அறிவைநாடல்

அறிவைநாடல்
அறிதலார்வம்

ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

ஜனநாயகவெளியை அகலப்படுத்தும் ஊடகங்கள்!





ஜனநாயகத்தின் அடிநாதமாக அமைவது சுயாதீனமான ஊடகத் துறையே ஆகும். ஊடகங்களின் குரல் மக்களின் குரலிற்கு சமமானது. ஊடகங்களில் மேற்
கொள்ளும் தணிக்கை என்பது மக்களின் குரலிற்கான தணிக்கையாகவே அமைகிறது. கடந்த சில நாட்களில் ஊடகங்கள் தவிர்க்க முடியாத ஒன்றாகியது. எமது நாட்டில் இடம்பெற்ற துரதிர்ஷ்டவசமான சம்பவம் அனைத்து சர்வதேச ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாகியது.

இந்நிலையில், உலக அளவில் டுவிட்டரில் அதிக பின்தொடர்பவர்களை (Followers) வைத்திருக்கும் தலைவர்களில் முக்கியமானவர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப். ஆனால் சமீபகாலமாக ருவிட்டரில் தன்னை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதாகவும், ருவிட்டர் நிறுவனம் தனக்கு எதிராக செயல்படுவதே இதற்கு காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டி வந்தார்.

மேலும், ருவிட்டர் நிறுவனம் பழமைவாதிகளுக்கு எதிரான போக்கை கையாண்டு வருவதாகவும், தனது ருவிட்டர் பக்கத்தில் இருந்து ஏராளமானவர்களை நீக்கியதோடு, தனது ஆதரவாளர்கள் டுவிட்டரில் இணைவதற்கான வழிமுறைகளை கடினமாக்கிவிட்டதாகவும் டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆனால் டிரம்பின் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ருவிட்டர் நிறுவனம் மறுத்து வந்தது.

இந்த நிலையில், ருவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சேவை, வெள்ளை மாளிகைக்கு வரவழைத்து டிரம்ப் சந்தித்து பேசினார். அப்போது டிரம்ப், ருவிட்டரில் தன்னை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதற்கான காரணங்கள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ருவிட்டரின் பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் வெள்ளை மாளிகை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் அடுத்த ஆண்டு நடைபெற போகின்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ருவிட்டரின் பங்களிப்பு இருக்க போவது தெளிவாகின்ற அதேவேளை, டிரம்பின் ஜனாதிபதி தேர்தல் வெற்றிக்கு ருவிட்டரின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. டிரம்ப் தனது தொடர்பாடலிற்காக ருவிட்டரிலே அதிகம் தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன், ஜனநாயக கட்சி சார்பில் பைடன் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

       இதேவேளை, இந்தியாவில்  டிக் டொக் செயலிக்கு தடை விதிப்பது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றமே முடிவு செய்யும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
டிக் டொக் செயலிக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, செயலியை பதிவிறக்கம் செய்வதற்கு மத்திய அரசு தடை விதிக்குமாறு உத்தரவிட்டது. இதுதொடர்பான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், டிக் டொக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்துவிட்டது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, எதிர்மனு தாரரிடம் விளக்கம் கேட்கப்படவில்லை எனவும், எனவே, டிக் டொக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் எனவும் கோரி, உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதிகள், எதிர்மனுதாரரின் விளக்கத்தையும் பெற்று, அதன் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் என கூறினர். சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க தவறினால், டிக் டொக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி, உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதேவேளை, எமது நாட்டில் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ள சமூக வலைத்தளங்களின் செயற்பாடுகளை வழமைக்கு கொண்டு வர மறுபரிசீலனை செய்து வருவதாக  ஜனாதிபதி தெரிவித்துள்ளதுடன் பொய்யான செய்திகள் பரவுவதை கட்டுப்படுத்த முடியவில்லையென்றால் சமூக வலைத்தளங்களை முழுமையாக தடை செய்து விடுவேன் எனவும் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊடகங்களின் பிரதானிகள் மற்றும் ஊடக ஆசிரியர்களை சந்தித்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

கடந்த 21 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற தற்கொலை குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து நாட்டின் பாதுகாப்பிற்காக பேஸ்புக்,ருவிட்டர், வட்ஸ்அப் ,வைபர் மற்றும் யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களின் பாவனை தடைசெய்யப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, சமூக வலைதளங்களினை தற்காலிகமாக தடைசெய்ததன் காரணமாக, பொருளாதார ரீதியில் நாடு இழப்பினை சந்தித்தமை கவனிக்கதக்கது.

தற்போதைய காலகட்டத்தில் பெரியவர்கள், சிறியவர்கள் என அனைத்து தரப்பையும் சமூக வலைத்தளங்களான பேஸ்புக்,வைபர்  வட்ஸ்அப் மற்றும் யூ டியூப் போன்றவை அதிக வரவேற்பை பெற்று இருக்கின்றன.

இத்தகைய ஊடகங்களில்  நாள்தோறும் மணிக்கணக்கில் நேரம் செலவிடும் இளைய தலைமுறையினர் ஏராளம். அப்படி சமூக ஊடகங்களில் அடிமையாகிப்போனவர்களுக்கு, அவற்றின் முடக்கம் தகவல்களினை பெற்றுக்கொள்ள சிரமத்தை உண்டு பண்ணியபோதும் மாற்று வழியாக VPN apps ஊடாக பலர் சமூக ஊடகங்களினை பார்வையிட்டனர் என்பது கவனிக்கத்தக்கது. இதேவேளை, சமூக ஊடகங்களில் தவறான மற்றும் தேசிய ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் பதிவிடுவோருக்கு, 3 அல்லது 5 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற தகவலும் அண்மைய நாட்களில் ஊடகங்களில் வெளியானது.

இந்த நிலையில், ஜெலன்ஸ்கி உக்ரைனின் தேர்தலில் வெற்றி பெற்றார். ஜெலன்ஸ்கி, தனது 17 வயதில் உள்ளூர் தொலைக்காட்சி நடத்திய நகைச்சுவை போட்டியில் பங்கேற்றார்.
அதனை தொடர்ந்து, தொலைகாட்சி தொடர்களில் நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் நடக்க தொடங்கினார். அவரது தொலைக்காட்சி  தொடர்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதால் பிரபல நகைச்சுவை நடிகராக உருவெடுத்தார். கடந்த 2003-ம் ஆண்டு, தனது பள்ளி தோழியான ஒலனா கியாஷ்கோவை காதல் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன.

இந்த நிலையில், ஜெலன்ஸ்கி கதா நாயகனாக நடித்த ‘மக்களுக்கான வேலைக்காரன்’ (Servant of people) என்கிற தொலைக்காட்சி  தொடர் கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாக தொடங்கியது.

கதையின் படி பள்ளிக் கூட ஆசிரியரான ஜெலன்ஸ்கி, நாட்டில் நடக்கும் ஊழலை விமர்சித்து பேசும் வீடியோ சமூகவலைத் தளங்களில் வேகமாக பரவி, அதன் மூலம் அவர் நாட்டின் அதிபர் ஆவார்.

இந்த கதைக்களம்தான் ஜெலன்ஸ்கியை அரசியலுக்கு வர தூண்டியது. ‘மக்களுக்கான வேலைக்காரன்’ தொடர் மக்களிடம் பெரும் ஆதரவை பெற்றதன் மூலம், உக்ரைன் மக்கள் தற்போதைய அரசின் மீது அதிருப்தியில் இருப்பதை அவர் தெரிந்துகொண்டார்.

இதையடுத்து, தனது தொலைகாட்சி  தொடரின் தலைப்பையே தனது கட்சியின் பெயராக கொண்டு ‘மக்களுக்கான வேலைக்காரன்’ என்ற கட்சியை கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கினார். மற்றத்தை விரும்பும் மக்களின் மனநிலையை உணர்ந்து, அதிபர் தேர்தலில் களம் இறங்கினார்.

அதன்படியே மாற்றத்துக்காக மட்டுமே அரசியலில் துளியும் அனுபவம் இல்லாத ஜெலன்ஸ்கியை மக்கள் அதிபராக தேர்வு செய்து இருக்கிறார்கள். அவர் அடுத்த மாதம் அந்நாட்டின் அதிபராக பொறுப்பு ஏற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாக்குப்பதிவு முடிவுகளுக்கு பின்னர் மக்கள் மத்தியில் பேசிய ஜெலன்ஸ்கி, “நான் உங்களை ஒருபோதும் விட்டுவிடமாட்டேன்” என்றார். மேலும் அவர் “நான் இன்னும் அதிகாரப்பூர்வமாக அதிபராகவில்லை. ஆனால், உக்ரைனின் குடிமகனாக அனைத்து நாடுகளிடமும் ஒன்றை தெரிவிக்க விரும்புகிறேன். எங்களை பாருங்கள், இங்கு எல்லாமுமே சாத்தியமானது” எனவும் கூறினார்.

  இவ்வாறான கடந்த கால சம்பவங்கள் ஊடகங்களின் தாக்கம் மற்றும் அதிகாரம் போன்றவற்றை காட்டுகிறது. குறிப்பாக, சமூக ஊடகங்கள் அபரிமிதமான செல்வாக்கை உலகலாவிய ரீதியாக பெற்றுள்ளது. இதேவேளை, பேஸ்புக் நிறுவனர் சமூக ஊடகங்களில் தவறாக வழிநடத்தும் தகவல்கள் மற்றும் போலி செய்திகள் காணப்படுகிறது என்பதனை ஒத்துக்கொண்ட அதேவேளை, இந்திய தேர்தலில் பிரசாரம் தொடர்பாக தவறான செய்திகள் பேஸ்புக்கில் இருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்கள் ஒவ்வொருவரின் உரிமையையும் அதிகரித்துள்ளதுடன் மக்கள் தமது உரிமைக்காக போராடமுடியும். இது உள்ளூர்,வெளியூர் என்ற எல்லைக்கு அப்பாற்பட்டதாகும். இன்று பல போராட்டங்கள் சமூக ஊடகங்கள் ஊடாகவே ஒருங்கினைக்கப்படுகின்றன. உதாரணமாக, பிரான்ஸில் நடைபெறும் மஞ்சள் அங்கி போராட்டத்தை குறிப்பிடலாம். தகவல்கள் மற்றும் விவாதங்கள் ஊடகவே தெளிவு மற்றும் தீர்வுகளை பெற்றுக் கொள்ள முடியும். இதற்காகவே ஊடகங்கள் சிறந்த தொடர்பாடல் கருவிகளான உரையாடல், கருத்து கணிப்புகள், விவாதங்கள், கருத்தாடல்கள் போன்றவற்றை மேற்கொள்கின்றன . ஊழல் மற்றும் சுரண்டல்களுக்கு எதிராக போராடுவதில் ஊடகங்களிற்கு பிரதான பங்குண்டு. ஊடகங்கள் தனித்து அறிக்கையிடுவது மாத்திரமல்லாது வெளிப்படையான நிர்வாகத்திறனை பேணுவதற்கு சிறந்த கண்காணிப்பாளராக ஊடகங்கள் இருக்க வேண்டும்.

மேலும், ஊடகங்களினை அணுகும் போது, ஊடக எழுத்தறிவு முக்கியமானமுக்கியமானது. அதாவது,  தகவலை வெவ்வேறு பட்ட வடிவில் மதிப்பிட்டு,ஒழுங்கு படுத்தி அணுகும் ஆற்றலே ஊடக எழுத்தறிவு என்று வரைவிலக்கனப்படுத்தப்படுகின்றது. சமூகத்தில் ஊடகத்தின் பங்கினை புரிந்து கொள்ளும் ஆற்றல் ஊடக எழுத்தறிவு என்று மேலும் ஒரு வரைவிலக்கனம் காணப்படுகிறது. எனவே, எமது நாட்டில் எழுத்தறிவு மட்டம் உயர்ந்து காணப்படும் அதேசமயம் ஊடக எழுத்தறிவு பாரிய சரிவுத் தன்மையிலேயே காணப்படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக