அறிவைநாடல்

அறிவைநாடல்
அறிதலார்வம்

சனி, 21 ஆகஸ்ட், 2021

போராடாமல் தோற்கடிக்கும் புதிய வகை பொறிக்குள் சிக்கவுள்ள தலிபான்கள்?

நீண்ட நாட்களின் பின்னர் மற்றுமொரு வலைப்பூ பகுதியில் சந்திப்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். கொவிட் சூழலால் ஏற்பட்ட வேலைபளு மற்றும் தனிப்பட்ட சில காரணங்களுக்காக வலைப்பூ பதிவில் தொடர்ச்சியான கட்டுரைகளை வழங்க முடியவில்லை. எனினும் குறித்த சில கால இடைவெளியின் பின்னர் தொடர்ச்சியான கட்டுரைகளை வழங்கலாம் என்று எதிர்பார்க்கின்றேன். இக்கட்டுரையானது தற்போதைய சர்வதேச அரசியலில் பேசு பொருளாக காணப்படுகின்ற ஆப்கானிஸ்தான் நிலைமைகள் தொடர்பாக வழங்குகின்ற செய்தி தொகுப்பாக அமையவுள்ளது. 

ஆப்கானிஸ்தான் தலைநகரான காபுலிலுள்ள ஜனாதிபதி மாளிகையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததை அடுத்து 'ஆப்கானிஸ்தான் யுத்தம்' நிறைவடைந்துள்ளதாக தலிபான்கள் பிரகடனப்படுத்தியிருந்தனர். காணொளி வழியாக உரையாற்றிய தலிபான்களின் பிரதித் தலைவர் முல்லா பர்தா அக்குன்ட் தாம் எதிர்பார்க்காத ஒரு வெற்றியை அடைந்துள்ளதாகவும் இதன் மூலமாக ஆப்கானிஸ்தான் தேசம் வெற்றியடைந்துள்ளதாக தெரிவித்தார். 

'10 நாட்கள்' எனும் குறுகிய காலத்தில் முழு ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றியுள்ளார்கள்.  இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள தமது நாட்டு பிரஜைகளை மீள அழைக்கும் நடவடிக்கைகளை பல நாடுகள் ஆரம்பித்தன. 

முன்னாள் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ;ரப் கானி நாட்டில் இருந்து வெளியேறியிருப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் தஜிகிஸ்தான் அல்லது உஸ்பெக்கிஸ்தானில் அரசியல் தஞ்சமடைந்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இரத்தம் சிந்துவதைத் தவிர்ப்பதற்காக தான் நாட்டின் இருந்து வெளியேறியதாக முன்னாள் ஜனாதிபதி அஷ;ரப் கானி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காபுல் விமான நிலையத்தில் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறுவதற்கு ஏராளமானவர்கள் திரண்டதன் காரணமாக விமான நிலையத்தில் பாரிய பதற்ற நிலை தோன்றியது. 

தலிபான்களின் தலைவர் கருத்து வெளியிடுகையில், மீள வௌ;வேறு மாகாணங்களிலுள்ள தமது உறுப்பினர்களை ஒன்றுதிரட்டுவதாகவும் வெளிநாட்டுப் படையினர் நாட்டை விட்டு வெளியேறியதுடன் புதிய அரசாங்க கட்டமைப்பொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார்.  

தாலிபான் போராளிகள் ஆப்கானிஸ்தானின் காபூல் நகரிற்கு அருகில் நேற்று வந்ததையடுத்து அந்த நாட்டின் கட்டுப்பாட்டை அவர்களுக்கு கையளிக்க ஆப்கானிஸ்தான் அரசு தீர்மானித்தது. அரச அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினரை பழிவாங்கப் போவதில்லை என்று தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது.  நகரில் இருந்து வெளியேறுபவர்களுக்கு எந்த துன்புறுத்தலும் இன்றி வெளியேற சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக தாலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் பெண்களின் உரிமைகள் மற்றும் ஊடக சுதந்திரத்தை பாதுகாக்க தமது அமைப்பு தயாராக இருப்பதாக தலிபான் அமைப்பின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

மேலும் பெண்களுக்கான கல்வி கற்கும் முறைமை மற்றும் தொழில் செய்யும் உரிமையை தமது கட்டுப்பாட்டிற்குள் உறுதிப்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு இஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் ஆப்கானிஸ்தான் மக்கள் சரியான சட்டத்திட்டங்களுக்கு அமைய செயற்பட வேண்டும் என தலிபான் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.               

1996 தொடக்கம் 2001ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியிலிருந்த காலப்பகுதியில் பெண்களுக்கு வேலை செய்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. இதேவேளை, தூக்குத்தண்டனை மற்றும் கல்லால் எறிந்து தண்டனை வழங்குதல் போன்ற அபாயகரமான சட்ட நடைமுறைகள் காணப்பட்டன. 

அமெரிக்கா மற்றும் பிரித்தானியா தனது ராஜதந்திர உத்தியோகத்தர் குழு மற்றும் தமது நாட்டவர்களை ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன. இதற்காக குறிப்பிட்ட நாடுகளின் இராணுவத்தினர் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கெதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமெரிக்க தெரிவித்திருந்தார். 

ஆப்கானிஸ்தான் தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து மக்கள் நாட்டை விட்டு வெளியேறி சென்றுள்ளனர். அவர்கள் அருகில் உள்ள பாகிஸ்தான் நாட்டிற்கு செல்வதற்கு தேச எல்லையில் நீண்ட வரிசையில் நிற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதேவேளை அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆப்கான் அகதிகளுக்கு அமெரிக்கப் பிரஜாவுரிமை வழங்குவதற்கு தயாரென அறிவித்திருந்தார். அத்துடன், அமெரிக்காவினுடைய ஜனாதிபதி ஜோ பைடன், ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமை காரணமாக பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார். ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் உலங்கு வானூர்தி ஊடாக நேற்றைய தினம் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

இதேவேளை காபூல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானமொன்றின் பாகங்களை பிடித்த நிலையில் பயணித்த 5 பயணிகள் விமானத்தில் இருந்து கீழே விழும் காட்சி சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக காணப்பட்டன. 20 வருடகாலமாக நீடித்த ஆப்கான் யுத்தத்தில் அமெரிக்காவின் 2,442 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 3,800 தனியார் ஒப்பந்த அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 20,666 அமெரிக்கப் படையினர் காயமடைந்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாத மதிப்பீட்டின் படி இந்த நீண்ட யுத்தத்தில் 47,245 ஆப்கான் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

பெண்களின் உரிமைகளை மதிப்பதற்கும், ஊடக சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும் உறுதியளிப்பதாக ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது. தமது முதலாவது உத்தியோகபூர்வ ஊடக சந்திப்பில் பங்கேற்ற தலிபான் அமைப்பினர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். 

தலைநகர் காபுலில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்கள் ஆப்கானிஸ்தானில் யுத்தம் நிறைவுக்கு வந்திருப்பதாகவும் எவரையும் பழிவாங்கும் எண்ணம் தமக்கு இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். வலய மற்றும் உலகின் ஏனைய நாடுகளுடன் நட்புறவினைப் பேணுவதற்கு தமது அமைப்பு எதிர்பார்ப்பதாக தலிபான் அமைப்பின் பிரதம ஊடகப் பேச்சாளர் சபுஹுல்லா முஜாஹிதீன் தெரிவித்தார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்கள் கேள்விகளுக்கும் சபுஹுல்லா முஜாஹிதீன் பதிலளித்தார். இஸ்லாமிய சட்டத்திற்குள்  பெண்களின் உரிமைகளுக்கு மதிப்பளிப்பதற்கும் ஊடக சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும், பெண்களைப் பல்கலைக்கழக கல்வி வரை கொண்டு செல்வதற்கும் இடமளிக்கப்படுமென அவர் குறிப்பிட்டார். 

கட்டாருக்கு நாடு கடத்தப்பட்ட தலிபான் அமைப்பின் உயர்நிலை அரசியல் தலைவர்கள் பலர் இந்த ஊடக சந்திப்பில் பங்கேற்பதற்காக மீண்டும் ஆப்கானிஸ்தான் திரும்பியிருந்தமை விசேட அம்சமாகும். இதேவேளை ஆப்கானிஸ்தானில் இருந்து தமது இராணுவத்தை வாபஸ் பெற எடுத்த தீர்மானம் ஒரு சரியான முடிவு என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஒரு சரியான தருணத்திலேயே அவ்வாறான ஒரு தீர்மானம் ஒன்றை எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். தாலிபான் இயக்கம் ஆப்கானிஸ்தானில் முழுமையான ஆட்சி அதிகாரத்தை நேற்று தனது கட்டுப்பாட்டுக்குள் எடுத்தது. 

அமெரிக்க இராணுவமும் நேட்டோ இராணுவமும் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுவதாக அறிவித்ததையடுத்து தாலிபான் இயக்கம் 10 நாட்களுக்குள் ஆப்கானிஸ்தானை தனது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துள்ளது. இந்த தீர்மானம் தொடர்பாக ஜனாதிபதி ஜோ பைடன் மீது பெரிதும் குறை கூறப்பட்டது. இதற்கு பதிலளித்த ஜோ பைடன் ஆப்கானிஸ்தானுக்காக அமெரிக்க பிரஜைகளின் உயிரை தொடர்ந்தும் பழிகொடுக்க வேண்டுமா என்று கேள்வி எழுப்பினார். ஆப்கானிஸ்தான் அகதிகளுக்காக அமெரிக்கா 500 மில்லியன் டொலர் பணத்தை ஒதுக்கியுள்ளது. தற்போது ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற குழப்பநிலையை அடுத்து விமான நிலையம் மூடப்பட்டிருந்தது. இந்த குழப்பநிலையினால் 5 பேர் உயிரிழந்தனர். 

சில நபர்கள் விமானத்தில் தொங்கி பயணம் செய்ய முயற்சி செய்துள்ளனர். விமானத்தின் சில்லில் சிக்கியிருந்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பெரும்பாலான நாடுகளின் தூதுவர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியுள்ளனர். ஐக்கிய நாடுகள் அமைப்பு, தலிபான்கள் மீது இந்தக் குற்ச்சாட்டை முன்வைத்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. முன்னைய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிய நேட்டோ இராணுவத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய ஆப்கானிஸ்தானியர்களை தலிபான் அமைப்பு இலக்கு வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மொழிபெயர்ப்பாளர்களாகவும்,வெளிநாட்டு தொடர்பாளர்களாகவும் பணியாற்றிய அரச பணியாளர்களைத் தேடும் செயற்பாட்டில் தலிபான் அமைப்பு தற்சமயம் ஈடுபட்டுள்ளது. அத்துடன் போரில் ஈடுபட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டும் வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர், ஊடக சந்திப்பை மேற்கொண்ட தலிபான் அமைப்பு, ஜனநாயக முறையில் நாட்டை நிர்வகிக்கப் போவதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

நிறைவாக ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படையினரின் வெளியேற்றம் மற்றும் தலிபான்கள் ஆப்கானிஸ்தானை தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருப்பது அமெரிக்காவின் தோல்வியென பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. உண்மையில் தற்போதைய நிலைமையின் அடிப்படையில் அமெரிக்காவின் தோல்வி போல தென்பட்டாலும் நீண்ட எதிர்கால அடிப்படையில் அமெரிக்காவின் பொறிகளுக்கு தாலிபான்கள் சிக்க வைக்கப்பட்டிருப்பதாகவே நோக்க முடிகிறது. அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் தனது படைகளை நிலைநிறுத்திய போது ஏராளமான செலவுகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அவை இராணுவ ஆயுத பலம் மற்றும் மனித பலம் போன்றவை ஆகும். 

தலிபான்கள் மற்றும் அமெரிக்காவிடையே கடந்த வருடம் பெப்ரவரி 29ம் திகதி மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கை முக்கியமானதாக கருதப்படுகிறது. எனினும் உடன்படிக்கையில் உள்ளடக்கங்கள் முழுமையாக வெளியுலகத்திற்கு வெளிப்படுத்தப்படவில்லை. இந்நிலையிலே அனைத்து சம்பவங்களும் நிறைவேறியிருக்கின்றன. அமெரிக்கப் படையினர் மற்றும் அமெரிக்க பிரஜைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் போது எந்தவிதமான தீங்குகளும் தலிபான்களால் மேற்கொள்ளப்படவில்லை. 

தலிபான்கள் தற்போது ஆப்கானிஸ்தானை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள நிலையில் இனிவரும் நாட்களில் என்ன செய்யப் போகிறார்கள் என்பதே அனைவரது வினாவாகும். ஆப்கானிஸ்தானில் ஜனநாயக ஆட்சியினை நிலைநாட்டுவார்களா? பெண் சுதந்திரம் உறுதிப்படுத்தப்படுமா? ஊடகங்கள் எவ்வாறு இயங்கப் போகின்றன? பொருளாதார வளர்ச்சியினை எவ்வாறு முன்கொண்டு செல்லப் போகின்றார்கள்? என்பதே அவ்வினாக்களாகும்.

தலிபான்களின் முதலாவது ஊடக சந்திப்பு மேற்கூறிய அனைத்து வினாக்களுக்கும் சாதகமான சமிக்ஞைகளை வெளிப்படுத்திய போதும் நடைமுறை செயற்பாடு சாத்தியமற்றதாகவே அமையும் என்பது சர்வதேச அரசியலை புரிந்து கொண்டவர்களுக்கு எளிதில் கணித்துக் கொள்ள முடியும். தாலிபான்கள் ஆட்சியின் போது ஆப்கானிஸ்தானில் உள்ள ஏனைய வன்முறை அமைப்புக்கள் தலிபான்களுக்கு எதிராக போர்க் கொடிகளை எதிர்காலத்தில் தூக்கலாம். தற்போதும் ஆப்கானிஸ்தானில்; தலிபான் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருவதுடன் அவை துப்பாக்கி முனை கொண்டு அடக்கப்படுகின்றன. தலிபான்கள் உலக அரசியலில் அமெரிக்க சார்பு நிலைபாட்டையா, சீனா சார்பு நிலைபாட்டையா எடுக்கப் போகின்றார்கள் என்பது இன்னும் புரியாத புதிராகவே இருக்கின்றது. எனினும் ஆப்கானிஸ்தான் நிலைமை பல்வேறு உதாரணங்களை எதிர்கால உலக ஒழுங்கிற்கு எடுத்துச் சொல்லும் என்பது தற்போதைய நிலைபாடாகும்.     

 தொகுப்பு-இ.தனஞ்சயன்




 

 


வெள்ளி, 26 மார்ச், 2021

உலக நாடக அரங்க விழாவானது இன்றைய தினம் உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகிறது.

 ஒவ்வொரு வருடமும் மார்ச் 27ம் திகதி உலக நாடக அரங்க தினமாக அறிவிக்கப்பட்டு உலகின் பல நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகின்றது. சர்வதேச அரங்க பயிலகம் என்ற அமைப்பு ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ அமைப்புடன் இணைந்து ஆற்றுகை கலைகளில் ஒன்றான நாடகத்துறையில் ஈடுபடுவோரின் புத்தாக்கத் திறனை ஊக்குவிக்கும் முகமாக 1961ம் ஆண்டில் இருந்து இத்தினமானது கொண்டாடப்பட்டு வருகின்றது. 


முத்தமிழில் ஒன்றாக நாடகக் கலையும் திகழ்கிறது. தமிழின் தேன்சுவையை எளிய பாமர மக்களிடமும் எளிமையாக எடுத்துச் சென்ற பெருமை நாடகக் கலைக்கு உண்டு. தொழில்நுட்ப சாதனங்களான தொலைக்காட்சி, வானொலி மற்றும் புதிய ஊடகங்களின் வருகைக்கு முன்னர் மக்களிடம் மிகுந்த செல்வாக்கு பெற்ற கலையாக குறித்த நாடகக்கலை விளங்கியது. ஐரோப்பிய் நாடகங்களில் கிரேக்கத்திற்கு தனிசிறப்புண்டு. இன்பியல் மற்றும் துன்பியல் நாடகங்கள் கிரேக்க மரபில் இருந்து தோற்றம் பெற்றது. அதைத் தொடர்ந்து உரோம, எலிசபெத் கால நாடகங்கள் இன்றளவும் காலங்கடந்து மக்களிடம் செல்வாக்கு பெறுகின்றன. 


எலிசபெத் கால சேக்ஸ்பியரின் நாடகங்கள் இன்றளவும் இலக்கியத் தரம் வாய்ந்ததாக காணப்படுகிறது. மேலும் யதார்த்தவாதம், மனோரதிய நாடகங்கள், காவிய முறைமை, குறியீட்டியல் நாடகங்கள், நவீன நாடகங்களாக கொள்ளப்படுகின்றன. நாடக அரங்கு என்ற கருத்தியல் பொதுவாக வரலாற்று காலங்களையும், அந்நாட்டு நிலைமைகளையும் பொருத்து அரங்க முறைகளில் வேறுபாடு உண்டு. குறிப்பிட்ட நாடுகளில் அவ்வவ் சூழல்களுக்கு ஏற்ப அமைந்த அரங்க முறைகளையும், நிகழ்வு முறைகளையும் காணக்கூடியதாக உள்ளது.

 பலகால அரங்கம் கிரேக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. நடிப்பு ரோம் அரங்குகளில் சிறப்பாக காணப்பட்டது. எகிப்து நாடக அரங்கில் மக்கள் ஒன்றுகூடும் பழங்கால கதைகளுடன் கூடிய கூத்துகளை அடிப்படையாகக் கொண்டு அமைந்தது. கிறிஸ்தவ மத குருமார்களின் ஆதரவால் வேதத்தில் உள்ள குட்டிக்கதைகள் காட்சிகளாக்கப்பட்டு இங்கிலாந்தில் இடைக்கால அரங்க முறைமை காணப்பட்டது. 

எமது நாட்டின் தமிழ் நாடக வரலாற்றில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் மலையகம் போன்ற பிரதேசங்களில் குறித்த பிரதேச வழக்க முறைமைகளை அடிப்படையாகக் கொண்டு நாடகங்கள் உருவாக்கப்பட்டன. எனினும் 90களின் பிற்பகுதியில் ஏற்பட்ட உலகமயமாக்கல் காரணமாக நவீன ஊடக ஆதிக்கத்தினால் நாடக ஆற்றுகையானது அங்கொன்றும், இங்கொன்றுமாக அருகிச் சென்றது. எனினும் நாடக அபிமானிகளால் நாடக ஆற்றுகையானது தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

குறித்த நாடக அரங்க செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக எமது நாட்டின் கலாசார அமைச்சானது பல்வேறு வகையான போட்டி நிகழ்ச்சிகளை ஒழுங்குப்படுத்தி நாடக கலைஞர்களை ஊக்குவித்து வருகின்றது. 

எமது நாட்டில் ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கு, தெரு வழி அரங்கு, சிகிச்சை முறை அரங்கு மற்றும் சிறுவர் நாடகங்கள் மக்களிடம் அதிக கவனத்தைப் பெற்றிருந்தன. எமது நாட்டில் தமிழ் நாடகத்துறைக்கு பங்களிப்பு செய்த முன்னோடிகளாக பேராசிரியர் வித்யானந்தன், பேராசிரியர் கணபதிபிள்ளை, குழந்தை ம.சண்முகலிங்கம், பேராசிரியர் மௌனகுரு, பேராசிரியர் சிவதம்பி, கலாநிதி சிதம்பரநாதன், கலையரசு சொர்ணலிங்கம், வி.வி.வைரமுத்து, பிரான்சிஸ் ஜனல், தாசீசியஸ் போன்றோரை குறிப்பிடமுடியும். 

இதேவேளை தொடர்ச்சியாக பல நாடக ஆர்வலர்கள் இன்றும் நாடக அரங்க செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் கணேசராஜா, சத்தியசீலன், அயூரன், பிரதீப், தர்மலிங்கம், காளிதாஸ் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். அரங்கப்பணிகளை தற்பொழுதும் மேற்கொண்டு வருகின்றனர். 


கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மத்தியிலும் நாடக ஆர்வலர்கள் தமது நாடக அரங்க செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறான அரங்க செயற்பாடுகள் கொரோனா பேரிடர் மத்தியில் மிகுந்த மன மகிழ்ச்சியை தருவதாக நாடக நெறியாளர் புண்ணியமூர்த்தி கணேசராஜா தெரிவிக்கின்றார்.  


இந்நிலையில் பாடசாலை மட்ட பரிசளிப்பு விழா மற்றும் நாடகப் போட்டிகள் போன்றவற்றை தமது ஆத்ம திருப்திக்காக சில கலைஞர்கள் தொடர்ந்தும் தமது நாடக படைப்புக்களை நெறிப்படுத்தி வருகின்றனர்.

நாடகக் கலையென்பது அனைத்து கலைகளையும் உள்ளடக்கி தனித்து நிற்பதாகும். ஏனைய கலைகள் மூலம் கற்பிக்கப்படுவதை காட்டிலும் நாடகக் கலை மூலம் கற்பிக்கப்படுவது சிறந்த பயனளிக்கக்கூடியது. வளரும் இளம் தலைமுறையினக்கு வாழ்ந்து அனுபவிக்கும் வாழ்க்கை முன்னேற்றத்தை கற்பிக்க ஏற்ற சாதனம் நாடகக்கலையாகும். கலாசாரம், பண்பாடு ஆகியவற்றினை வெளிப்படுத்தவும், நெறிப்படுத்தவும் நாடகக்கலை வழிகோலாக அமைகிறது. நல்ல மனப்பக்குவம் கொண்ட பார்வையாளர்களை நாடகக்கலை உருவாக்குகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக உணர்வுகளை சீர்படுத்தி வாழத்தக்க சிறந்த மனிதனை வளர்க்க நாடகக்கலை பெரிதும் துணை புரிகிறது. 


நாடக இலக்கணங்களை கூறும் பெருமை பெற்ற நாடகக்கலை இலக்கண நூலான நாடகவியலை மேடை நாடகத்திற்குரிய இலக்கணங்களை கூறும் நடிப்பியல்பு பகுதி மெய்பாடு, விறல், ஒற்றுமை, அபிநயம், நிலை, நாடகசாலை என்பன பற்றி இலக்கணம் வகுத்துள்ளனர். இந்நூலின் முடிவில் “பழைய கழிதலும், புதியன புகுதலும் வலுவல காலவலகியனானே” என்ற நூற்பாவையின் உட்பொருளாகவே நாடகக்கலையின் தற்போதைய நிலை காணப்படுகின்றது.   

நாடகத்துறையில் மறு உயிர்ப்பை உண்டு பண்ணுவதற்காக நாடக அபிமானிகள் ஒன்றிணைந்து தமக்கென அரங்க இயக்கங்களை உருவாக்கி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களின் முயற்சி வெற்றி பெற இன்றைய உலக நாடக அரங்க நாளில் வாழ்த்துக்கிறோம். 



இ.தனஞ்சயன்  


ஞாயிறு, 7 மார்ச், 2021

அளவெட்டி பிரதான வீதி புனரமைக்காததன் காரணமாக போக்குவரத்து நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் மக்கள்…


யாழ்ப்பாணத்தின் வலிகாமம் வடக்கு பகுதியில் அமைந்துள்ள மல்லாகம் பிரதேசத்தில் இருந்து அளவெட்டி கிராமத்திற்குச் செல்லும் பாதை மற்றும் சுன்னாகத்தில் இருந்து புத்தூர் செல்வதற்கான வீதி நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் பாராமுகமாக விடப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக பல்வேறு வகையிலான முறைபாடுகளை உரிய அதிகாரிகளிடம் மேற்கொண்ட போதும் அதிகாரிகள் தமது அசமந்தப் போக்கினை வெளிப்படுத்தி வருகின்றனர். யாழ் நகரில் இருந்து வரும் வாகனங்கள் சுன்னாகம் ஊடாக 768ம் இலக்க பஸ் போக்குவரத்து மேற்கொள்ளும் பாதையான கந்தரோடை, அளவெட்டி மற்றும் கீரிமலைக்கு பயணிப்பவர்கள் அண்மைக்காலமாக பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். மேலும் மல்லாகத்தின் ஊடாக மல்லாகம் நீதிமன்றம், அளவெட்டி, சங்காணை, சங்டிலிபாய் மற்றும் வட்டுக்கோட்டை போன்ற பிரதேசங்களுக்கு பயணிப்பவர்களும் கடுமையான சவால்களை சந்திக்கின்றனர். 

இதேவேளை சுன்னாகத்தில் இருந்து புத்தூர் ஊடாக அச்சுவேலி ஆவரங்கால் மற்றும் வடமாராச்சி பயணிப்பவர்கள் பாரிய போக்குவரத்து நெருக்கடியை எதிர்கொள்வதுடன் அதற்கென எந்தவொரு பொது போக்குவரத்து வசதியும் சுன்னாகத்தில் இருந்து அச்சுவேலி செல்வதற்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தமது சொந்த வாகனங்களில் செல்லும் போது, உரிய இடத்திற்கு செல்வதற்கு முன்னர் வாகனம் திருத்துமிடத்திற்கு சென்ற பின்னரே செல்ல முடிகின்றது. இதேவேளை யாழ்;ப்பாணம் வலி வடக்கு பிரதேசத்தின் எயார் பஸ் வீதி ஊடாக தெல்லிப்பளை துர்க்கையம்மன் கோயிலுக்குச் செல்லும் வீதி முறையற்ற திட்டமிடல் இல்லாமல் வீதி காபெட்  இடப்பட்டுள்ளதுடன் தற்போது வெளிநாட்டில் உள்ள ஒருவர் மேற்கொண்ட முறைப்பாட்டையடுத்து அளவெட்டி மத்தி விளையாட்டு மைதானம் முன்னால் உள்ள வீதியின் புனரமைப்பு பாதியில் விடப்பட்டுள்ளதுடன் அப்பகுதியின் பெரிய புதைகுழி ஒன்று உள்ளது. இதனால் அப்பகுதியில் பயணிக்கின்ற போது எதிர்பாராத அனர்த்தங்கள் நிகழ வாய்ப்புள்ளது.

 இது தொடர்பாக உரிய அரச அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பதுடன் யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் கட்சி பேதங்களை மறந்து பொதுமக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் இது போன்ற பிரச்சினைகளை தீர்த்து வைக்க முன்வர வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்வதோடு குறித்த வீதிகள் குறுகிய காலத்திற்குள் காபெட்  இட்டு தரவேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். 




வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

சர்வதேச கரிசணை பெற்றுள்ள மியன்மார் அரசியல்!

 மீண்டுமொரு வலைப்பூ பதிவில் சந்திப்பதையிட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.இந்த பதிவு மியன்மாரின் தற்போதய நிலைமை தொடர்பாக ஆராய்கின்றது.

தென்கிழக்காசிய நாடான மியன்மாரில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொதுத் தேர்தல் இடம்பெற்றது. இதில் அந்நாட்டின் அரச ஆலோசகர் ஆங் சாங் சூ கி தலைமையிலான ஆளுங்கட்சி அமோக வெற்றி பெற்றது. மியன்மாரில் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சியின் தலைவியான ஆங் சாங் சூ கி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதை அடுத்து மியன்மாரின் பதற்ற நிலைமை தோன்றியுள்ளதோடு, ஜனநாயக ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். 

இவ் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவு திரட்டும் முகமாக பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி வருகின்றன. இதனையடுத்து மியன்மார் இராணுவம் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களைத் தடை செய்துள்ளது. மியன்மாரில் 53 மில்லியன் சனத்தொகையில் அரைப்பங்கினர் பேஸ்புக் பாவனையாளர்களாக உள்ளனர். இந்நிலையில் மியன்மாரின் தகவல் தொடர்பாடல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் போலிச் செய்திகள் மற்றும் தவறான தகவல்களிலிருந்து வரும் தவறான புரிதலை கட்டுப்படுத்துமுகமாக சமூக வலைத்தள தடைகளை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை மேற்கொண்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், விபிஎன் போன்ற செயலிகளைப் பயன்படுத்தி பேஸ்புக் பாவனையில் மியன்மார் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். மியன்மாரில் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவன இயக்குனர் கருத்து வெளியிடுகையில், மக்களுக்கு வேறு தெரிவு இல்லை எனத்; தெரிவித்துள்ளார். 

பேஸ்புக் நிறுவனத்தின் பேச்சாளரான அன்ரி ஸ்ரோன் மியன்மாரில் நெருங்கிய உறவினர்களுடன் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் வகையில் சில தளர்வுகளை பேஸ்புக் ஊடாக செய்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஆங் சாங் சூ கி மீது தவறான முறையில் தொடர்பாடல் கருவிகளை இறக்குமதி செய்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை பொலிசார்  ஆங் சாங் சூ கியின் வதிவிடத்தில் கண்டெடுத்ததாகக் குறிப்பிடுகின்றனர். இதேவேளை, ஆசியான் பாராளுமன்றத்தில் மனித உரிமை பிரிவினர் பொருத்தமில்லாத குற்றச்சாட்டு என கூறுகின்றனர். இந்த வாரத்தின் ஆரம்பத்தில் ஜனநாயகத்திற்கான தேசிய கட்சியும் உத்தியோகபூர்வ அறிக்கையை ஆங் சாங் சூ கி மியன்மாரின் தலைநகரில் வீட்டுக் காவலில் உள்ளதாகவும் எனினும் அவரது உடல் நிலையில் எந்தப் பாதிப்பு இல்லை எனவும் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், இராணுவம் ஆங் சாங் சூ கியின் வீட்டுக் காவல் தொடர்பில் எந்தவொரு கருத்தும் வெளியிடவில்லை. மியன்மார் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள இராணுவம் ஜனநாயகத்திற்கான தேசிய கட்சி நவம்பர் மாதம் இடம்பெற்ற தேர்தலில் பெற்ற வெற்றியானது முறைகேடான முறையில் பெற்றது என்ற குற்றச்சாட்டை தொடர்ந்தும் முன்வைத்து வருவதுடன் ஒரு வருட காலத்திற்கு தேசிய அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது. 

இதனையடுத்து மியன்மார் விவகாரம் சர்வதேச அளவில் பாரிய பேசும் பொருளாகவும் மாறியுள்ளது. இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் பிரித்தானியாவிற்கான நிரந்தர பிரதிநிதியான பார்பரா வுட்வாட்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மியன்மாரில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி தொடர்பாக தாம் ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளதாக மியன்மாரின் இறைமை, அரசியல் சுதந்திரம், பிராந்திய பாதுகாப்பு மற்றும் மியன்மாரின் ஐக்கியம் போன்றவை மீள உறுதி செய்வதுடன் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சியின் தலைவியான ஆங் சாங் சூ கி மற்றும் ஆளுங்கட்சியின் முக்கியத் தலைவர்களும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார். 

இதேவேளை அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடன் கருத்து வெளியிடும் போது மியன்மாரில் ஆட்சியை கையகப்படுத்தியுள்ள இராணுவத்தினர் ஆட்சியை மீள கையளிக்கவேண்டும் எனவும் வீட்டுக்காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும், முடக்கப்பட்டுள்ள சமூக வலைத்தளங்கள் மீள அனுமதிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.



திங்கள், 1 பிப்ரவரி, 2021

மியன்மாரில் மீண்டும் இராணுவ ஆட்சி!

மீண்டும் ஒரு பதிவில் உங்களை குறுகிய கால இடைவெளியில்  சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். குறித்த வலைப்பூ  பதிவானது மியன்மாரில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி தொடர்பாக சிந்திப்பதாகேவ அமைய இருக்கின்றது. 

மியன்மாரில் சில நாட்களுக்கு முன்னதாக ஜனநாயக வழிமுறையில் தேர்தல் இடம்பெற்றது. அந்தத் தேர்தலில் ஆங் சாங் சூகியின் மக்களாட்சிக்கான தேசிய கட்சி அமோக வெற்றி பெற்றது. 


குறித்த தேர்தல் வெற்றியை இராணுவம் மோசடியான முறையில் பெற்ற வெற்றியாக கூறியது. இந்நிலையில் ஆங் சாங் சூகி மற்றும் ஆளுங்கட்சியின் முக்கியத் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 

இராணுவத்திற்கு சொந்தமான தொலைக்காட்சியில் நாடு பூராகவும் தேசிய அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஏராளமான படையினர் மியன்மாரின் முக்கிய நகரமான யங்கோனில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. தொலைபேசி இணைப்புக்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.


 இதேவேளை  மியன்மாரில் அரச தொலைக்காட்சியான எம்.ஆர்.டிவி ஒளிபரப்புச் சேவை இடம்பெறவில்லை. அதன் சமூக வலைத்தளத்தில் தொழில்நுட்ப தடங்கல் காரணமாக ஒளிபரப்பமுடியவில்லை என்ற பதிவு காணப்படுகிறது. 

இதேவேளை ஆளுங்கட்சியின் சட்டவாக்குனர் தானும் வீட்டுக் காவலில் வைக்கப்படலாம் என செய்தி வெளியிட்டுள்ளார்.


இதேவேளை இராணுவப் பேச்சாளருக்கு பல தடவைகள் அந்நாட்டு ஊடகங்கள் தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டதோடு அதற்கு பதிலளிக்கவில்லை. கடந்த நவம்பரில் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஆங் சாங் சூகி மக்களாட்சிக்கான தேசிய கட்சி பாரிய வெற்றியை பெற்றது. 


குறித்த வெற்றியானது மோசடி மூலம் பெறப்பட்டது என இராணுவம் குற்றம் சாட்டியிருந்தது. ,ந்தக் குற்றச்சாட்டை மியன்மாரில் தேர்தல் ஆணையகம் மறுத்தது. 2015ம் ஆண்டு இடம்பெற்ற மியன்மார் பாரிய வெற்றியை பெற்றுக் கொண்டார். ஆங் சாங் சூகி 1990ம் ஆண்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். 1991ம் ஆண்டு சமாதானத்திற்கான நோபல் பரிசினை பெற்றுக் கொண்டார். 2010ம் ஆண்டு வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார். எனினும் மியன்மாரில் ரோஹின்யா முஸ்லிம்கள் மீது ஆங் சாங் சூகியின் கட்சி இருந்த காலப்பகுதியில் மேற்கொண்ட அடக்கு முறைகள் காரணமாக ஆங் சாங் சூகிக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டமை தொடர்பாக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.   


1962ஆம் ஆண்டு மியன்மாரில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு, கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் அது இராணுவத்தின் நேரடி ஆட்சியின் கீழ் செயல்பட்டுவந்தது. அதனால் இராணுவம் தன்னை நாட்டின் பாதுகாவலராகக் கருதுகிறது.


2008ஆம் ஆண்டு மியன்மாரின் அரசமைப்புச் சட்டம், ராணுவத்தால் வரையப்பட்டது. அதை அடுத்து, மியன்மார் அரசியலில் இராணுவம் நிரந்தர இடம் வகிக்கிறது.

எந்தத் தேர்தலிலும் போட்டியிடாமல் நாடாளுமன்றத்தின் 25 வீதமானவை  இராணுவத்துக்குச் செல்லும்.

இராணுவத் தலைவர் தற்காப்பு, உள்துறை, எல்லைப் பாதுகாப்புத் துறை அமைச்சர்களை நியமிப்பார்.
இதனால் ஆளுங்கட்சியுடன் இராணுவம் எப்போதும் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு அரசமைப்பை மியன்மார் கொண்டிருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இ.தனஞ்சயன் 



சனி, 30 ஜனவரி, 2021

வல்லரசுகளின் போர் விளையாட்டு மைதானமாக மாறிவரும் தென்சீனக்கடல்?



மீண்டுமொரு வலைப்பூபதிவில் சந்திபதையிட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். குறித்த பதிவானது தென் சீனக் கடலில் தற்போது ஏற்பட்டு இருக்கும் பதற்ற நிலை தொடர்பாக அவதானிப்பதாக அமையவுள்ளது. 

பத்து நாட்களுக்கு முன்னதாகவே அமெரிக்காவின் 46 வது ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்று இருந்தார். இந்த நிலையில், பைடன் முன்னால் தற்போதைய முதன்மை சவால்களாக கொவிட் 19 கொரோனா வைரஸை கட்டுபடுத்தல் மற்றும் அமெரிக்காவில் டொனால்ட் ரம்பினால் தனது பதவிக்காலத்தின் இறுதி பகுதியில் ஏற்படுத்திய களங்கத்தை அமெரிக்காவின் கெளரவத்தை மீள கட்டியெழுப்புதல். 

அமெரிக்காவிற்கு தற்போதைய போட்டியாளராக ரஷ்யாவை காட்டிலும் சீனாவே காணப்படுகிறது. அண்மையில் ரஷ்யாவின் பாராளுமன்றம் அமெரிக்காவுடன் மேற்கொண்ட அணு ஆயுத உடன்படிக்கையை மேலும் 5 வருடங்களுக்கு நீடிக்க விருப்பம் தெரிவித்துள்ளன. ரஷ்ய ஜனாதிபதி மற்றும் அமெரிக்க ஜனாதிபதிக் இடையிலான ஆரம்ப கட்ட உரையாடல் சாதகமாக அமைந்துள்ளன. எனினும், அலெஷ்ஸி நவானி, தொடர்பாக அமெரிக்க மற்றும் ரஷ்ய சிந்தனை மாறுபட்ட நிலையிலுள்ளது.

மாறாக, சீனா தாய்வானது வாண்பரப்புக்குள் அத்துமீறி தனது ஆயுதம் தாங்கிய விமானங்களுடன் உள்நுழைந்ததை அடுத்து தாய்வான் கடும் கண்டனத்தைத் வெளியிட்டு இருந்தது. அத்துடன், நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறைமையை தக்க வைத்துக் கொள்ள அவசியமான நடவடிக்கை எடுக்க வேண்டி இருப்பதாக தாய்வான் ஜனாதிபதி Tsai long wen தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து, தென் சீன கடல் பகுதியில் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல்கள் நிலை நிறுத்தப்பட்டன. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி பதவியேற்ற சில நாட்களில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தென்சீனக் கடற்பரப்பில் பதற்றநிலைமை தோன்றியுள்ளது.
இவ்வாறான பதற்ற  நிலமை இன்று நேற்று தோன்றியதல்ல இது தந்திரோபாய ரீதியாக உளவியல் காய் நகர்த்தலாகவே சர்வதேச அரசியல் வல்லுனர்கள் அனுமானிப்பார்கள்.

தென் சீன கடல் பகுதியில் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல்கள் நிலை நிறுத்தப்பட்டன. அமெரிக்காவின் ஜனாதிபதி பதவியேற்ற சில நாட்களில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தென்சீனக் கடற்பரப்பில் பதற்றநிலைமை தோன்றியுள்ளது. குறிப்பாக தாய்வானினை சீனா தனது ஆளுகைக்குட்பட்ட பிரதேசமாகவே கருதி வருகின்றது. மாறாக, தாய்வான் சீனாவிடம் இருந்து பிரிந்த நாம் ஒருபு இறைமையுள்ள நாடு என்பது தாய்வானின்  வாதமாக உள்ளது.
தாய்வானில் ஜனாதிபதி தனது தேர்தல் வெற்றிக்கு பின்னர் உரையாற்றும் போது, நாம் ஒரு நாடு இது முறைமைகள் என்ற அமைப்பு முறையை எதிர்க்கின்றோம்.

தாய்வான் தனித்துவம் வாய்ந்த ஒரு நாடு என குறிப்பிட்டிருந்தார். எனினும், சீனா தன்னுடைய வல்லாதிக்கம் காரணமாக தாய்வானின் சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டையாக இருந்து வருகின்றது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளும் அமெரிக்கா தென் சீனக் கடலில் தனது நலன்களை தேடுவதாகவே அதன் தலையீடும் ஊடுருவலும் அமைகின்றது.
வல்லரசு நாடுகளின் போர் விளையாட்டு மைதானமாக தென்சீனக்கடல் மாறிவருகின்றது. தென் சீன கடலில் சீனாவின் ஆதிக்கத்தை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பதை அமெரிக்காவின் முக்கிய தலையிடியாக உள்ளது.

அதற்காக குறித்த பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு உதவி செய்வது போல் பாவனை செய்து குறித்த கடற் பிரதேசத்தில் செல்வாக்குச் செலுத்த அமெரிக்கா முயற்சிக்கின்றது  அதன் வெளிப்பாடுதான் கொங்கொங் மற்றும் தாய்வான் மீதான அக்கறை. 



வியாழன், 7 ஜனவரி, 2021

உண்மையில் சர்வதேச பொலிஸ் என்றால் அமெரிக்காவா?


இந்த வருடத்தின் முதல் வலைப்பூபதிவில் உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் மற்றும் வேலைப் பளு காரணமாக முழுமையாக தணல் வலைப்பூ தளத்தில் கவணம் செலுத்த முடியவில்லை. எனினும், இந்த வருடம் முழுமையாக கவணம் செலுத்த எல்லாம் வல்ல இறைவன் வாய்ப்பு தர வேண்டும் என்று பிராத்திக்கிறேன். 

இந்த பதிவு சர்வதேச பொலிஸ் என்றால் எமக்கு நினைவுக்கு வருவது அமெரிக்கா. ஆனால், உண்மையில் சர்வதேச பொலிஸிற்கு உரிய கடமையை செய்யும் இன்டர்போல் தொடர்பாக சிறிது நேரம் சிந்திப்பதாகேவ குறித்த பதிவு அமையவுள்ளது. 

இன்டர்போல் என்பது சர்வதேச குற்ற நடவடிக்கைகளை தடுப்பதை நோக்காக கொண்டு 1923 ஆம் ஆண்டு ஆஸ்திரியாவின் வியன்னாவில் உருவாக்கப்பட்ட காவல்துறை அமைப்பு (The International Criminal Police Organization - INTERPOL) இன்டர்போல் ஆகும். சர்வதேச அளவில் நடைபெறும் குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகள் மற்றும் குற்றங்கள் குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்ளவும், தொழில்நுட்பம் மற்றும் செயல்பாடு ரீதியிலான ஒத்துழைப்பை பரஸ்பரம் அளிக்கவும் இன்டர்போல் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதன் தலைமையகம் பிரான்சில் உள்ள லியானில் அமைந்துள்ளது.

ஆஸ்திரிய நாட்டு காவல் துறை தலைவர் ஜோஹனஸ் ஸ்கோபர் என்பவர், 1923ஆம் ஆண்டில் சுமார் 22 நாட்டு காவல்துறை அதிகாரிகளை கலந்து பேசி இன்டர்போல் அமைப்பை உருவாக்கினார். ஆனால், இரண்டாம் உலகப் போர் துவங்கியபோது இன்டர்போல் செயலிழந்தது. 1946ஆம் ஆண்டில் போர் முடிவடைந்ததும், மீண்டும் இன்டர்போல் துவங்கப்பட்டது. 1934ஆம் ஆண்டில் இதன் உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்தது. 1928 ஆம் ஆண்டில் பிரிட்டன் இன்டர்போல் அமைப்பில் இணைந்தது. 1938 ஆம் ஆண்டு வரை அமெரிக்கா இதில் இணையவில்லை.

கடும் குற்றச் செயல்கள் செய்து விட்டு வெளிநாடுகளில் தங்கியிருக்கும் தேடப்படும் குற்றவாளிகள், காணாமல் போனவர்கள், அடையாளம் தெரியாத இறந்தவரின் உடல், ஒரு நாட்டின் இறையாண்மைக்கு எதிராக அச்சுறுத்தல்களை ஏற்படுத்துபவர்கள், சிறையிலிருந்து தப்பி வெளிநாடுகளில் பதுங்கியவர்கள் போன்றவர்களின் விவரங்கள் குறித்து உறுப்பு நாடுகள் கேட்டுக் கொள்வதின் பேரிலோ, ஐக்கிய நாடுகள் சபை அல்லது சர்வதேச நீதிமன்றம் கேட்டுக் கொள்வதின் பேரிலோ அல்லது தானாகவோ இண்டர்போலால் அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் குற்றவாளிகள் குறித்து அனுப்பப்படும் சுற்றறிக்கைக்கு இண்டர்போல் அறிவிப்பு அல்லது இன்டர்போல் நோட்டீஸ் (Interpol notice) என்று பெயர். குற்றங்களின் தன்மைக்கு ஏற்ப சிவப்பு, நீலம், பச்சை, மஞ்சள், கருப்பு, ஆரஞ்சு மற்றும் ஊதா போன்ற வண்ண குறியீடுகள் கொண்ட நோட்டீஸ்களை இன்டர்போல் பிறப்பிக்கிறது. இதில், சிவப்பு வண்ண அறிவிப்பு (Red Corner Notice) வெளிநாடுகளில் தங்கியிருக்கும் குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கைக்குரியது ஆகும். 

இலங்கை உட்பட 194 நாடுகள் இன்டர்போல் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன.


இன்டர்போலின் தற்போதைய  பொதுச்செயலாளராக ஜேர்மனியை சேர்ந்த  Jurgen stock உள்ளார். இவர் மொனோக்கோவில் இடம்பெற்ற 84வது  பொது அமர்வில் முதன் முதலாக பதவியை பெற்று கொண்டார். மேலும், இன்டபோலானது ஊழல்,சிறுவர்களிற்கு எதிரான குற்றங்கள், போதை வஸ்து கடத்தல், மனித நாடு கடத்தல், பயங்கரவாதம், இனைய வழி குற்றங்கள் மற்றும் யுத்த குற்றம் போன்றவற்றை உலகலாவிய ரீதியாக கையாழுவதாக உள்ளது. இன்டர்போலானது ஐரோப்பிய ஒன்றியம், ஆபிரிக்க யூனியன் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து செயற்படுகின்றது.

சர்வதேச பொலிஸ் என்று அமெரிக்காவினை அமைப்பதற்கான காரணம் தனது சுய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதன் காரணமாக அழைத்தாலும் உண்மையில் சர்வதேச பொலிஸிற்கான கடமையை செய்வது இன்டர்போல் ஆகும்.






வெள்ளி, 2 அக்டோபர், 2020

பாரதூரமான இணக்கபாடின்மைகளினால் ஏற்பட்டுள்ள அர்மீனியா மற்றும் அசர்பைஜான் மோதல்!


 மற்றுமொரு வலைப்பூபதிவில்  பதிவில் உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். குறித்த பதிவானது , அன்மைய நாட்களில் சர்வதேச ஊடகங்களில் வெளியான இரு நாடுகளான அர்மீனியா மற்றும் அசர்பைஜான் ஆகியவற்றிக்கு இடையிலான முரண்பாடு தொடர்பான கடந்த கால செய்தி தொகுப்பாக முயற்சிப்பதாக அமையவிருக்கின்றது. 


அர்மீனியா மற்றும் அசர்பைஜான் ஆகிய இரு நாடுகளும் ஒருங்கிணைந்த சோவித் யூனியனின் பகுதிகளாகவே இருந்தது. ஆனால் 1991 ஆம் ஆண்டு சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்த பின்னர் அர்மீனியா மற்றும் அசர்பைஜான் ஆகியவை தனித்தனி நாடுகளாக மாறின. அர்மீனியாவில் கிறிஸ்தவ மதத்தினரும், அசர்பைஜானில் இஸ்லாமிய மதத்தினரும் பெரும்பான்மையாக உள்ளனர்.

இரு நாடுகளையும் எல்லையாக பிரிக்கும் பகுதியில் நகோர்னோ-கராபத் (Nagorno - Karabakh ) என்ற சுயாட்சி அதிகாரம் பெற்ற பிரதேசமாக  அமைந்திருந்தது. மலைப்பகுதியில் அமைந்துள்ள அந்த பிரதேசம்  அசர்பைஜானின் அங்கம் என சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த மாகாணத்தில் பெரும்பாலானோர் அர்மீனிய ஆதரவாளர்களே வாழ்ந்து வந்தனர். அவர்கள் அசர்பைஜானில் இருந்து பிரிந்து சென்று அர்மீனியாவில் தான் சேரவேண்டும் என முடிவு செய்தனர். இதனால், சிறு குழுக்களாக இணைந்து அசர்பைஜானுக்கு எதிராக 1988 ஆம் ஆண்டு முதலே சிறு சிறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

ஆனால் சோவியத் யூனியன் முடிவுக்கு வந்ததையடுத்து நகோர்னோ-கராபத் பிரதேசத்தை மையமாக கொண்டு அர்மீனியா மற்றும் அசர்பைஜான்
இடையே போர் மூண்டது. இந்த போரில் நகோர்னோ-கராபத் மாகாணத்தின் பெரும்பகுதியை அர்மீனியா கைப்பற்றி தனது இராணுவத்தை நிலைநிறுத்தியது. மேலும், அந்த மாகாணத்திற்கு சுயாட்சி அதிகாரமும் வழங்கப்பட்டது.

சுயாட்சி வழங்கியதில்  இருந்து பல ஆண்டுகளாக அர்மீனியா - அசர்பைஜான் இடையே அவ்வப்போது மோதல்கள் அரங்கேறி வருகிறது. குறிப்பாக, 2016 ஆம் ஆண்டும் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த மோதல்களில் இரு தரப்பிலும் வீரர்களும், பொதுமக்களும் உயிரிழந்து வருகின்றனர். இந்த போராட்டங்களை ரஷ்யா இதுவரை அமைதி ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு கொண்டு வந்து இருந்தது.

இதற்கிடையில், இந்த மோதலின் போது அர்மீனியாவுக்கு ஆதரவாக ரஷ்யாவின் செயல்பாடுகள் உள்ளது. அதேபோல், அசர்பைஜானுக்கு ஆதரவாக துருக்கியின் செயல்பாடுகள் உள்ளது. கடந்த சில மாதங்களாக இந்த இரு நாடுகளுக்கும் இடையே சிறு சிறு மோதல்கள் நிலவி வந்தன.

இந்நிலையில், அர்மீனியாவின் கட்டுப்பாட்டில் உள்ள நகோர்னோ-கராபத் பிரதேசத்தின் தலைநகரான ஸ்டெபனாஹெட் பகுதியில் இன்று அசர்பைஜான் இராணுவத்தினர் திடீர் தாக்குதல் நடத்தினர். அதில் ஒரு பெண் உட்பட பலர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியது. 

அந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அசர்பைஜான் இராணுவத்தின் 2  ஹெலிகாப்டர்கள், 3 உளவு விமானங்களை சுட்டுவீழ்த்தியதாக அர்மீனிய இராணுவம் தெரிவித்தது.

ஆனால், அசர்பைஜான் தரப்பிலோ தாக்குதலை முதலில் தொடங்கியது அர்மீனியா என குற்றச்சாட்டியுள்ளது. மேலும், அர்மீனியாவின் தாக்குதலுக்கு பொருத்தமான  பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்நாட்டின் 12 வான் பாதுகாப்பு அமைப்புகள் அழிக்கப்பட்டுவிட்டதாகவும் அசர்பைஜான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த சண்டையின்போது பல ஆண்டுகளாக அர்மீனியாவின் கட்டுப்பாட்டில் இருந்த சில பகுதிகளை நாங்கள் கைப்பற்றிவிட்டோம் எனவும் அசர்பைஜான் இராணுவம் தெரிவித்தது. இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் குற்றச்சாட்டியுள்ளதால் மோதல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், இராணுவம் தயார் நிலையில் இருக்க வேண்டும் என எல்லைகளை பாதுகாக்க நாட்டுமக்கள் தயாராக இருக்க வேண்டும் எனவும் அர்மீனியாவின் பிரதமர் நிகோல் அதிரடியாக இன்று அறிவித்தார்.

மேலும், இராணுவ சட்டம் உடனடியாக அமுல்படுத்தப்பட்டு இராணுவ வீரர்கள் அனைவரும் உடனடியாக கடமைக்கு திரும்பி தயார் நிலையில் இருக்கவும் உத்தரவிட்டு இருந்தார்.

அசர்பைஜான் மீது தாக்குதல் நடத்த முற்பட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அர்மீனியாவுக்கு துருக்கி பகீரங்க எச்சரிக்கை விடுத்தது. ஆனால், அர்மீனியாவுக்கு ரஷ்யாவின் ஆதரவு இருப்பதால் இந்த சண்டை பெரும் பரபரப்பை உலகளவில்  ஏற்படுத்தியுள்ளது.

இந்த மோதலை உடனடியாக முடிவுக்கு கொண்டுவந்து அமைதியை நிலைநாட்ட பல்வேறு நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால், அர்மீனியா-அசர்பைஜான் மோதல் ரஷ்யா மற்றும் துருக்கி இடையே நேரடி மோதலுக்கு வழிவகுக்கலாம் என சர்வதேச அரசியல்  வல்லுனர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில், நகோர்னோ-கராபத் பகுதியில் நடைபெற்ற மோதல் மற்றும் போர் பதற்றத்தை தொடர்ந்து அர்மீனிய பிரதமர் நிகோல் பஷ்னியன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையின்போது பதற்றத்தை அதிகரிக்கும் வகையிலான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என அர்மீனிய பிரதமரிடம் ரஷ்ய அதிபர் புடின் வலியுறுத்தியதாக ரஷ்யா அதிபர் மாளிகையான கிரிம்லின் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் அர்மீனியாவின் பக்கமே ரஷ்யா இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

அர்மீனியாவுக்கு ரஷ்யா ஆதரவு அளிக்கும் வகையில் அசர்பைஜானுக்கு ஆதரவாக உள்ள துருக்கிக்கு இது பெருத்த அடியாகவே இருக்கும். ஒரு வேளை அர்மீனியாவுக்கும், அசர்பைஜானுக்கு இடையே போர் மூளூம் பட்சத்தில் ரஷ்ய படைகள் அர்மீனியாக்கு ஆதரவாக களமிறங்களாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அர்மீனியா-அசர்பைஜான் நாடுகளுக்கு இடையே போர் மேகம் சூழ்ந்துள்ளதால் பதற்றத்தை தணிக்க அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால், அசர்பைஜானுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ள துருக்கி நெருப்புடன் விளையாட வேண்டாம் என அர்மீனியாவை பகிரங்கமாக எச்சரித்துள்ளது. ஆனால், அர்மீனியாவுடன் மிகவும் நட்பாகவும், இராணுவ ரீதியில் மிகுந்த பலம்வாய்ந்த நாடான ரஷியா பதற்றத்தை தணிக்க முயற்சிகள் மேற்கொண்டுவருகிறது. அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பொம்பியோ இரு நாடுகளும் உடனடியாக போர் நிறுத்தத்திற்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

சிறுசிறு மோதலாக தொடங்கிய சண்டை தற்போது அர்மீனியா - அசர்பைஜான் இடையே நேரடி மற்றும் முழுமையான போராக மாறியுள்ளது. இந்த சண்டையில் நகோர்னோ-கராபத் சசுயாட்சி பிரதேசத்தின் படையினரே அதிக அளவில் உயிரிழந்துள்ளனர்.

நகோர்னோ-கராபத் கிளர்ச்சி படையினர், அர்மீனிய அரசு, அசர்பைஜான் அரசு என 3 தரப்பினரும் போரால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பல்வேறு விதமான பலி எண்ணிக்கை தரவுகளை வெளியிட்டு வருகின்றனர். ஆனால், இந்த தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,500 ஐ கடந்துள்ளது என்பது
உறுதியாகியுள்ளது.

இதற்கிடையில், இந்த சண்டையில் அசர்பைஜானுக்கு துருக்கி தனது நேரடி ஆதரவை அளித்து வருகிறது. பாகிஸ்தானும் அசர்பைஜானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துவருகிறது.

ஆனால், அர்மீனியாவுக்கு ரஷ்யா ஆதரவு அளித்தபோது அது நேரடியாக தற்போதுவரை களத்தில் இறங்கவில்லை. இரு நாடுகளும் உடனடியாக சண்டை நிறுத்தம் செய்யவேண்டும் என ரஷ்யா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஆனால், ரஷ்யாவின் கோரிக்கையை இரு நாடுகளும் நிராகரித்து தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றன. இதற்கிடையில், இந்த சண்டையில் அசர்பைஜானுக்கு ஆதரவாக சிரியா, லிபியாவில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகள் மற்றும் கிளர்ச்சியாளர்களை துருக்கி களமிறக்கியிருப்பது தெரியவந்துள்ளது.

சிரியாவின் இட்லிப், அலிப்போ உள்ளிட்ட மாகாணங்களின் நப்ரின், அல்-அப், ஜர்ப்லஸ், ரஜோ, டெல் அப்யாட், ரஷ் அல்-யன் போன்ற நகரங்களை துருக்கி ஆக்கிரமித்து தனது கட்டுப்பாட்டின்கீழ் வைத்துள்ளது.

இங்கு துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள் சிரிய படையினருக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர். இதில், ஐ எஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகளும் உள்ளனர்.

அதேபோல், கொல்லப்பட்ட லிபியாவின் முன்னாள் அதிபரான கடாபியின் ஆதரவாளரான கலிபா ஹப்தார் தலைமையிலான ஆயுதக் குழுவினர் அந்நாட்டின் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

இந்த குழுவினர், சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசுப் படைகளுடன் சண்டையிட்டு வருகின்றனர். சர்வதேச அங்கீகாரம் பெற்ற லிபிய அரசுப்படையினருக்கு துருக்கி ஆதரவு அளித்து வருகிறது. மேலும், அரசுப்படையினருக்கு ஆதரவாகவும் கலிபா கப்தார் படையினருக்கு எதிராகவும் லிபியாவில் துருக்கி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், அர்மீனியா-அசர்பைஜான் போரையடுத்து, சிரியா மற்றும் லிபியாவில் உள்ள தனது ஆதரவு கிளர்ச்சியாளர்களை துருக்கி களமிறக்கியுள்ளது.

நூற்றுக்கணக்கான சிரியா மற்றும் லிபிய கிளர்ச்சியாளர்களை துருக்கி விமானம் மூலம் அசர்பைஜானுக்கு அனுப்பிவைத்துள்ளது. இந்த கிளர்ச்சியாளர்கள் அசர்பைஜானுக்கு ஆதரவாகவும், அர்மீனியாவுக்கு எதிராகவும் சண்டையிட்டு வருகின்றனர்.

சிரியா, லிபிய கிளர்ச்சியாளர்கள் அர்மீனியாவுக்கு எதிராக களமிறக்கியுள்ளதற்கு ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

மேலும், அர்மீனிய- அசர்பைஜான் போரில் வேறுநாட்டை சேர்ந்த கிளர்ச்சியாளர்களை களமிறக்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என துருக்கிக்கு ரஷியா மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல், பிரான்சும் துருக்கியின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், அர்மீனியா-அசர்பைஜான் இடையே அமைதியை ஏற்படுத்த 1992-ம் ஆண்டு ஒ எஸ் சி இ மின்ஸ்க் குழு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த குழுவின் தலைவர்களாக அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் உள்ளன.

தற்போது அர்மீனிய-அசர்பைஜான் மோதல் அதிகரித்து வரும் நிலையில் இந்த அமைதிக்குழு போரை முடிவுக்குக்கொண்டுவர பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

ஆனால், இரு நாடுகளும் போரில் ஈடுபடுவதில் தீவிரம் காட்டுகிறது. குறிப்பாக துருக்கியின் ஆதிக்கம் போரில் அதிகரித்து வருவதால் ரஷியா தனது படைகளை அர்மீனியாவுக்கு ஆதரவாக எந்நேரமும் களமிறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் பிரச்சினை ஆனது உலகளாவிய ரீதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி கொண்டுள்ள நிலையில் இவ்வாறு இரு நாடுகளும் தமக்கிடையே மதத்தை அடிப்படையாக வைத்து  போராட்டத்தில் மோதிக் கொள்வதானது தற்போதைய நிலையில் பொருத்தமற்றது. எனவே இரு நாடுகளும் சுமூகமான நிலைக்கு செல்ல வேண்டும் அதற்கு வல்லரசு நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் மாறாக தமது நலன்களை இவ்வாறான முரண்பாடுகளில் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது.

வியாழன், 1 அக்டோபர், 2020

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை!

வெள்ளி, 24 ஜூலை, 2020

மாற்றமுறும் அமெரிக்க சீனா அதிகார உறவுகள்!

    மற்றுமொருவலைப்பூபதிவில் உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் இன்றைய வலைப்பூ பதிவானது அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான உறவுகளின் தற்போதைய நிலைமை தொடர்பாக சிந்திப்பதாகேவ அமைய இருக்கின்றது.

உலகளாவிய இருபெரும் வல்லரசுகளான அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளும் தமக்கு  இடையிலான முரண்பாடுகள் வலுப் பெற்றதைத் தொடர்ந்து இரு நாடுகளும் தமது  நாடுகளில் உள்ள தூதரகங்களை  மூடியுள்ளன.
அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பொம்பியோ சீனாவானது தமது நாட்டின் புலமைச் சொத்துக்களை மாத்திரம் அல்லாது ஐரோப்பிய நாடுகளின் புலமை சொத்துக்களினையும்  திருடுவதாக குற்றஞ்சாட்டியிருந்தார் இந்த  நிலையை அடுத்து அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு மோசமடைந்தது அதற்கு முன்னதாக அமெரிக்க ஜனாதிபதியின் நிர்வாகமானது கொரோனா வைரஸ் பரவல் உலகளாவிய ரீதியில் வியாபித்திருப்பதற்கு  சீனா தான் காரணம் என கூறியதுடன் ஹொங் ஹொங்கில் சீனாவினால் புதிதாக அமுல்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய பாதுகாப்பு சட்டத்தை கடுமையாக எதிர்த்து இருந்தது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சன் 1972 ஆம் ஆண்டு சீனாவிற்கு விஜயம் செய்ததை  தொடர்ந்து அமெரிக்க சீன உணவுகள் வளர்ச்சி அடைந்து இருந்தன.

எனினும் சீனாவின் உடைய வளர்ச்சியினை அமெரிக்காவினால் தாங்கிக்கொள்ள முடியவில்லை இதன் காரணமாக சீனாவின் உதவியை ஏதோ ஒரு வகையில் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது சீனா மீது பல்வேறு வகையான அழுத்தங்களை பிரயோகித்து வந்திருந்தது இதற்கு சீனாவுக்கு எதிராக பல நாடுகளை அணிதிரட்டி சீன எதிர்ப்பு கொள்கையை முன்வைத்து அமெரிக்கா வலியுறுத்தி வந்தது.

சீனாவானது தன்னுடைய பொருளாதார வளர்ச்சி மூலமாக பல்வேறு விதமான நெருக்கடிகளை அமெரிக்காவிற்கு கொடுத்து வந்தது எனினும் அமெரிக்கா இராணுவ ரீதியாக தன்னுடைய ஆதிக்கத்தினை  மேலும் மேலும் வவலுப்படுத்திக் கொண்டே இருக்கின்றது. சீனாவின் பொருளாதார ரீதியான  வளர்ச்சியானது பிரமிக்கத் தக்க முறையில் இருந்தாலும் அமெரிக்காவின் இராணுவ வளர்ச்சி சீனாவை விட பன்மடங்கு அதிகமானது.

அமெரிக்கா சீனா இடையே வர்த்தக போரானது இதுவரை காலமும் நிலவி வந்தது எனினும் கடந்த  சில மாதங்களுக்கு முன்னதாகவே இந்த போர்  முடிவுக்கு வந்தது எனினும் ஊடக போர் தொடர்ச்சியாக இருந்து வந்தது. அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தமது நாடுகளில் காணப்படுகின்ற ஊடகங்களிற்கு பல்வேறு வகையான தடைகளை ஏற்படுத்தி இருந்தன.  அமெரிக்க ஊடகங்களுக்கு சீனாவில் தடையும் சீனாவில் உள்ள  ஊடகங்களுக்கு அமெரிக்காவில் தடையும் காணப்பட்டது.

இவ்வாறாக சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான சர்வதேச ரீதியிலான உறவு நிலையானது தொடர்ச்சியாக மோதல்கள்  நிறைந்ததாக  இருந்தது.  இந்நிலையின் தொடர்ச்சியாகவே அமெரிக்காவானது தன்னுடைய நாட்டில் காணப்படுகின்ற சீன தூதரகத்தை மூடுமாறு கட்டளை பிறப்பித்தது.
இதற்குப் பதிலடி வழங்கும் முகமாகவே சீனாவானது தன்னுடைய நாட்டின் செங்டு பிரதேசத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தினை மூடுமாறு  கட்டளை பிறப்பித்துள்ளது.  இது தொடர்பாக சீனாவின் வெளியுறவுத் துறை கருத்து வெளியிடுகையில், அமெரிக்காவின் செயற்பாடுகள் நியாயபூர்வமான சர்வதேச சட்டத்துக்கு முரணாக காணப்படுவதாகவும் இதற்கு பதிலளிக்க வேண்டிய நிலையிலேயே குறித்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

எது எப்படி இருப்பினும் சர்வதேச அரசியல் அரங்கில் குறித்த இரு நாடுகளுக்கு இடையிலான மோதல்கள்  பாரிய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும்.  சீனா மற்றும் இந்தியா இடையிலான மோதல் அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான மோதல் ஆகியவை  தற்போதைய சர்வதேச  அரசியல் சூழலில் மிக முக்கியத்துவம் பெறுகின்றது. எனினும் நவம்பர் மாதம் இடம்பெறுகின்ற அமெரிக்க தேர்தல் குறித்த சீனா அமெரிக்கா இடையிலான சர்வதேச உறவுகள் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது எனவே இந்த தீர்மானமானது வரும் சில நாட்களுக்குள் விட்டு கொடுப்புக்குள் வரும் என ஊகிக்கலாம்.

இ.தனஞ்சயன்

புதன், 1 ஜூலை, 2020

மத்திய கிழக்கு சமாதான திட்டம்; ஒரு சொல்லாடல் நாடகம்!


   மற்றுமொரு ஒரு புதிய வலைப்பூ பதிவில் சந்திப்பதையிட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். சர்வதேச அரசியலை புரிந்து கொள்ள வேண்டுமாயின் இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலின் உடைய எல்லை பிரச்சினைகளை புரிந்து கொள்வது கட்டாயமானது அந்த வகையில் இஸ்ரேலின் உடைய தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் எவ்வாறு காணப்படுகின்றன என்பது தொடர்பாக சிந்திப்பதாக குறித்த வலைப்பூபதிவு அமையப் போகின்றது.

  இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைப்பகுதியினை இஸ்ரேலுடன் சட்ட பூர்வமாக இணைப்பது  தொடர்பான திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அனுசரணையுடன் "மத்திய கிழக்கிற்கான சமாதானத் திட்டம்" என்ற பெயரில் கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டார்.

வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் மற்றும் இஸ்ரேல்  நிர்வாக குழுக்களுக்கிடையே கலந்துரையாடப்பட்டது போன்று மத்திய கிழக்கு சமாதான திட்ட இறுதி அறிக்கையில் குறித்த திட்டமானது முன்மொழிய படவில்லை குறித்த அறிக்கையில் சில பொருள் மயக்கம்  காணப்படுகின்றன.  இஸ்ரேல் பிரதமர் குறித்த ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியை நிபந்தனையுடன் மட்டுப்படுத்தப்பட்ட இறைமையுள்ள  பகுதி என்று அழைத்ததுடன் குறித்த அந்தப் பகுதியை சுயாதீனமான அற்புத தேசம் என்று அமெரிக்க அதிபர்  அழைக்கின்றார்.

பாலஸ்தீனர்களின் தலைநகரமாக கிழக்கு ஜெருசலேத்தை அறிவிக்கும் போது  அமெரிக்க அதிபர் ரொனால்ட் ட்ரம்ப் Eastern Jerusalem என்று அழைக்கிறார். பாலஸ்தீன தலைவர்கள் கிழக்கு ஜெருசலத்தை தலைநகராக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இவ்வளவு நாட்களாக போராடி வந்தனர்.  கிழ‌க்கு ஜெருசலமானது கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், மற்றும் யூதர்களின் வழிபாட்டுத் தலமாக விளங்குகின்றது. டொனால்ட் ட்ரம்பினால் அறிவிக்கப்பட்ட பகுதியானது ஜெருசலத்திற்கு அப்பாற்பட்ட ஒரு பிராந்தியமாகும். ட்ரம்ப் அறிவித்துள்ள பகுதி  Abu dis என்று இஸ்ரேல் பிரதமர் தெரிவிக்கின்றார். குறித்த பகுதி மேற்கு கரையின் கிழக்கு பகுதியாகும்.இது பாலஸ்தீனர்களினை ஏமாற்றுவதாக அமைந்துள்ளது.

இஸ்ரேல்  ஜெருசலத்தை  தனது தலைநகராக கருதிக் கொள்கின்றது.  ஜோர்தான் பள்ளத்தாக்கில் உள்ள இஸ்ரேல் இராணுவத்தினரினை பின்வாங்க செய்வதற்கு பல அழுத்தங்கள் தம்மீது மேற்கொள்ளப்படுவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அண்மையில்  தெரிவித்திருந்தார்.

மேற்கு கரையில் இஸ்ரேலின்  குடியேற்றங்களை நிலைநிறுத்துவதற்குரிய  நாடகமாகவே குறித்த சம்பவங்கள்  பார்க்கப்படுகின்றது. சர்வதேச சமூகமானது இஸ்ரேல் பிரதமர் மேற்கொள்ளும்  சட்டவிரோத குடியேற்றங்கள் தொடர்பாக பல விமர்சனங்களை முன்வைத்து வருகின்ற சூழ்நிலையில் அமெரிக்க ஆதரவுடன்,  புதிய சொல்லாடல்கள் மூலமாக  இஸ்ரேல்  பிரதமர் தன்னுடைய சட்டவிரோத நடவடிக்கைகளை தன்னுடைய அரசியல் ஆதாயத்திற்காக  நியாயப்படுத்தி வருகின்றார்.

இந்நிலையில், மத்திய கிழக்கிற்கான டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு திட்டம் ஒரு சொல்லாடல் நாடகமே ஆகும்.

இ.தனஞ்சயன்

வெள்ளி, 8 மே, 2020

கொரோனாத் தேர்தல் தந்திர சூத்திரம் வகுக்கப்படுமா?

       
        உலகலாவிய ரீதியாக அச்சுறுத்தல் விளைவிக்கும்  கொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கி உலக நாடுகள் வல்லரசு நாடான அமெரிக்கா உட்பட திணறி வருகின்றன. இந்த  வைரசை ஒழிக்க இதுவரை பூரணமாக  தடுக்கக்கூடிய  மருந்துகள் எதுவும் கண்டுப்பிடிக்கப்படவில்லை.

எனினும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமால் நாடு முழுவதும் முடக்க நிலையில்  இருப்பது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் மூலம் கொரோனா பரவலை தடுக்க முடியும் என்ற நிலை உள்ளது. எனவேதான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பாலான நாடுகள் தங்கள் நாட்டில் தேசிய அளவில் ஊரடங்கை நடைமுறை படுத்தி வீடுகளுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தி வருகின்றன. நியூசிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, பாகிஸ்தான் போன்ற நாடுகள் முடக்க நிலையில் சில தளர்வுகளை ஏற்படுத்தி உள்ளன.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஒலிம்பிக் போட்டி உட்பட உலகின் பல முக்கிய நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐரோப்பிய நாடான போலந்தில் நடைபெற இருந்த அதிபர் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு இருக்கிறது. போலந்தில் தற்போது வரை 15,365 ற்கும்  மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 760 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.


      எனினும் அதிபர் ஆண்ட்ரேஜ் துடா தலைமையிலான அரசு வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதனிடையே கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் போலந்தில் வருகிற 10ம் திகதி அதிபர் தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த தேர்தலில் அதிபர் ஆண்ட்ரேஜ் துடா மீண்டும் போட்டியிடுகிறார். அவருக்கு மக்களிடம் பெரும் ஆதரவு இருப்பதால் மீண்டும் அவர் அதிபராக ஆகுவதற்கு வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில், கொரோனாவால் ஏற்பட்டுள்ள சுகாதார நெருக்கடிக்கு மத்தியில் தேர்தலை நடத்துவது பொருத்தமாக இருக்காது என்றும், எனவே தேர்தலை தள்ளிவைக்க வேண்டுமெனவும் கோரிக்கைகள் எழுந்தன.

அதுமட்டும் இன்றி ஊரடங்கால் வேட்பாளர்கள் பிரசாரத்தை நிறுத்தியுள்ளதால் வாக்குப்பதிவு வெளிப்படையாகவும், நியாயமானதாகவும் இருக்காது என்றும் சர்வதேச அரசியல் விவகார  நோக்கர்கள் கவலை தெரிவித்தனர். ஆனால் ஆளும் தேசியவாத சட்டம் மற்றும் நீதி கட்சி, தேர்தலை நடத்தி ஆண்ட்ரேஜ் துடாவை மீண்டும் அதிபராக்குவதில் மும்முரம் காட்டியது.

அதே சமயம் சுகாதார நெருக்கடியை பயன்படுத்தி ஆளும் கட்சி அரசியல் ஆதாயம் தேட வாய்ப்பு இருப்பதாகவும், எனவே தேர்தலை ஒத்திவைக்கவேண்டுமெனவும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில் பல்வேறு தரப்பில் இருந்தும் வந்த அழுத்தத்தை தொடர்ந்து, அதிபர் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அந்த நாட்டு தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. எனினும் எப்போது தேர்தல் நடத்தப்படும் என்பதை தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை. கூடிய விரைவில் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் என்றும், தபால் மூலம் மட்டும் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கொரோனா பீதிக்கு மத்தியில் கடந்த மாதம் தென்கொரியா மற்றும் மேற்கு ஆபிரிக்க நாடான மாலி ஆகிய  நாடுகளில்  தேர்தல்கள் வெற்றிகரமாக நடாத்தி முடிக்கப்பட்டுள்ளமை கவனிக்கதக்கது. இதேவேளை, இஸ்ரேலில் 4 வது முறையாக தேர்தலுக்கு செல்லாமல் மக்கள் எதிர்பை மீறியும்  கூட்டரசாங்கம் சுழற்சி முறை பிரதமர் முறைமையின் அடிப்படையில்  (Rotative Prime minister ) அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கையில் இம் மாதம் முடக்க நிலை எதிர்வரும் 11 ம் திகதியுடன் முடிவுக்கு வரும் என்கிற தகவல்கள் ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகின்ற இந்த சூழலில் அடுத்த மாதம் 20 ம் திகதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தருணத்தில், இலங்கை போலாந்தின் வழியை பின்பற்றுமா? தென்கொரியா அனுபவத்தை பயன்படுத்துமா? புதிய தந்திர சூத்திரம் வகுக்கப்படுமா?  என்பதை சில கால பொறுமையின் பின்னரேஅறிந்து கொள்ள முடியும். அன்மைய நாட்களின் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானாவர்களின் எண்ணிக்கை தலைநகரில்  அதிகரித்தமை  தேர்தலை பிற்போடுவதற்கு ஒரு காரணியாக அமையலாம்.







ஞாயிறு, 3 மே, 2020

ஊடக சுதந்திரம், மக்களிற்கு உரியதே அன்றி ஊடக நிறுவனங்களுக்கு சொந்தமானதல்ல!


    உலக பத்திரிகை சுதந்திர நாள் (World Press Freedom Day) என்பது பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் மனித உரிமைகள் சாசனம் பகுதி 19 இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் சபையினால்  சிறப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

1993 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஒவ்வோர் ஆண்டும் மே 3 ஆம் நாளன்று பத்திரிகை சுதந்திர நாளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆப்பிரிக்கப் பத்திரிகைகளால் கூட்டாக 1991 ஆம் ஆண்டு இந்நாளிலேயே "பத்திரிகை சுதந்திர சாசனம்" (Declaration of Windhoek) முன்வைக்கப்பட்டது.

இது 1991 ஆம் ஆண்டு யுனெஸ்கோ (UNESCO) அமைப்பினால் நடத்தப்பட்ட பொதுக் கூட்டத்தின் 26 ஆம் அமர்வில் சிபாரிசு செய்யப்பட்ட ,'உலகின் சகல பிராந்தியங்களிற்குமான பேச்சு மற்றும் கருத்து வெளியீட்டுச் சுதந்திரத்திற்கானதும், ஊடகச் சுதந்திரத்தினதும் பாதுகாப்பிற்கும் மேம்படுத்தலிற்குமான ஆணை' என்ற தொனிப் பொருளில் பரிந்துரைக்கப்பட்ட கட்டளையின் நிமித்தமாக உருவானது.

    அந்த வகையில், 2020 ம் ஆண்டிற்கான தொனிப்பொருளாக "Journalism without fear and favour " அதாவது, 'பயமற்ற மற்றும் பக்கச்சார்பற்ற இதழியல்' அமைந்துள்ளது. சுயாதீனமான ஊடகத் துறையினை பாதுகாப்பதன் வாயிலாகவே நாட்டின் ஜனநாயக பண்புகள் சிறந்த முறையில் இயங்குவதை உறுதி செய்ய முடியும்.

உலக பத்திரிகை சுதந்திரம் என்பது நம்பத்தகுந்த, பெறுமதி மிக்க, தகவல்களினை மக்களிற்கு வழங்குவதற்காக அனைவரும் ஒன்றுபட்டு குரல் கொடுக்கும் தினமாக அமைந்துள்ளது. இன்று உலகலாவிய ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் பரவல் காலப் பகுதியிலும் ஊடகவியலாளர்கள் மனம்தளராது தமது சுய தேவைகளை ஒறுத்தும் மக்களிற்கு சரியான தகவல்களை கொண்டு சேர்க்க பாடுபடுகின்றனர்.

       கொரோனா துன்பியல் காலப்பகுதியில் ஊடக பணியாளர்கள் சுயாதீனமாகவும், நடுநிலைமயானதாகவும், ஆதார பூர்வமானதாகவும் இருக்க வேண்டும். ஊக அடிப்படையில் செய்திகளை வெளியிட்டு மக்களினை திசை திருப்ப கூடாது. சுதந்திரமான ஊடகங்களானது இக் காலகட்டத்தில் அவசியமாகும். சுதந்திரமான ஊடகமானது மக்களிற்கு உரிய காலத்தில் பொருத்தமான தகவல்களினை வழங்கி அறிவூட்டுவதாக அமைய வேண்டும். இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக, போலியான செய்திகள் வெளியிட்டமை தொடர்பாக  300 ற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பத்திரிகை சுதந்திரம் தொடர்பாக , கருத்து தெரிவித்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்ரோனியோ குத்தரஸ் " சுதந்திரம், துல்லியம், தெளிவு மற்றும் ஊர்ஜிதப்படுத்தப்பட்ட தகவல்களை வழங்குவதன் மூலம் தவறான தகவல்களை பரப்பும் கலாச்சாரத்தை இல்லாதொழிக்க முடியும். ஊடக அறங்களிற்கு முரணாக செயற்படும் தன்மை இல்லாமல் செய்வதற்கு அரசாங்கங்கள், ஊடகங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆதரவினை எதிர்பார்பதாக குறிப்பிட்டார். அத்துடன், கொவிட் 19 பரவல் காலத்தில் ஊடகவியலாளர்கள் சுயாதீனத் தன்மையுடன் செயற்பட வேண்டும் என்று கூறினார். தற்போது உலகலாவிய ரீதியாக 250 ஊடகவியலாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்அடைக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என ஐ.நா சபையின் பொதுச்செயலாளர் அன்ரோனியோ குத்தரஸ் கேட்டுக் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

இந்நிலையில், எல்லையற்ற   ஊடகவியலாளர்கள் அமைப்பினால் 180 நாடுகள் மத்தியில் ஊடகங்களிற்கு அளிக்கப்படுகின்ற சுதந்திரம் தொடர்பான சுட்டெண்பட்டியலில் வடகொரியா இறுதி இடத்தை பிடித்துள்ளது. சீனா 177 வது இடத்தையும், ஈராக் 162 வது இடத்தில் உள்ளன. தென் ஆசிய நாடுகளில் இலங்கை 127 வது இடத்தையும், இந்தியா 142 வது இடத்தையும் பங்களா தேஸ் 151 வது இடத்தையும் பிடித்துள்ளன. நோர்வே, பின்லாந்து, டென்மார்க் முறையே முதலாம் ,இரண்டாம், மூன்றாவது இடத்தை பிடித்துள்ளன.

சுதந்திரமான ஊடகமானது சரியானதாகவும் தவறானதாகவும் அமையலாம் மாறாக சுதந்திரமற்ற ஊடகம் தவறானதாகவே அமைய முடியும்.  எனவே, வழங்கப்படும் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தாமல் சரியான ஊர்ஜிதப்படுத்தப்பட்ட தகவல்களை வழங்குவதே ஊடகங்களின் தலையாய பொறுப்பாகும். ஊடக சுதந்திரம் என்பது மக்களிற்கு உரியதே அன்றி ஊடக நிறுவனங்களுக்கு சொந்த மானதல்ல.

இ.தனஞ்சயன்