அறிவைநாடல்

அறிதலார்வம்
புதன், 1 ஜூலை, 2020
மத்திய கிழக்கு சமாதான திட்டம்; ஒரு சொல்லாடல் நாடகம்!
மற்றுமொரு ஒரு புதிய வலைப்பூ பதிவில் சந்திப்பதையிட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். சர்வதேச அரசியலை புரிந்து கொள்ள வேண்டுமாயின் இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலின் உடைய எல்லை பிரச்சினைகளை புரிந்து கொள்வது கட்டாயமானது அந்த வகையில் இஸ்ரேலின் உடைய தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் எவ்வாறு காணப்படுகின்றன என்பது தொடர்பாக சிந்திப்பதாக குறித்த வலைப்பூபதிவு அமையப் போகின்றது.
இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைப்பகுதியினை இஸ்ரேலுடன் சட்ட பூர்வமாக இணைப்பது தொடர்பான திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அனுசரணையுடன் "மத்திய கிழக்கிற்கான சமாதானத் திட்டம்" என்ற பெயரில் கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டார்.
வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் மற்றும் இஸ்ரேல் நிர்வாக குழுக்களுக்கிடையே கலந்துரையாடப்பட்டது போன்று மத்திய கிழக்கு சமாதான திட்ட இறுதி அறிக்கையில் குறித்த திட்டமானது முன்மொழிய படவில்லை குறித்த அறிக்கையில் சில பொருள் மயக்கம் காணப்படுகின்றன. இஸ்ரேல் பிரதமர் குறித்த ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியை நிபந்தனையுடன் மட்டுப்படுத்தப்பட்ட இறைமையுள்ள பகுதி என்று அழைத்ததுடன் குறித்த அந்தப் பகுதியை சுயாதீனமான அற்புத தேசம் என்று அமெரிக்க அதிபர் அழைக்கின்றார்.
பாலஸ்தீனர்களின் தலைநகரமாக கிழக்கு ஜெருசலேத்தை அறிவிக்கும் போது அமெரிக்க அதிபர் ரொனால்ட் ட்ரம்ப் Eastern Jerusalem என்று அழைக்கிறார். பாலஸ்தீன தலைவர்கள் கிழக்கு ஜெருசலத்தை தலைநகராக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இவ்வளவு நாட்களாக போராடி வந்தனர். கிழக்கு ஜெருசலமானது கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், மற்றும் யூதர்களின் வழிபாட்டுத் தலமாக விளங்குகின்றது. டொனால்ட் ட்ரம்பினால் அறிவிக்கப்பட்ட பகுதியானது ஜெருசலத்திற்கு அப்பாற்பட்ட ஒரு பிராந்தியமாகும். ட்ரம்ப் அறிவித்துள்ள பகுதி Abu dis என்று இஸ்ரேல் பிரதமர் தெரிவிக்கின்றார். குறித்த பகுதி மேற்கு கரையின் கிழக்கு பகுதியாகும்.இது பாலஸ்தீனர்களினை ஏமாற்றுவதாக அமைந்துள்ளது.
இஸ்ரேல் ஜெருசலத்தை தனது தலைநகராக கருதிக் கொள்கின்றது. ஜோர்தான் பள்ளத்தாக்கில் உள்ள இஸ்ரேல் இராணுவத்தினரினை பின்வாங்க செய்வதற்கு பல அழுத்தங்கள் தம்மீது மேற்கொள்ளப்படுவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அண்மையில் தெரிவித்திருந்தார்.
மேற்கு கரையில் இஸ்ரேலின் குடியேற்றங்களை நிலைநிறுத்துவதற்குரிய நாடகமாகவே குறித்த சம்பவங்கள் பார்க்கப்படுகின்றது. சர்வதேச சமூகமானது இஸ்ரேல் பிரதமர் மேற்கொள்ளும் சட்டவிரோத குடியேற்றங்கள் தொடர்பாக பல விமர்சனங்களை முன்வைத்து வருகின்ற சூழ்நிலையில் அமெரிக்க ஆதரவுடன், புதிய சொல்லாடல்கள் மூலமாக இஸ்ரேல் பிரதமர் தன்னுடைய சட்டவிரோத நடவடிக்கைகளை தன்னுடைய அரசியல் ஆதாயத்திற்காக நியாயப்படுத்தி வருகின்றார்.
இந்நிலையில், மத்திய கிழக்கிற்கான டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு திட்டம் ஒரு சொல்லாடல் நாடகமே ஆகும்.
இ.தனஞ்சயன்

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)