ஊடகத்துறையானது நாளுக்கு நாள் புதிய மாற்றங்களுடன் வேகமாக மாற்றங்களை உள்வாங்கி தம்மை தகவமைத்துக் கொள்கின்றது. இவ்வாறான மாற்றங்களை உண்டுபண்னியதன் மிகப் பிரதான காரணம் புதிய ஊடகங்களின்(Online media)வருகையே பிரதானமாகும்.அந்த வகையில் ஊடகங்களிற்கான இதழியல் என்பது செய்திகளை இலகுவாக அறிந்து, தெளிந்து, புரிந்து கொள்ள உதவுகிறது.இதழியல் (Journalism) என்பது இன்று விளையாட்டு இதழியல்,வணிக இதழியல்,கலை இதழியல்,புகைப்பட இதழியல்,விபசாய இதழியல், கல்வி இதழியல், நவீன இதழியல்(fashion journalism),பொருளாதார இதழியல்(Economic journalism),மஞ்சள் இதழியல்,பிரஜைகள் இதழியல்,தீர்வுகாணும்இதழியல்,புலனாய்வு இதழியல் போன்றன ஆகும். தற்போதைய நிலையில் இறுதியாக கூறப்பட்ட இதழியலின் தேவைப்பாடு உணரப்படுகின்றது.அந்த வகையில்,புலனாய்வு இதழியலின் அவசியத்தை உணர்ந்து அது தொடர்பாக சிந்திக்கப்போவதாகவே இப் பதிவு அமையப்போகின்றது.புலனாய்வு இதழியல் என்பதை வரைவிலக்கனப்படுத்துவது சற்று கடினமானது. எனினும், சாதாரண இதழியல் மரபில் இருந்து எவ்வாறு புலனாய்வு இதழியல் வேறுபடுகிறது என்று சிந்திப்பது வரைவிலக்கணப்படுத்த சுலபமாக அமையும். குறிப்பாக, செய்திகள் அனைத்தும் புலனாய்வுத் தளத்தின் அடிப்படையிலே வழங்கப்படுகிறது. எந்த ஒரு செய்திகளும் பிரதான ஊடகங்களினை பொறுத்தவரை உறுதிப்படுத்தி ஆதாரத்துடனே வெளியிடும் பண்புகளை கொண்டு இருக்கிறது.இந்த நிலையில் புலனாய்வு இதழியல் அவசியமா?என்பது கேள்விக்குரிய விடயமாகும்.சாதாரண இதழியல் இருந்து புலனாய்வு இதழியல் எவ்வாறு பிரித்துப் பார்க்க வேண்டியது என்பதே புலனாய்வு இதழியலிற்கான வாய்ப்பினை வழங்குகிறது.சாதரனமான செய்தியில் ஏதோ ஒரு மக்களிற்கு அவசியமான விடயம் மறைக்கப்படுகின்றது என்று உணரும் சந்தர்ப்பங்களில் புலனாய்வு இதழியலிற்கான தேவைப்பாடு தோற்றம் பெறுகிறது. குறித்த மறைக்கப்பட்ட விடயங்களினை ஆதாரமாக,திறனாய்வுத் தளத்தில், முக்கிய மான விடயங்களினை, ஆழ்ந்த ஆய்வு தளத்தில், இது வரைக்கும் அறியப்படாத தகவல்களினை புலனாய்வு தளத்தில் வெளிக்கொண்டு வரும் இதழியல் புலனாய்வு இதழியல்(Investigate journalism )ஆகும்.ஆங்கில அகராதிகளில் ஒன்றான Cambridge dictionary "புலனாய்வு இதழியலை "A type of journalism that tries to discover information of public interest that someone is trying to hide"அதாவது, மக்களிற்கு தேவையான விடயத்தை யாரும் மறைக்க முற்படும் போது அவற்றை அம்பலப்படுத்தி எழுதும் இதழியல்(Investigate journalism)ஆகும்.இவ் இதழியல் சாதாரண செய்திகளை கடத்துவதென்றில்லாமல் புதிய உண்மையை கண்டறிவதாக அமைகிறது. புலனாய்வு இதழியலின் அறிக்கையிடும் இலட்சனம் வழமையான இதழியல் மரபில் இருந்து பின்வரும் வகையில் வேறுபட்டு நிற்கிறது.என்ன நடந்தது என்பதுடன் ஏன் நடந்தது என்பதையும், யார் தவறு செய்தார் எப்படி செய்தார் என்பதையும், ஊகமற்ற உண்மையான ஆதாரங்களுடன் வெளியிடுதல், எப்படி தவறுகள் மறைக்கப்பட்டு வருகிறது என்பதை அம்பலப்படுத்தி மக்களை விழிப்பூட்டுவதாக அமைய வேண்டும்.புலனாய்வு இதழியல் உரைபெயர்பு இதழியல் (Interpretive journalism/Interpretative Journalism)"which goes beyond the basic facts of an event or topic to provide context, analysis and possible consequences "ஆக அமையக் கூடாது.புலனாய்வு இதழியல் என்பது சொந்த முயற்சி, நீண்ட காலக்கெடு,ஆழ்ந்த ஆய்வு, நிறைவான செய்தி மூலங்கள், புதிய தளத்திலான பார்வை,அழுத்தங்கள் என்பவற்றை கடந்தே வெற்றி பெறும். புலனாய்வு இதழியலின் சாதகமான அம்சங்களாக(positive aspects)சனநாயகத்தை வலிமைப்படுத்தும்,ஊழல்களினை வெளிக்கொணர உதவும்,சமூக பொறுப்பு வாய்ந்ததாக அமையும், மக்களிற்கு அதிகாரத்தை பெற்று தரும், உண்மையை அம்பலப்படுத்தும்,அநீதிக்கு எதிரானதாகும்,போலி அற்ற அசலாக அமையும் தன்மை போன்றவற்றை குறிப்பிடலாம்.புலனாய்வு இதழியல் மரபு இதழியல் பண்புகளில் இருந்து வேறுபட்ட தொன்றாகும். புலனாய்வு இதழியல் மக்களுக்கு பிடித்த ஒரு விடயத்தை ஆழமாக அதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்தல்,புதிய பாணியில் தகவல்களை ஒண்றினைத்து வழங்குதல்,என்ன நடந்தது என்பதற்கான விளக்கத்தை மாத்திரம் வழங்காமல் ஏன் நடந்தது என்பதற்குரிய காரணத்தை பல சாட்சியங்கள் மற்றும் தடயங்கள் ஊடாக விளக்குவதாக அமைய வேண்டும்.இலகுவாக கூறினால்,இரகசியத்தை வெளிக்கொணரும் இதழியல் எனலாம்.புலனாய்வு இதழியல் என்பதற்காக வரைவிலக்கனத்தை UNESCO நிறுவனம் "Investigate Journalism involves exposing to the public matters which are concealed either deliberately by someone in a position of power or accidentally behind a chaotic mass of facts and circumstances which obscure understanding. It requires using both secret and open sources and documents "அதாவது, மக்களிற்கு அவசியமான விஷயம் அதிகாரத்தில் உள்ளவர்களால் துஷ்பிரயோகம் செய்யப்படும் சமயத்தில் அதனை வெளிக்கொண்டு வரும் இதழியல் என இலகுவாக மொழிபெயர்ப்பு செய்யலாம்.மேலும், புலனாய்வு இதழியல் என்பது ஊழல்களை அம்பலப்படுத்தும் இதழியல் என்ற தவறான மனப்பாங்கு எங்களிடையே உண்டு. இவ் இதழியல் அதிகார துஷ்பிரயோகம், பொது மக்கள் நிதி தவறான முறையில் செலவிடப்படல்,சுற்றுச்சூழல் அழிப்பு திட்டங்கள், மருத்துவத்துறை,அபிவிருத்தி,அநீதி,சுகாதாரம்,நன்கொடை போன்றவற்றில் புலனாய்வு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு.புலனாய்வு இதழியல் என்பது கருதுகோள்களை உருவாக்கி அதனை ஆதாரத்துடன் நிரூபிக்க முனையும் முடியாத சமயங்களில் புலனாய்வு இதழியல் தோல்வியில் முடியும்.Investigate என்பதை ஆங்கில அகராதிகள் 'Systematic inquiry'அதாவது, ஒழுங்கு படுத்தப்பட்ட விசாரணையே புலனாய்வு(Investigation ) என்று வரைவிலக்கனம் வகுக்கின்றன. மேலும், புலனாய்வு இதழியல் புதிய பாதைகள் மற்றும் புதிய இராஜதந்திர சிந்தனைக்கு வழிவகுக்கின்றன. புலனாய்வு இதழியலிற்கான அறம் சார்ந்த விடயங்களை சிந்திக்கும் போது, அறம் சார் குழப்பங்கள்(Ethical dilemma)தோன்றினாலும் சட்டவரம்புகளிற்குட்பட்டே புலனாய்வு இதழியலை முன்னெடுப்பது எதிர்காலத்தில் சட்டச்சிக்கலை தவிர்க்க முடியும்.புலனாய்வு இதழியலில் இதழியலாளன் எதிர்கொள்ளும் சவால்களாக;புலனாய்வு இதழியல் தொடர்பான தெளிவான அறிவின்மை,அதிகரித்த பணம் முதலீடு, உயிர் அச்சுறுத்தல்,நிர்வாக சிக்கல் போன்றன முதன்மையான காரணங்கள் ஆகும். புலனாய்வு இதழியலாளன் ஒருவருக்கு அறிதலார்வம்,ஈடுபாடு,தர்கரீதியான ஒழுங்கு படுத்தும் சிந்தனை, நெகிழ்வத்தன்மை,சிறந்த முறையில் அறிக்கையிடும் ஆற்றல், பொது அறிவு மற்றும் ஆய்வு மனப்பாங்கு, பொறுமை,பங்கு பற்றல் ஆய்வு,தைரியம், சட்டப் புலமை,தியாகம்,அர்ப்பணிப்பு,குற்ற உளவியல் தொடர்பான அறிவு,ஆதாரங்களை தேடல்,சோரம் போகாமை,விலைபோகாமை, சாவாலை வெற்றி கொள்ளும் ஆற்றல் போன்றவை புலனாய்வு இதழியலாளனிற்குரிய அடிப்படைப் பண்புகள் ஆகும்.எமது நாட்டை பொறுத்தவரை சாதாரணமாக ஊடகவியளனாக வேலை செய்வதே மிகச்சவாலானதொன்று.இந்த நிலையில் நவீன ஊடகங்களின் ஆதிக்கம்,ஊடகநிறுவனங்களின் பணம் மீதான பேராசை, கடந்தகாலத்தில் ஊடகவியளார்கள் கண்ட துயரம் நிறைந்த அனுபவங்கள் புலனாய்வு இதழியல் என்பதற்கான சந்தர்ப்பத்தை காலம்கடத்தவே செய்யும். எனினும் தகவல் அறியும் சட்டமூலத்தின் வருகை ஓரளவுக்கு புலனாய்வு இதழியலிற்கான சந்தர்ப்பத்தை அதிகம் வழங்கினாலும் புலனாய்வு இதழியலிற்கான இருப்பு மற்றும் நிலைப்பு என்பது கேள்விக்குறியே ஆகும்.இ.தனஞ்சயன் ஊடகத்துறை
அறிவைநாடல்

அறிதலார்வம்
ஞாயிறு, 8 அக்டோபர், 2017
விசாரணையை முறைமைப்படுத்தும் புலனாய்வு இதழியலின் சாத்தியக்கூறுகள்?
லேபிள்கள்:
அரசியல் தொடர்பால்,
ஊடகங்கள்,
கல்வி விளம்பரம்,
தகவல் அறியும் உரிமைச் சட்டம்,
புலனாய்வு இதழியல்,
ஜனநாயகம்,
Inqu,
Interpretive Journalism,
Investigate journalism,
Jaffna University,
Media,
Media culture

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக