அறிவைநாடல்

அறிவைநாடல்
அறிதலார்வம்

செவ்வாய், 19 செப்டம்பர், 2017

ஊடகரசனையை அனுபவிக்க ஊடகஉளவியலினனை புரிந்து கொள்வது அவசியம்?

மக்களின் அகங்களை ஊடுருவி கருத்தை/தகவல்களினை கொண்டு செல்வதாக ஊடகங்கள் திகழ்கின்றன. ஊடகங்கள் என்பது தகவல்களை அறிந்து, தெளிந்து, துணிந்து சொல்வனவாக அமைவதுடன் இவை மக்களின் பண்பாடுகள் மற்றும் பழக்க வழக்கங்களை பிரதிபலித்து,பிரதிநிதித்துவப்படுத்தி,செல்வாக்கு செலுத்துவதாக காணப்படவேண்டும்.மக்களின் உளவியலினை புரிந்து கொண்டு மக்களிற்கு பிடித்தமான மற்றும் ஆர்வமான நிகழ்சிகளையே ஊடகங்கள் படைக்கின்றன.உளவியல் தொடர்பாக உளவியல் வல்லுநர்களின் பார்வையில் அறிஞர்    வாட்சன் "நனவுநிலை பற்றியதாக குறிப்பிடுகின்றார் ".காண்ட் என்பவர் "மனம் பற்றியதாகவும் ஆன்மா பற்றியதல்ல" என்று கூறுகிறார். குரோ என்பவர் "மனித நடத்தை மற்றும் மனித உறவு முறைகள் பற்றிய படிப்பு"என்கிறார். சிக்மன் பிரைட் என்பவர் "மனிதனின் நனவிலி பற்றிய நிலையே உளவியல்" என்று சிந்திக்கின்றார்.மக்டூகல் என்பவர் "மனித நடத்தையின் காரணங்கள் மற்றும் நிபந்தனைகள் ஆகியவை தொடர்பாக கற்பதாகும்" என்று கூறுகிறார்.நோய் டன் முன் என்பவர் "அனுபவம் மற்றும் நடத்தை பற்றிய விஞ்ஞானம்"எனக் கூறினார்.சுருக்கமாக, ஆங்கில அகராதியான Oxford "The study of human mind and behaviour "அதாவது, மனித நடத்தை மற்றும் உளம் பற்றிய கற்கை என்று வரைவிலக்கனப்படுத்துகின்றது.இத்தகைய வலிமைமிக்க உளவியல் அனைத்து விடயங்களிலும் கலந்துள்ளது.அரசியல், சமூகம், பொருளாதாரம்,சமயம் என்று அனைத்துமே உளம் சார்ந்த விடயமாகவே பார்கப்படுகின்றது.தற்போதைய உலகமயமாக்கல் சூழலில், மனமகிழ்ச்சிக்காக ஊடகங்களினை நுகருதல் என்ற காலம் போய், மனமகிழ்ச்சிக்காக ஊடகங்களினை தவிர்க்க வேண்டும் என்று ஊடகங்களின் பெருக்கம் மற்றும் அவற்றின் தாக்கம் என்பன மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாதகிவிட்டது.எண்மான ஊடகங்களின்(Digital media)வரவு மனித உளவியலில் தவிர்க்க முடியாததாகிவிட்டது.இதேவேளை,மனித வாழ்க்கையில் அனைவருக்கும் சமமான 24 மணித்தியாலங்களே ஒரு நாளில் வழங்கப்படுகிறது. குறித்த காலப்பகுதியினை மிகச் சரியாக முகாமை செய்பவர்களே விதியை வெற்றி கொள்கிறார்கள்.தற்போதைய தொழில்நுட்பம் நிறைந்த உலகில் பிரச்சனைகள் ஏராளமான முறையில் காணப்படுகிறது. பிரச்சனைகள் ஏராளமான முறையில் கானப்படுவதனால்,இதனை தீர்த்துக்கொள்வதிலே விதி தங்கியுள்ளது.குறித்த பிரச்சனைகளை தீர்த்துகொள்ள இயலாத சமயத்தில் மனஅழுத்தம்/மனஉளைச்சல்(Stress) ஏற்படுகின்றது.மனப்பதட்டம் & கவலைகளை உருவாக்குவது மனஅழுத்தமாகும்.மனஅழுத்தத்தை அடையாளம் கண்டு புரிந்து கொண்டு  குறைத்துக்கொள்வதே மனஅழுத்தமாகும்.உடம்பு, மனம்,நடத்தை மற்றும் மனநிலை சார்ந்து உளஅழுத்தமாகும்.மனஅழுத்ததிற்கான காரணமாக,சுகவீனம், பொருளாதார நெருக்கடி,பிரிவு மற்றும் போதைப்பொருள் பாவனை போன்றவற்றை பிரதானப்படுத்தலாம்.ஊடகங்கள் குறித்த மனஅழுத்தத்தை ஏற்படுத்துபவை  அல்ல. ஊடகங்களால் ஏற்படுத்தும் மனஅழுத்தமாக எதிர்மறையான மனவெழுச்சிகளை தூண்டிவிடுதல்.அதாவது, வஞ்சகம், பொய்,பொறாமை, கோபம்,காழ்புணர்ச்சி போன்றவற்றை எதிர்மறை மனஎழுச்சிகளாக குறிப்பிடலாம். ஊடகங்களினை பொறுத்தவரை,அது அச்சு, இலத்திரனியல் மற்றும் எண்இலக்க ஊடகங்கள் /புதிய ஊடகங்கள் என அனைத்துமே மக்களினை பதட்டத்திற்குள் வைத்திருக்கவே விரும்புகின்றன.பொதுவாக, செய்தி என்பது "No news is good news"என்ற சொற்தொடரை நியாயப்படுத்தும் வகையிலே அமைகின்றன.ஆதாரமாக,திருட்டு,வாள்வெட்டு,கொலை,விபத்து,துப்பாக்கிச்சூடு, ஊழல், பாலியல் துஷ்பிரயோகம்,போராட்டம் போன்றனவே ஊடகங்களினை பெரிதும் நிரப்புகின்றன.    பத்திரிகைகளினை பொறுத்தவரை, நவீன ஊடகங்களின் வரவு விற்பனையில் மந்த நிலைமையை தோற்றுவித்துருப்பதுடன் செய்திக்குரிய விழுமியங்களான விரைவு,பிரபலத்தன்மை,பொருத்தப்பாடு, அன்மைத்தன்மை போன்றவற்றிற்கு சவாலாக அமைந்துள்ளது.அச்சு ஊடகங்கள் இன்று பெரும்பாலும் நவீன ஊடகங்களிலே செய்திகளிற்காக தங்கி இருப்பதுடன், எதிர்காலத்தில் தனது இருப்பை தக்கவைத்துக் கொள்ள தம்மை தகவமைத்துக் கொள்ள வேண்டிய தேவையும் எழுந்துள்ளது.தற்போதைய சூழலில், அனைவராலும் தவிர்க்க முடியாத ஒன்றாக ஊடகங்கள் காணப்படுகின்றன.மக்களின் தகவல்அறிதலார்வத்தை(Information hunger )பூர்த்தி செய்வதாக ஊடகங்கள் காணப்படுகின்றன.நவீன ஊடகங்களின் வகையில் ஒன்றான சமூக ஊடகங்களின் வருகை மற்றும் எழுச்சி தனிமனித பற்றிய ஆர்வத்தை தூண்டும் அதேவேளையில் ஊடக ஒழுக்கம் மற்றும் தனிமனித ஒழுக்கம் தொடர்பாக சவாலுக்குட்படுத்தியுள்ளது.அதிகரித்த ஊடகங்களின் எண்ணிக்கைகளில் எந்த ஊடக்கத்தை தெரிவு செய்ய வேண்டும் என்பதிலேயே குழப்பம்தான் காணப்படுகிறது.தீர்வாக நமது உணர்வுகளை சீராக நெறிப்படுத்துகின்ற அறிவினை மேலும் பெருக்கும் ஊடகங்களாக அமையவேண்டும். ஒவ்வொருவரிடம் தமக்கென தனிபட்ட ஊடகரசனை(media appreciation)காணப்படுகிறது.மாறாக, ஊடகங்களினை நுகரும்போது திருப்பதியற்ற தன்மையே தோன்றுகிறது.அது பின்னர் மனஉளைச்சலினை கொடுக்கிறது.இலங்கையில் மனவுளைச்சல் காரணமாக, இலங்கையில் சராசரியாக மூன்று மணித்தியாலங்களுக்கு ஒருவர் என்ற வகையில் நாளொன்றுக்கு 8 பேர் தற்கொலை செய்துகொள்வதாகவும் அதில் ஆச்சரியமான விடயம் ஆண்களே முன்நிலை வகிப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கமைய நடப்பாண்டில் கடந்த ஆறு மாத காலப்பகுதியில் 1597 தற்கொலைச்சம்பவங்கள் பதிவாகியுள்ள அதேவேளையில் 1275 பேர் ஆண்களாகவும் 322 பேர் பெண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015 ம் ஆண்டு 2389 பேர் ஆண்கள் உள்ளடக்கிய 3058 தற்கொலைகள் பதிவாகியுள்ளது. தொடர்ந்து அடுத்த வருடம் 2339 ஆண்களும் 668 பெண்களும் தற்கொலை செய்துள்ளனர். 1995 ற்கு பின்னர் 8500 பேர் என்று பதிவாகி இருந்த தற்கொலைகள் 2005 இல் அரைவாசிக்கும் மேலாக குறைந்து 2015 ம் ஆண்டில் 3025 என்ற எண்ணிக்கைக்கு கீழிறங்கியுள்ளது என சுகாதார அமைச்சரின் புள்ளிவிவரங்கள் நிறுவுகின்றன. இவற்றின் தாக்கத்தில் இருந்து எம்மை எவ்வாறு தற்காத்துக்கொள்ளலாம் என்று சிந்திப்பதே நுண்ணறிவுக்கு பொருத்தமானது. அண்மையில் சமுக ஊடகங்களில் வைரலான நீலத்திமிங்கல விளையாட்டு போன்றன மனஅழுத்தத்தை கூட்டி முட்டாளாக்கி தற்கொலைக்கு தூண்டியதாக அமைந்து சிலர் உயிர் இழந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இதேவேளை,குறித்த விளையாட்டினை உருவாக்கிய பிலிப் பியுடோக்கின் நோக்கம் "வாழத்தகுதியற்றவர்களை இவ்வுலகில் இருந்து களையெடுப்பதே" எனக் கூறுகிறார். இக்கூற்று ஆழ்ந்து சிந்திக்கவேண்டிய கருத்தாகும்.மேலும், சமூக ஊடகங்களில் இடம்பெறும் தரம் தாழ்ந்த கருத்துமோதல்களில் இருந்து விலகிக்கொள்வது எமது அறிவை பாதுகாத்து கொள்ள வசதியாக அமையும்.ஆரோக்கியமான, சமநிலையான,சுறுசுறுப்பான மற்றும் ஊடகங்களிற்கு அடிமையாக இல்லாத தன்மை போன்றன மனதினை தெளிவான சிந்தனைக்கு அழைத்து செல்வதாக அமையும்.ஊடகங்களின் அடிமைதனத்தில் இருந்து விடுபட அவற்றை திறனாய்வு தளத்தில் மறுவாசிப்பு செய்ய வேண்டும்.ஊடக கருத்துருவாக்கத்தினை கேள்விகளுக்குட்படுத்தி,பகுப்பாய்வு செய்து, மதிப்பீடு செய்தல்.அத்துடன், குறித்த தகவல்கள் உண்மையானவையா?/கருத்தா?,எழுத்தாளரின் நோக்கத்தை மற்றும் குனாம்சங்களை இனம்கானுதல்,எழுத்தாளரின் உரையாடல் பாணியை அடையாளம்காணல் போன்றன திறனாய்வுத்தள வாசிப்பின் மிக அடிப்படையானவை.எமது நாட்டின் கடந்த கால 30 வருட யுத்தத்தின் பின்னர்,மக்களின் உளவியல் சமநிலை பாதிக்கப்பட்டுள்ளது.இதனை சீர் செய்ய வேண்டிய முக்கிய பொறுப்பு பொறுப்புவாய்ந்த ஊடகங்களிற்கே உள்ளது. எனினும், எமது நாட்டின் ஊடகங்கள் போர்க்கால இதழியல் மரபினையே தற்போதும் பின்பற்றி வருகிறார்கள்.மக்களிற்கு நம்பிக்கை அளித்து நேர்மையான சிந்தனையை விதைக்கக்கூடிய ஊடகங்கள் இன்மையானது கவலை யான விஷயமாகும். ஊடகங்களில் ஒன்றான விளம்பரங்களின் உளவியல் மிக முக்கியமானது.நுகர்வோரின் உள்வாங்கும் திறன்,வாழ்க்கை முறை,ஆளுமை போன்றவற்றுடன் தனிப்பட்ட நபரின் உளவியல் புரிதல்களின் அடிப்படையில் அதாவது, வயது, பால்,தொழில் வருமானம், கல்வித்தரம் என்பற்றிக்கு இனங்க விளம்பரதாக்கம் வேறுபடும்.ஊடகஉளஅழுத்திலிருந்து எம்மை காத்துக்கொள்ள சரியான ஊடகத்தெரிவு,ஊடகங்களிற்கென குறிப்பிட்ட நேரம் ஒதுக்கீடு, ஊடகங்களினை எமக்கு பயனுள்ளதாக்குதல்,முறையான ஓய்வு, மகிழ்ச்சி மற்றும் கற்றுக்கொள்ள ஊடகங்களினை நுகருதல் போன்றன ஒருவரை தகவல் நிறைந்த மனிதனாக்கும்(Informative man).தற்போதைய சூழலில் Infortainment என்ற சொல்லாடல் ஊடவியலில் பயன்படுத்தப்படுகின்றது.அதன் விரிவாக்கம் Information -தகவல்,Entertainment -பொழுதுபோக்கு ஆக கொள்ளப்படுகிறது.தினமும் மாறுதலுக்கும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும்உட்பட்டு இருக்கும் இவ் உலகில் நாளாந்த சாதாரணமான நிகழ்வுகளில் இருந்து பன்னாட்டு அரசியல் வரை பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்ள ஊடகங்கள் உதவி கடினமானது என்றால் மிகையில்லை.ஆயினும், அந்த ஊடகங்கள் நம்மை கட்டிபோட்டு அடிமைப்படுத்தாமல் எம்மை தற்காப்பு செய்ய ஊடகங்களினை தெளிவாக விளங்கிக் கொண்டு எமது  சுயஉளவியலில் பாதிப்பை உண்டுபண்னாத வகையில் பாதுகாக்க வேண்டியது கட்டாயம்! இ.தனஞ்சயன்.ஊடகத்துறை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக