அறிவைநாடல்

அறிவைநாடல்
அறிதலார்வம்

புதன், 6 செப்டம்பர், 2017

விளையாட்டு செய்தி உருவாக்கமும் ஊடகங்களின் வகிபங்கும்!

ஊடகங்களில் தவிர்க்க முடியாத பகுதியாக விளையாட்டு இதழியல் பகுதி காணப்படுகிறது.அனைத்து வகையான வாசகர்கள் வட்டத்தையும் கவரும் பகுதியாக விளையாட்டு பகுதி காணப்படுகிறது. அனைத்து வகையான ஊடகங்களிலும் விளையாட்டு பகுதியாகவோ அல்லது பக்கமாகவோ காணப்படும். சில ஊடகங்கள் தனித்து விளையாட்டு நிகழ்ச்சிகளை மாத்திரம் கொண்டு காணப்படுகிறது. அதனை அச்சு, இலத்திரனியல் மற்றும் நவீன ஊடகங்கள் என அனைத்து வகையான ஊடகங்களிலும் அவதானிக்க முடியும்.உலகளாவிய ரீதியில் ஏராளமான விளையாட்டு நிகழ்வுகள் காணப்படுகிறது.கால்பந்து, ரக்பி,கிரிக்கெட், டெனிஸ்,கைப்பந்து ,மல்யுதம்,கரப்பந்து, கோல்ப்,சதுரங்கம்,குத்துச்சண்டை,நீச்சல் மற்றும் மெய்வன்மை போட்டிகள் போன்றவற்றை குறிப்பிடலாம்.விளையாட்டு நிகழ்வுகள் முக்கியமானவையாக காணப்படுவதற்கு அதன் மூலமாக கிடைக்கும் நண்மைகளே காரணம் எனலாம்.அவையாவன,தோல்வியில் இருந்து கற்றுக்கொள்ளுதல்,வெற்றி தோல்வியை சமமாக மதித்தால்,சட்ட ஒழுங்குகளை பேசுதல்,சகவீரர்களை மதித்தல்,அறிவு,திறன்,மனப்பான்மை விருத்தி,சிரேஸ்ட வீரர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளுதல்,புதிய மனிதர்கள் மற்றும் புதிய இடங்களை காணுதல், சுற்றுலா தொழிற் துறையின் வளர்ச்சி,சர்வதேச பண்பாடு மற்றும் கலாச்சார விழுமியங்களினை புரிந்துகொள்ளுதல், இலக்கை தீர்மானித்து வெற்றி பெறல்,தலைமைத்துவ விருத்தி,தோல்வியினை எடுத்துக்கொள்ளும் மனப்பான்மை,தன்னம்பிக்கை அளித்தல் போன்ற பல்வேறு வகையான சாதகமான விஷயங்கள் விளையாட்டுக்கள் மூலமாக கிடைக்கின்றன.எனினும்,தற்போதைய சமூக ஊடகங்களின் வருகை, தொடர்பாடலை எளிமையாக்கியதுடன் குறித்த சமூக ஊடகங்களில் போட்டியை பார்க்க கூடிய வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.மிக ஆரம்ப காலத்தில் அச்சு ஊடகங்களான பத்திரிகையே போட்டி முடிவுகளை அறிவித்தது அதற்காக காத்திருக்கும் நிலை அக் காலத்தில் காணப்பட்டது. பின்னர், வானொலியில் நேரடியான வர்ணனை தமிழ்,சிங்களப் மற்றும் ஆங்கில மொழியில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுதாபனத்தில் ஒலிபரப்பப்பட்டது. தற்போது தனியார் வானொலியில் அதிகரிப்பு ம் அவற்றின் முழுநேரப்பணியாக கிரிக்கெட் score சொல்வதும் பாட்டு போடுவதும் என்றாகிவிட்டது. அத்துடன், தொலைக்காட்சி கிரிக்கெட் போட்டிகளை நேரலையாக ஒலிபரப்பி வருகிறது. இதனூடாக பாரதிய இலாபங்களை குறித்த தொலைக்காட்சி நிறுவனங்கள் சம்பாதிக்கின்றன.தற்போதைய உலகமயமாக்கல் சூழல் விளையாட்டு துறையையும் விட்டு வைக்கவில்லை.இதன்காரணமாகவே,IPL,CBL,Big Bash,BPl,PPl போன்றன கிரிக்கெட்டில் ஏற்பட்ட உலமயமாக்கலின் தாக்கம் ஆகும். இவை வணிக நோக்கத்தை பிரதான ஆதாரமாக கொண்டவை. உதாரணமாக, இம்முறை இடம்பெற்ற அடுத்த IPL  இதற்கான ஒளிபரப்பு உரிமைக்காக இடம்பெற்ற ஏலத்தில் star குழுமம் வெற்றி பெற்றமை மற்றும் ஒரு போட்டிக்காக இந்திய கிரிக்கெட் சபைக்கு 54 கோடி இலாபம் கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.இதேபோன்று,எண்மான ஊடகங்களின் வருகை இதனை மிகவும் எளிதாக கைத்தொலைபேசி ஊடக பார்த்து கொள்ள முடிகிறது.குறிப்பாக, சமூக ஊடகங்களின் வருகையை தொடந்து ரசிகர்கள் சமூக ஊடகங்களினை கருத்து மோதல் களமாக பயன்படுத்தி வருகிறார்கள். சில சமயங்களில் விளையாட்டுகுரிய உயர்ந்த விழுமியங்களினை தரகுறைவாக்கும் வகையில் சமூக ஊடகங்களில் ஏற்படும் கருத்து மோதல்கள் அருவருப்பான நிலையினை தோற்றுவிற்பதுடன் ஊடகஅறிவின் அத்தியாயத்தை உணர்த்திநிற்கின்றது.விளையாட்டு தொழிற்துறையாக மாற்றம் பெற்று இருப்பதால்,இதனூடாக அரசாங்கத்திற்கு பாரிய அன்னிய செலாவணியை பெற்றுகொள்ள முடிகிறது.சுற்றுலா தொழிற்துறை இலங்கையினை பொறுத்தத மட்டில் கிரிக்கெட் விளையாட்டு போட்டியினால் அதிகரிக்கப்படுகின்றது.ஒவ்வொரு விளையாட்டு அணிகளும் தனக்கென தனித்தனியாக சமுக ஊடகங்களினை வைத்துள்ளது. இது தேசிய அனிகளாயினும் சரி கழக மட்ட போட்டிகள் என்றாலும் சரி சமூக ஊடகங்களினை தனித்தனியாக வைத்து இருப்பதை விசாரிக்க முடியும்.சமூக ஊடகங்களில் ஊடக அறம் இதழியல் விழுமியங்கள் போன்றவற்றை கடைப்பிடிப்பது என்பது கல்லில் நாருரிப்பதைப் போன்றதாகும். எனினும், பொதுத்தளமான சமூக ஊடகங்களில் விளையாட்டு விஷயங்கள் தொடர்பாக உரையாடும் போது,விளையாட்டு இதழியல் மற்றும் அவற்றில் குணாதிசயங்கள் தொடர்பாக விளங்கிக் கொள்வது ஊடகங்களினை பெறுமானம் உடையதாக்குவதற்கு பொருத்தமானதாக இருக்கும்.விளையாட்டு இதழியல் என்பது விளையாட்டு நிகழ்வுகளை அறிக்கையிடுவதனை குறிக்கும்.விளையாட்டு இதழியலாளனின் தகுதிகளாக விளையாட்டு நிகழ்வில் வரலாறு,சாதனை,மைதானம், அணி விபரம், அணியின் பலம் மற்றும் பலவீனம்,நாணயசுழற்சி மற்றும் அணியினால் மேற்கொள்ளும் இராஜதந்திரம் போன்றவை விளையாட்டு இதழியலாளன் அடிப்படையில் அறிந்து இருக்க வேண்டிய விஷயமாகும்.இன்றைய காலத்தில் அதிகமாக விளம்பரம், பிரசித்தப்படுத்தல் மற்றும் மேம்பாடு போன்றன விளையாட்டு கே ஊடகங்களில் ஒதுக்கப்படுகிறது.சினிமா வுடன் சவால் விடும் வகையில் ஊடகங்களில் விளையாட்டுதொழிற்துறையின் ஆதிக்கம் உள்ளது.ஊடகங்களின் முக்கிய பங்காக விளையாட்டு இதழியலில் தகவல்கள் வழங்கும் செயற்பாடுகள் காணப்பட்டாலும், இனம்,மதம், மொழி, நிறம்,சாதி,பிரதேசம் போன்ற வேறுபாடு களைந்து ஒன்றினைப்பதாக இருக்க வேண்டும். இதனாலேயே, ஒலிம்பிக் போட்டியில் அனைத்து நாடுகளும் பங்கேற்க அனுமதி வழங்கப்படுகிறது. அத்துடன், ஒலிம்பிக்கில் தொனிப்பொருளாகவும்"வெற்றி பெறுவதல்ல பங்கு பற்றலே"எனக் குறிப்பிட்டுள்ளது.அத்துடன், உலகில் எந்த மூலை முடுக்கில் போட்டி நடந்தாலும் ஊடகங்களின் ஊடாகவே பார்த்து ரசித்து அனுபவிக்க முடிகிறது.விளையாட்டுப் போட்டியில் ஏற்படும் மதவெறி, இனவெறி, பிரிவினைவாதம்,சூதாட்டம் போன்ற பிற்போக்கான விஷயங்களை ஊடகங்கள் கண்டிக்க வேண்டும்.ஊடகங்கள விளையாட்டு நிகழ்வுகளின் சாதகமான அம்சங்களான தேசிய ஒருமைப்பாடு, பொருளாதார விருத்தி,தொழில் வாய்ப்பு,நகர பிரசித்தி,முன்மாதிரி வீரர்கள், உதவும் மனப்பான்மை, பாராட்டுகள் மனப்பான்மை, நாட்டுப்பற்று, உணர்வுகளை கட்டுபடுத்தும் முகாமைத்துவம் போன்றவற்றிற்கு பலமூட்டுவதாக ஊடகங்களின் பங்களிப்பு அமைய வேண்டும்.சமாதானத்தின் குறியீடாக விளையாட்டு எடுத்து கொள்ளப்படுகிறது.19ம் நூற்றாண்டில் அச்சு ஊடகங்களின் ஆரம்ப காலப்பகுதியிலேயே விளையாட்டு இதழியல் காணப்பட்டது. பின்னர் 20ம் நூற்றாண்டு காலப்பகுதியில் பாரிய மாற்றங்களை ஊடகங்கள் எதிர்கொண்டபோது விளையாட்டு இ தழியலும் மாற்றங்களினை உள்வாங்கிக் கொண்டது.இத்தகைய விளையாட்டு இதழியல்(Sports journalism)தன்னம்பிக்கை,சுய மதிப்பீடு மற்றும் நேர்த்தியான சிந்தனைகளை ஏற்படுத்தும் வகையில் ஊடகங்களின் வகிபங்கு அமையவேண்டும்.இ.தனஞ்சயன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக