அறிவைநாடல்

அறிவைநாடல்
அறிதலார்வம்

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

மஞ்சள் இதழியல் என்ற கருத்துப்படிமம் தற்காலத்தில் நடைமுறை சாத்தியமா?

மஞ்சள் இதழியல்(மஞ்சள் பத்திரிகை/yellow journalism)இச் சொல் பற்றிய புரிதல் எமது சமூகத்தின் மத்தியில் மிக குறைவாகவே உள்ளது. இதனால் அச்சொல்லினை தமக்கு சாதகமாக பயன்படுத்த சிலர் முனைகின்ற அதேவேளையில் தம் பக்க நியாயப்படுத்த முனைகின்றனர்.ஆபாசமான பாலியல் எண்ணங்களை தூண்டுபவை மாத்திரம் மஞ்சள் இதழியல் அன்று.உண்மையில் மஞ்சள் இதழியல்/பத்திரிகை என்றால் என்ன? அதன் தோற்றம், வளர்ச்சி,சர்வதேச மற்றும் இலங்கை ஊடகங்களில் மஞ்சள் இதழியற் பண்புகள் போன்றவற்றை  தெளிவுபடுத்தும் சிறு முயற்சியே இப் பதிவு ஆகும்.இதன் ஆரம்பமாக 1898 ம் ஆண்டு அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் போரினை தூண்ட இவ் இதழியலே காரணமாக அமைந்துள்ளது. அமெரிக்காவின்  (The New jork world & The New York journal )போன்றவை மஞ்சள் இதழியலின் காரணகத்தாக்கள்.அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ரம்ப் கூட அமெரிக்க ஊடகங்களினை மஞ்சள் இதழியல் ஊடகங்கள் எனக் குறிப்பிட்டார். குறிப்பாக C.N.Nஐ நேரடியாக விமர்சனம் செய்தார். அத்துடன் ஊடகங்கவியலாளர்களையும் விட்டு வைக்கவில்லை.மஞ்சள் இதழியல் ஊடகங்கள் செய்திகளை வெளியிடும் போது,சாதாரணமான செய்திகளினை கூட சுவையாக வெளியிடும்.விற்பனையினை பிரதான நோக்கமாக கொண்டு இருக்கிறது.நடுத்தர மற்ற,நம்பகமற்ற,பொய்யான வதந்திகள் நிறைந்த செய்திகளை கொண்டு இருக்கிறது. Frank Luther Mott (1941)மஞ்சள் இதழியல் என்பது மிகப் பெரிய எழுத்துகளில் அச்சிட்டு வெளிவருவது,கற்பனை, வண்ணமயமான படங்களை உள்ளடக்கியது, போலியான நேர்காணல், உணர்ச்சியூட்டும் தலைப்பில் செய்திகள், தவறான கருத்துருவாக்கம்,அனுதாபத்தை உருவாக்கும் ஊடகங்கள் யாவும் மஞ்சள் இதழியல் என சிந்திக்கின்றார்.நாமும் நாம் நுகரும் ஊடகங்களில் இவற்றை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.மரணச் செய்திகள், திருட்டு செய்திகள்,நகைப்பூட்டல்,அவமானப் படுத்தல்,ஆதாரமற்ற ஊக அடிப்படையில் அமைந்த செய்திகள்,   கேலிச்சித்திரங்கள்,விளம்பரங்கள்,போன்றனவும் மஞ்சள் இதழியலாகவே சிந்திக்கப்படுகின்றது.அத்துடன், ஊடகங்களினை நுகர்வோருக்கு பதட்டம் ஏற்படுத்துபவை,பல நிரலை கொண்ட செய்திகள் போன்றவையும் மஞ்சள் இதழியலே.இவ்வாறான இதழியல் மனித சமூகத்தின் சாபக்கேடாக விஷயமாகும். இவை ஊடக அறநிலையத் புறம் தள்ளியதாகக் காணப்படுகிறது. ஊடகங்களின் மதிப்பு, விடயதானங்களை உள்ளடக்கிய செய்திகள், தொழில் நேர்மை போன்றவை கேள்வியாக்கப்படுகின்றது.தற்போதைய நவீன ஊடகங்களின் வருகை மஞ்சள் இதழியலினை உறுதிபடுத்தியுள்ள அதேவேளையில் பிரதான ஊடகங்களினையும் சவாலுக்குட்படுத்தியுள்ளன.   மஞ்சள் இதழியலின் பிரதான நோக்கமாக வணிகமே காணப்படுகிறது. இதற்காக மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளும் மஞ்சள் இதழியல் பண்புகளையே உள்வாங்கும்.உலகத்தில் தற்போதைய நிலையில் மஞ்சள் இதழியல் இல்லாத ஊடகங்கள் இல்லை எனலாம். அந்த வகையில் எமது நாட்டின் ஊடகங்களின் நிலை கூட அதே நிலை தான்.எனினும் மஞ்சள் இதழியல் பண்புகளை முழுமையாக கடைபிடிக்காவிடினும் ஊடக தர்மத்துக்கு ஏற்ப செயல்படுவது ஊடகங்களின் ஆசிரிய பீடத்திலே உள்ளது. மக்களின் கடமை ஊடகங்களில் வரும் செய்திகளினை திறனாய்வுத் தளத்தில் அனுகுவதே ஆகும்.இ.தனஞ்சயன்.

1 கருத்து: