மீண்டுமொரு வலைப்பூபதிவில் சந்திபதையிட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். குறித்த பதிவானது தென் சீனக் கடலில் தற்போது ஏற்பட்டு இருக்கும் பதற்ற நிலை தொடர்பாக அவதானிப்பதாக அமையவுள்ளது.
பத்து நாட்களுக்கு முன்னதாகவே அமெரிக்காவின் 46 வது ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்று இருந்தார். இந்த நிலையில், பைடன் முன்னால் தற்போதைய முதன்மை சவால்களாக கொவிட் 19 கொரோனா வைரஸை கட்டுபடுத்தல் மற்றும் அமெரிக்காவில் டொனால்ட் ரம்பினால் தனது பதவிக்காலத்தின் இறுதி பகுதியில் ஏற்படுத்திய களங்கத்தை அமெரிக்காவின் கெளரவத்தை மீள கட்டியெழுப்புதல்.
அமெரிக்காவிற்கு தற்போதைய போட்டியாளராக ரஷ்யாவை காட்டிலும் சீனாவே காணப்படுகிறது. அண்மையில் ரஷ்யாவின் பாராளுமன்றம் அமெரிக்காவுடன் மேற்கொண்ட அணு ஆயுத உடன்படிக்கையை மேலும் 5 வருடங்களுக்கு நீடிக்க விருப்பம் தெரிவித்துள்ளன. ரஷ்ய ஜனாதிபதி மற்றும் அமெரிக்க ஜனாதிபதிக் இடையிலான ஆரம்ப கட்ட உரையாடல் சாதகமாக அமைந்துள்ளன. எனினும், அலெஷ்ஸி நவானி, தொடர்பாக அமெரிக்க மற்றும் ரஷ்ய சிந்தனை மாறுபட்ட நிலையிலுள்ளது.
மாறாக, சீனா தாய்வானது வாண்பரப்புக்குள் அத்துமீறி தனது ஆயுதம் தாங்கிய விமானங்களுடன் உள்நுழைந்ததை அடுத்து தாய்வான் கடும் கண்டனத்தைத் வெளியிட்டு இருந்தது. அத்துடன், நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறைமையை தக்க வைத்துக் கொள்ள அவசியமான நடவடிக்கை எடுக்க வேண்டி இருப்பதாக தாய்வான் ஜனாதிபதி Tsai long wen தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து, தென் சீன கடல் பகுதியில் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல்கள் நிலை நிறுத்தப்பட்டன. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி பதவியேற்ற சில நாட்களில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தென்சீனக் கடற்பரப்பில் பதற்றநிலைமை தோன்றியுள்ளது.
இவ்வாறான பதற்ற நிலமை இன்று நேற்று தோன்றியதல்ல இது தந்திரோபாய ரீதியாக உளவியல் காய் நகர்த்தலாகவே சர்வதேச அரசியல் வல்லுனர்கள் அனுமானிப்பார்கள்.
தென் சீன கடல் பகுதியில் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல்கள் நிலை நிறுத்தப்பட்டன. அமெரிக்காவின் ஜனாதிபதி பதவியேற்ற சில நாட்களில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தென்சீனக் கடற்பரப்பில் பதற்றநிலைமை தோன்றியுள்ளது. குறிப்பாக தாய்வானினை சீனா தனது ஆளுகைக்குட்பட்ட பிரதேசமாகவே கருதி வருகின்றது. மாறாக, தாய்வான் சீனாவிடம் இருந்து பிரிந்த நாம் ஒருபு இறைமையுள்ள நாடு என்பது தாய்வானின் வாதமாக உள்ளது.
தாய்வானில் ஜனாதிபதி தனது தேர்தல் வெற்றிக்கு பின்னர் உரையாற்றும் போது, நாம் ஒரு நாடு இது முறைமைகள் என்ற அமைப்பு முறையை எதிர்க்கின்றோம்.
தாய்வான் தனித்துவம் வாய்ந்த ஒரு நாடு என குறிப்பிட்டிருந்தார். எனினும், சீனா தன்னுடைய வல்லாதிக்கம் காரணமாக தாய்வானின் சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டையாக இருந்து வருகின்றது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளும் அமெரிக்கா தென் சீனக் கடலில் தனது நலன்களை தேடுவதாகவே அதன் தலையீடும் ஊடுருவலும் அமைகின்றது.
வல்லரசு நாடுகளின் போர் விளையாட்டு மைதானமாக தென்சீனக்கடல் மாறிவருகின்றது. தென் சீன கடலில் சீனாவின் ஆதிக்கத்தை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பதை அமெரிக்காவின் முக்கிய தலையிடியாக உள்ளது.
அதற்காக குறித்த பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு உதவி செய்வது போல் பாவனை செய்து குறித்த கடற் பிரதேசத்தில் செல்வாக்குச் செலுத்த அமெரிக்கா முயற்சிக்கின்றது அதன் வெளிப்பாடுதான் கொங்கொங் மற்றும் தாய்வான் மீதான அக்கறை.
