அறிவைநாடல்

அறிவைநாடல்
அறிதலார்வம்

திங்கள், 28 ஆகஸ்ட், 2017

தீர்வு காணும் இதழியல் தடம்மாறும் இதழியலிற்கான தீர்வாகுமா?

உலகமயமாக்கலினை தற்காலத்தில் இவ்வளவு வலிமையாக்கியதாக ஊடகங்களே காணப்படுகிறது.சிறிய விடயங்களினை ஊதிப்பெருப்பிப்பதும் மிகப்பெரிய விடயங்களை மூடி மறைப்பதுமாக ஊடகங்கள் கானப்படுகின்றது.இது (Issues'evidences based journalism )ஆதார அடிப்படையில் அமைந்த இதழியலின் அவசியத்தை வலியுறுத்துகின்றது.உலகமயமாக்கல் பல்வேறு சாதகமான நல்ல விடயங்களினை தந்தாலும் அதன் எதிர்மறையான தாக்கங்கள் பாரதூரமானவை.மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு பிரச்சனையை சந்தித்தே கடந்து செல்ல வேண்டி இருக்கிறது. பிரச்சனைகள் இல்லாவிட்டாலும் வாழ்க்கையில் சுவாரசியமாக இருக்கமாட்டாது.பிரச்சனைகளினை எவ்வாறு சவாலாக எடுத்துக் கொள்கின்றோம் என்பதிலே சாதனை தங்கியுள்ளது.பிரச்சனைகளினை சவாலாக நினைத்து தகர்ப்பவர்களையே வெற்றி அடிக்கடி விரும்பி சந்தித்து கொள்கின்றது.இந்தச் சிறு பதிவு பிரச்சனைகள் தொடர்பாகவோ உலகமயமாக்கல் தொடர்பாகவோ நுணுக்கமான சிந்திக்கபோவதில்லை.எமது ஊடகங்கள் மத்தியில் காணப்படும் செயற்கையான முறையில் மக்களை பிரச்சனைகளிற்குட்படுத்தி மக்களை பீதிகுட்படுத்தும் இதழியல் மரபினை கட்டுடைத்து தீர்வுகானும் இதழியல்  (Solutions journalism )தொடர்பாகவே  சிந்திக்க வைப்பதாகவே அமைகிறது.தற்போதைய இதழியல் பரப்பில் காலப்பொருத்தப்பாட்டிற்கு ஏற்ப ஏராளமான இதழியல் வகைகள் காணப்படுகின்றன.பொழுதுபோக்கு இதழியல்,விளையாட்டு இதழியல்,புலனாய்வு இதழியல்,அபிவிருத்தி இதழியல், முரண்பாடு உணர்திறன் மிக்க இதழியல், சுகாதார இதழியல், விவசாய இதழியல்,குடிமக்கள் இதழியல்,மஞ்சள் இதழியல்,அணர்த இதழியல்,வணிக இதழியல்,சமாதான இதழியல்,ஒலி மற்றும் ஒளிபரப்பு இதழியல்,சஞ்சிகை இதழியல்,பன்னாட்டு இதழியல் போன்றவற்றுடன் தற்போது பிரஜைகள் ஊடகவியலும் முக்கியமானதாகக் காணப்படுகிறது.அத்துடன்,தற்போது constructive journalism and mobile journalism(கட்டமைப்பு இதழியல் & நடமாடும் இதழியல்)போன்றன பிரபல பேசு பொருளாக பன்னாட்டு ஊடகவியலில் காணப்படுகின்றது. அதேபோன்று, தீர்வு கானும் இதழியல் என்ற சொல்லாடல் மேற்குலக தொழில்சார் ஊடகவியலில் 1998 இல் இருந்து விவாதிக்கப்பட்டாலும்,அதன் அவசியம் தற்போதைய நிலையில் உணரப்பட்டுளளது.தீர்வு காணும் இதழியல் என்பது மக்களிடையே பிரச்சனைகள் தொடர்பான அறிக்கையிடலினை செய்யாமல் குறிப்பிட்ட பிரச்சனைகளிற்கான நம்பகமான ஆதாரங்கள்,யார் இந்த பிரச்சனைகளிற்கான காரணம்? யாரால் இந்த பிரச்சனைகளை தீர்த்து வைக்க முடியும்? எப்படி பிரச்சனைகளினை தீர்கலாம்? போன்றவற்றிற்குரிய பதில்களை முன்வைத்து மக்களிற்கு தெளிவூட்டுவதும் புதிய வகையான சிந்தனை,திறனாய்வு தளத்திலான அணுகும் ஆற்றல் போன்றவற்றை விருத்தி செய்வதாகும். குறித்த இதழியலின் இயல்பின் படி,ஊடகவியலாளர் பிரச்சனைகளினை உண்டாக்குபவராக இல்லாமல் தீர்த்து வைப்பவராக/தீர்வுகளை முன்மொழிபவராக காணப்படவேண்டும் என்று கூறுகிறது.அதேபோல்,பக்கசார்பற்ற போலி தர்கங்களைத் தவிர்த்து புதிய பாணியில் செய்திகளை கூறும் தன்மையும் காணப்படவேண்டும் .குறிப்பாக,இங்கு,பிரச்சனைகளிற்கு தீர்வு காணும் பண்பு நிறைந்தவராக ஊடகவியளாளர் காணப்படுவார்.பிரச்சனைகளை தீர்த்து வைக்க பல வழிமுறைகளினை  தனிப்பட்ட திறமை,ஆளுமை,நுண்ணறிவு, அனுபவம்,மென்திறன்,எடுத்துக்கொள்ளும் மனப்பாங்கு என்ற   அடிப்படையில் வேறாக காணப்பட்டாலும் பொதுவாக பின்வரும் வழிமுறை அடிப்படை ஆகும்.பிரச்சனைகளை விளங்கிக் கொள்ளுதல், எப்படி தீர்த்து வைக்கலாம் என விளக்குதல்,தீர்வுக்களிற்கான ஆதாரங்களை காரண காரிய அடிப்படையில் விளக்குதல்,முடிவின் தாக்கத்தை விளக்குதல்,நிபுணர்களின் அறிவுரை,ஆய்வுக் கண்ணோடு அணுகி அறிக்கை தயாரித்தல்,மக்களை செயற்திறன் மிக்கதாக்குதல்,நிறைவான தகவல் மற்றும் தரவு சேகரிப்பு,நேர்த்தியான முற்போக்கு சிந்தனை போன்றன ஆகும். எமது நாட்டினை பொறுத்தவரை யுத்தம் முடிவடைந்த நிலையிலும் போர்கால இதழியலில் மாற்றம் ஏற்படவில்லை. அது சிங்கள தமிழ் ஊடகங்கள இரண்டுமே பின்ளற்றவே செய்கின்றன.இலங்கையில் மாத்திரம் அல்ல வடகொரியா மற்றும் அமெரிக்கா போர் பதட்டம் கூட ஊடகங்கள் ஊடாக மேற்கொள்ளும் வார்த்தைக் போரே!வாசகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் இந்த இதழியலின் பண்புகள் அமையும்.தற்போதைய நிலையில் அனைவரும் ஊடகவியளாளர் என்ற நிலையை பிரஜைகள் ஊடகவியல் தோற்றுவித்து உள்ளது. இதனால், ஊடக அறம் தொடர்பான அறவே அறிவற்ற நிலையில் ஊடகங்களினை அணுகுவதால் பிரச்சனைகள் அதிகமாக காணப்படும் நிலைமையே காணப்படுகிறது.சரியான கேள்விகளை கேட்காத வரையும்,தனித்துவமான சிந்தனை அல்லாத வரையிலும் பிரச்சனைகளை தீர்க்க முடியாது என்பது தீர்கமான கருத்து.இந்தப் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான தீர்வாக தீர்வுகாணும்/தீர்வை முன்மொழியும் இதழியல் (Solutions journalism)இதழியல் காணப்படுகின்றது.இலகுவாகக் கூறினால்,தீர்வு கானும் இதழியல் நோயைப் பற்றி உரையாடுவதை விட சுகாதாரம் தொடர்பாக உரையாடுவது சிறந்தது என்று கூறுகிறது.தடம்மாறும் இதழியலிற்கான தீர்வாக தீர்வு காணும் இதழியல் அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.இ.தனஞ்சயன் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக