அறிவைநாடல்

அறிவைநாடல்
அறிதலார்வம்

வியாழன், 26 அக்டோபர், 2017

வாசிப்பு ரசனையை மேலும் வலுவாக்கும்!

மனித வாழ்க்கையில் மிகவும் அவசியமானதாகும் வாசிப்பு விளங்குகிறது. வாசிப்பின் பிரதானத்தை புரிந்து கொள்ளாதவர்கள் அறிவுச்செல்வத்தை சம்பாதிக்க முடியாதவர்கள். அபிவிருத்தி அடைந்த நாடுகளின் முன்னேற்றத்தின் பின்னால் புத்தக வாசிப்பு பின்னணியாக உள்ளவை மறுக்கமுடியாத உண்மை.வாழ்க்கையில் சாதித்த பெரிய அறிஞர்கள் புத்தக வாசிப்பு பிரியர்களாக உள்ளனர் என்பது அவர்களின் சிந்தனைமிக்க கருத்துக்களில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது;ஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது
"ஒரு நூலகம் கட்டுவேன்" என்று பதிலளித்தாராம் மகாத்மா காந்தி,அதேபோல்,
கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் போதும் என்றார்
தந்தை பெரியார்
தனிமைத்தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன் என்று பதிலளித்தாராம் ஜவஹர்லால் நேரு, என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்றாராம் பெட்ரண்ட் ரஸல்,
மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் புத்தகம் என பதிலளித்தார் சார்பு கொள்கையை முன்வைத்த
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்,
வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம் சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றாராம் மாமனிதர்
நெல்சன் மண்டேலா,
பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம் புரட்சியாளன்  லெனின்,
ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன் பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம் சார்லிசாப்லின்,
ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான் என்றார் அமெரிக்க ஜனாதிபதி
வின்ஸ்டன் சர்ச்சில்,
பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான் என்றாராம்
மார்டின் லூதர்கிங்,
தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக்கொண்டே இருந்தாராம்
பகத்சிங்,
நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து
என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்.
ஆபிரகாம் லிங்கன்,ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள்; அவனே எனது வழிகாட்டி!ஜூலியஸ் சீசர்,உலக வரைபடத்திலுள்ள மூலைமுடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறாயா, ஒரு நூலகத்துக்குச் செல்.டெஸ்கார்டஸ்,
போதும் என்று நொந்துபோய், புதுவாழ்வைத் தேடுகிறீர்களா… ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்கு.இங்கர்சால்,
சில புத்தகங்களை சுவைப்போம். சிலவற்றை அப்படியே
விழுங்குவோம் சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம்!
பிரான்சிஸ் பேக்கன்
புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளைவிட
பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே!
லெனின்,உண்மையான வாசகன், வாசிப்பதை முடிப்பதே இல்லை!
ஆஸ்கார் வைல்ட்,உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு!
சிக்மண்ட் பிரைட் போன்ற உலகளாவிய ரீதியில் புகழ்பெற்றவர்களின் ஆழம்மிக்க சிந்தனை பிறப்பதற்கு புத்தகங்களே தூண்டுகோலாக விளங்கியது.புத்தக வாசிப்பின் ஊடாக பல வழியில் நன்மைகளை பெற முடியும். பாடசாலைகளில் காணப்படும் பாடத்திட்டத்திற்குள் எம்மை மட்டுப்படுத்தாமல் பல்வேறு வகையான புத்தகங்களினையும் வாசிக்க வேண்டும்.நமது பாடத்திட்ட புத்தகங்கள் மாணவர்களின் சிந்தனைகளை சிறைப்படுத்தி வைத்துள்ளன.பரீட்சையை எதிர்கொள்ள மாத்திரமே போதுமானது மாறாக உலக ஓட்டத்துடன் வாழ்வை வெற்றி கொள்ள மேலதீக புத்தகங்களினை நண்பனாக்கி கொள்வதே புத்திசாலித்தனம்.புத்தகங்களினை தெரிவு செய்யும் போது எமது விருப்பு மற்றும் வாசிப்பு சுவை ஏற்ப தெரிவு செய்ய வேண்டும்.ஒவ்வொருவரும் தனக்கென தனித்தன்மையான வாசிப்பு ரசனையை கொண்டுள்ளனர். இலக்கியம், சமயம், அரசியல், சமூகம், தொழில்நுட்பம், அறிவியல் போன்ற பல்வேறு வகைகளில் புத்தகங்கள் நூலகங்களில் குவிந்துள்ளது. இவற்றில் எமது சொந்த ரசனைக்கு(own taste) ஏற்ப வாசிப்பினை அனுபவிக்கலாம்.வாசிப்பு கற்பனை மற்றும் ஆக்கத்திறனை தூண்டுகிறது அதேவேளையில் பெறுமதி மிகுந்த பொழுது போக்காகவும் அமைகிறது, மன முரண்பாடுகளின் இருந்து விடுதலை பெற வாசிப்பே சிறந்த மருந்தாகும்.மேலும் ஒரு சிந்தனையாளரான Dr.Seuss "The more you read The more things you know. The more that you learn the more places you Will go" நிறைய வாசிக்கும் போது நிறைய விடயம் தெரிய வரும் நிறைய விடயம் தெரியும் போது நிறைய இடங்கள் பயணிக்க முடியும் என்று கூறுகிறார்.வாசிப்பு என்பது அறிவு மற்றும் மதிநுட்பம் நிறைந்த மனிதனை உருவாக்கும். தற்போதைய நிலையில் வாசிப்பு என்பது அவசியமில்லை என்ற தோற்றப்பாடு எம்மிடையே பரவலாக காணப்படுகிறது. நவீன தொழில்நுட்பத்துடன் சமூகத்தை பீடித்துள்ள சமூக ஊடகங்கள் அதற்கு காரணமாக இருப்பதாகவும் மீளவும் சமூக மீட்சிக்கு இலக்கிய ரசனை உடைய அறிவியல் சமூகத்தை உருவாக்க சிறந்த வழிமுறை வாசிப்பு ஒன்றே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக