மற்றுமொரு வலைப்பூபதிவில் பதிவில் உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். குறித்த பதிவானது , அன்மைய நாட்களில் சர்வதேச ஊடகங்களில் வெளியான இரு நாடுகளான அர்மீனியா மற்றும் அசர்பைஜான் ஆகியவற்றிக்கு இடையிலான முரண்பாடு தொடர்பான கடந்த கால செய்தி தொகுப்பாக முயற்சிப்பதாக அமையவிருக்கின்றது.
அர்மீனியா மற்றும் அசர்பைஜான் ஆகிய இரு நாடுகளும் ஒருங்கிணைந்த சோவித் யூனியனின் பகுதிகளாகவே இருந்தது. ஆனால் 1991 ஆம் ஆண்டு சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்த பின்னர் அர்மீனியா மற்றும் அசர்பைஜான் ஆகியவை தனித்தனி நாடுகளாக மாறின. அர்மீனியாவில் கிறிஸ்தவ மதத்தினரும், அசர்பைஜானில் இஸ்லாமிய மதத்தினரும் பெரும்பான்மையாக உள்ளனர்.
இரு நாடுகளையும் எல்லையாக பிரிக்கும் பகுதியில் நகோர்னோ-கராபத் (Nagorno - Karabakh ) என்ற சுயாட்சி அதிகாரம் பெற்ற பிரதேசமாக அமைந்திருந்தது. மலைப்பகுதியில் அமைந்துள்ள அந்த பிரதேசம் அசர்பைஜானின் அங்கம் என சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த மாகாணத்தில் பெரும்பாலானோர் அர்மீனிய ஆதரவாளர்களே வாழ்ந்து வந்தனர். அவர்கள் அசர்பைஜானில் இருந்து பிரிந்து சென்று அர்மீனியாவில் தான் சேரவேண்டும் என முடிவு செய்தனர். இதனால், சிறு குழுக்களாக இணைந்து அசர்பைஜானுக்கு எதிராக 1988 ஆம் ஆண்டு முதலே சிறு சிறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
ஆனால் சோவியத் யூனியன் முடிவுக்கு வந்ததையடுத்து நகோர்னோ-கராபத் பிரதேசத்தை மையமாக கொண்டு அர்மீனியா மற்றும் அசர்பைஜான்
இடையே போர் மூண்டது. இந்த போரில் நகோர்னோ-கராபத் மாகாணத்தின் பெரும்பகுதியை அர்மீனியா கைப்பற்றி தனது இராணுவத்தை நிலைநிறுத்தியது. மேலும், அந்த மாகாணத்திற்கு சுயாட்சி அதிகாரமும் வழங்கப்பட்டது.
சுயாட்சி வழங்கியதில் இருந்து பல ஆண்டுகளாக அர்மீனியா - அசர்பைஜான் இடையே அவ்வப்போது மோதல்கள் அரங்கேறி வருகிறது. குறிப்பாக, 2016 ஆம் ஆண்டும் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த மோதல்களில் இரு தரப்பிலும் வீரர்களும், பொதுமக்களும் உயிரிழந்து வருகின்றனர். இந்த போராட்டங்களை ரஷ்யா இதுவரை அமைதி ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு கொண்டு வந்து இருந்தது.
இதற்கிடையில், இந்த மோதலின் போது அர்மீனியாவுக்கு ஆதரவாக ரஷ்யாவின் செயல்பாடுகள் உள்ளது. அதேபோல், அசர்பைஜானுக்கு ஆதரவாக துருக்கியின் செயல்பாடுகள் உள்ளது. கடந்த சில மாதங்களாக இந்த இரு நாடுகளுக்கும் இடையே சிறு சிறு மோதல்கள் நிலவி வந்தன.
இந்நிலையில், அர்மீனியாவின் கட்டுப்பாட்டில் உள்ள நகோர்னோ-கராபத் பிரதேசத்தின் தலைநகரான ஸ்டெபனாஹெட் பகுதியில் இன்று அசர்பைஜான் இராணுவத்தினர் திடீர் தாக்குதல் நடத்தினர். அதில் ஒரு பெண் உட்பட பலர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியது.
அந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அசர்பைஜான் இராணுவத்தின் 2 ஹெலிகாப்டர்கள், 3 உளவு விமானங்களை சுட்டுவீழ்த்தியதாக அர்மீனிய இராணுவம் தெரிவித்தது.
ஆனால், அசர்பைஜான் தரப்பிலோ தாக்குதலை முதலில் தொடங்கியது அர்மீனியா என குற்றச்சாட்டியுள்ளது. மேலும், அர்மீனியாவின் தாக்குதலுக்கு பொருத்தமான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்நாட்டின் 12 வான் பாதுகாப்பு அமைப்புகள் அழிக்கப்பட்டுவிட்டதாகவும் அசர்பைஜான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த சண்டையின்போது பல ஆண்டுகளாக அர்மீனியாவின் கட்டுப்பாட்டில் இருந்த சில பகுதிகளை நாங்கள் கைப்பற்றிவிட்டோம் எனவும் அசர்பைஜான் இராணுவம் தெரிவித்தது. இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் குற்றச்சாட்டியுள்ளதால் மோதல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், இராணுவம் தயார் நிலையில் இருக்க வேண்டும் என எல்லைகளை பாதுகாக்க நாட்டுமக்கள் தயாராக இருக்க வேண்டும் எனவும் அர்மீனியாவின் பிரதமர் நிகோல் அதிரடியாக இன்று அறிவித்தார்.
மேலும், இராணுவ சட்டம் உடனடியாக அமுல்படுத்தப்பட்டு இராணுவ வீரர்கள் அனைவரும் உடனடியாக கடமைக்கு திரும்பி தயார் நிலையில் இருக்கவும் உத்தரவிட்டு இருந்தார்.
அசர்பைஜான் மீது தாக்குதல் நடத்த முற்பட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அர்மீனியாவுக்கு துருக்கி பகீரங்க எச்சரிக்கை விடுத்தது. ஆனால், அர்மீனியாவுக்கு ரஷ்யாவின் ஆதரவு இருப்பதால் இந்த சண்டை பெரும் பரபரப்பை உலகளவில் ஏற்படுத்தியுள்ளது.
இந்த மோதலை உடனடியாக முடிவுக்கு கொண்டுவந்து அமைதியை நிலைநாட்ட பல்வேறு நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால், அர்மீனியா-அசர்பைஜான் மோதல் ரஷ்யா மற்றும் துருக்கி இடையே நேரடி மோதலுக்கு வழிவகுக்கலாம் என சர்வதேச அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில், நகோர்னோ-கராபத் பகுதியில் நடைபெற்ற மோதல் மற்றும் போர் பதற்றத்தை தொடர்ந்து அர்மீனிய பிரதமர் நிகோல் பஷ்னியன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையின்போது பதற்றத்தை அதிகரிக்கும் வகையிலான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என அர்மீனிய பிரதமரிடம் ரஷ்ய அதிபர் புடின் வலியுறுத்தியதாக ரஷ்யா அதிபர் மாளிகையான கிரிம்லின் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் அர்மீனியாவின் பக்கமே ரஷ்யா இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
அர்மீனியாவுக்கு ரஷ்யா ஆதரவு அளிக்கும் வகையில் அசர்பைஜானுக்கு ஆதரவாக உள்ள துருக்கிக்கு இது பெருத்த அடியாகவே இருக்கும். ஒரு வேளை அர்மீனியாவுக்கும், அசர்பைஜானுக்கு இடையே போர் மூளூம் பட்சத்தில் ரஷ்ய படைகள் அர்மீனியாக்கு ஆதரவாக களமிறங்களாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அர்மீனியா-அசர்பைஜான் நாடுகளுக்கு இடையே போர் மேகம் சூழ்ந்துள்ளதால் பதற்றத்தை தணிக்க அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால், அசர்பைஜானுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ள துருக்கி நெருப்புடன் விளையாட வேண்டாம் என அர்மீனியாவை பகிரங்கமாக எச்சரித்துள்ளது. ஆனால், அர்மீனியாவுடன் மிகவும் நட்பாகவும், இராணுவ ரீதியில் மிகுந்த பலம்வாய்ந்த நாடான ரஷியா பதற்றத்தை தணிக்க முயற்சிகள் மேற்கொண்டுவருகிறது. அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பொம்பியோ இரு நாடுகளும் உடனடியாக போர் நிறுத்தத்திற்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
சிறுசிறு மோதலாக தொடங்கிய சண்டை தற்போது அர்மீனியா - அசர்பைஜான் இடையே நேரடி மற்றும் முழுமையான போராக மாறியுள்ளது. இந்த சண்டையில் நகோர்னோ-கராபத் சசுயாட்சி பிரதேசத்தின் படையினரே அதிக அளவில் உயிரிழந்துள்ளனர்.
நகோர்னோ-கராபத் கிளர்ச்சி படையினர், அர்மீனிய அரசு, அசர்பைஜான் அரசு என 3 தரப்பினரும் போரால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பல்வேறு விதமான பலி எண்ணிக்கை தரவுகளை வெளியிட்டு வருகின்றனர். ஆனால், இந்த தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,500 ஐ கடந்துள்ளது என்பது
உறுதியாகியுள்ளது.
இதற்கிடையில், இந்த சண்டையில் அசர்பைஜானுக்கு துருக்கி தனது நேரடி ஆதரவை அளித்து வருகிறது. பாகிஸ்தானும் அசர்பைஜானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துவருகிறது.
ஆனால், அர்மீனியாவுக்கு ரஷ்யா ஆதரவு அளித்தபோது அது நேரடியாக தற்போதுவரை களத்தில் இறங்கவில்லை. இரு நாடுகளும் உடனடியாக சண்டை நிறுத்தம் செய்யவேண்டும் என ரஷ்யா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
ஆனால், ரஷ்யாவின் கோரிக்கையை இரு நாடுகளும் நிராகரித்து தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றன. இதற்கிடையில், இந்த சண்டையில் அசர்பைஜானுக்கு ஆதரவாக சிரியா, லிபியாவில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகள் மற்றும் கிளர்ச்சியாளர்களை துருக்கி களமிறக்கியிருப்பது தெரியவந்துள்ளது.
சிரியாவின் இட்லிப், அலிப்போ உள்ளிட்ட மாகாணங்களின் நப்ரின், அல்-அப், ஜர்ப்லஸ், ரஜோ, டெல் அப்யாட், ரஷ் அல்-யன் போன்ற நகரங்களை துருக்கி ஆக்கிரமித்து தனது கட்டுப்பாட்டின்கீழ் வைத்துள்ளது.
இங்கு துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள் சிரிய படையினருக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர். இதில், ஐ எஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகளும் உள்ளனர்.
அதேபோல், கொல்லப்பட்ட லிபியாவின் முன்னாள் அதிபரான கடாபியின் ஆதரவாளரான கலிபா ஹப்தார் தலைமையிலான ஆயுதக் குழுவினர் அந்நாட்டின் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
இந்த குழுவினர், சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசுப் படைகளுடன் சண்டையிட்டு வருகின்றனர். சர்வதேச அங்கீகாரம் பெற்ற லிபிய அரசுப்படையினருக்கு துருக்கி ஆதரவு அளித்து வருகிறது. மேலும், அரசுப்படையினருக்கு ஆதரவாகவும் கலிபா கப்தார் படையினருக்கு எதிராகவும் லிபியாவில் துருக்கி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், அர்மீனியா-அசர்பைஜான் போரையடுத்து, சிரியா மற்றும் லிபியாவில் உள்ள தனது ஆதரவு கிளர்ச்சியாளர்களை துருக்கி களமிறக்கியுள்ளது.
நூற்றுக்கணக்கான சிரியா மற்றும் லிபிய கிளர்ச்சியாளர்களை துருக்கி விமானம் மூலம் அசர்பைஜானுக்கு அனுப்பிவைத்துள்ளது. இந்த கிளர்ச்சியாளர்கள் அசர்பைஜானுக்கு ஆதரவாகவும், அர்மீனியாவுக்கு எதிராகவும் சண்டையிட்டு வருகின்றனர்.
சிரியா, லிபிய கிளர்ச்சியாளர்கள் அர்மீனியாவுக்கு எதிராக களமிறக்கியுள்ளதற்கு ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
மேலும், அர்மீனிய- அசர்பைஜான் போரில் வேறுநாட்டை சேர்ந்த கிளர்ச்சியாளர்களை களமிறக்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என துருக்கிக்கு ரஷியா மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல், பிரான்சும் துருக்கியின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், அர்மீனியா-அசர்பைஜான் இடையே அமைதியை ஏற்படுத்த 1992-ம் ஆண்டு ஒ எஸ் சி இ மின்ஸ்க் குழு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த குழுவின் தலைவர்களாக அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் உள்ளன.
தற்போது அர்மீனிய-அசர்பைஜான் மோதல் அதிகரித்து வரும் நிலையில் இந்த அமைதிக்குழு போரை முடிவுக்குக்கொண்டுவர பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
ஆனால், இரு நாடுகளும் போரில் ஈடுபடுவதில் தீவிரம் காட்டுகிறது. குறிப்பாக துருக்கியின் ஆதிக்கம் போரில் அதிகரித்து வருவதால் ரஷியா தனது படைகளை அர்மீனியாவுக்கு ஆதரவாக எந்நேரமும் களமிறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் பிரச்சினை ஆனது உலகளாவிய ரீதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி கொண்டுள்ள நிலையில் இவ்வாறு இரு நாடுகளும் தமக்கிடையே மதத்தை அடிப்படையாக வைத்து போராட்டத்தில் மோதிக் கொள்வதானது தற்போதைய நிலையில் பொருத்தமற்றது. எனவே இரு நாடுகளும் சுமூகமான நிலைக்கு செல்ல வேண்டும் அதற்கு வல்லரசு நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் மாறாக தமது நலன்களை இவ்வாறான முரண்பாடுகளில் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக