அறிவைநாடல்

அறிவைநாடல்
அறிதலார்வம்

வியாழன், 1 அக்டோபர், 2020

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை!

 

மற்றுமொரு வலைப்பூபதிவில்  பதிவில் உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். குறித்த பதிவானது கொரோனா வைரஸ் பரவல் நிலை தொடர்பாகவே அமையவுள்ளது.

உலகளாவிய ரீதியில் ஏற்பட்டிருக்கின்ற கொரோனா  வைரஸ் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை தாண்டியுள்ளது.

பல நாடுகள் தமது கொரோனா வைரஸ் காரணமாக, ஏற்படுத்தியிருந்த முடக்க   நிலையினை  தளத்தி உள்ள நிலையிலும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றன.

கடந்த மூன்று மாதங்களில் கொரோனா  வைரஸ் சம்பந்தமான நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. குறிப்பாக, அமெரிக்கா,பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இந்த நிலைமையானது காணப்படுகின்றது.

கடந்த 24 மணித்தியாலத்தில் உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் காரணமாக 5400 பேர் மரணமடைந்ததாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தரவுகளின் அடிப்படையில் ஒரு மணித்தியாலத்திற்கு 226 பேர் கொரோனா வைரஸ் காரணமாக உயிர் இழந்து கொண்டிருக்கின்றார்கள். இதேவேளை,  உலகளாவிய ரீதியில் பதினாறு வினாடிக்கு  ஒருவர் என்ற ரீதியில் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது.

சராசரியாக 340 பேர் கொரானா வைரஸ் காரணமாககாரணமாக உயிரிழந்தது  கொண்டிருக்கின்றார்கள்.

அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில்  கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின்  எண்ணிக்கையில் நாற்பத்தி ஐந்து வீத பங்கு வகிக்கின்றார்கள்.

இலத்தீன் அமெரிக்க நாடுகளில் மூன்றில் ஒரு பங்கு வீதம் ஆனவையே இந்த கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்ததாக குறிப்பிடப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் முக்கியமான நாடாக விளங்குகின்றது.

இந்தியாவில் கொரானா வைரஸ் முடக்க நிலைகளை  நரேந்திர மோடி தளர்வுகளை ஏற்படுத்தியதையடுத்து குழுக்களின் எண்ணிக்கை அமெரிக்காவினை விட இந்தியாவில் கூடுவதற்கு  இந்த வருட இறுதியில் வாய்ப்பு  காணப்படுவதாக சுகாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்னர்,உலகளவில் ஒரு மணித்தியாலத்திற்கு 4,700  பேர் உயிரிழந்த அதேவேளை, 18 வினாடிக்கு ஒருவர் என்ற கணக்கில் உயிரிழப்பு பதிவாகியிருந்தது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸின்  இரண்டாவது அலை காணப்படுவதனால் மீண்டுமொரு கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் ஏற்படலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, இஸ்ரேல் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் நிலவும் கொரோனவைரஸ் காரணமாக  முடக்க நிலை மீள அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இதுவரை, இலங்கையில் 3,380 கொரோனா தொற்றுக்குள்ளான அதேசமயம் 3,230 பேர் குணமடைந்துள்ளனர்.

எது எப்படியோ, கொரோனா வைரஸ் பரவல் பிரச்சினையானது முடிவுக்கு வரவேண்டுமானால் கண்டிப்பாக பொருத்தமான மருந்து கண்டுபிடிக்க வேண்டும். இந்நிலையில்,  அன்மையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் அதற்கான முதலீடுகளுக்கு செல்வந்த நாடுகளினை கோரி இருந்தார்.

அதுவரை, நாம் கொரோனா வைரஸ் தொடர்பான அச்சநிலையுடனே வாழவேண்டும். 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக