அறிவைநாடல்

அறிவைநாடல்
அறிதலார்வம்

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

“குல்லர்மோ கானோ இசாசா" (Guiller cano lsaza) உலக பத்திரிகை சுதந்திரதின விருது ராய்ட்டர் செய்தியாளர்கள் வசம்!


       பத்திரிகை சுதந்திரத்தின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் கருத்து சுதந்திரத்தை கட்டிக்காப்பது பற்றி அரசுக்கு உணர்த்தும் விதமாக மே 3ம் தேதி உலக பத்திரிகை சுதந்திர தினம் கடைபிடிக்கப்படுகிறது.சர்வதேச மனித உரிமை பிரகடனத்தின் சட்ட விதி 19ன் கீழ், பத்திரிகை சுதந்திரத்தை வலியுறுத்தி உலக பத்திரிகை சுதந்திர தினத்தை ஐக்கிய நாடுகள் சபை ஏற்படுத்தியது.

மிகுந்த ஆபத்தான  காலத்தில், உலகில் எங்காவது பத்திரிகை சுதந்திரம் பாதிக்கப்பட்டால், அதற்கு எதிராக போராடும் தனி நபர், பத்திரிகை, தொண்டு நிறுவனங்களுக்கு “யுனெஸ்கோ’ சார்பில் ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கப்படுகிறது. 1997ல் நிறுவப்பட்ட இவ்விருதுக்கு உரியவரை தேர்வு செய்ய 14 நடுவர்கள் உள்ளனர்.

விருதுக்கு போட்டியிடுவோரின் பட்டியலை, ஒவ்வொரு நாட்டில் இருந்தும், பத்திரிகை சுதந்திரத்திற்காக பாடுபடும் தொண்டு நிறுவனங்கள், அந்தந்த நாட்டு அரசுகள், பட்டியலை அனுப்பும். அதில் இருந்து, விருதுக்கு உரியவர் தேர்வு செய்யப்படுவார். இவ்விருது, “குல்லர்மோ கானோ இசாசா" (Guiller cano lsaz) என்ற கொலம்பிய நாட்டு பத்திரிகையாளரின் பெயரால் வழங்கப்படுகிறது. “எல் எஸ்பெக்டேட்டர்" என்ற பத்திரிகையில் பணிபுரிந்த இவர், போதை பொருள் மாபியா கும்பலுக்கு எதிராக தொடர்ந்து எழுதியதால், பத்திரிகை அலுவலகத்தின் முன்பாகவே, 1986ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது சேவையை பாராட்டியே, விருதுக்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும், உலகம் முழுவதும் இருந்து பத்திரிகையாளர்களை அழைத்து, பத்திரிகை சுதந்திரத்தை எதிர்நோக்கி உள்ள பிரச்னைகள், அவற்றை தீர்க்கும் வழிமுறைகள் போன்றவற்றை “யுனெஸ்கோ" ஆராய்கிறது. “நல்ல ஆட்சி, பயங்கரவாதத்திற்கு எதிரான செய்தி சேகரிப்பு, போருக்கு பிந்தைய வாழ்க்கை போன்றவற்றை தலைப்பாகக் கொண்டு, “யுனெஸ்கோ" விவாதம் நடத்துகிறது. பத்திரிகை சுதந்திரம் என்பதன் அளவுகோல், நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது.

அந்த வகையில், இம்முறை இவ்விருது ராய்ட்டர்ஸ் மியான்மர் அரசின் ரகசியங்களை வெளியிட்டதாகக் கூறி, அந்த நாட்டைச் சேர்ந்த ராய்ட்டர் செய்தி நிறுவனத்துக்காகப் பணியாற்றும் வா லோன் மற்றும்  கியா சோ ஊ  ஆகிய இருவருக்கும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மியான்மார் அரசின் இரகசியங்களை வெளியிட்டதாகக் கூறி, அந்த நாட்டைச் சேர்ந்த 2 செய்தியாளர்களுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

சிறுபான்மை ரோஹிங்கயா முஸ்லிம் இனத்தவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து செய்திகளை அளித்து வந்த அவர்களுக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது சர்வதேச அளவில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: மியான்மரில் ராய்ட்டர் செய்தி நிறுவனத்துக்காகப் பணியாற்றும் வா லோன் மற்றும் கியா சோ ஊ  ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு இருந்தனர்.

மியான்மரின் இரகசியப் பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிராகச் செயல்பட்டதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதற்கு, சர்வதேச அளவில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மியான்மரில் சிறுபான்மை ரோஹிங்கயா முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து செய்திகள் வெளியிடப்படுவதைத் தடுப்பதற்காக இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த நிலையில், அந்த இருவருக்கும் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்து இருந்தநிலையில், இந்நாளில் ஊடக சுதந்திரத்துக்காகப் பங்களிப்பு செய்யும் ஒருவருக்கு ஆண்டுதோறும் யுனெஸ்கோ நிறுவனத்தினர் "யுனெஸ்கோ/கிலெர்மோ கானோ இசாசா" (Guiller cano lsaza) உலக பத்திரிகை சுதந்திர விருது வழங்கிக் கௌரவிக்கின்றனர். இவ்விருது கொலம்பியப் பத்திரிகையாளர் கிலெர்மோ கானோ இசாசா என்பவரின் நினவாக வழங்கப்பட்டு வருகிறது. இவர் 1986 ஆம் ஆண்டு டிசம்பர் 17 இல் அவரது அலுவலகம் முன்பாக வைத்துப் படுகொலை செய்யப்பட்டிருந்தார். அவரின் கொலையின் பின்னரே பத்திரிகை சுதந்திரம் தொடர்பான பேச்சு வலுப்பெற்றது.

உலக அமைதிக்காகவும், பேச்சுச் சுதந்திரத்திற்காகவும் மற்றும் பத்திரிக்கை தர்மத்தினூடாகவும் பல இன்னல்களைத் தாண்டிப் போராடிய பத்திரிகை எழுத்தாளர் ஒருவருக்கு 25,000 டொலர் பெறுமதியான பரிசு வழங்கப்படுகின்றது. சுமார் 14 நபர்களைக் கொண்ட குழுவால் குறிப்பிட்ட இத்தெரிவு நடைபெறுகிறது. ஆண்டுதோறும் யுனெஸ்கோ நிறுவனத்தினர் யுனெஸ்கோ/கிலெர்மோ கானோ இசாசா (Guiller cano lsaza) உலக பத்திரிகை சுதந்திர விருது  ராய்ட்டர் செய்தி நிறுவனத்துக்காகப் பணியாற்றும் வா லோன் மற்றும் கியா சோ ஊ  ஆகிய இருவருக்கும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

ஜனநாயகத்தின் அடிநாதமாக அமைவது சுயாதீனமான ஊடகத் துறையே ஆகும். ஊடகங்களின் குரல் மக்களின் குரலிற்கு சமமானது. விருது பெற்ற ஊடகவியலாளர்கள் இன்னமும் சிறையில் இருக்கும் அதேவேளை இரு ஊடகவியலாளர்களும் விரைவில் விடுவிக்கபடவேன்டும் என்பதே ஜனநாயக விரும்பிகளின் சிந்தனையாகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக