அறிவைநாடல்

அறிதலார்வம்
சனி, 8 செப்டம்பர், 2018
மனக் கவலை தீர்த்தருளி, தான் நினைத்த எல்லாம் தரும் நல்லூரானின் தேர் பவனி .......
"அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்!
வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்! – நெஞ்சில்
ஒரு கால் நினைக்கில் இரு காலும் தோன்றும்!
முருகா என்று ஓதுவார் முன்"
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற அலங்கார கந்தன் என்று வர்ணிக்கப்படுகின்ற யாழ்ப்பாண நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருந்திருவிழாவின் தேர் உற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ இன்றைய தினம் 08/09/2018 அதிகாலை 7.30 அளவில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிலையில், நாட்டின் சகல பகுதிகளிலும் இருந்தும் புலம்பெயர் நாடுகளில் இருந்தும் அடியார்கள் வருகைதந்ததுடன் தேர்த்திருவிழா சம்பிரதாயப் பூர்வமாக இடம்பெற்றது.
இதன்படி, நல்லூரில் ஊடக நிறுவனங்கள்,வியாபார நிறுவனங்கள் என நல்லூரை மையப்படுத்தி நிறுவன மேம்படுத்தல் செயற்பாடுகளும் இடம்பெற்றன.
இந்நிலையில், யாழ்ப்பாணத்தின் மிகப்பெரிய அடையாளமாக விளங்குகின்ற வரலாற்று சிறப்புமிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருந்திருவிழாவின் தேர்த்திருவிழா வழமைபோன்று சிறப்பாக இடம்பெற்றதுடன் இம்முறை ஆலயத்திற்கு பொற்கூரை இடப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
'என்னே விதியின் பயன் இங்கு இதுவோ. . . . பொன்னே மணியே பொருளே அருளே...... மன்னே மயிலேறியவனே. .....' கந்தனுபூதி
இ.தனஞ்சயன்
லேபிள்கள்:
இலங்கை,
ஊடகங்கள்,
தணல்,
தொலைக்காட்சி,
நல்லூர்,
யாழ்ப்பாணம்,
வானொலி,
Media culture,
Media freedom,
Mediaethics

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக