வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் ஊடுருவியுள்ள விளம்பரம் வாழ்க்கையினை புரிய வைக்கும் கல்வி துறையியினை விட்டு வைக்கவில்லை. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி Roosevelt என்பவர் விளம்பரம் என்பது எண்ணற்ற மக்களிற்கு பயனுள்ள பொருட்கள் தொடர்பான உண்மையான அறிவை தருவது.இது ஒரு வகையில் கல்வி ஆகும். நாகரீக வளர்ச்சி இக்கல்வி அறிவை சார்ந்தாகும் என கூறுகின்றார்.பத்திரிகைகளின் விளம்பரம்பரங்களை பொறுத்தத மட்டில் கல்வி சார்ந்த விளம்பரங்களிற்கென தனித்த இடம் உண்டு. ஏனைய ஊடகங்களான வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றுடன் ஒப்பிடும் போது பத்திரிகையில் கல்வி சார்ந்த விளம்பரங்களினை அதிகம் அவதானிக்கலாம்.விளம்பர வகைகளாக பொருள் விளம்பரம், பொதுமக்கள் சேவை விளம்பரம், நிறுவன விளம்பரம் போன்றன முக்கியமானதாக காணப்படுகிறது. கல்வி சார்ந்த விளம்பரங்களை பொறுத்தவரை யாழ்ப்பாண பிராந்தியத்தை மையப்படுத்தி வெளியாகும் மூன்று பிரதான பத்திரிகைகளினை தொடர்ந்து ஆய்வு செய்த பின்னர் கீழ்கண்ட வகைப்பாடு கட்டுரையாளரால் செய்யப்படுகிறது. ஆங்கில கற்களை நெறி விளம்பரம், கணினி கற்கைகள் விளம்பரம்,போட்டி பரீட்சை விளம்பரம், ஜேர்மன் மற்றும் பிரைன்ச் மொழி கற்கைகள் நிறுவனம், ஹொட்டல் பாடப்பயிற்சி நெறி விளம்பரம், பாடசாலை கற்கும் மாணவர்களினை மையப்படுத்திய விளம்பரங்கள் போன்றன இனம் காணப்பட்டன.குறிப்பாக குறிப்பிட்ட விளம்பரங்கள் பல்வேறு உத்திகளை கையாண்டு தம் பக்கம் நுகர்வோரினை இழுக்க முயற்சி செய்கின்றன. கவனகுவிப்பு,நம்பிக்கைஊட்டல்,நினைவில் நிறுத்தல்,கருத்து தெரிவிக்கும் தன்மை போன்றன குறிப்பிடத்தக்கது. விளம்பரம் என்பதன் நோக்கம் தூண்டி செயற்பட வைக்கும் ஆற்றல் ஆகும். இதனை விளம்பர கோட்பாட்டு சட்டகமான AIDAS அதாவது Attention-கவனம் Interest-ஆர்வம் Desire-ஆசை Action-செயற்பாடு Satisfaction-திருப்தி குறித்த தாக்கத்தை விளம்பரம் ஏற்படுத்தும்.யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் கல்வி சார்ந்த விளம்பரங்களின் நுட்பமாக வார்த்தை பயன்பாடே காணப்படுகிறது.அவற்றில் சில பிரபல ஆசிரியர், முன்னனி ,அனுபவம் மிக்க ஆசிரியர் குழாம், சர்வதேச அரசு அங்கீகாரம்,30 நாடகங்களில் ஆங்கிலம், இலவச கற்றல் கையேடுகள்,நவீன கற்பித்தல் வசதிகள், Diploma,Certificate, ஆங்கிலம் இலகுவாக பேசலாம், பதிவு களுக்கு முந்துங்கள் ,இலகுவாக அடிப்படையில் இருந்து ஆங்கிலம்,No1,எதிர்பார்கை வினாக்கள், இலகு மீளூட்டல் வகுப்புகள், முதல் தரம்,விசேஷ,தனிபட்ட, பிரத்தியேக, வெளிநாட்டில் கற்பதற்கு ஆசை இல்லையா?அனுமதிகளுக்கு,முதல் வகுப்பு இலவசம், ஒரு பிரிவில் 20 பேர் மட்டுமே, முதல் பதிவு செய்பவர்களுக்கு 60%கழிவு, இலங்கையில் புகழ் பூத்த,கட்டண சலுகை, ஆங்கில பாடநெறியில் இனைபவர்களுக்கு சிங்கள பாடநெறியில் இனையும் வாய்ப்பு,என்னிடம் இனைவோர் உயர் பெறுபேறு பெறுவர், A என்ற அருங்கனியைப் பெற்றிட,அனுமதி கட்டனம் இல்லை, ஆங்கில மொழியை தமிழில் கற்றல்,முன்னாள் ஆசிரியர், அனுமதி மட்டுப்படுத்தப்பட்டது,free English course, 70000 ரூபாய் பெறுமதியான 5 கற்களை நெறிகளை 20000 ரூபாய் மட்டும் செலுத்தி ஆங்கில சிங்கள மொழி அறிவைப் பெருக்கி கொள்ளுங்கள், பெறுமதிமிக்க கற்கை, மிக குறுகிய காலத்தில் சரளமாக எழுத பேசக்கூடிய ஆங்கில பாடநெறி,இலவச கருத்தரங்கு, வடக்கில் முதலாவது, 2016 A/L பரீட்சை எடுத்தவரா?புதிய பிரிவு ஆரம்பம், விழிப்புணர்வு அமர்வு, பிரித்தானிய பட்டத்திற்கான முதல் உங்கள் கட்டம்,நவீன மயப்படுத்திய விரிவுரை மண்டபம், செயன்முறை தேர்வுகள் விரிவினை விடயங்கள குறிப்புகள் இவ்வாறான வார்த்தைகள் மதி மயக்கம் கூடியது. இவற்றில் இருந்து தெளிவு பெறவேண்டும்.நல்ல பொருளிற்கு விளம்பரம் அவசியம் அற்றது என்பார்கள். ஆனால், உலகமயமாக்கலின் தாக்கம் விளம்பர பொருளே தரமானது என்றாகிவிட்டது. ஊடகங்களின் பிராண வாயுவாக விளம்பரங்களே உள்ளமையால் ஊடகங்களில் விளம்பரங்கள் தவிர்க்க முடியாதவை.எனினும் இலவச கல்வி இலவச கல்வி என்று கூறும் நமது நாட்டில் கல்வி சார் விளம்பரங்களின் அதிகரிப்பு கவலை யான விடயமாகும்.ஆக்கம் -இ.தனஞ்சயன்.
அறிவைநாடல்

அறிதலார்வம்
வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017
கல்விக்கு விளம்பரம் அத்தியஅவசியமா?
லேபிள்கள்:
அளவெட்டி,
ஊடக விமர்சனங்கள்,
ஊடகதிட்டமிடல்,
ஊடகம்,
கல்வி விளம்பரம்,
தந்திரோபாயம்,
யாழ்ப்பாண பல்கலைக்கழகம்,
யாழ்ப்பாணம்,
விளம்பர உத்திகள்,
விளம்பரம்

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக