உலகமயமாக்கல் மீதான அதீத ஆர்வத்தை உலக நாடுகளில் பெரும்பாலானவை கொண்டு இருப்பதன் காரணமாக,செய்தி பரிமாற்றம் உலகமய இயல்பை அடைந்துள்ளது.தகவல் கடத்தும் செயல் ஒழுங்கு பூகோளம் தழுவிய வகையில் விரிவாக்கம் பெற்றுள்ளது."யாதும் ஊரே யாவரும் கேளீர்"என்ற கனியன் பூங்குன்றனாரின் சிந்தனை சாத்தியமாகியுள்ளது.உலகம் ஓர் கிராமம் (Global village )என்ற நிலை ஊடகக்கலாச்சாரம் மற்றும் பூகோளமயமாக்கல் காரணமாக, உண்டாகிவிட்டது.அந்த வகையில், பூகோளமயமாக்கல்/உலகமயமாதல் தொடர்பாக முதலில் சிந்திக்கவேண்டியுள்ளது.உலகமயமாக்கல் என்பது உலக நாடுகளையும் அவற்றின் மக்களையும் ஒருங்கிணைக்கும் ஒரு செயன்முறையாகும்."The process of a worldwide economy in which resources and products move fairly across national borders".பெரும் திரளான மக்களை சென்றடையக் கூடிய தகவலை பரிமாறிக் கொள்ளும் சாதனமாக இனையம் விளங்குகிறது.இனைய அறிமுகம் வெகுசன ஊடகங்களினை நவீன ஊடக வடிவில் நுகர்வதற்கான சாதகமான நிலைமையை உருவாக்கியுள்ளது. இனையமானது அனைத்து வகையான ஊடகங்களினையும் தன்னகத்தே உள்வாங்கியுள்ளமை அதன் மேலதீக பலம் ஆகும். இத்தகைய காரணங்களினால், வெகுஜன ஊடகப்பண்பாட்டில் கூட பல மாற்றங்களை அவதானிக்க முடிகிறது.Mobile journalism, Citizens journalism,Digital journalism மற்றும் Alternative media போன்ற சொல்லாடல்கள் தற்போது இதழியல் பரப்பில் அதிகமாக உரையாடப்படுகின்றது.இவற்றின் எதிர்கால செல்நெறி (Future trend) ஆதிக்கமானது;தகவல்கள் பரிமாற்றத்தில் காணப்படும் எளிமையை மேலும் எளிமைப்படுத்தப்படும்.Video,Audio &Digital print போன்றவற்றின் செல்வாக்கு அதிகரித்து காணப்படவழிவகுக்கும்,உள்ளூர் உற்பத்தி சார் விளம்பரங்களின் நிலமை பரிதாபப்படும் நிலைமைக்கு செல்லும் வெளிநாட்டு விளம்பரங்களின் ஆட்சியே இடம்பெறும்,Smart phone போன்றன யதார்த்தத்தை அவ்வாறே பிரதிபலிப்பதாக அமையும் அதேவேளை,தொலைக்காட்சியின் நிலைமை புதிய ஊடகங்களினை தழுவியே இருக்கும். பத்திரிகையானது பெரும்பாலும்(Free issue)இலவசமாகவே வழங்கப்படும்.Mobile media and Global media trend (உலகம் தழுவிய ஊடக செல்நெறி)உருவாகி அனைத்துக்கும் தொலைபேசியை நம்பி இருக்கும் நிலைமை காணப்படும்,யதார்த்த சிந்தனைகளை அதிகரிப்பதுடன் மாற்றுபாங்கான சிந்தனைகளை(Alternative thoughts)விதைப்பதாக அமையும்,அரச ஒழுங்கு மற்றும் சட்டம் என்பது மூன்றாம் தரப்பாகவே காணப்படும்,இலவசம் என்ற போர்வையில் நாமே விற்பனை பொருளாக வேண்டிய நிலை காணப்படும்,ஆக்கத்திறனை தீர்மானிப்பதில் பெரும் பங்கு புதிய ஊடகங்களே திகழும் அதேபோல் புதிய ஊடகங்கள் அனைத்திலும் ஆட்சி செலுத்தும்.மேற்கண்ட காரணங்கள் எதிர்காலத்தை நிர்ணயம் செய்வதாக அமையும்.இதேவேளை,பிரஜைகள் ஊடகவியல் (Citizen journalism)என்பதனை The media center at the American press institute கீழ்க்கண்டவாறு வரைவிலக்கனப்படுத்துகின்றது."The act of a citizen or group of citizens playing an active role in the process of collecting,reporting, analysing & disseminating news and information.The intent of this participation is to provide independent, reliable, accurate, wide-ranging and relevant information which a democracy requires ". பிரஜைகள் ஊடகவியல்(Citizens journalism)என்ற எண்ணக்கருவானது ஒவ்வொரு சமுக ஊடகங்களினை பயன்படுத்துபவருக்கும் பொருந்தும்(Citizen journalists are ordinary people who take on the role of news reporters).இன்றைய காலத்தில் சமூக ஊடகங்களில் பிரதிநிதித்துவம் பெறாதவர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடியதாகும்.சமூக வலைத்தளங்கள் தொடர்பாக இதுவரையான காலத்தில் 2500 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது. இவற்றில் பெரும்பாலானவை பல்வேறு நபர்களின் புகைப்படங்களை பயன்படுத்தி, போலி பேஸ்புக் கணக்குகளை ஆரம்பித்தமை தொடர்பாக முறையிட்டுள்ளதாக அந்த பிரிவின் பிரதம தகவல் பாதுகாப்பு பொறியாளர் ரொஷான் சந்திர குப்த குறிப்பிட்டுள்ளார். முன் அறிமுகம் இல்லாதவர்களை பேஸ்புக் கணக்கில் நண்பனாக்கிக் கொள்வதே இது போன்ற குற்றங்கள் உண்டாக்க காரணமாகிறது. இதேபோல், சிலரின் தொலைபேசி இலக்கங்களை பயன்படுத்தி சமூக ஊடகங்கள் வாயிலாக குற்றங்கள் இடம்பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.சமூக ஊடகங்களின் தற்போதைய போக்கு மிகவும் பொறுப்பற்ற தன்மையினையும் ஊடகங்களினை எவ்வாறு பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டும் என்ற ஊடக எழுத்தறிவு(Media illiteracy)அற்ற தன்மையையே தெளிவுபடுத்துகின்றது. சமூக ஊடகங்கள் தற்காலத்தில் பிரச்சனைகுரிய உந்துதலாகக் காணப்படுகிறது.மேலும்,சமூக ஊடகங்களினை பயன்படுத்தும் பாவனையாளர்கள் கீழ்க்கண்ட வழிகாட்டல்களை பின்பற்றும் போது ஊடகப்பாவனை வினைத்திறன் மற்றும் விளைதிறன் மிக்கதாக அமைவதுடன் பிரச்சனைகளினை தவிர்க்கவும் வசதியாக அமையும்.☆சமூகத்தை ஒற்றுமைப் படுத்தி ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் ஈடுபட முடியும். இலங்கையில் சமூக ஊடகப்பாவனை இன்னும் முரண்பாடுகளை உண்டுபண்னி இனங்களிற்கு இடையில் மேலும் பல தசாப்தங்களுக்கு நிரந்தர விரிசலை உண்டுபண்னுவதாக அமைகிறது.சமூக ஊடகங்களினை பயன்படுத்தி குறித்த இடைவெளியை பூரணப்படுத்த சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் முன்வரவேண்டும்.☆இன மத வேறுபாடின்றி மனித நேயம் மற்றும் மனிதாபிமானத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இனவாத, மதவாத,பிரதேச வாத,வகுப்புவாத,பிரிவினையை தூண்டும் விதமாக பதிவிடுவதை சமூக ஊடகங்களில் தவிர்ப்பது ஆரோக்கியமான நல்லிணக்க சமூகத்தை கட்டியெழுப்ப துனையாக அமையும்.☆நீதியான விடயங்களினை பதிவு செய்யும் போது அதனால் அநீதி ஏற்படாமல் மிகவும் ஆழமாக அவதானித்து கருத்துக்களை மற்றும் புகைப்பட தெரிவுகளை மேற்கொள்ள வேண்டும்.☆நல்ல பலனை அளிக்காத எந்தவொரு பதிவும் வீனானவையே இந்த மனப்பான்மை கொண்ட புத்திசாலியாக சமூக ஊடகங்களினை உபயோகப்படுத்த வேண்டும்.குறித்த இனம்,மதம், சாதி என்பதை சமூக ஊடகம் ஊடாக நிறுவ முற்படக்கூடாது.☆பழிவாங்குதல், அவமானப்படுத்தல்,உணர்ச்சி வசப்படுதல்,அனாவசியமாக வார்த்தையை விடுதல்,அந்தரங்கங்களை பதிவிடுதல்,கலாச்சார அசிங்கத்தை வெளிக்கொணருதல்,மற்றவர்கள் மீது சேறு பூசுதல்,ஆணவமான கருத்தாடல்கள், தெய்வ நிந்தனை பயனற்ற முன்னேற்றகரமான வார்த்தையை பயன்படுத்துதல் மற்றும் தனிமனிதத் தாக்குதல்களை தவிர்க்க வேண்டும்.☆ஒரு சிலரின் தவறுகளிற்காக ஒட்டு மொத்த சமுதாயத்தையும் விமர்சித்து முழு சமுதாயத்திடமும் இருந்து பகையாளி/விரோதி/இனத்துவேசி/பிரிவினை வாதி/இனவாதி என்ற நாமங்களை நமக்கு நாமே சூட்ட காரணமாயிருக்கக் கூடாது.இன்னொரு சமூகத்தை இழிவுபடுத்தும் செயலை மேற்கொள்ளாமல் குறித்த முரண்பாடுகளிற்கான காரணத்தை தெளிவுபடுத்தி தீர்வுகளை முண்மொ ழிவதாக அமைய வேண்டும்.☆எந்த ஒரு விடயத்தையும் உணர்வுபூர்வமாக அணுகாமல் அறிவுபூர்வமாக அணுகுவதற்கு மூளையை பயிற்றுவிக்க வேண்டும். ☆அரசியல் தலைமைகளை கழுவி ஊத்துவதனை விடுத்து குறித்த நிலைமைக்கான காரணத்தை ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை பிரேரிப்பதாக சமூக ஊடகப் பதிவுகள் அமைவது காத்திரமான சமூக ஊடக கலாச்சாரத்தை (Positive social media culture) பேணிக் கொள்ள வழிதுனையாக அமையும்.அதேவேளையில், 3.773 பில்லியன் மக்கள் தொகையினர் இனைய பயனாளிகளாக உள்ள அதேசமயம் 2.789 மக்கள் தொகையினர் சமூக ஊடக பயனாளிகளாக உள்ளதாக ஓர் ஆய்வின் முடிவு கூறுகிறது.அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம்ப் நேர்காணல் ஒன்றில் குறிப்பிடும் போது "Twitter என்ற சமூக ஊடகம் இல்லாவிட்டால் நான் ஜனாதிபதியாக வந்திருக்க முடியாது"என்று கூறுகிறார். இது சமூக ஊடகங்களின் செல்வாக்கினையே எடுத்தியம்புகின்றது.அத்துடன் Twitter சமூக ஊடக தளத்தில் தீவிரமாக இயங்கிவரும் டொனால்டு ட்ரம்பினை 41.7 பில்லியன் பேர் பின்தொடர்கின்றமையும்(Following)குறிப்பிடத்தக்கது.இதேவேளை,அச்சு ஊடக இதழியல் மற்றும் இனைய இதழியல் போன்றவற்றிற்கு இடையிலான இடைவெளி குறித்தும் சிந்திக்க வேண்டியுள்ளது.அந்தவகையில், அச்சு ஊடகங்களில் செய்தி கதை சொல்லும் பாணியிலும் இனைய ஊடகங்கள் செய்தி செய்முறை வடிவில் காணப்படுகிறது.மேலும் அச்சு ஊடகங்களில் வரும் ஆக்கங்கள்,செய்தி விநயோகம், அதிகாரம், பார்வையாளர்களின் பங்கு என்பன இனைய ஊடகங்களில் பண்பில் இருந்து மாறுபட்டது.இன்றைய காலத்தில் அனைவரும் சமூக ஊடகங்களில் தமது பொன்னான நேரங்களை செலவழித்து வரும் நிலையில் அந்த நேரம் எம்மை சரியான முறையில் வளப்படுத்தி கொள்ள சரியான முதலீடாக அமைய வேண்டுமே தவிர நாம் சமூக ஊடகங்களிற்கு பகடைக்காயாகக் கூடாது என்ற கருத்தை வலியுறுத்தி,நிறைவாக,கவிஞர் வாலி ஐயா கூறிய "காலம் தமக்கு தேவையானவர்களை தாமே உருவாக்கும்"என்ற தத்துவத்துடன்(Philosophy )இந்த பெறுமானம் மிக்க சிறிய வலைப்பூ பதிவை நிறைவு செய்கிறேன்.மீண்டும் மற்றொரு பெறுமதியான வலைப்பூப்பதிவில் சந்திப்போம் நண்பர்களே! இ.தனஞ்சயன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக்கற்கைகள் சிறப்பு மாணவன்.
அறிவைநாடல்

அறிதலார்வம்
சனி, 4 நவம்பர், 2017
வெகுஜன ஊடகப்பண்பாட்டில் புதிய திருப்புமுனையாக அமையும் பிரஜைகள் ஊடகவியல்!
லேபிள்கள்:
உலகமயமாதல்,
ஊடகவிமர்சனம்,
எண்மானஊடகம்,
சமூக ஊடகங்கள்,
திறனாய்,
பிரசித்தமான ஊடகப்பண்பாடு,
பிரஜைகள் ஊடகவியல்,
பூகோளமமாதல்,
பொதுமக்கள் தொடர்பாடல்,
Citizen journalism,
History of mass media,
Media culture

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக