியின் மிகப்பெரிய பலமான அம்சம் ஆகும்.இலங்கையை பொறுத்தவரை அரச தொலைகாட்சிகள்(State media)தனியார் தொலைகாட்சிகள் என்ற பிரிப்புக்குள் உள்ளடக்க முடியும். அரச தொலைகாட்சிகள் மக்களிற் கான ஊடகங்கள் என்பதை மறந்து ஆளும் அரசாங்கத்தின் ஊதுகுழலாக செயற்பாட்டு வருவதும் தனியார் தொலைகாட்சிகள் தமது நிர்வாகத்தின் அரசியலிற்கு தாளம் போடுவதுமே வழமையானது.எனினும், இலங்கையில் எந்தவொரு தொலைகாட்சியும் இன்னமும் டிஜிட்டல் மயப்படுத்தப்படவில்லை என்பதுடன் ரஸ்யாவில் ஒரு தொலைகாட்சிநிறுவனமானது 7D தொழில்நுட்பத்தை பரிசீலித்து வெற்றி கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.மேலும்,தொலைகாட்சிகளின் சுபாவங்களில் சாதகமான மற்றும் பாதகமான அம்சங்கள் காணப்பட்டாலும் சாதகமான முறையில் சிந்திப்பே சாதகமான விடயங்களினை வாழ்வில் பெற்றுக்கொள்ளவழிவகுக்கும்.தொடர்ந்து சிந்திப்போம்!இ.தனஞ்சயன் ஊடகத்துறை.
அறிவைநாடல்

அறிதலார்வம்
திங்கள், 20 நவம்பர், 2017
பன்னாட்டு அரசியல் கருத்துருவாக்கத்தில் தொலைகாட்சியின் பங்கு காத்திரமானது!
லேபிள்கள்:
உலகதொலைக்காட்சிதினம்,
ஊடக அறம்,
ஊடகரசனை,
சர்வதேச ஊடகங்கள்,
சர்வதேச தொலைக்காட்சிகள்,
தொடர்பாடல்,
தொலைக்காட்சி,
தொலைக்காட்சியின் தாக்கம்,
தொலைக்காட்சியின் பயண்பாடு,
Media culture,
World television day

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)