"Language is the closest fitting dress of thought "சிந்தனையின் மிக நெருக்கமான ஆடையே மொழி ஆகும்.அதேபோன்று, Ahmed Deedat என்பவர் "Language is the key to the heart of people "மொழிபெயர்ப்பு மக்களின் இதயவாசலின் திறவுகோல் என்பது மொழி என்று கூறுகிறார்.இதேவேளை,பிற மொழிகளை கற்றல் தொடர்பாக Ray leobond குறிப்பிடும் போது,"A different language is a different vision of life " அதாவது, வேறுபட்ட மொழியினை கற்பது வேறுபட்ட சிந்தனை மனப்பான்மையை விருத்தி செய்துகொள்ள உதவும் என்று கூறுகிறார். அதேபோல், Haruki Murakami "Learning another language is like becoming another person "அதாவது இன்னுமோர் மொழியினை கற்றுக் கொள்வது இன்னும் ஒரு மனிதன் என்ற நிலைக்கு சமமானது என்று கூறுகிறார்.
அத்துடன், மொழி என்பது சிந்தனையில் செல்வாக்கு செலுத்துகிறது. மொழியினை கற்பது என்பது செவிமடுத்தல் வாயிலாக இலகுபடுத்தப்படும்.ஒரு மொழி அறிவின் எல்லையே உலகத்தின் எல்லையாக கருதிக்கொள்ள முடியும்.எமது நாட்டில் மூன்று தசாப்த காலமாக இனப்பிரச்சினை தீர்கப்படாமல் காணப்படுவதற்கு மொழியே இடைவெளியை உண்டுபன்னியமையும் மறுக்க முடியாத உண்மை.அந்த வகையில் நாம் தமிழ் மொழியில் மாத்திரம் புலமை பெற்றால் போதாது பல மொழியறிவு அவசியமானது.
அந்தவகையில்,ஏனைய மொழியொன்றினை கற்றுக்கொள்வதில் பலர் பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொள்கின்றனர் குறித்த இடர்பாடுகளை எவ்வாறு வெற்றி கொள்ளலாம் அதற்கான தீர்வுகளை பரிந்துரை செய்வதாகவே குறித்த பதிவு அமைய இருக்கிறது.
மொழியானது நமது சூழலில் நாம் கிரகிக்கின்ற சொற்களினை நாம் பேசுகின்றோம் அதுவே பின்னர் மொழியாகின்றது.குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பிறந்த குழந்தை அமெரிக்காவில் வசிக்கும் போது தானாகவே ஆங்கில மொழியை கற்றுக்கொள்ளும்.
நாம் எந்த மொழியை கற்றுக் கொள்ள விரும்புகின்றோமோ அந்த மொழியை நன்றாக செவிமடுக்க வேண்டும்.மொழியொன்றினை கற்றுக் கொள்ளும் போது ஊக்கம்/ஆர்வம் பிரதானமானது.ஆர்வம் இல்லாமல் எந்த விடயத்தையும் பூரணமாக செய்ய முடியாது.மொழியினை கற்றுக் கொள்வதற்கான/உரையாடுவதற்கான சூழலை உருவாக்குதல்.மொழியினை கற்றுக் கொள்வதற்கு என நேரத்தை ஒதுக்குதல்.எமது தாய் மொழியில் உள்ளவற்றை நேரடியான மொழிபெயர்ப்பு சிந்தனைக்கு உட்படுத்தாமல் குறித்த மொழியின் தனித்துவமான தன்மைகளை சிந்தித்தல்.தனித்தனியாக சொற்களை மனணம் செய்யாமல் சொற்தொடர்களினை வாசித்தல்.காட்சி வடிவில் எமக்கு தேவையான மொழியில்(in target language) கற்பனை செய்தல். எமது சொல் வளங்களை(vocabulary)அதிகரித்துக்கொள்ளுதல்.எங்களிடையே பழமொழி ஒன்று உள்ளது. பானையில் இருந்தால் தான் அகப்பையில் வரும்.
அதேபோன்று, சொல்வளமாக காணப்படும்போதே எம்மால் தன்ணம்பிக்கையுடன் பேச முடியும்.தினமும் புதிய சொற்தொடர்களை அறிந்து கொள்வதுடன் அவற்றை மறந்துவிடாமல் குறிப்பு புத்தகத்தில் குறித்து வைக்க வேண்டும்.நாங்கள் கற்றுக் கொள்ள விரும்புகின்ற மொழி சார்ந்த சுவாரசியமான videos களை பார்க்க வேண்டும்.மொழிகளைக் கற்றுக் கொள்ளும் போது எந்த விதமான கூச்சமோ எதிர்மறையான சிந்தனைகளுக்கோ இடம் கொடுக்கக் கூடாது.ஒரு குழந்தை போல கற்றுக் கொள்ள வேண்டும். அச்சு ஊடகங்களான பத்திரிகை மற்றும் சஞ்சிகை போன்றவற்றை வாசிக்க வேண்டும்.குறிப்பாக,பத்திரிகையில் ஆசிரியர் தலையங்கம், பத்திஎழுத்து,வாசகர் பகுதி போன்றவற்றை வாசிக்க வேண்டும். மேலும் எந்த ஒரு மொழியினை எடுத்துக் கொண்டாலும் காலம் முக்கியமாக திகழ்கிறது. காலங்களினை கற்றுக் கொள்ளும் போது முதலில் கடந்த காலத்தினையும், பின்னர் நிகழ்காலத்தினையும் பின்னர் எதிர்காலத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும்.குறித்த மொழியின் அடிப்படை இலக்கணத்தை கற்றுக் கொள்ளுதல்.எமது நாளாந்த வாழ்க்கையை நாம் கற்றுக் கொள்ள விரும்பும் மொழியில் சிந்தித்தல் மற்றும் தினப்பதிவேட்டினை பயன்படுத்த்தல்.தவறுகளை கண்டு அஞ்சாமல் குறித்த தவறு களில் இருந்து கற்றுக் கொண்டு கம்பை வளப்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் நகைச்சுவை துனுக்கு புத்தகங்கள் மற்றும் இலக்கன புத்தகங்களினை வாங்கி வாசித்துக் கொள்ளும் போது மொழியில் இலகுவாக புலமை பெற்றுவிடலாம்.
உலகத்தில் உள்ள எந்த மொழியையும் விடாமுயற்சியுடன் கூடிய அறிதலார்வம் இருந்தால் இலகுவான முறையில் கற்றுக் கொள்ள முடியும். மொழி என்பது சிந்தனைக்கு முதன்மையானது அல்ல சிந்தனையை எளிமைப்படுத்துகின்றது.மேற்கண்ட நுட்பங்களை பயன்படுத்தும் போது உலகில் உள்ள எந்த மொழியையும் கற்றுக் கொள்ள முடியும்.
நம்பிக்கையுடன்,
இ.தனஞ்சயன்
ஊடகத்துறை
யாழ்பாணப்பல்கலைக்கழகம்
இலங்கை தேசிய தொலைக்காட்சி ரூபவாகிஹினி கூட்டுத்தாபனம்.
அறிவைநாடல்

அறிதலார்வம்
ஞாயிறு, 21 ஜனவரி, 2018
சிந்தனையை எளிமைப்படுத்துவதே மொழியாகும்!
லேபிள்கள்:
ஊடகங்கள்,
தொடர்பாடல்,
மொழி,
மொழிபெயர்ப்பு,
Communication,
Creative communication,
History of mass media,
language,
Languagecommunicat,
Masscommunication,
Media,
Media culture,
Media usage,
Mediaethics

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)