பாடசாலை மாணவர்களிடையே ஆங்கிலக் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் அடுத்த வருடம் முதலாம் மற்றும் இரண்டாம் தர மாணவர்களுக்கு ஆங்கில பாடப்புத்தகத்தை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.தற்போதைய நிலையில் தரம் மூன்றுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு மட்டுமே ஆங்கில பாடப்புத்தகம் அரசாங்கத்தால் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.அந்த வகையில்,குறித்த புதிய மாற்றத்துடன் ஆங்கில மொழியின் தற்கால அவசியம் தொடர்பாக சிந்திக்கப்போவதாகவே குறித்த பதிவு அமையப்போகின்றது.தகவல்கள் மற்றும் உணர்வுகளை பரிமாறிக்கொள்ள மொழி ஊடகமாக பயன்படுத்தப்படுகின்றது.மொழி என்பது சிந்திக்க அவசியம் அல்ல மாறாக சிந்தனையை எளிமைப்படுத்துவதாக அமைவதாக மொழியியல் வல்லுநர்கள்(Linguistic experts)கூறுகிறார்கள். மேலும் சில சீர்திருத்த சிந்தனையாளர்கள் மொழி தொடர்பாக தமது கருத்தியல்களை பதிவு செய்கிறார்கள்.R.C.Trench என்பவர் "Language is the closest fitting dress of thought " மொழிபெயர்ப்பு சிந்தனையின் மிக நெருக்கமான ஆடையே மொழி என்கிறார்.அதேபோன்று, Ahmed Deedat என்பவர் "Language is the key to the heart of people "மொழிபெயர்ப்பு மக்களின் இதயவாசலின் திறவுகோல் என்பது மொழி என்று கூறுகிறார்.இதேவேளை,பிற மொழிகளை கற்றல் தொடர்பாக Ray leobond குறிப்பிடும் போது,"A different language is a different vision of life " அதாவது, வேறுபட்ட மொழியினை கற்பது வேறுபட்ட சிந்தனை மனப்பான்மையை விருத்தி செய்துகொள்ள உதவும் என்று கூறுகிறார். அதேபோல், Haruki Murakami "Learning another language is like becoming another person "அதாவது இன்னுமோர் மொழியினை கற்றுக் கொள்வது இன்னும் ஒரு மனிதன் என்ற நிலைக்கு சமமானது என்று கூறுகிறார்.அத்துடன், மொழி என்பது சிந்தனையில் செல்வாக்கு செலுத்துகிறது. மொழியினை கற்பது என்பது செவிமடுத்தல் வாயிலாக இலகுபடுத்தப்படும்.ஒரு மொழி அறிவின் எல்லையே உலகத்தின் எல்லையாக கருதிக்கொள்ள முடியும்.எமது நாட்டில் மூன்று தசாப்த காலமாக இனப்பிரச்சினை தீர்கபடாமல் காணப்படுவதற்கு மொழியே இடைவெளியை உண்டுபன்னியமையும் மறுக்க முடியாத உண்மை.நமது வாழ்க்கையில் நாம் பிறந்து வளர்கின்ற சூழலில் நிலவும் மொழிகளை நாம் கற்றுக்கொள்கின்றோம்.மாமனிதர் நெல்சன் மன்டேலா மொழி தொடர்பாக கூறும்போது,"ஒருவருடன் உரையாடும்போது இதயபூர்வமாக ஒருவர் புரிந்து கொள்ள வேண்டுமாயின் அவர்களுடைய தாய்மொழியில் உரையாடுவதே சாலப் பொருத்தமானது" என தாய்மொழியின் சிறப்பை குறிப்பிடுகின்றார்.குறிப்பாக, நமது தாய்மொழியை எடுத்துக்கொண்டால்,பிரதேசத்திற்கு பிரதேசம் வேறுபட்ட மொழி வழக்குகள் காணப்படுகின்ற தன்மையினை அவதானிக்க முடியும்.யாழ்ப்பாணத்தில் தமிழ், மட்டக்களப்பு தமிழ், மலையகத்தமிழ்,தமிழக தமிழ் என வேறுபட்ட தமிழ் உச்சரிப்பு வேறுபாட்டை அவதானிக்கமுடியும்.தகவல்கள் மற்றும் சிந்தனைகளினை பரிமாற்றம் செய்யும் தொடர்பாடலை இலகுபடுத்துவதாக மொழி காணப்படுகின்றது.மொழியை சிறந்த முறையில் கற்றுக்கொள்ள மொழித்திறன் அவசியம். அடிப்படை மொழித்திறன்களாக பேசுதல்,எழுதுதல், வாசித்தல்,செவிமடுத்தல் காணப்படுகின்றன.எனினும், உபதிறன்களாக (sub skills ) இலக்கணம், சொல்வளம், உச்சரிப்பு, பயன்பாடு,இரட்டைச் சொல்,உரையாடல் அற்ற மொழி போன்றவை அவசியமானவை.அண்மையில் இலங்கைக்கான இந்திய தூதுவர் தரஞ்ஜித் சிங் சந்து ஹிந்தி தினத்தை முன்னிட்டு கொழும்பில் உரையாற்றும் போது"ஹிந்தி மொழியை இலங்கையர்கள் கற்பது சுற்றுலா தொழிற்றுறை வளர்ச்சிக்கு உதவும் "என்று தெரிவித்தார். தென்பகுதியில் சிங்கள மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் மத்தியில் ஹிந்தி மொழி மீதான ஆர்வம் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.களனிபல்கலைக்கழகத்தில் ஹிந்தி மொழிப்பிரிவு காணப்படும் அதேவேளையில் ஹிந்தி சினிமாமீதும் தென்பகுதியில் ஆர்வம் உள்ளமை கட்டுரையாளரின் அவதாணம்.
இதேவேளை,தமிழகத்தில் ஹிந்தி மொழி திணிப்புக்கு கடுமையான எதிர்ப்புள்ளமையும் ஒப்பிடவேண்டியது.ஒருவரின் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வதில் கருத்துக்களினை நியாயப்படுத்தி வாதிடுவதற்கு மொழிவல்லமை முக்கியமான பங்குவகிக்கின்றது.அத்துடன், எதிர்வரும் ஆண்டு முதல் வெளிநாட்டுக்கு வேலைவாய்ப்பு நாடி செல்பவர்களுக்கு ஆங்கில மொழி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதாக இலங்கை நீதி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். உலகமயமாக்கல் சூழலில் உலகமயமாக்கலினை இலகுபடுத்தும் ஆயுதமாக ஆங்கில மொழி காணப்படுகிறது.உலகமயமாக்கல் /பூகோளமயமாக்கல்(Globalization) என்பது வணிக,வர்த்தக, பொருளாதார மற்றும் தொடர்பாடல் போன்றவற்றின் உலகம்தழுவிய நகர்வே ஆகும்(Globalization is a process by which business develop international influence or start operating on an international scale/increasing and deepening interactions between individuals and organizations across the globe /The world wide movement towards economic, financial, trade & communications integration).குறித்த உலகமயமாக்கலின் வாயிலாக பல நன்மைகள் காணப்படுகிற அதேவேளையில் சில தீமையான விளைவுகளும் காணப்படுகின்றது.முதலில் நன்மைகளை நோக்கின்;உலகத்தை ஒருங்கினைத்தல்,சமநிலை பேணுதல், தொடர்பாடல் விரிவாக்கம், தொழில்நுட்ப முன்னேற்றம், பொறுப்பு கூறல், வறுமை ஒழிப்பு, அங்கீகாரம், வேலைவாய்ப்பு, சிறந்த வாழ்க்கை தரம், புதிய பொருட்களின் வரவு,சுகாதாரம் நலம் முன்னேற்றம், புதிய சந்தைவாய்ப்பு,சுற்றுலா துறை வளர்ச்சி, பண்பாடு ஒருங்கிணைப்பு, சர்வதேச வர்த்தக வியாபாகம், அரசியல் பொருளாதார ரீதியாக நாடுகள் இடையே உறவு,சர்வதேச சட்டம்,முதலீட்டு வாய்ப்புகள்,இராஜதந்திரம்,அதிக தகவல்களை கற்றுக் கொள்ளலாம், எல்லா வகையான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் காணப்படும் போன்றவற்றிற்கு உதவுவதாக உலகமயமாக்கல் விளங்குகிறது.இதேவேளை,பண்பாட்டுகலப்பு ஏற்படுத்தும், போலிகள் மலிந்து காணப்படும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்,வர்த்தக பாதுகாப்பு இன்மை,வளங்கள் சுரண்டல், குறைந்த சம்பளம் போன்றன உலகமயமாக்கலின் எதிர்மறையான தாக்கங்களாகும்.இவ்வாறான உலகமயமாக்கல் தாக்கத்திலும் தொடர்பாடலிற்கான ஊடகமொழியாக ஆங்கிலம் காணப்படுகிறது.சீனாவானது உலகளாவிய ஆங்கில மோகத்தை நன்கு உணர்ந்து ஆங்கிலத்தில் தமது படைப்புகளை வெளியிடுவதில் கரிசனை கொண்டுள்ளது. உலக மொழியாகவும் உலக இணைப்பு மொழியாகவும் ஆங்கில மொழியாகவே காணப்படுகிறது.அத்தகைய ஆங்கில மொழியின் அவசியத்தை சிந்திப்போம். அடிப்படை மென்திறனை வளர்த்து கொள்ள உதவுகிறது. தொழில் சார் கதையை மற்றும் சந்தர்ப்பத்தை வளர்க்க உதவுகிறது.ஆக்க சிந்தனைக்கும் வழிகோலுவதாகவும் அமைகிறது.53 நாடுகளில் உத்தியோகபூர்வ மொழியாகவும் 400 மில்லியனிற்கு மேற்பட்ட மக்களின் முதன்மை மொழியாகவும் உள்ளது.தொழில்நுட்பம், கணினி, இனணயம், சுற்றுலா தொழிற்றுறை, இராஜதந்திரம் போன்றவற்றின் மொழியாகவும் ஆங்கிலமே உள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த டிஜிட்டல் பொருளாதாரத்தை முன்னெடுக்கப்போவதாக அண்மையில் காலிமுகத்திடலில் wi-Fi பனல் கருவிகளை அறிமுகம் செய்யும் விழாவில் உரையாற்றிய பிரதமர் ரனில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.இது எதிர்காலத்தில் ஆங்கில மொழியின் பெறுமானதினை மேலும் உயர்த்த போகிறது என்பது கணிப்பு.டிஜிட்டல் பொருளாதாரத்தின் ஊடக மொழியாக காணப்படுவது ஆங்கிலமே ஆகும்.பெரும்பாலான அறிவியல் தகவல்கள் கொட்டிக் கிடப்பதும் ஆங்கில மொழியிலேயே! உலகில் 65% மானவர்கள் ஆங்கில மொழியை பயன்படுத்துகின்றனர்.அதேபோல, ஆங்கில மொழியை கற்றுக் கொள்ளாதவர்கள் உலக அறிவியலில் அரைவாசியையே கற்றுக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறான ஆங்கில மொழியானது மேலதீக அறிவினை பெற்றுக்கொள்வதற்கான வழியாக காணப்படுகின்றதே அன்றி ஆங்கிலம் மட்டுமே அறிவு என்ற கணிப்பு தவறானது.ஆங்கில மொழியில் உள்ள நல்ல விடயங்களை மொழிபெயர்ப்பு வாயிலாக எமது மொழியில் இணைத்துக் கொள்வது எமது மொழியின் இருப்பை தக்கவைத்துக் கொள்ள வாய்ப்பாக அமையும்.அத்துடன்,ஒரு மொழியின் இருப்பை தக்கவைப்பதணூடாகவே இனத்தின் இருப்பையும் தக்கவைத்துக் கொள்ள முடியும். நிறைவாக,"ஊமையராய் செவிடர்களாய் குருடர்களாய் வாழ்கின்றோம்;ஒரு சொற்கேளீர்! சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!பிறநாட்டு நல்லறிஞர்கள் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்தல் வேண்டும்;இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்;மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதில் மகிமை இல்லை;திறமையான புலமையெனில் வெளிநாட்டோர் அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்."என்ற பாரதியின் தமிழ் முழக்கம் செய்வீர் என்ற கவிதையை நினைவுபடுத்தி இச் சிறிய வலைப்பூப் பதிவை நிறைவுசெய்கின்றேன்.இ.தனஞ்சயன் ஊடகத்துறை
அறிவைநாடல்

அறிதலார்வம்
செவ்வாய், 26 செப்டம்பர், 2017
ஆங்கில மொழி என்பது அறிவல்ல;மேலதிக அறிவை பெறுவதற்கான ஓர் ஊடகமே?
லேபிள்கள்:
ஆக்கத்தொடர்பாடல்,
ஆங்கில மொழி,
ஆங்கிலம்,
உலகமயமாதல்,
கல்வி விளம்பரம்,
கிளைமொழி,
திரைப்பட விமர்சனம்,
பூகோளமமாதல்,
மாற்றுஊடகம்,
மொழிமாற்றம்,
History of mass media,
Jaffn,
Lanka

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக