"The early Bird catches the worm" என்பது ஆங்கிலத்தில் காணப்படும் ஒரு பழமொழியாகும்.பழமொழிகள் என்பது அனுபவங்கள் கற்றுத்தரும் பாடங்களின் அடிப்படையில் எழுபவவை.சொற்கள் குறைவாகவும் கருத்தாழம் நிறைந்ததாகவும் பழமொழிகள் காணப்படும்.அந்த வகையில், மேற்கண்ட பழமொழியின் கருத்து அதிகாலையில் இரைதேடும் பறவை இரையை பெற்றுக்கொள்ளும் என்பதாகும்.இதற்கு ஒத்ததான கருத்தையே பெஞ்சமின் பிராங்க்ளின்"Early to bed and early to rise makes a man healthy, wealthy and wise" என்கிறார். அதாவது முட்கூட்டியே படுக்கைக்கு சென்று முட்கூட்டியே நித்திரை விட்டு எழுவது மனிதனை சுகதேகியாகவும்,செல்வந்தராகவும் மற்றும் புத்திசாலியாகவும் உருவாக்கும்.
மேலும், அதிகாலையில் விழித்துக்கொள்வதன் காரணமாக குறிப்பிட்ட சில நன்மைகள் காணப்படுகிறது.நாளாந்த காரியத்தை இலகுவாகவும் நிதானமாகவும் மேற்கொள்வதற்கும்,சிறந்த முறையில் அதிகமான நேரம் உடற்பயிற்சி செய்யமுடியும்,பதட்டம் இன்றி மிகவும் நிதானமாக மேற்கொள்ள முடியும், பயனுள்ள விசயங்களை செய்வதற்கு, மகிழ்ச்சியான வாழ்க்கை முறையை வாழ்வதற்கு, மனஅழுத்தமின்றி தெளிவான சிந்தனையுடன் காணப்படுவதற்கு,குறித்த நாளினை வெற்றிகரமான நாளாக நிறைவு செய்ய அதிகாலையில்எழுவது முக்கியமானது.
இவ்வாறு பல்வேறு நன்மைகள் கானப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.குறிப்பாக, பாட சாலைகள் செல்லும் மாணவர்கள் அதிகாலையில் எழும் போது புத்துணர்ச்சி பெற்றுக்கொள்கிறார்கள். பெரும்பாலான வீடுகளில் பாடசாலை செல்லும் மாணவர்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. பாடசாலை செல்லும் நேரத்தை மையப்படுத்தியே பெரும்பாலான வீடுகளின் திட்டமிடல் இடம்பெறும்.இந்த நிலையில்,அண்மையில், வடமாகாணசபையில் உள்ள பாடசாலைகள் ஆரம்பமாகும் நேரம் தொடர்பாக மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்று வடமாகாணசபை உறுப்பினர்களால் மாகாண சபை முதலமைச்சரின் கவனத்திற்கு கொன்டுவரப்பட்டுள்ளது.
இந்த வி பயம் தொடர்பாக வடமாகாணசபை மகளிர் விவகார அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் கருத்து தெரிவிக்கையில் வடக்கில் உள்ள பாடசாலைகள் ஆரம்பமாகும் நேரம் தொடர்பாக அனைவர் மத்தியிலும் அதிருப்தி நிலை காணப்படுகிறது. காலை 7.30க்கு பாடசாலை ஆரம்பிப்பது என்பது ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கடினமான உள்ளது.யுத்தம் காரணமாக தாய்மாரை இழந்த சிறுமிகள் குடும்ப பொறுப்பை சுமக்கும் நிலையில் உள்ளார்கள்.இவர்கள் காலை நேரம் உண்பதுகூட இல்லை. இதனால் கற்பித்தலினை கிரகிக்கும் நிலையில் இல்லாத பாடசாலை சென்று வருகிறார்கள்.ஆசிரியர்களும் இவ்வாறு பல்வேறு இடர்பாடுகளினை சந்திக்கிறார்கள்.ஆகவே பாடசாலை ஆரம்பமாகும் நேரம் தொடர்பாக மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறினார்.இதேபோல், காலையில் தூர இடங்களிற்கு செல்லும் பாடசாலை ஆசிரியர்களும் பல்வேறு இடர்பாடுகளினை எதிர்கொள்வது தொடர்பாக வடமாகாணசபை அவைத்தலைவர் கவலை வெளியிட்டமையும் குறிப்பிடத்தக்கது.
வடமாகாணசபையில் இவ்வாறான விடயம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது வேடிக்கையானது. எனினும் வடமாகாணசபை இவ்வாறு பல சம்பவங்களினை சந்திப்பது ஒன்றும் புதிதல்ல.உண்மையில் தூர இடம் சென்று கற்பிக்கும் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சவால்களை தீர்ப்பதற்குரிய மாற்றுவழி பாடசாலை நேரம் மாற்றுவது அல்ல மாறாக ஆசிரியர்களினை அருகில் உள்ள பாடசாலைக்கு இடமாற்றம் வழங்குவதே ஆகும்.மாறாக நேரமாற்றம் என்பது செருப்பின் அளவுக்காக காலை வெட்டுவதற்கு ஒப்பான செயல் ஆகும்.
இதேவேளை தாய் தந்தையை இழந்த பிள்ளைகளிற்கு கல்வியை சிறந்த முறையில்தொடர்ந்து செல்ல அவர்களின் பொருளாதார நிலையை வளப்படுத்த வேண்டும்.அத்துடன் இலங்கையை பொறுத்தவரை வடமாகானத்தில் மாத்திரமல்ல ஏனைய மாகாணங்களில் கூட வறுமையுடன் காலை உணவை உண்ணாமல் பல மாணவர்கள் பாடசாலை செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.குறித்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கு நேரத்தினை மாற்றுவதால் எந்த பலனும் இல்லை.
இதேவேளை,நுவரெலியா மற்றும் ஹட்டன் போன்ற கடுமையான குளிர் பிரதேசங்களில் கூட பாடசாலை மாணவர்கள் காலையில் செல்லுகின்றமை கவனிக்கத்தக்கது.அண்மையில் வெளியான பொதுப் பரீட்சையில் கல்வி பெறுபேறுகள் ஏனைய மாகாணங்களினை விட மிகவும் தாழ்ந்த மட்டத்தில் உள்ளதற்கான பல காரணங்களில் முக்கியமானதொன்று நம்மிடையே காணப்படும் சோம்பேறித்தனம் முதன்மையானது. ஆகவே, குறித்த பாடசாலை நேர நடைமுறையில் மாற்றத்தை உண்டுபண்னி எமது சமூகத்தை மந்தமானவர்களாக ஆக்க முயற்சிக்க கூடாது என வினயமாக கேட்டு கொள்கின்றோம். இ.தனஞ்சயன்
அறிவைநாடல்

அறிதலார்வம்
வியாழன், 28 டிசம்பர், 2017
கால மாற்றத்தின் காரணங்கள் கண்டனத்திற்குரியவை!
லேபிள்கள்:
ஊடகங்கள்,
கல்விஅமைச்சு,
கல்விமுறைமை,
யாழ்ப்பாண பல்கலைக்கழகம்,
யாழ்ப்பாணம்,
வடமாகாணசபை,
வடமாகாணம்,
Jaffna,
Jaffna University,
Media,
Media culture,
North,
Northern provincial council,
Society

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)