அறிவைநாடல்

அறிவைநாடல்
அறிதலார்வம்

சனி, 31 ஆகஸ்ட், 2019

அமைதியான முறையில் முடிவுக்கு வருமா ஹாங்காங் போராட்டம்?


       ஹாங்காங்கில் நடைபெற்று வரும் மாபெரும் போராட்டத்தை தலைமை தாங்கிய ஜோஷ்வா வாங் கைது செய்யப்பட்டு இருந்தார். இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்து ஹாங்காங் விடுவிக்கப்பட்ட பின்னர் கடந்த 1997ம் ஆண்டு சீனாவின் நிர்வாகப் பகுதிகளில் ஒன்றாக மாறியது. சீனாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தாலும் ஹாங்காங் நாட்டுக்கென தனி கரன்சி, சட்டம், அரசியலமைப்பு எல்லாம் பின்பற்றப்பட்டது. இந்நிலையில் சீனாவுக்கு குற்றவாளிகளைப் பரிமாற்றம் செய்வதற்கான சட்டத்திருத்த மசோதாவை நிரந்ததரமாக ரத்து செய்யக்கோரியும், சீனாவின் ஆதிக்கத்துக்கு எதிராகவும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குற்றவாளிகளை நாடு கடத்தும் மசோதா முழுமையாக பின்வாங்கப்பட வேண்டும்.

    நடுநிலை அமைப்பு ஒன்று போராட்டக்கார்களுக்கும், போலீஸாருக்கும் இடையே நடத்த மோதலை விசாரிக்கவும், போராட்டத்தை கலவரம் என்று கூறியதை திரும்பப் பெறவும், போலிஸார் நடத்திய மிருகத்தனமான தாக்குதல் குறித்து சுதந்திரமான அமைப்பு விசாரிக்க வேண்டும். தேர்தல் நடைமுறையில் சீர்திருத்தங்களைத் தொடங்க வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுமட்டுமல்லாது, போராட்டக்காரர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்ககூடாது என வலியுறுத்தி இரண்டு மாதங்களுக்கு மேலாக மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இப்போராட்டத்தை தலைமை தாங்கிய, ஜனநாயகத்துக்கு ஆதரவாக செயல்படும் ஆர்வலர் ஜோஷ்வா வாங்  கைது செய்யப்பட்டு இருந்தார்.

     இதுகுறித்து, தமது ருவிட்டர்  பக்கத்தில் ஜோஷ்வாவின் அரசியல் அமைப்பான டெமோசிஸ்டோ, நமது பொதுச்செயலாளர் ஜோஷ்வா வாங் கடுமையான முறையில் கைது செய்யப்பட்டு இருந்தார்.  தெற்கு ஹரிசான் பகுதிக்கு நடந்துச் சென்றுக் கொண்டிருந்தபோது தனியார் மினி வேன் ஒன்றில் அவர் வலுக்கட்டாயமாக தள்ளப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நடந்ததையடுத்து நமது வழக்கறிஞர்கள், இவ்வழக்கு குறித்து ஆலோசித்து வருகின்றனர், என பதிவிடப்பட்டுள்ளது. இந்த போராட்டம் தொடங்கியது முதல் இதுவரை சுமார் 800 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் போராட்டக்காரர்களின் வழிகாட்டியாகவும், தலைமை தாங்கியவருமான ஜோஷ்வா வாங் கைது செய்யப்பட்டுள்ளது, அவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

    சீன இராணுவத்தின்  படைப்பிரிவுகள் ஹாங்காங் நகருக்கு அணி வகுத்தது. இந்த படைப்பிரிவில் விமானப்படை, கடற்படை மற்றும் இராணுவம்  ஆகிய முப்படைகளை சேர்ந்த 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலான வீரர்களை உள்ளடக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

      ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது.

     இந்த சட்ட திருத்த மசோதாவை முழுமையாக ரத்துசெய்ய வேண்டும். போராட்டக்காரர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என வலியுறுத்தி இரண்டு மாதங்களுக்கு மேலாக மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  இதையடுத்து சீன இராணுவத்தின் படைப்பிரிவுகளை சேர்ந்த சேர்ந்த 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலான வீரர்கள் ஹாங்காங் நகருக்கு அணி வகுத்து நின்றனர்.

     இதற்கிடையில் ஹாங்காங் போராட்டக்காரர்களை ஒருங்கிணைத்து தலைமை தாங்கிய சமூக ஆர்வலர் ஜோஷ்வா வாங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இரண்டு பேரை ஹாங்காங் போலீசார் நேற்று காலை அதிரடியாக கைது செய்தனர். அவர்களது கைது சம்பவம் போராட்டக்காரர்களிடையே மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

     இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஜோஷ்வா வாங் உள்பட மூவரும் ஹாங்காங் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டு விட்டதாக சீன செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஹாங்காங்கில் இன்று ( சனிக்கிழமை) மாபெரும் போராட்டம் நடத்த போராட்டக்குழு ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

   இந்நிலையில், போராட்டக்காரர்கள் மீது வன்முறையை பயன்படுத்தினால் அமெரிக்கா-சீனா வர்த்தக ஒப்பந்தங்கள் கடுமையாக பாதிக்கப்படும், என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “சீன அதிபர் ஜி ஜின்பிங் மிகவும் திறமை வாய்ந்த ஒரு தலைவர், அவர் ஹாங்காங் விவகாரத்தில் வன்முறையை கையாளாமல் போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி அமைதியான முறையில் இந்த பிரச்சனையை முடிவுக்கு
கொண்டு வருவார் என நம்புகிறேன்” என தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது .



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக