அறிவைநாடல்

அறிவைநாடல்
அறிதலார்வம்

புதன், 16 ஆகஸ்ட், 2017

நடுநிலை மாற்று ஊடகங்களில் சாத்தியமா?

இன்றைய காலத்தில் ஊடகங்கள் மக்களுடன் மிக நெருக்கமாகி விட்டது. இரண்டும் ஒன்றை ஒன்று தங்கியே காணப்படுகின்றது.மக்கள் இதழியலின் வருகையுடன் இது மேலும் வலுவானதாக மாற்றம் பெற்றுள்ளது. ஊடகங்களினை மக்கள் தமது பயன் மற்றும் தேவை கருதி தேர்வு செய்வார்கள். ஒவ்வொருவரின் தேவை தத்தமது இலக்கு,எதிர்பார்ப்பு போன்ற தனிப்பட்ட தன்மையின் அடிப்படையில் வேறுபட்ட தன்மைகள் காணப்படுகின்றது. இதனால், ஊடகங்கள் மக்களின் தேவையினை பூர்த்தி செய்யும் அதேவேளையில், தமது அரசியல் மற்றும் வணிக தேவைகளையும் நிறைவு செய்கிறது.ஊடகங்களின் நடுநிலை என்பது மிகவும் சிக்கல் நிறைந்த ஒன்றாகும். மூத்த பத்திரிகையாளர்கள் சோ அவர்கள் நடுநிலை தொடர்பாக குறிப்பிடும் போது "கிரிகெட் விளையாட்டில் நடுவரே நடுநிலை அற்றவர்" என்று கூறினார். இக் கூற்றை ஆழமாக சிந்திக்கவேண்டும். கட்டுரையாளரின் அவதானிப்பில் ஊடகங்கள் நடுநிலை என தம்மைதாமே கூறிக்கொள்ளுமே தவிர நடுநிலை பேனமாட்டாது.சர்வதேச ஊடகங்களினை பொறுத்தமட்டில் அவை தமது அரசியல் நிகழ்ச்சி நிரலின் கீழே செயற்படுகின்றது.B.B.C,C.N.N,C.B.S,A.F.P போன்றன நடுநிலை அற்ற ஊடகங்கள் ஆகும். அவை எப்போதும் தமது பக்க தவறுகளை நியாயப்படுத்துவதாகவே இயங்குகிறது. எனினும் அவற்றில் வரும் செய்திகள் எமது மொழியில் மொழிமாற்றம் செய்யப்படுகின்றதே அன்றி சர்வதேச அரசியலினை புரிந்து கொள்ளும் வகையில் அவை மொழிபெயர்ப்பு செய்யப்படவில்லை.இந்த எமது பலவீனம் மேற்குலகிற்கு எம்மை மேலும் பலவீனப்படுத்த சந்தர்ப்பத்தை அள்ளி வழங்குகிறது. எம்மிடையே காணப்படும் வெள்ளையன் பொய் சொல்ல மாட்டான் போன்ற முற்கற்பித எண்ணங்கள் தவிர்க்க படவேண்டியவை.மேற்குலகின் ஊடக இராஜதந்திரம் புரிந்து கொள்ளப்படவேண்டும்.மாற்று ஊடகங்களின் எழுச்சி என்பதே நடுநிலை அற்ற ஊடகங்கள் என்பதற்காக ஆதாரம்.மாற்று ஊடகங்கள் என்பது பிரதான ஊடக கொள்கைக்கு மாறாக தோன்றும் ஊடகங்கள் ஆகும். மாற்று ஊடகங்கள் அதன் பண்புகளில் சிறிது காலமே தாக்கு பிடிக்கும் பின்னர் வணிக அரசியல் வட்டதிற்குள் அகப்பட்டு விடும்.மாற்று ஊடகங்களின் இயல்புகளாக விளம்பரம் இல்லாத தன்மை, சிறிய வட்டம், செலவு குறைந்த தன்மை, ஒழுங்கு முறையற்ற தன்மை, கட்டுபாடற்ற தன்மை,நிறுவன கட்டமைப்பு அற்ற தன்மையினை குறிப்பிடலாம்.மாற்று ஊடகங்களின் ஆயுள் காலம் மிகவும் குறைவானது.மாற்று ஊடகங்கள் என்பது தொடர்ந்து வரும் செல்நெறி/போக்கு(Trend) இறை மாற்றுவதாக காணப்படும். நடுநிலை இங்கு எதிர்பார்க்கப்படுவது கடினம்.உலகமயமாக்கல் மாற்று ஊடகங்களிற்கான சந்தர்ப்பங்கள். உலகமயமாக்கல் என்பதே வனிகமயப்பட்டதே .வனிகமயமாக்கல் என்பது??ஊடகங்களில் நடுநிலை என்பது எம்மை நாமே நேர்மையானவர்கள்,உண்மையானவர்கள்,நீதியானவர்கள் என்று உலகை நம்ப வைப்பது போன்றதாகும்.நடுநிலை அல்லாத மக்கள் உள்ளவரை ஊடகங்களும் அவ்வாறே காணப்படும்.ஆக்கம்:இ.தணஞ்சயன் ஊடகத்துறை மாணவன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக