அறிவைநாடல்

அறிவைநாடல்
அறிதலார்வம்

செவ்வாய், 23 ஏப்ரல், 2019

சர்வதேச ஒத்துழைப்பு தற்காலத்தில் சமூக ஊடகங்களிற்கே மாறியுள்ளது!

     
       
ஊடகம் என்பது ஜனநாயகத்தின் நான்காம் தூண். மக்களுக்கும், அரசாங்கத்துக்கும் பாலமாக நின்று அனைத்து செய்திகளையும் உலகிற்குச் சொல்லும் மிகப்பெரிய சாதனம்  ஊடகம் எனலாம். இலங்கை  என்கின்ற இந்த நாட்டில் மூவின மக்கள் வாழ்கின்றனர். அந்த  நாட்டில் ஊடகம் எத்தகைய செயல்பாடுகள் செய்ய வேண்டுமோ, அதற்கு சற்றும் தொடர்பில்லாத செயல்பாடுகளை சில சமயங்களில், சில ஊடகங்கள் செய்துகொண்டிருக்கிறன. இதில் அச்சு,இலத்திரனியல் மற்றும் சமூக  ஊடங்களின் செயல்பாடுகளைப் பற்றி சில விடயங்களை தொட்டு செல்வதாகவே இக் வலைப்பூ பதிவு அமையபோகின்றது.

       தற்போதைய உலகமயமாக்கல் காலகட்டத்தில் ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு தகவல்களினை பரிமாற்றம் செய்து கொள்ள மிகவும் சிறந்த ஊடகங்களாக சமூக ஊடகங்கள் காணப்படுகிறது. சமூக ஊடகங்கள் தொழில்நுட்பம், தொலைபேசி மற்றும் இணையத்தின் வரவுகள் காரணமாக நடைமுறையை எளிமையாக்கியுள்ளது.

     2000 ம் ஆண்டிற்கு முன்பு சமூக ஊடகங்கள் தொடர்பாக விளக்கம் கொடுக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டால், அகராதியைதான் நாடவேண்டிய நிலைமை இருந்தது. மாறாக, தற்போது நிலமை முற்றிலும் மாற்றம் அடைந்து விட்டது. அரசியல், வணிகம்,தனிப்பட்ட திறமைகளை வெளிக்காட்டல் மற்றும் சமூகம் சார் விஷயங்களை பகிர்ந்து கொள்ள மிகவும் சிறந்த ஊடகமாக சமூக ஊடகங்கள் காணப்படுகிறது.

       உண்மை ஆரம்பிப்பதற்கு முன்னரே பொய் உலகத்தை சுற்றி வந்து விடும் என்பதே வெளிப்படை. இதற்கு தக்க வாய்பாக சமூக ஊடகங்கள் காணப்படுகிறது. உயிர்த்தெழுந்த ஞாயிறு அன்று நடந்த   தொடர்சியான குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பான தவறான செய்திகளும், வதந்திகளும் பரவாமல் தடுக்கும் வகையில் சமூக வலைத்தளங்களை அரசு முடக்கியது.

                        இனமுறுகலிற்கான தூண்டுகோலாக சமூக ஊடகங்கள் காணப்படும் என்ற காரணத்தை கருத்தில் கொண்டே இலங்கை அரசாங்கம் சமூக ஊடகங்களான Facebook, Viper,You,Instragram, YouTupe மற்றும்  What's app போன்ற சமூக ஊடகங்கள் தகவல் தொடர்பு ஒழுங்கு படுத்தல்  ஆனைக்குழுவினால் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டது.

      இதேவேளை, சமூக ஊடகங்கள் அற்ற நிலையில் அக்குறையை பிரதான ஊடகங்கள் நிவர்த்தி செய்ததுடன் நம்பகத்தன்மை மற்றும் உண்மைத்தன்மையை பொறுப்புணர்வுடனும் ஊடக தர்மத்துடனும் மக்களிற்கு தெளிவுபடுத்தியிருந்தமை இலத்திரனியல் ஊடகங்களினையே சாரும்.

       சமூக ஊடகங்களின் மிகப்பெரிய பலம் யாதெனில் ஒருகருத்தை அல்லது செய்தியை சொற்ப நொடிகளில் பல மில்லியன் கணக்கான மக்களிடம் கொண்டு சேர்ப்பதாகும். இதேபோன்றே, உண்மை பரவும் வேகத்தை காட்டிலும் பொய் பரவும் வேகம் அதிகமாகும். இனைய ஊடகங்களின் உண்மை நிலையாதெனில் யார் வேண்டுயானாலும் எதை வேண்டுமானாலும் எழுதலாம் இந்நிலையே பாரிய ஆபத்தான நிலையாக அமைவதுடன் இன அடிப்படை வாதிகள் தமது சுயலாப அரசியலை சாதகமாக்கிக் கொள்ளவும் வாய்ப்பாக அமைகிறது.

          சமூக வலைத்தளங்களில் ஒன்றான Facebook தடைசெய்யபடவேண்டும் என்ற நிலையில் கருத்துக்கள் காணப்பட்டாலும் இலங்கையை பொறுத்தவரை கட்டுப்படுத்துவதே சிறந்தது. இலங்கையில் தற்காலிக தடை சமூக ஊடகங்களிற்கு காணப்பட்ட காலகட்டத்தில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் facebook என்பது சிறந்த தொழில்நுட்பம் எனினும் மோசமான வன்முறைகள் இடம்பெறுவதற்குரிய களமாக இது அமையக்கூடாது.

   இதேவேளை,எத்திரியா,வடகொரியா, சீனா மற்றும் ஈரான் போன்ற நாடுகளில் Facebook ற்கு தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, சமூக ஊடகங்களில் ஒன்றான Facebook நிறுவனமானது இலங்கை அரசாங்கத்துடன் எவ்வாறு எதிர்காலத்தில் இன மத குரோத பதிவுகளை நீக்கலாம் என்பது தொடர்பில் ஆலோசித்து வருகிறது.

    உலகளாவிய ரீதியில் இடம்பெற்ற தேர்தல்கள் கூட சமூக ஊடகங்களின் செல்வாக்கை சான்று பகர்வனவாக அமைந்துள்ளது உதாரணமாக பிரான்ஸில் இடம்பெற்ற மஞ்சள் அங்கி போராட்டம் மற்றும் இந்தியாவில் அண்மையில்,  'டிக்டாக்' செயலி App மூலம் பகிரப்படும் வீடியோக்களால் பல்வேறு சமூகப் பிரச்சினைகள் ஏற்படுவதாக தெரிவித்து அந்த செயலிக்கு தடைவிதிக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

         அந்த மனுவில், குழந்தைகள், மாணவர்கள் மட்டுமல்லாமல் அனைத்து வயதினரும் இதனை பயன்படுத்துவதாகவும், இதனால் உயிரிழப்புகள் அதிகரிப்பதாகவும் குறிப்பிட்டார். டிக்டாக் செயலியை பயன்படுத்திய 400க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், பல்வேறு வழிகளில் தீமையை ஏற்படுத்தும் டிக்டாக் செயலிக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

           இந்த  மனுமீதான விசாரணை, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதனை பரிசீலித்த நீதிபதிகள், தமிழ்நாட்டில் குழந்தைகள், இளைஞர்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளதால், குழந்தைகளின் தனிநபர் சுதந்திரத்தை பாதுகாக்கும் சட்டத்தை தம் நாட்டிலும் ஏன் அமுல்படுத்தக்கூடாது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

           நீதிமன்றத்தின் தலையீடு இல்லாமல், இதுபோன்ற செயலிகளை தடைசெய்ய அரசே உடனடியாக நடவடிக்கை எடுக்க முயற்சி செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். டிக் டொக் செயலியை முழுவதுமாக தடை செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும், டிக்டாக் எனப்படும் குறும்புத்தனமான வீடியோ எடுப்பதற்கும் அதை தொலைக்காட்சியில் வெளியிடவும் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

    மேலும், இடம்பெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து தொடர்சியான குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பான தவறான செய்திகளும், வதந்திகளும் பரவாமல் தடுக்கும் வகையில் சமூக ஊடகங்கள் இலங்கையில் தடைசெய்யப்பட்ட போதும் VPN மற்றும் Proxy servers வாயிலாக ஒரு சிலர் சமூக ஊடக பா வனையில் ஈடுபட்டனர். அதேசமயம் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ன சமூக ஊடகங்கள் கருத்துக்களை பரிமாறி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

      மேலும்,போலியான செய்திகள் சமூக ஊடகங்கள் ஊடாக பரப்பப்பட்டு வருகின்றன என்ற உண்மையை நீண்டகாலமாக எதிர்த்து வந்த Facebook CEO மார்க் அண்மையில் உண்மையை ஒத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். அதன் விளைவாகவே, Facebook நிறுவனமானது அரசாங்கங்களுடன் இனைந்து தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்க கூடிய செய்திகள் தடைசெய்யபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ஜனநாயகம், பன்மைத்துவம் மற்றும் சமூக ஒருமைப்பாடு போன்றவற்றிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளக்கூடாது. இலங்கை அரசாங்கம் சமூக ஊடகங்களினை தற்காலிகமாக இனமுறுகலை தணிக்க தடைசெய்தமை சரியானதா? என்று கடந்த காலங்களில் Twitter ல் நடாத்தப்பட்ட கருத்துகணிப்பு ஒன்றில் "yes" என்கிற பதிலே அதிகமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

      சமூக ஊடகங்களில் ஒரு செய்தியை பகிர்ந்து கொள்ளவும் மற்றும் விருப்பு இடமுன்னரும் குறித்த செய்தியின் உண்மை தன்மை குறித்து(fact checking)ஆழமாக ஆராய்ந்து கொள்ள வேண்டும். காரணம், ஒவ்வொரு செய்திகளின் பின்னாலும் அரசியல் நிகழ்ச்சி நிரவல் ஒன்று உள்ளது. தனிநபர்,சமூக மற்றும் நாடுகளிற்கெதிராக வெறுப்பை உண்டாக்கும் வகையில் செய்திகளை வடிவமைக்கும் அதிகாரம் சமூக ஊடகங்கள் வாயிலாக இலகுவாக கிடைக்கின்றது. ஏதாவது ஒரு செய்தி பொய்யானது என்று உணரும் சமயத்தில் அந்த செய்திகளினை பரிமாறாமல் விடுவது புத்திசாலித்தனமானது.

    சமூகமயமாக்கலில் சமூக ஊடகங்கள் பங்கு காத்திரமானது என்று பலர் வாதிட்டாலும் உண்மையான சமூகமயமாக்கலிற்கு கிடைத்த சாபக்கேடாகவே சமூக ஊடகங்கள் காணப்படுகிறது என ஒரு சாரார் வாதிட்டாலும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இந்திய பிரதமர் மோடி போன்றோர் சமூக ஊடகங்களினையே அதிகம் பயன்படுத்துகின்றார்கள். நரேந்திர மோடி மிக அரிதாகவே செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொள்வதும் கவனிக்கதக்கது.

       சமூகஊடகங்களின் பாவனை தொடர்பாக சரியான முறையில் அறிந்து கொள்ள வேண்டும். உலகலாவிய பொருளாதார அமைப்புக்குள் மூலதனம் மற்றும் தொடர்பாடலிற்காக ஏங்கி நிற்கும் மூன்றாம் உலகநாடுகளின் பிரச்சினைகளிற்கான தீர்வாக ஊடகங்களின் தேவை அத்தியாவசியம். தேவையானதை தேவையான நேரத்தில் சொல்ல சமூக ஊடகம் கட்டாயம் தேவை. சமூகப் பொறுப்பு ஊடகங்களுக்கு மிக அதிகம். அதன் செயற்பாடுகள் சமூகத்தில் பெரும்மாற்றங்களை உண்டாக்கும். அதனை உணர்ந்து உணர்ந்து கொள்வதுடன் பிரஜைகள் ஊடகவியலின் நன்மையான அம்சங்களை பின்பற்றி  செயல்பட்டாலே சமூகம் நற்பாதையில் பயணிக்கும் அதேவேளைசமூக ஊடகங்களின் பாவனை எந்தவொரு பின்தங்கிய பகுதியும் தனித்து விடப்படும் நிலையில் இருந்து தவிர்க்கப்படுவதற்கு காரணமாகிறது. மேலும், சர்வதேச வர்த்தகம் வகித்து வந்த செல்வாக்கு உலகமயமாக்கல் காரணமாக தொடர்பாடல் மற்றும் ஊடகங்களுக்கு மாறியுள்ளது.

ஆக்கம்
இ.தனஞ்சயன்