அறிவைநாடல்

அறிவைநாடல்
அறிதலார்வம்

புதன், 30 ஆகஸ்ட், 2017

ஜனநாயகத்தினை உறுதிப்படுத்த ஊடகங்கள் உதவாதா?

"ஊடகங்கள் இல்லாத ஜனநாயகம் சிறகில்லாத பறவை போன்றது "மக்கள் மற்றும் அரசாங்கத்திற்குமிடையிலான தொடர்பாளராக/இனைப்பாளராக ஊடகங்களே காணப்படுகிறது. ஊடகங்களால் கூறப்படும் கருத்துக்கள் மிகவும் வலிமைமிக்கவை.அத்துடன்,ஊடகங்கள் தற்போது சமூக கட்டமைப்பு(social structure)மற்றும் கருத்து உருவாக்கம்(opinion forming)போன்றவற்றில் முக்கியமான பங்கு வகிக்கிறது.இவற்றின் முக்கியமான பணிகளாக, தகவல்கள் வழங்குதல், சமூகப் பதட்டத்தை இல்லாமல் செய்தல்,சமூக சீர்திருத்தம், சமூகமயப்படுத்தல்,பண்பாடு விழுமியங்களினை கட்டிக்காத்தல்,மக்களின் உணர்வுகளை புரிந்து படைப்புகளினை படைத்தல்,மக்களின் அதிகாரத்தை சுட்டிக்காட்டுதல்,புதிய ஆக்கபடைப்புக்களை ஊக்குவித்தல்,முரண்பாடுகளை களைதல், பிரச்சனைகளிற்கு தீர்வு முன்வைத்தல் போன்றன முன்மாதிரி ஊடகங்களிற்கு முக்கியமானதாகும்.மக்களின் உரிமைவென்றடுக்க ஊடகங்கள் முக்கியம்.மக்கள் வரிசெலுத்துவதனால் பாராளுமன்றத்திற்கு செல்லும் மக்கள் பிரதிநிதிகளினை தெரிவு செய்யும் உரிமை ஜனநாயகத்தின் ஊடாக உறுதிபடுத்த ஊடகங்களால் பங்களிக்க முடியும்.இதுவே பொறுப்புமிக்க ஊடகவியலாகும்(Responsible journalism).ஜனநாயகத்தினை பெறுமதியுடையதாக்குவதாக ஊடகங்கள் காணப்படுகிறது.உலக அரசியல்,பொருளாதார மற்றும் சமூகவியல் மாற்றம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஊடகங்களே.சாதாரண பாமரனுக்கும் அறிவூட்டக்கூடியதாக வானொலி மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் விளங்குகின்றன .இதனாலேயே, சட்டம், நீதி, நிர்வாகத்தை தொடர்ந்து ஜனநாயகத்தின் நான்காவது கிளை யாக ஊடகங்கள் சமுதாயத்தின் காவல்நாயாக குறிபிடப்படுகின்றது.எனினும்,தற்போது,சர்வதேச ஊடகங்களில் வழிகாட்டும் நாய்களாக ஊடகங்கள் குறிப்பிடப்படுகின்றது.ஐனநாயகம்(Democracy)என்பதை பல்வேறு அறிஞர்கள் பல்வேறு விதமான வரைவிலக்கனங்கள் வகுத்துள்ளார்கள்.ஹென்றி டேவிட்  "அரசியல் அதிகாரம் முன் அனைவரும் சமம்" என்கிறார், ஆபிரகாம் லிங்கன் "மக்களால் ,மக்களுடைய,மக்களுக்காக அரசாங்கம்" என வரையறுக்கின்றார்.காள்மாக்ஸ் 'Democracy is the road to Socialism' "சமவுடமைக்கான பாதையாக ஜனநாயகத்தை எடுத்து கொள்கின்றார்" மாறாக புரட்சியாளர் சேகுவாரா "ஜனநாயகம்  என்பது முதலாளித்துவ வர்க்கம் மற்றும் சர்வாதிகார ஆட்சியார்கு சாதகமாக இருப்பதாகவும் அதனை நாம் அனுமதிக்க கூடாது" என்கிறார் .தோமஸ்ஜெபர்சன்"" ஜனநாயகத்தின் நாணயமே தகவல்" என்கிறார்.அடிப்படை வரைவிலக்கனமாக மக்களை தலைவர்களாக கொண்டது/முதன்மை படுத்துவதாக ஜனநாயகம் காணப்படுகிறது.ஊடகத்தின் ஜனநாயகக் கோட்பாட்டு கூட ஜனநாயகத்தின் மாண்புகளையே வலியுறுத்துகிறது.சர்வதேச ஊடகங்களினை பொறுத்தவரை ஜனநாயகம் என்று கூறிக் கொண்டிருந்தாலும் முழுமையான ஜனநாயகப் பண்புகளினை பின்பற்ற செய்கிறதா என்பது கேள்விக்குறி?ஆதாரமாக, எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு மேற்கொண்ட ஊடக சுதந்திரத்திற்கான பட்டியல் படுத்தலில் அமெரிக்காவிற்கு 41வது இடமே கிடைத்தது. ஆனால்,உலகத்திற்கு ஜனநாயகம் தொடர்பாக போதிக்கின்றது.இது குறித்து ஆழமாக சிந்திக்க வேண்டிய விடயம் ஆகும்.குறித்த தரப்படுத்தலில் இலங்கைக்கு 141வது இடமே கிடைத்தது. இலங்கையில் தற்போது நல்லாட்சி அரசாங்கம் என்று கூறப்படும் நிலையில் ஊடகளிற்கான சுதந்திரம் என்பது கடந்தகால நிலையை விட முன்னேற்றமே தவிர முழுமையான சுதந்திரத்தை அனுபவிக்க முடியாத நிலையே ஊடகங்கள் மற்றும் ஊடகவியளாருக்கு காணப்படுகிறது. ஊடகத்தினுள் காணப்படும் சுதந்திரமற்ற நிலை மற்றும் ஊடகங்களிற்கு புறச்சூழலால் வழங்கப்படும் சுதந்திரமற்ற நிலை போன்றவற்றை குறிப்பிடலாம். இரண்டாவது சுதந்திரம் தொடர்பாக நாம் அதிகம் அலட்டிக்கொண்டாலும் ஊடகங்களினுள் பணிபுரியும் ஊடகவியளாரின் சுதந்திரம் தொடர்பாக யாரும் சிந்திப்பது இல்லை.ஊடகத்தின் அறம்(Media ethics)தொடர்பாக சவாலுக்கு உட்படுத்தும் இடமாக ஊடகங்களின் அகச்சூழல் காணப்படுகிறது.அதிகரிக்கும் ஊடகங்கள் போட்டிச் சூழலில் ஏனைய ஊடகங்களினை எப்படி வெற்றி கொள்ளலாம் என்றே எல்லா ஊடகங்களும் சிந்திக்கின்றன.இதனால் ஊடகஅறம் கண்டிக்கபடுவதில்லை.தற்போதைய நவீன ஊடகங்கள்(Digital media)குறிப்பாக பிரஜைகள் ஊடகவியலை(Citizens journalism)பின்பற்றும் சமூக ஊடகங்களின் வருகை ஊடக ஒழுங்கு,ஊடகதரநிர்னயம் மற்றும் ஊடகதர்மத்தை சம்பந்தம் இல்லாத ஒன்றாக்கி விட்டது.மனிதனின் அடிப்படை உரிமை மற்றும் சுதந்திரம் என்று அறத்தை பின்பற்ற தவறி விட்டார்கள்.ஊடகசுதந்திரம் என்பது மக்களின் இறைமையை பலப்படுத்தல், அரசியல் அறிவு மற்றும் புரிந்துனர்வு,மக்களின் பொது சன அபிப்பிராயம், சட்ட குறைபாடுகள்,முரன்படாதன்மையை உருவாக்கல்,மனித உரிமைக்கு குரல் கொடுத்தல்,சுதந்திர நீதித்துறையை உறுதிபடுத்தல் போன்ற ஜனநாயகத்தின் பண்புகளை மக்கள் அனுபவிப்பதற்கு வழிவகைகளை செய்ய வேண்டும் மாறாக ஊடகசுதந்திரம் தவறான வழியில் பயன்படுத்தி ஜனநாயகத்தின் நன்மைகளை சேதப்படுத்தக்கூடாது.ஜனநாயகத்தின் வலிமை அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாக மக்கள் தம் அபிப்ராயங்களை தெரியப்படுத்துவதற்கு ஏற்ப ஊடகசுதந்திரத்தை முன்னிலைப் படுத்தல்.இதனாலேயே, Bill Moyers என்ற மெய்யியலாளர் ஜனநாயகம் மற்றும் ஊடகங்களின் பெறுமானம் பிரித்துப்பார்கமுடியாதது என விளங்கிக் கொள்கிறார்.சமாதானம் என்பது ஜனநாயகம் இல்லாமல் வராது என மாமனிதர் நெல்சன் மண்டேலா ஜனநாயகத்தின் பெரும் பெறுமதியை கூறுகிறார்.ஆங் சங் சூகி"ஜனநாயகம் சுதந்திரம் என்பன எமது உயர்ந்த கனவுகள் என்று கூறுகிறார்.கிறிஸ்டோபர் கூறும் போது ஊடகங்களின் சுயாதீனம் ஜனநாயகத்தை உறுதிபடுத்துவதிலே உள்ளது. பேட்டன் ரசல் "முட்டாள்களும் வாக்களிக்கும் தகுதியை ஜனநாயகம் தருவதாக கூறுகிறார் ".பேட்டன் ரசலின் கூற்று ஆழமாக திறனாய்வு செய்யவேண்டியது.இங்கு,அயோக்கியர்கள் ஆட்சி செய்கிறார்கள் என்றால் தெரிவு செய்தவர்கள் முட்டாள்கள் என்ற பகுத்தறிவின் தந்தை பெரியாரின் சிந்தனையும் ஒப்பிடப்படவேண்டியது.ஜனநாயகதை பாதுகாக்க ஊடகங்கள் மக்களினை அரசியலில் பங்கெடுக்கக் செய்து கொள்கை வகுப்பாளர்களுக்கு அறிவூட்டி அரச செயல்பாடுகளில் புறவயத்தன்மையை பேனுவதன் ஊடாக பங்கேற்பு அரசியல் பண்பாட்டை உறுதிப்படுத்தி ஜனநாயக விழுமியங்களினை காப்பாற்றுவதே ஊடகங்களின் தார்மீக கடமை என்பதோடு தொழில் வாண்மை மிக்க ஊடகத்துறையை வளர்த்தெடுக்கவும் முடியும்.ஜனநாயகத்தில் அதிகாரம் என்பது நிலையற்றது.எனினும், ஜனநாயகம் என்பது வெறும் உதட்டளவில் மாத்திரமே அரசியல் மற்றும் ஊடகவியல் இரண்டிலும் காணப்படுகிறமை குறித்து இன்னும் சிந்திக்க வேண்டி இருக்கிறது.Walter chonkite என்ற சிந்தனையாளர் ஊடகசுதந்திரம்(Freedom of the press)என்பதையே ஜனநாயகம் என்று எடுத்து கொள்கின்றார் மற்றும் ஒரு அமெரிக்கமெய்யியலாளரான Andrew vachss "சமூக முன்னேற்றத்திற்கான உந்து விலையே ஊடக ஜனநாயகம்" என்கிறார்.எனினும்,நடுநிலை ஊடகங்கள் இல்லாத வரை ஜனநாயகம் சந்தேகமே! இ.தனஞ்சயன் ஊடகத்துறை.

திங்கள், 28 ஆகஸ்ட், 2017

தீர்வு காணும் இதழியல் தடம்மாறும் இதழியலிற்கான தீர்வாகுமா?

உலகமயமாக்கலினை தற்காலத்தில் இவ்வளவு வலிமையாக்கியதாக ஊடகங்களே காணப்படுகிறது.சிறிய விடயங்களினை ஊதிப்பெருப்பிப்பதும் மிகப்பெரிய விடயங்களை மூடி மறைப்பதுமாக ஊடகங்கள் கானப்படுகின்றது.இது (Issues'evidences based journalism )ஆதார அடிப்படையில் அமைந்த இதழியலின் அவசியத்தை வலியுறுத்துகின்றது.உலகமயமாக்கல் பல்வேறு சாதகமான நல்ல விடயங்களினை தந்தாலும் அதன் எதிர்மறையான தாக்கங்கள் பாரதூரமானவை.மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு பிரச்சனையை சந்தித்தே கடந்து செல்ல வேண்டி இருக்கிறது. பிரச்சனைகள் இல்லாவிட்டாலும் வாழ்க்கையில் சுவாரசியமாக இருக்கமாட்டாது.பிரச்சனைகளினை எவ்வாறு சவாலாக எடுத்துக் கொள்கின்றோம் என்பதிலே சாதனை தங்கியுள்ளது.பிரச்சனைகளினை சவாலாக நினைத்து தகர்ப்பவர்களையே வெற்றி அடிக்கடி விரும்பி சந்தித்து கொள்கின்றது.இந்தச் சிறு பதிவு பிரச்சனைகள் தொடர்பாகவோ உலகமயமாக்கல் தொடர்பாகவோ நுணுக்கமான சிந்திக்கபோவதில்லை.எமது ஊடகங்கள் மத்தியில் காணப்படும் செயற்கையான முறையில் மக்களை பிரச்சனைகளிற்குட்படுத்தி மக்களை பீதிகுட்படுத்தும் இதழியல் மரபினை கட்டுடைத்து தீர்வுகானும் இதழியல்  (Solutions journalism )தொடர்பாகவே  சிந்திக்க வைப்பதாகவே அமைகிறது.தற்போதைய இதழியல் பரப்பில் காலப்பொருத்தப்பாட்டிற்கு ஏற்ப ஏராளமான இதழியல் வகைகள் காணப்படுகின்றன.பொழுதுபோக்கு இதழியல்,விளையாட்டு இதழியல்,புலனாய்வு இதழியல்,அபிவிருத்தி இதழியல், முரண்பாடு உணர்திறன் மிக்க இதழியல், சுகாதார இதழியல், விவசாய இதழியல்,குடிமக்கள் இதழியல்,மஞ்சள் இதழியல்,அணர்த இதழியல்,வணிக இதழியல்,சமாதான இதழியல்,ஒலி மற்றும் ஒளிபரப்பு இதழியல்,சஞ்சிகை இதழியல்,பன்னாட்டு இதழியல் போன்றவற்றுடன் தற்போது பிரஜைகள் ஊடகவியலும் முக்கியமானதாகக் காணப்படுகிறது.அத்துடன்,தற்போது constructive journalism and mobile journalism(கட்டமைப்பு இதழியல் & நடமாடும் இதழியல்)போன்றன பிரபல பேசு பொருளாக பன்னாட்டு ஊடகவியலில் காணப்படுகின்றது. அதேபோன்று, தீர்வு கானும் இதழியல் என்ற சொல்லாடல் மேற்குலக தொழில்சார் ஊடகவியலில் 1998 இல் இருந்து விவாதிக்கப்பட்டாலும்,அதன் அவசியம் தற்போதைய நிலையில் உணரப்பட்டுளளது.தீர்வு காணும் இதழியல் என்பது மக்களிடையே பிரச்சனைகள் தொடர்பான அறிக்கையிடலினை செய்யாமல் குறிப்பிட்ட பிரச்சனைகளிற்கான நம்பகமான ஆதாரங்கள்,யார் இந்த பிரச்சனைகளிற்கான காரணம்? யாரால் இந்த பிரச்சனைகளை தீர்த்து வைக்க முடியும்? எப்படி பிரச்சனைகளினை தீர்கலாம்? போன்றவற்றிற்குரிய பதில்களை முன்வைத்து மக்களிற்கு தெளிவூட்டுவதும் புதிய வகையான சிந்தனை,திறனாய்வு தளத்திலான அணுகும் ஆற்றல் போன்றவற்றை விருத்தி செய்வதாகும். குறித்த இதழியலின் இயல்பின் படி,ஊடகவியலாளர் பிரச்சனைகளினை உண்டாக்குபவராக இல்லாமல் தீர்த்து வைப்பவராக/தீர்வுகளை முன்மொழிபவராக காணப்படவேண்டும் என்று கூறுகிறது.அதேபோல்,பக்கசார்பற்ற போலி தர்கங்களைத் தவிர்த்து புதிய பாணியில் செய்திகளை கூறும் தன்மையும் காணப்படவேண்டும் .குறிப்பாக,இங்கு,பிரச்சனைகளிற்கு தீர்வு காணும் பண்பு நிறைந்தவராக ஊடகவியளாளர் காணப்படுவார்.பிரச்சனைகளை தீர்த்து வைக்க பல வழிமுறைகளினை  தனிப்பட்ட திறமை,ஆளுமை,நுண்ணறிவு, அனுபவம்,மென்திறன்,எடுத்துக்கொள்ளும் மனப்பாங்கு என்ற   அடிப்படையில் வேறாக காணப்பட்டாலும் பொதுவாக பின்வரும் வழிமுறை அடிப்படை ஆகும்.பிரச்சனைகளை விளங்கிக் கொள்ளுதல், எப்படி தீர்த்து வைக்கலாம் என விளக்குதல்,தீர்வுக்களிற்கான ஆதாரங்களை காரண காரிய அடிப்படையில் விளக்குதல்,முடிவின் தாக்கத்தை விளக்குதல்,நிபுணர்களின் அறிவுரை,ஆய்வுக் கண்ணோடு அணுகி அறிக்கை தயாரித்தல்,மக்களை செயற்திறன் மிக்கதாக்குதல்,நிறைவான தகவல் மற்றும் தரவு சேகரிப்பு,நேர்த்தியான முற்போக்கு சிந்தனை போன்றன ஆகும். எமது நாட்டினை பொறுத்தவரை யுத்தம் முடிவடைந்த நிலையிலும் போர்கால இதழியலில் மாற்றம் ஏற்படவில்லை. அது சிங்கள தமிழ் ஊடகங்கள இரண்டுமே பின்ளற்றவே செய்கின்றன.இலங்கையில் மாத்திரம் அல்ல வடகொரியா மற்றும் அமெரிக்கா போர் பதட்டம் கூட ஊடகங்கள் ஊடாக மேற்கொள்ளும் வார்த்தைக் போரே!வாசகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் இந்த இதழியலின் பண்புகள் அமையும்.தற்போதைய நிலையில் அனைவரும் ஊடகவியளாளர் என்ற நிலையை பிரஜைகள் ஊடகவியல் தோற்றுவித்து உள்ளது. இதனால், ஊடக அறம் தொடர்பான அறவே அறிவற்ற நிலையில் ஊடகங்களினை அணுகுவதால் பிரச்சனைகள் அதிகமாக காணப்படும் நிலைமையே காணப்படுகிறது.சரியான கேள்விகளை கேட்காத வரையும்,தனித்துவமான சிந்தனை அல்லாத வரையிலும் பிரச்சனைகளை தீர்க்க முடியாது என்பது தீர்கமான கருத்து.இந்தப் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான தீர்வாக தீர்வுகாணும்/தீர்வை முன்மொழியும் இதழியல் (Solutions journalism)இதழியல் காணப்படுகின்றது.இலகுவாகக் கூறினால்,தீர்வு கானும் இதழியல் நோயைப் பற்றி உரையாடுவதை விட சுகாதாரம் தொடர்பாக உரையாடுவது சிறந்தது என்று கூறுகிறது.தடம்மாறும் இதழியலிற்கான தீர்வாக தீர்வு காணும் இதழியல் அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.இ.தனஞ்சயன் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்.