சர்வதேச ஊடக சுதந்திரம் தொடர்பான சுட்டெண்ணுக்கு அமைய 2017 ஆம் ஆண்டிலும் பார்க்க 2018 ஆம் ஆண்டில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளது.
ஊடக சுதந்திர சுட்டெண் என்பது ஒரு நாட்டில் ஊடகங்கள் எந்த அளவுக்கு சுதந்திரமாக இயங்குகின்றது என்பது பற்றிய ஒரு அளவீடு ஆகும்.
இது உலகெங்கும் இயங்கும் 14 அமைப்புகள், 130 ஊடகவியாளர்கள், ஊடக ஆய்வாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஆகியோரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அமைந்தாகும்.
இந்த மதிப்பீட்டை எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு வெளியிடுகிறது. இந்த அறிக்கையில் மிகச் சிறிய நாடுகள் தவிர்த்து 180 நாடுகளிலுள்ள ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் சுயாதீனத் தன்மை பற்றி ஆழ்ந்த ஆய்வினை மேற்கொண்டு பட்டியல் தயாரிக்கப்படுகின்றது.
மிகச் சிறந்த ஊடக சுதந்திரம் நிலவும் நாடுகளாக இம்முறை (2019) நோர்வே, பின்லாந்து, சுவீடன், நெதர்லாந்து மற்றும் டென்மார்க் போன்ற நாடுகள் இடம்பெறுகின்றன. மிகவும் மேசமான நாடுகளாக ஈரான், வட கொரியா, சீனா, எதிர்ரேரியா, துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகள் இடம்பெறுகின்றன.
2017 ஆம் இலங்கை இந்த சுட்டெண் பட்டியலில் 141 வது இடத்தில் இடம் பெற்றிருந்தது. எனினும் 2018 இல் இலங்கை 131 இடத்தில் இடத்திற்கு முன்னேற்ற பெற்றதோடு இம் முறை 5 இடங்கள் முன்னேற்றமடைந்து 126 ம் இடத்திற்கு முன்னோக்கி இடம்பெற்றமை விசேட அம்சமாகும்.
இந்த பட்டியலில் முதலாவது இடத்தில் நோர்வேயும் இரண்டாம் இடத்தில் பின்லாந்தும் இடம் பெற்றுள்ளது.
அந்தந்த நாடுகளில் நிலவும் ஊடக சுதந்திரநிலைமைக்கு அமைய நாடுகள் வெள்ளை, மஞ்சள், செம்மஞ்சல், சிவப்பு, கருப்பு என்ற 5 பிரிவுகளில் உள்ளடக்கப்படுகின்றன.
சிறந்த ஊடக சுதந்திரம் உள்ள நாடுகள் வெள்ளை நிற வலயத்திற்கு உள்ளவாக்கப்படுகின்து. இதில் 8% மான நாடுகள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஊடக சுதந்திரம் ஓரளவுக்கு சிறப்பாகவுள்ள நாடுகள் மஞ்சள் நிற வலயத்திற்குள் உள்ளவாக்கப்படுகின்து. இம்முறை இந்த பட்டியலில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட 16% மான நாடுகள் இந்த வலையத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
செம்மஞ்சள் நிறத்திற்குட்பட்ட வலையத்தில் இடம் பெற்ற நாடுகளில் ஊடக சுதந்திரம் தொடர்பான பிரச்சனை நிலவுகின்றதாகும். இதில் ஜப்பான், பிறேசில், இஸ்ரேல், பூட்டான், நேபாளம் உள்ளிட்ட 37% மான நாடுகள் இடம் பெற்றுள்ளன.
சிவப்பு வலையத்திற்குட்பட்ட நாடுகள் என்பது ஊடக சுதந்திரம் மிக சிறப்பாக இல்லை என்பதாகும். ரஷ்யா, இந்தியா, மாலைத்தீவு உள்ளிட்ட 29% மான நாடுகள் இடம் பெற்றுள்ளன.
ஊடக சுதந்திரம் மிகவும் மோசமாக காணப்படும் நாடுகள் கறுப்பு வலையத்திற்குட்பட்டதாகும். ஊடக சுதந்திரம் மிகவும் மோசமாக காணப்படும் நாடுகளில் வடகொரியா மற்றும் துர்க்மெனிஸ்தான் போன்ற 11% மான நாடுகள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எல்லையற்ற ஊடகவியலாளர்கள் என்ற சர்வதேச அமைப்பினால் இந்த சுட்டெண் தயாரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அமெரிக்கா 48 ஆவது இடத்திலும் அரசியல் குழப்பம் காணப்படும் வெனிசுலா 148 ஆவது இடத்தில் உள்ளது. அமெரிக்க இந்த பட்டியலை நிராகரித்துள்ளமையும் கவனிக்க வேண்டிய விடயமாகும். தேர்தல் மற்றும் இந்து தத்துவ வாதத்தை கக்கி வரும் இந்தியா 40 ஆவது இடத்திலுள்ளது.
கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் தற்காலத்தில் ஊடகங்களுக்கு ஓரளவு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது எனலாம். வழங்கப்பட்டுள்ள ஊடக சுதந்திரத்தைப் பயன்படுத்தி மீண்டும் இந்த நாட்டில் குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்க கூடாது.ஊடக ஒடுக்குமுறை குறைப்பட்டுள்ளதோடு வெள்ளை வான் கலாசாரம், ஊடகவியலாளர் படுகொலை மற்றும் காணாமல் போதலுக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது .
எமது நாட்டு ஊடகத்துறையினை பொறுத்தவரை, ஊடகசுதந்திரம் என்பது அந்த சுதந்திரத்தை மீறும் வகையில் தான் தற்போது பெரும்பாலும் பாவிக்கப்படுகின்றது. இது ஊடக சுதந்திரத்திற்கு ஒரு ஆரோக்கியமான நிலைமை அல்ல.
இனவாத சாயத்தை பூசும் ஊடகங்களே காணப்படுகிறது. தமது விற்பனை செய்தி பண்டமாக இனத்துவேச செய்திகளே ஊடகங்களினால் ஊக்குவிக்கப்படுகின்றன. இந்த நிலைமை இந்நாட்டை மீண்டும் இருண்ட யுகத்திற்குள் தள்ளி விட ஊடகங்கள் விரும்புகின்றனவா என்று கூட மக்கள் கேட்கும் அளவுக்கு நிலைமை காணப்படுகின்றது.
ஊடகங்கள் எப்போதும் பொறுப்புணர்வுடன் செயற்படத் தவறக் கூடாது. இவ்விடயத்தைக் கருத்தில் கொள்ளாது செயற்படும் பட்சத்தில் மீண்டும் ஜனநாயகம், ஊடக சுதந்திரம் குறித்து கண்ணீர் சிந்தும் நிலைமைக்கு உள்ளாக நேரிடும். அவ்வாறான ஒரு நிலைமை ஏற்பட்டிராமல் செயற்பட வேண்டியது சகல ஊடகங்களதும் முன்பாக இருக்கும் தலையாய பொறுப்பும் கடமையுமாகும்.
ஆக்கம்
இ.தனஞ்சயன்
அறிவைநாடல்

அறிதலார்வம்
வெள்ளி, 19 ஏப்ரல், 2019
ஊடக சுதந்திர சுட்டெண் பட்டியலில் இலங்கை முன்னேற்றம்!

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக