அறிவைநாடல்

அறிவைநாடல்
அறிதலார்வம்

வெள்ளி, 13 செப்டம்பர், 2019

அமெரிக்கா-சீனா வரிவிலக்கு தள்ளுபடி!


உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையே ஒரு ஆண்டுக்கும் மேலாக வர்த்தக போர் நீடிக்கிறது.

இறக்குமதி செய்யப்படும் ஒவ்வொரு பொருட்களுக்கும், எவ்வளவு வரி விதிப்பது என்பது தொடர்பாக இருநாடுகளுக்கு இடையில் ஒப்பந்தம் கையெழுத்தாகாததே இதற்கு காரணம். இதனால் இருநாடுகளும், இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது மாறி மாறி கூடுதல் வரி விதித்து வருகின்றன.

இந்த நிலையில், வர்த்தகப் போர் தொடங்கியதில் இருந்து முதல்முறையாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இறால், பண்ணை விலங்குகளுக்கான மீன் உணவு, புற்றுநோய்க்கான மருந்து போன்ற 16 வகை பொருட்களுக்கு சீனா வரிவிலக்கு அளித்துள்ளது.

இந்த வரிவிலக்கானது 17-ந்தேதி அமுலுக்கு வரும் என்றும், ஒரு ஆண்டுக்கு அமுலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த 16 வகை பொருட்களில் 12 பொருட்களுக்கு ஏற்கனவே வரி செலுத்தியவர்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்றும், இதர 4 பொருட்களுக்கு செலுத்தப்பட்ட வரிப்பணம் திரும்பக் கிடைக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில அமெரிக்கப் பொருட்களுக்கு வரிவிலக்கு அளிப்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும் சீன வரிவிதிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக போரால் இரு நாடுகளும் இறக்குமதி பொருட்களுக்கு போட்டி போட்டு வரிகளை விதித்து வருகின்றன.

அந்த வகையில், சீனாவில் இருந்து இறக்குமதியாகும் 25 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு 25 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக வரி உயர்த்தப்படும் என்றும், அது ஒக்ரோபர் 1-ந்தேதி முதல் அமுலுக்கு வரும் என்றும் டிரம்ப் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் நல்லெண்ண நடவடிக்கையாக இந்த கூடுதல் வரி விதிப்பு 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

சீனாவில் 70-வது தேசிய தினம் ஒக்டோபர் 1-ந்தேதி கொண்டாட இருப்பதால், கூடுதல் வரி விதிப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று சீனாவின் துணை பிரதமர் லியு ஹி, என்னிடம் கேட்டுக்கொண்டார். அவரது கோரிக்கைக்கு ஏற்ப 25 ஆயிரம் கோடி டாலர் மதிப்புடைய சீன பொருட்களுக்கான கூடுதல் வரி விதிப்பு அக்டோபர் 1-ந்தேதிக்கு பதில் அக்டோபர் 15-ந்தேதி முதல் அமுலுக்கு  வரும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.முன்னதாக, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 16 வகை பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுவதாக சீனா நேற்று முன்தினம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் சீனப் பொருட்கள் குவிந்ததுடன் விலையும் மலிவாக கிடைப்பதால் அமெரிக்க பொருட்களின் வர்த்தகம் சரிந்தது. இது அமெரிக்க அதிபர் டிரம்பின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. ஏற்கனவே, அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்ற கொள்கையை கடைப்பிடித்து வரும் டிரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 250 பில்லியன் டொலர் மதிப்புள்ள பொருட்களுக்கு முன்பு இருந்ததை விட கூடுதலாக 25 சதவீதம் வரி விதித்தார்.

அதன்பின்னர் மேலும் சுமார் 300 பில்லியன் டொலர் மதிப்புள்ள சீனப் பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 10 சதவீதம் உயர்த்தினார். இந்த வரிவிதிப்பை வரும் செப்டம்பர் மாதம் 1 ந் தேதி முதல் அமல்படுத்த முடிவு செய்துள்ளார். இது சீனாவின் வர்த்தகத்தை கடுமையாக பாதித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனாவும், அமெரிக்க பொருட்கள் மீதான இறக்குமதி வரியை உயர்த்தியது. இதனால் வர்த்தகப் போர் முற்றியது.

இந்த வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வந்து, வர்த்தக ஒப்பந்தம் நடத்தும் முயற்சியில் இரு நாட்டு தலைவர்களும் ஈடுபட்டனர். இதற்கான பேச்சுவார்த்தை கடந்த நவம்பரில் தொடங்கியது. ஆனாலும் பேச்சுவார்த்தைகள் எந்த பலனையும் தரவில்லை.

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில், “கடந்த பல தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு சீனாவின் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. ஆயிரக்கணக்கான நிறுவனங்கள்  சீனாவை விட்டு வெளியேறும் நிலையில் உள்ளன. இதனால் இவ்விவகாரத்தில் சீனா அமெரிக்காவுடன் ஒப்பந்ததை ஏற்படுத்த விரும்புகிறது. ஆனால் ஒப்பந்தம் ஏற்படுத்த நான் தயாராக இல்லை” என தெரிவித்து இருந்தார்.

ஒத்துழைப்பு அணுகுமுறையினை பேணிவரும் சீனாவின் செயற்பாடே தற்போதைய வர்த்தகப் போர் தணிவிற்கு காரணம் எனலாம். இன்றைய நிலையில் சீனாவின் பொருளாதார ஆதிக்கம் அமெரிக்காவிற்குள்ளும் தவிர்க்க முடியாத என்ற காரணத்தாலேயே அமெரிக்க அதிபர் தனது நிலையில் இருந்து பின்வாங்கி புது அர்த்தத்தை தனது பின் வாங்கல் காரணத்திற்கு கற்பிற்கின்றார். சீனா உலக பொருளாதாரத்தில் தற்போதைய நிலையில் தவிர்க்க முடியாதசக்தியாக உள்ளது.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக