வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் ஊடுருவியுள்ள விளம்பரம் வாழ்க்கையினை புரிய வைக்கும் கல்வி துறையியினை விட்டு வைக்கவில்லை. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி Roosevelt என்பவர் விளம்பரம் என்பது எண்ணற்ற மக்களிற்கு பயனுள்ள பொருட்கள் தொடர்பான உண்மையான அறிவை தருவது.இது ஒரு வகையில் கல்வி ஆகும். நாகரீக வளர்ச்சி இக்கல்வி அறிவை சார்ந்தாகும் என கூறுகின்றார்.பத்திரிகைகளின் விளம்பரம்பரங்களை பொறுத்தத மட்டில் கல்வி சார்ந்த விளம்பரங்களிற்கென தனித்த இடம் உண்டு. ஏனைய ஊடகங்களான வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றுடன் ஒப்பிடும் போது பத்திரிகையில் கல்வி சார்ந்த விளம்பரங்களினை அதிகம் அவதானிக்கலாம்.விளம்பர வகைகளாக பொருள் விளம்பரம், பொதுமக்கள் சேவை விளம்பரம், நிறுவன விளம்பரம் போன்றன முக்கியமானதாக காணப்படுகிறது. கல்வி சார்ந்த விளம்பரங்களை பொறுத்தவரை யாழ்ப்பாண பிராந்தியத்தை மையப்படுத்தி வெளியாகும் மூன்று பிரதான பத்திரிகைகளினை தொடர்ந்து ஆய்வு செய்த பின்னர் கீழ்கண்ட வகைப்பாடு கட்டுரையாளரால் செய்யப்படுகிறது. ஆங்கில கற்களை நெறி விளம்பரம், கணினி கற்கைகள் விளம்பரம்,போட்டி பரீட்சை விளம்பரம், ஜேர்மன் மற்றும் பிரைன்ச் மொழி கற்கைகள் நிறுவனம், ஹொட்டல் பாடப்பயிற்சி நெறி விளம்பரம், பாடசாலை கற்கும் மாணவர்களினை மையப்படுத்திய விளம்பரங்கள் போன்றன இனம் காணப்பட்டன.குறிப்பாக குறிப்பிட்ட விளம்பரங்கள் பல்வேறு உத்திகளை கையாண்டு தம் பக்கம் நுகர்வோரினை இழுக்க முயற்சி செய்கின்றன. கவனகுவிப்பு,நம்பிக்கைஊட்டல்,நினைவில் நிறுத்தல்,கருத்து தெரிவிக்கும் தன்மை போன்றன குறிப்பிடத்தக்கது. விளம்பரம் என்பதன் நோக்கம் தூண்டி செயற்பட வைக்கும் ஆற்றல் ஆகும். இதனை விளம்பர கோட்பாட்டு சட்டகமான AIDAS அதாவது Attention-கவனம் Interest-ஆர்வம் Desire-ஆசை Action-செயற்பாடு Satisfaction-திருப்தி குறித்த தாக்கத்தை விளம்பரம் ஏற்படுத்தும்.யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் கல்வி சார்ந்த விளம்பரங்களின் நுட்பமாக வார்த்தை பயன்பாடே காணப்படுகிறது.அவற்றில் சில பிரபல ஆசிரியர், முன்னனி ,அனுபவம் மிக்க ஆசிரியர் குழாம், சர்வதேச அரசு அங்கீகாரம்,30 நாடகங்களில் ஆங்கிலம், இலவச கற்றல் கையேடுகள்,நவீன கற்பித்தல் வசதிகள், Diploma,Certificate, ஆங்கிலம் இலகுவாக பேசலாம், பதிவு களுக்கு முந்துங்கள் ,இலகுவாக அடிப்படையில் இருந்து ஆங்கிலம்,No1,எதிர்பார்கை வினாக்கள், இலகு மீளூட்டல் வகுப்புகள், முதல் தரம்,விசேஷ,தனிபட்ட, பிரத்தியேக, வெளிநாட்டில் கற்பதற்கு ஆசை இல்லையா?அனுமதிகளுக்கு,முதல் வகுப்பு இலவசம், ஒரு பிரிவில் 20 பேர் மட்டுமே, முதல் பதிவு செய்பவர்களுக்கு 60%கழிவு, இலங்கையில் புகழ் பூத்த,கட்டண சலுகை, ஆங்கில பாடநெறியில் இனைபவர்களுக்கு சிங்கள பாடநெறியில் இனையும் வாய்ப்பு,என்னிடம் இனைவோர் உயர் பெறுபேறு பெறுவர், A என்ற அருங்கனியைப் பெற்றிட,அனுமதி கட்டனம் இல்லை, ஆங்கில மொழியை தமிழில் கற்றல்,முன்னாள் ஆசிரியர், அனுமதி மட்டுப்படுத்தப்பட்டது,free English course, 70000 ரூபாய் பெறுமதியான 5 கற்களை நெறிகளை 20000 ரூபாய் மட்டும் செலுத்தி ஆங்கில சிங்கள மொழி அறிவைப் பெருக்கி கொள்ளுங்கள், பெறுமதிமிக்க கற்கை, மிக குறுகிய காலத்தில் சரளமாக எழுத பேசக்கூடிய ஆங்கில பாடநெறி,இலவச கருத்தரங்கு, வடக்கில் முதலாவது, 2016 A/L பரீட்சை எடுத்தவரா?புதிய பிரிவு ஆரம்பம், விழிப்புணர்வு அமர்வு, பிரித்தானிய பட்டத்திற்கான முதல் உங்கள் கட்டம்,நவீன மயப்படுத்திய விரிவுரை மண்டபம், செயன்முறை தேர்வுகள் விரிவினை விடயங்கள குறிப்புகள் இவ்வாறான வார்த்தைகள் மதி மயக்கம் கூடியது. இவற்றில் இருந்து தெளிவு பெறவேண்டும்.நல்ல பொருளிற்கு விளம்பரம் அவசியம் அற்றது என்பார்கள். ஆனால், உலகமயமாக்கலின் தாக்கம் விளம்பர பொருளே தரமானது என்றாகிவிட்டது. ஊடகங்களின் பிராண வாயுவாக விளம்பரங்களே உள்ளமையால் ஊடகங்களில் விளம்பரங்கள் தவிர்க்க முடியாதவை.எனினும் இலவச கல்வி இலவச கல்வி என்று கூறும் நமது நாட்டில் கல்வி சார் விளம்பரங்களின் அதிகரிப்பு கவலை யான விடயமாகும்.ஆக்கம் -இ.தனஞ்சயன்.
அறிவைநாடல்

அறிதலார்வம்
வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017
கல்விக்கு விளம்பரம் அத்தியஅவசியமா?

வியாழன், 17 ஆகஸ்ட், 2017
கேலியாக ஆழமான கருத்துருவாக்கம் மேற்கொள்ளும் கேலிச்சித்திரம்!
கல்வி, சமூகம், மொழி, மதம்,இனம் என்ற எல்லைக்கோடு தாண்டி ஆழ்ந்த அர்தபூர்வமான கருத்துக்களை பெரும் திரளான மக்களிடம் கொண்டு சேர்ப்பதாக கேலிச்சித்திரங்கள் கானப்படுகின்றன.ஒரு புத்தகம், கட்டுரை,ஆசிரியர் தலையங்கம், பத்தி எழுத்து, தேர்தல் விஞ்ஞாபனங்கள் ஏற்படுத்தாத தாக்கத்தை கேலி சித்திரங்கள் செய்யும் ஆற்றல் மிக்கன. மக்களில் பெரும்பாலானவர்களின் ரசனை கேலி, கிண்டல், மட்டம்தட்டல், நக்கல்,நையாண்டி போன்றன காணப்படுகிறது. 100000 வார்த்தைகளில் புத்தகம் ஊடாக கூறுவதை கேலிச்சித்திரம் ஊடாக இலகுவாக கூறமுடியும்.கேலி சித்திர தொடக்க வரலாற்றினை பொறுத்தத மட்டில் அமெரிக்கா வே காணப்படுகிறது. 16ம் நூற்றாண்டு அச்சு ஊடக வரலாற்றின் திருப்புமுனையான காலப்பகுதியாகும்.அக்காலத்திலே கேலிச்சித்திரங்கள் மக்களின் கருத்துக்களை பிரதிநிதித்துவப்படுத்தின.அமெரிக்க ஊடகத்துறை வரலாற்றில் முதலாவது கேலி சித்திரத்தை வரைந்துள்ளார்.இங்கிலாந்து தேசத்திற்கு எதிராக பல புரட்சியை ஏற்படுத்தும் கேலிச் சித்திரங்களை வரைந்தார்.பவுல் ரெவரே என்பவர் லிங்கன் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் 1000 கணக்கில் கேலி சித்திரத்தை வரைந்தார்.அக் காலத்தில் கேலிச்சித்திரங்கள் பிரபலமானது. அத்துடன் மஞ்சள் இதழியல் என்ற சொல்லாடலும் அறிமுகமானது.கேலிச் சித்திரங்களின் தாக்கம்,விரைவுத்தன்மை போன்றன கனதியானது.சாதாரண கல்வி கன்கார்டியா பாமரனாலும் அரசியல் திருகுதாளங்களை இலகுவாக புரிந்து கொள்ள முடிகின்றது.இது கேலிச்சித்திரத்தின் சாதமான பலம்.கேலிச்சித்திரங்கள் அரசியல், பொருளாதாரம், சமூகம், விளையாட்டு என அனைத்து துறையிலும் உண்டு. கேலிச்சித்திரங்களினை யாழ்ப்பாண தமிழ் பத்திரிகைகள் தெற்கு ஊடகங்களிடம் இருந்து கடன்வாங்கியே பிரசுரம் செய்கிற தன்மையை கடந்த கால பத்திரிகைகளில் அவதானிக்க முடிந்தது. ஆயினும், சிங்கள மற்றும் ஆங்கில மொழி பத்திரிகைகளில் கேலிச்சித்திரங்கள் பிரதான இடம் பிடித்தன.கொழும்பில் இருந்து வெளியாகும் தமிழ் பத்திரிகைகளில் கேலிச்சித்திரங்களை அவதானிக்க முடிந்தது. கேலிச்சித்திரங்கள் ஊடக அறம் என்ற போர்வையில் தணிக்கைக்குழு உட்படுத்தும் செய்திகளை இலகுவாக நாசூக்காக குறியீட்டு முறையியல்கேலிச்சித்திரங்கள் கூறிவிட்டு செல்கின்றன. இது கேலிச்சித்திரத்தின் பலம்.ஆக்கம்:உங்கள் நண்பன் இ.தனஞ்சயன் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்,ஊடகத்துறை.

புதன், 16 ஆகஸ்ட், 2017
நடுநிலை மாற்று ஊடகங்களில் சாத்தியமா?
இன்றைய காலத்தில் ஊடகங்கள் மக்களுடன் மிக நெருக்கமாகி விட்டது. இரண்டும் ஒன்றை ஒன்று தங்கியே காணப்படுகின்றது.மக்கள் இதழியலின் வருகையுடன் இது மேலும் வலுவானதாக மாற்றம் பெற்றுள்ளது. ஊடகங்களினை மக்கள் தமது பயன் மற்றும் தேவை கருதி தேர்வு செய்வார்கள். ஒவ்வொருவரின் தேவை தத்தமது இலக்கு,எதிர்பார்ப்பு போன்ற தனிப்பட்ட தன்மையின் அடிப்படையில் வேறுபட்ட தன்மைகள் காணப்படுகின்றது. இதனால், ஊடகங்கள் மக்களின் தேவையினை பூர்த்தி செய்யும் அதேவேளையில், தமது அரசியல் மற்றும் வணிக தேவைகளையும் நிறைவு செய்கிறது.ஊடகங்களின் நடுநிலை என்பது மிகவும் சிக்கல் நிறைந்த ஒன்றாகும். மூத்த பத்திரிகையாளர்கள் சோ அவர்கள் நடுநிலை தொடர்பாக குறிப்பிடும் போது "கிரிகெட் விளையாட்டில் நடுவரே நடுநிலை அற்றவர்" என்று கூறினார். இக் கூற்றை ஆழமாக சிந்திக்கவேண்டும். கட்டுரையாளரின் அவதானிப்பில் ஊடகங்கள் நடுநிலை என தம்மைதாமே கூறிக்கொள்ளுமே தவிர நடுநிலை பேனமாட்டாது.சர்வதேச ஊடகங்களினை பொறுத்தமட்டில் அவை தமது அரசியல் நிகழ்ச்சி நிரலின் கீழே செயற்படுகின்றது.B.B.C,C.N.N,C.B.S,A.F.P போன்றன நடுநிலை அற்ற ஊடகங்கள் ஆகும். அவை எப்போதும் தமது பக்க தவறுகளை நியாயப்படுத்துவதாகவே இயங்குகிறது. எனினும் அவற்றில் வரும் செய்திகள் எமது மொழியில் மொழிமாற்றம் செய்யப்படுகின்றதே அன்றி சர்வதேச அரசியலினை புரிந்து கொள்ளும் வகையில் அவை மொழிபெயர்ப்பு செய்யப்படவில்லை.இந்த எமது பலவீனம் மேற்குலகிற்கு எம்மை மேலும் பலவீனப்படுத்த சந்தர்ப்பத்தை அள்ளி வழங்குகிறது. எம்மிடையே காணப்படும் வெள்ளையன் பொய் சொல்ல மாட்டான் போன்ற முற்கற்பித எண்ணங்கள் தவிர்க்க படவேண்டியவை.மேற்குலகின் ஊடக இராஜதந்திரம் புரிந்து கொள்ளப்படவேண்டும்.மாற்று ஊடகங்களின் எழுச்சி என்பதே நடுநிலை அற்ற ஊடகங்கள் என்பதற்காக ஆதாரம்.மாற்று ஊடகங்கள் என்பது பிரதான ஊடக கொள்கைக்கு மாறாக தோன்றும் ஊடகங்கள் ஆகும். மாற்று ஊடகங்கள் அதன் பண்புகளில் சிறிது காலமே தாக்கு பிடிக்கும் பின்னர் வணிக அரசியல் வட்டதிற்குள் அகப்பட்டு விடும்.மாற்று ஊடகங்களின் இயல்புகளாக விளம்பரம் இல்லாத தன்மை, சிறிய வட்டம், செலவு குறைந்த தன்மை, ஒழுங்கு முறையற்ற தன்மை, கட்டுபாடற்ற தன்மை,நிறுவன கட்டமைப்பு அற்ற தன்மையினை குறிப்பிடலாம்.மாற்று ஊடகங்களின் ஆயுள் காலம் மிகவும் குறைவானது.மாற்று ஊடகங்கள் என்பது தொடர்ந்து வரும் செல்நெறி/போக்கு(Trend) இறை மாற்றுவதாக காணப்படும். நடுநிலை இங்கு எதிர்பார்க்கப்படுவது கடினம்.உலகமயமாக்கல் மாற்று ஊடகங்களிற்கான சந்தர்ப்பங்கள். உலகமயமாக்கல் என்பதே வனிகமயப்பட்டதே .வனிகமயமாக்கல் என்பது??ஊடகங்களில் நடுநிலை என்பது எம்மை நாமே நேர்மையானவர்கள்,உண்மையானவர்கள்,நீதியானவர்கள் என்று உலகை நம்ப வைப்பது போன்றதாகும்.நடுநிலை அல்லாத மக்கள் உள்ளவரை ஊடகங்களும் அவ்வாறே காணப்படும்.ஆக்கம்:இ.தணஞ்சயன் ஊடகத்துறை மாணவன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

ஊடகபாவனையின் அதிகரிப்பு ம் விதைக்கப்படவேன்டிய ஊடகஅறிவும்!
ஒரு நாட்டின் அபிவிருத்தியினை அளவிடும் சுட்டென்னில் முக்கியமான ஒன்றாக எழுத்தறிவு காணப்படுகின்றது.எனினும், தற்போதைய நிலையில் நாளொன்றுக்கு ஊடகங்கள் பெருகிக்கொண்டு வருகின்றன. ஆனால், அவ் ஊடகங்கள் சமூக பொறுப்புடன் செயல்படாமல் தவறான பாதைக்கு திசை திருப்புகின்றது.கடந்த பல ஆண்டு காலமாக எழுத்தறிவு என்பது எழுதுவதற்கும் வாசிப்பதற்கும் ஆன இயலுமையை குறிப்பிடலாம். ஊடகங்கள் வாயிலாக பல தகவல்களினை தற்போதைய சூழ்நிலையில் பெற்றுக்கொள்ள முடிகிறது. ஆனாலும், அவை உண்மையானவையா?நடுநிலையானவையா?அறத்திற்கு உட்பட்டதா?புறவயமானதா? போன்ற அடிப்படை கேள்விகள் வினாவப்படவேண்டியது கட்டாயம். 21ம் நூற்றாண்டில் ஊடக எழுத்தறிவு என்ற பதம் பாவனைக்குரியதாக காணப்படுகின்றது. ஊடகத்தை எப்படி அணுகுதல்,பகுப்பாய்வு செய்தல்,மதிப்பிடுதல் மற்றும் திறனாய்வு செய்தல் போன்றவற்றை குறிப்பிடலாம். ஊடக எழுத்தறிவு என்பது ஊடகங்களில் வரும் நுட்ப அரசியல் சார்ந்த செய்திகளை விளங்கிக் கொள்ளும் ஆற்றல் ஆகும். இது கற்றஅறிவு,அனுபவம், சமூக சூழல், பண்பாடு, மொழிமாற்றம் மற்றும் மதசார்புகளிற்கு ஏற்ப மாறுபடும்.தற்போதைய நேரத்தில், ஊடகளிற்கென ஒழுக்ககோவை காணப்பட்ட போதிலும் அவை எவ்வளவு தூரம் பிரயோகிக்கப்படுகின்றன என்பது ஆழமாக சிந்திக்கத் கூடிய விஷயமாகும்.நவீன ஊடகங்கள் இவற்றை கண்டுகொள்ளாதமை கண்டிக்கத்தக்கதாகும்.ஊடகத்தை விளங்கிகொள்வதால் ஏற்படும் சாத்தியமான அம்சங்களாக இவற்றை சிந்திக்கலாம். திறனாய்வு திறன் விருத்தி, வணிக தந்திரத்தை புரிதல், கோட்பாட்டு ரீதியில் ஊடகங்களினை அனுகுதல்,ஊடக நீதிக்காக வாதிடல், ஊடக ஒழுங்கீனங்களை கண்டித்தல், ஊடக திசைதிருப்பும் விடயங்களினை அறிதல்,பண்பாடு மற்றும் சமூகத்தை ஊடகங்கள் எவ்வாறு வடிவமைத்துக் கொள்கின்றன போன்றவற்றை சிந்திக்கலாம். எமது நாட்டின் ஊடகங்களினை புரிந்து கொள்ளும் ஆற்றல் வட பகுதியை காட்டிலும் தென்பகுதியில் அதிக புரிதல் ஊடக கல்வி பல்கலைக்கழக மற்றும் பாடசாலை கல்வி வாயிலாக புகட்டபட்டு வருகிறது. இங்கு அதற்கான நிலை மந்தமான நிலையில் உள்ளது. பின்வரும் கேள்விகள் ஊடகங்களினை அணுகும் போது எப்பை நாமே கேட்க வேண்டும். 1)குறித்த செய்திகள் யாரால் உருவாக்கப்பட்டது? 2 )யாரை இலக்கு வைத்துள்ளது? 3)இவ்வாறான தந்திரத்தை பின்பற்று கின்றது?4 )எவ்வாறு கருத்துருவாக்கம் செய்யக் கூடியது?5)மொழி பயன்பாடு எப்படியுள்ளது? 6)வாழ்வியல் பண்பாடு எப்படி பிரதிபலிக்கிறது? போன்ற கேள்விகள் துல்லியமான தகவலினை அறிய முடியும். ஊடகங்களினை புரிந்து கொண்டு சிறந்த முன்மாதிரியாக ஊடக பண்பாட்டினை உருவாக்கிக் கொள்ள முடியும்.சிந்தை மகிழ ஊடகத்துறை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் இ.தனஞ்சயன் .

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017
நல்லிணக்க உருவாக்கத்தில் ஊடகங்களின் பங்கு
மக்களின் எண்ணங்கள் மற்றும் கருத்துக்களை பிரதிபலிக்கின்ற,பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மற்றும் செல்வாக்கு செலுத்துகின்ற சாதனமாக ஊடகங்கள் விளங்குகின்றன.மக்கள் ஊடகங்களில் வருகின்ற செய்திகளை அப்படியே உண்மையானது என்று நம்புகிறார்கள். குறித்த பலவீனத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்தும் ஊடகங்கள் தமது நிர்வாகத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப தம்மைதாமே தயார்படுத்துகின்றன. உலகம் உலகமயமாக்கல் என்ற சுருங்கி கொண்டதன் காரணமாக ஊடகங்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகிவிட்டன. இதனால், செய்திகளிற்கு பெரும் பஞ்சம் ஏற்பட்டு விட்டது. செய்திகளை விற்பனை ஓட்டமாக நினைக்கும் தற்போதைய விற்பனை ஊடகங்கள் செய்திகளிற்கு அங்கலாய்க்கின்றன. தற்போதைய நிலையில் பிரதான ஊடகங்களின் ஆதிக்கத்தில் இருந்து விடுபடும் நிலைமையை சமுக ஊடகங்கள் ஏற்படுத்தியிருந்தாலும்,சமூக ஊடகங்களினை எப்படி முற்போக்கான சிந்தனையை விதைப்பதாக பயன்படுத்தி வெற்றியடையலாம் என்று சிந்திக்க வேண்டும். மாறாக, பிற்போக்கான அவமானப்படுத்தல், காழ்ப்புணர்ச்சி வெளிப்பாடு, பாராட்டமனமின்மை,எதிர்மறையான சிந்தனை, புத்திசாலிகள் புறக்கணிக்கபடுதல்,தவறான வழிநடத்தல் மற்றும் போலியான உறவு களின் கூட்டு போன்ற முன்னேற்றத்திற்கு சாதகமற்ற விடயதானங்களே பரப்புரை செய்யப்படுகிறது.இவற்றின் எழுச்சி கீழத்தேய நாடுகளே பாதிப்பை எதிர்கொள்கின்றன.இலவசம் என்ற போர்வையில் விலைபொருளாகிக்கொன்டுள்ளன.குறிப்பாக, அரசியல், பண்பாடு மற்றும் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில் இவற்றின் பங்கு கணிசமானது.இதற்கு அண்மைய ஐல்லிகட்டு வெற்றியை குறிப்பிடலாம். எமது நாட்டின் சமூக ஊடக பாவனை கவனயீனமாகவேவுள்ளது.அத்துடன் இனவெறி மற்றும் இனவாதத்திற்கு களம் ஏற்படுத்தி கொடுப்பதாக காணப்படுகிறது. தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் என தன்னைத் தானே கூறிக்கொள்ளும் அரசாங்கம் நல்லிணக்கம்,சகவாழ்வு என்ற சொல்லினை பயன்படுத்தி சர்வதேசத்திடமிருந்து தப்பித்தாலும், சமூக ஊடகங்களில் இருந்து தப்பிக்க முடியாது. எழுத்து - இ.தனஞ்சயன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகத்துறை மாணவன்.
