அறிவைநாடல்

அறிவைநாடல்
அறிதலார்வம்

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

நல்லிணக்க உருவாக்கத்தில் ஊடகங்களின் பங்கு

மக்களின் எண்ணங்கள் மற்றும் கருத்துக்களை பிரதிபலிக்கின்ற,பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மற்றும் செல்வாக்கு செலுத்துகின்ற சாதனமாக ஊடகங்கள் விளங்குகின்றன.மக்கள் ஊடகங்களில் வருகின்ற செய்திகளை அப்படியே உண்மையானது என்று நம்புகிறார்கள். குறித்த பலவீனத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்தும் ஊடகங்கள் தமது நிர்வாகத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப தம்மைதாமே தயார்படுத்துகின்றன. உலகம் உலகமயமாக்கல் என்ற சுருங்கி கொண்டதன் காரணமாக ஊடகங்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகிவிட்டன. இதனால், செய்திகளிற்கு பெரும் பஞ்சம் ஏற்பட்டு விட்டது. செய்திகளை விற்பனை ஓட்டமாக நினைக்கும் தற்போதைய விற்பனை ஊடகங்கள் செய்திகளிற்கு அங்கலாய்க்கின்றன. தற்போதைய நிலையில் பிரதான ஊடகங்களின் ஆதிக்கத்தில் இருந்து விடுபடும் நிலைமையை சமுக ஊடகங்கள் ஏற்படுத்தியிருந்தாலும்,சமூக ஊடகங்களினை எப்படி முற்போக்கான சிந்தனையை விதைப்பதாக பயன்படுத்தி வெற்றியடையலாம் என்று சிந்திக்க வேண்டும். மாறாக, பிற்போக்கான அவமானப்படுத்தல், காழ்ப்புணர்ச்சி வெளிப்பாடு, பாராட்டமனமின்மை,எதிர்மறையான சிந்தனை, புத்திசாலிகள் புறக்கணிக்கபடுதல்,தவறான வழிநடத்தல் மற்றும் போலியான உறவு களின் கூட்டு போன்ற முன்னேற்றத்திற்கு சாதகமற்ற விடயதானங்களே பரப்புரை செய்யப்படுகிறது.இவற்றின் எழுச்சி கீழத்தேய நாடுகளே பாதிப்பை எதிர்கொள்கின்றன.இலவசம் என்ற போர்வையில் விலைபொருளாகிக்கொன்டுள்ளன.குறிப்பாக, அரசியல், பண்பாடு மற்றும் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில் இவற்றின் பங்கு கணிசமானது.இதற்கு அண்மைய ஐல்லிகட்டு வெற்றியை குறிப்பிடலாம்.    எமது நாட்டின் சமூக ஊடக பாவனை கவனயீனமாகவேவுள்ளது.அத்துடன் இனவெறி மற்றும் இனவாதத்திற்கு களம் ஏற்படுத்தி கொடுப்பதாக காணப்படுகிறது. தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் என தன்னைத் தானே கூறிக்கொள்ளும் அரசாங்கம் நல்லிணக்கம்,சகவாழ்வு என்ற சொல்லினை பயன்படுத்தி சர்வதேசத்திடமிருந்து  தப்பித்தாலும், சமூக ஊடகங்களில் இருந்து தப்பிக்க முடியாது.                      எழுத்து - இ.தனஞ்சயன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகத்துறை மாணவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக