ஊடகங்களில் மிகவும் இன்றியமையாத பகுதிகளில் ஒன்றாக விளம்பரங்கள் காணப்படுகிறது. விளம்பரம் என்பது ஒரு குறிப்பிட்ட பொருளை/சேவையை நுகருமாறு மேற்கொள்ளப்படும் தொடர்பாடல் வடிவமாக காணப்படுகிறது. விளம்பரம் என்பது ஆரம்ப காலத்தில் பொதுமக்களிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பொது அறிவிற்புக்கும் பயன்படுத்தப்பட்டது.மாறாக இன்று அனைத்து விடயங்களிற்கும் விளம்பரம் அவசியமாக்கப்பட்டு விட்டது. விளம்பரங்களின் வகைகளுள் ஒன்றாக புறவிளம்பரங்கள்(out display advertisements & Banners)காணப்படுகின்றது. புறவிளம்பரங்கள் என்பது பெரியளவில் அமைப்பதால் அவை சகலரையும் ஈர்கின்றது.வர்ணம் இனைக்கப்படுவதால் தொலைநோக்கிலே இவை தெளிவாகவும் அழகாகவும் அமைக்கப்டுவதால் பலருக்கும் தெரியப்டுத்தப்படுகின்றது.நகர மையம், பார்வைமையங்கள், பெரிய பாலங்கள், சந்திகள்,பிரபலமான ஆலய மகோற்சவகாலப்பகுதிகளில் இவற்றின் எண்ணிக்கை கணக்கிட முடியாதவை.உதாரணமாக, தற்போது நல்லூர் திருவிழா ஆரம்பமாகி தேர் திருவிழா இன்றாகும்.நல்லூரிற்கு அனைத்து வியாபார நிறுவனங்களும் தமது பிரசித்தப்படுத்தல்,மேம்படுத்தல்,பொதுமக்கள் தொடர்பு,விளம்பரப்படுதல்,வணிக நடவடிக்கைகள் போன்றவற்றிற்கு களமாக நல்லூர் களமாக அமைகிறது. ஊடகங்கள் கூட குறிப்பாக தென் இலங்கை ஊடகங்கள் நல்லூரில் முகாமிட்டுள்ளனர். ஆலயத்திருவிழா எவ்வாறு சமூகமயப்படுத்தல் செய்கிறது என்பதற்கு நல்லூரே மிகச்சிறந்த உதாரணம்.இதே வேளை,விவேகத்தின் அர்த்தத்தை புரியாத சிலர் தமது பணத்தை பிற்போக்கான நடவடிக்கைகளிற்கு தாரைவார்க்கின்றனர்.இவர்கள் புற விளம்பரங்களின் இலாபம் தொடர்பான அறிவிலிகளாக உள்ளனர். சுரனை கெட்ட ரசனையாளர்கள்.புறநிலை விளம்பரங்களின் மற்றும் ஓர் பண்பாக எல்லா வகையினரையும் சென்றடைகிறது. மக்களின் மத்தியில் மிகப்பெரிய விம்ப கட்டமைப்பு மேற்கொண்டு நீடித்த தாக்கத்தை உண்டு பண்னுவது இவ்வாறு விளம்பரங்களின் தனிபட்ட பண்பாகும். இவ்வாறான விளம்பரங்களின் எதிர்மறையான கருத்துக்களாக போலி களின் பெருக்கம், பண்பாட்டு கலப்பு, திணித்தல் நிலை,பதட்ட உருவாக்கம்,கவனச்சிதறல்,மொழித்தூய்மை புறக்கணிப்பு, பக்தியற்ற நிலை, சலுகை என்ற பெயரில் முறைகேடு, பொருளாதார ஏற்றத்தாழ்வு, ஆன்மீக ஈடேற்றத்திற்கு இடைஞ்சல், தவறான பிற்போக்கான எதிர்மறையான கருத்துருவாக்கம் போன்றவற்றை சிந்திக்க முடியும். உலகமயமாக்கல் சூழ்நிலை ஆண்மீக பண்பாட்டுத்தளத்திலும் மாற்றத்தை உண்டுபண்னிவிட்டது.தொடர்பாடல் கலையும் விற்பனை செய்முறையுமான புறவிளம்பரங்கள் வணிக பூகோளமயமாக்கல் சூழ்நிலையில் தவிர்க்க முடியாதவை. எனினும் இவற்றை விவேகமான செயற்பாட்டிற்கு பயன்படுத்தலாமே?? நல்லூரானே துனை செய்ய வேண்டும்.இ.தனஞ்சயன்.
அறிவைநாடல்

அறிதலார்வம்
ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017
விவேகத்தை புரிந்துகொள்ளாத பக்தி ரசனை!
லேபிள்கள்:
ஊடகங்கள்,
கல்வி விளம்பரம்,
நல்லூர்,
பிரஜைகள் ஊடகவியல்,
புறவிளம்பரம்,
யாழ்ப்பாண பல்கலைக்கழகம்,
விளம்பர அறம்,
விளம்பர உத்திகள்,
ஜனநாயகம்

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக